PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 4



ஆதவா
28-02-2007, 09:20 AM
பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176990&postcount=1) பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177033&postcount=1) பகுதி 3

(http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177173&postcount=1)
பகுதி 4

நம் மனதின் குழப்பம் அவள்
நம் வயதின் குழப்பம் அவள்
நம் எண்ணமே குழப்பமாய்
என்று உறுதி படுத்திக்கொண்டான்.

அன்றைய இரவு....
கழிந்தது காதலாய்...
இல்லை இல்லை
காதல் கழியுமா?,,,,, வேறு???
கழிந்தது ஒரு கனவாய்...

"இன்னும் என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?
நான் காவல் துறையை அணுகட்டுமா?"

பூங்குழலியின் இனிய ராகம்
அவன் செவியில் ஒலித்தது.
அவன் கனவே என்று நினைத்துக்கொண்டான்.

குழலி ஒரு மருத்துவச்சி அல்லவா?
அதிலும் மனம் குன்றியவர்களுக்கு
மருத்துவம் பார்ப்பவளல்லவா?
ஆகையால்,
மெல்ல சில கேள்விகள் எழுப்பினாள்..
அவனும் பதில்கள் சொன்னான்..
உடன் பாடின்றி குழலி எழுந்து
காவலை அணுகப் போகிறேன்
என்று தொலைப் பேசியை
எடுக்க முற்படுகையில்.....

அவளால் எடுக்க முடியவில்லை
அவளின் கைகள்
தொலைப் பேசியின் உள்ளே
ஒரு மென் காற்று போல
நுழைந்து செல்கிறதே தவிர
எடுத்து பேச முடியவில்லை
அவளால் எந்த பொருளையும்
தொடக்கூட முடியாது.

அவளென்ன அதிசயமா?

கதிரவன் கொஞ்சம் யோசித்தான்
ஒருவேளை ஆல்கஹால் காரணமோ?
பதிலுக்காக யாசித்தான்..

மனிதன் எதையும் நம்புவதில்லை/
அதிசயங்கள் பல இங்கே
நிகழ்வதை அவன் அறியவில்லை...

என்ன காரணம்?
அழகிய பெண்ணொருத்தி,
அவளால் பொருளும் தொடமுடியாது..
பிரம்மையா?
கனவா?
போதையா?

நண்பனின் புத்தக் கடைக்குச்
சென்று, புத்தியைத் தீட்டினான்.
புத்தகங்களில்
புதையாத பொருளுண்டா?
ஆவியோட்டும் மந்திர
புத்தகங்கள் பல...
காவி ஆடைக்காவது ஓடும்
ஆவிகள் இவை என்று
பல நூல்களைப் பிரித்தான்..

இல்லத்தில் தீபமேற்றி
பாடல் பாடினான்.
இறைவனைத் தூது வேண்டினான்,

ஆனால் அதற்கெல்லாம்
சளைத்தவளல்ல பூங்குழலி..
மீண்டும் தோன்றினாள்.
இம்முறை கதிரவன்
இவளின் பெயர் கேட்டான்.
இனிப்பு ததும்பும்
இதழால் சொன்னாள்
"பூங்குழலி"

" வேறு யாரிடமாவது கடைசியாக
என்னைத் தவிர பேசினாயா?"

"என்ன உளறுகிறாய்?"

" நீ இங்கு
இருந்த காலத்தில்
என்ன என்ன செய்தாய்?"

" உன்னைவிட மேலாக.."

கேள்வியின் உச்சமாக
கேட்டான்...

"நீ இறந்ததைப் போன்று
உணர்ந்திருக்கிறாயா?"

" சுத்தப் பேத்தல்..."

கதிரவன் மெல்ல
கைகளை அவள் தோளில்
தொட்டு பேச நினைக்கிறான்....
காற்றிடம் பேசியது போல
அவளைத் தொட முடியாது போனது..
அவளுக்கு
அது புரியவில்லை.
அவள் இறந்துவிட்டாள் என்று
அவன் சொன்னான்.....
அது தவறு என்று
அடித்துக் கூறினாள் குழலி...

மெல்ல நகர்ந்துகொண்டே
மேஜை அருகே வந்தார்கள்..

" நீ இறந்துவிட்டாய் "

"இல்லை"

"குனிந்து பார் குழலி..
உணருவாய்
உண்மையை"

அங்கே..........

தொடரும்.....

ஷீ-நிசி
28-02-2007, 09:36 AM
அவனை கொஞ்சமும் பயமுறுத்தாத ஆவி பெண்ணின் வடிவமாய்...
ஆராய்ந்தாலும் விலக்க முடியவில்லை அவனால் ஆவியை!

ஆவி என்று அறிந்தும் காதலில் அவன்!
தான் ஆவி என்று அறியாமலே அவள்!

:) :) :) உங்கள் கவிதையில் வார்த்தைகள் இன்னும் அழகாய் மெருக்கேறியுள்ளன...:) :) :)

அன்றைய இரவு....
கழிந்தது காதலாய்...
இல்லை இல்லை
காதல் கழியுமா?,,,,, வேறு???
கழிந்தது ஒரு கனவாய்...

இந்த இடம் இப்படி இருந்திருந்தால்...

அன்றைய இரவு
கழிந்தது காதலாய்!

இல்லை இல்லை
கூடியது காதலாய்!

எனக்கு தோன்றியது அவ்வளவே!

தொடருங்கள் தோழரே!

ஆதவா
28-02-2007, 03:59 PM
உங்கள் விளக்கமும் அருமையாக இருக்கிறது.. நன்றிகள் தோழரே!

poo
01-03-2007, 09:52 AM
கவிதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில்.. நாம் அந்த தனி வீட்டிற்கு சென்றுவிடும் உணர்வு...
படித்து முடித்தபின்னும் சில நிமிடங்கள் நம் நினைவைவிட்டு நீங்காத இணைகள்..

இவைகளைவிடவும் வேறென்ன வேண்டும் இக்கவிக்கு...!!

தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!!

ஆதவா
01-03-2007, 03:11 PM
மிகுந்த நன்றி தோழரே.... இனி அடுத்த பாகம்...

இளசு
01-03-2007, 08:29 PM
எடுத்த கருவை சிதையாமல்
கொடுத்துக் கொண்டிருகிறீர்கள் ஆதவா..

பாராட்டுகள்..

ஓவியா
09-04-2007, 01:12 AM
அன்றைய இரவு....
கழிந்தது காதலாய்...
இல்லை இல்லை
காதல் கழியுமா?,,,,, வேறு???
கழிந்தது ஒரு கனவாய்...
இந்த வரிகள் மிகவும் அருமை


ஞானி பார்ட் டூமனிதன் எதையும் நம்புவதில்லை/
அதிசயங்கள் பல இங்கே
நிகழ்வதை அவன் அறியவில்லை...


படிக்க ஜோரா இருக்குலே, நடத்துங்கலே

கதைக் கவிதை அருமை நண்பா.

வெகு விரைவில் எழுத்துலகில் தணி சிறப்பினை பெற்று விடுவீர். அட்வன்ஸ் வாழ்த்துக்கள். :icon_03: :icon_03: :icon_03: :icon_03:

ஆதவா
09-04-2007, 01:53 AM
படிக்க ஜோரா இருக்குலே, நடத்துங்கலே

கதைக் கவிதை அருமை நண்பா.

வெகு விரைவில் எழுத்துலகில் தணி சிறப்பினை பெற்று விடுவீர். அட்வன்ஸ் வாழ்த்துக்கள். :icon_03: :icon_03: :icon_03: :icon_03:


நன்றி அக்கா!உங்கள் வாய்முகூர்த்தம் பலிக்கவேண்டும்,.

எல்லா பாகத்தையும் படிச்சுட்டுத்தான் போவீங்க போலிருக்கே!

ஓவியன்
10-04-2007, 03:24 AM
காதலையும் இல்லை ஆவியென்ற பீதியையும்
வைத்து அழகாக விளையாடி இருக்கிறீர்கள் ஆதவன் - வாழ்த்துக்கள்.

ஆதவா
10-04-2007, 04:45 AM
நன்றிங்க ஓவியன்