PDA

View Full Version : வெள்ளரி



mgandhi
28-02-2007, 12:06 PM
வெள்ளரி

தாவரவியல்ற் பெயர்;(Cucumis Sativas)
வெள்ளரி தோற்றம் வட இந்தயாவில் என்பார்கள்.சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக பயிர்டப்படுகிறது.
கோடையில் உண்ண குளுமை அடையும்.பித்தத்தைக் குறைக்கும்.சீரணத்துக்கு உதவும்.தாகத்தைத் தணிவிக்கும்.ஒவ்வாமையத் தடுக்கும்.
வெள்ளரியில் தாதுக்கள் அதிக அளவில் உள்ளது,அதன் தோலுக்கு நெருக்கமாய் வைட்டமின்கள் உள்ளன.எனவே தோலை உரிக்காமல் அப்படியே பயன் படுத்த வேண்டும்.

ஈரபதம்-96.3 கிராம்
புரதம்-0.4 கிராம்
கொழுப்பு -0.1 கிராம்
தாதுக்கள்-0.3 கிராம்
இழைப்பாண்டம்-0.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-2.5 கிராம்
கால்சியம்- 10 மி.கி
மக்ளீசியம்- 11 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 15 மி.கி
பாஸ்பரஸ்- 25 மி.கி
அயம்- 1.5 மி.கி
சோடியம்- 10.2 மி.கி
பொட்டாசியம்- 50 மி.கி
செம்பு- 0.1 மி.கி
சல்ஃபர்- 17 மி.கி
க்ளோரின்-15 மி.கி
வைட்டமின் ஏ- இல்லை
தயமின்- 0.03 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.01மி.கி
நியாஸின்- 0.6 மி.கி
வைட்டமின் சி- 7 மி.கி

100கிராமில் 13 கலோரி உள்ளது.

வெள்ளரியில் காரப்பொளை(Alkaline)உருவாக்கும் தாதுக்கள் 64.04சதவீதம்,அமிலத்தை உரிவாக்கும் தாதுக்கள் 35.95 சதவிதம் இருக்கும்.இரத்தத்தில் உள்ள காரத்தன்மையை பராமறிக்க உதவுகிறது,சிறுநீறைப் பெருக்குகிறது.சமைக்கும் போது இதில் உள்ள பொட்டாசிய,பாஸ்பரஸ் சத்துக்கள் அழித்து விடுவதால் பச்சை யாக உண்பதே நல்லது.

தினம் இரண்டு வெள்ளரி சாப்பிட்டால் மலச்சிக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இரப்பை மற்றும் முன்சிறுகுடல் ஏற்படும் புண்களுக்கு வெள்ளரிச்சாறு நல்ல மருந்து.
வெள்ளரிச்சாற்றுடன்கேரட்,பிட்ரூட்சாறு கலந்து சாப்பிட்டால் கீல்வாதம் குணமாகும்.
வெள்ளரிச்சாறு சருமக் கொப்புளங்களில் நல்ல பலன் தரும்,இத்துடன் கேரட்,லெட்டூஸ் சாற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முகம்,கண்,கழுத்துப்பகுதிகளில் பிரயோகித்து,சுமார் 10அல்லது 15 நிமிடம் வைத்திருக்க ,சருமத்துக்கு இது அழகு ஊட்டும். முகத்திர்க்கு பொலிவு தரும்.
தொடர்ந்து உபயோகித்தால் முகத்தில் பருக்கள் வறட்சி,சுருக்கம் நீக்கும்.

.

அறிஞர்
28-02-2007, 12:38 PM
வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் காய்.

வெளி நாடுகளில் சாலடில் பயன்படுத்துகிறார்கள்....

வெட்டி.. சிறிது உப்பு/மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் தூவி சாப்பிட்டாலே தனி சுகம்.

மனோஜ்
26-03-2007, 08:20 AM
அருமையன தகவல்

வெட்டி.. சிறிது உப்பு/மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் தூவி சாப்பிட்டாலே தனி சுகம்
கிரமத்து சுவைஅது கிடைக்வேன்டும் இது

premi
30-03-2007, 10:13 AM
வெள்ளரி எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கூட வாசலில் துண்டுபோட்டு விற்பார்கள். சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுச்சு. வெள்ளரிக்காவில் இவ்வளவு சத்து இருக்கா சந்தோஷமா இருக்கு.