PDA

View Full Version : பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங



mgandhi
28-02-2007, 07:10 AM
மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

*தனிநபர் வருமான வரிவரம்பு 10 ஆயிரம் அதிகரிப்பு ( உச்சவரம்பு 1,10000 ஆக அதிகரிப்பு )<

*பெண்களுக்கு வருவாய் வரிவரம்பு 145000 ஆக அதிகரிப்பு

* மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவரம்பு 1,95000

* விவசாய கடன் வழங்க ரூ 2,25000 கோடி ஒதுக்கீடு 2007 08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்

* விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம்

* தமிழகத்தில் பாசனஏரிகள், குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ 2182 கோடி ஒதுக்கீடு

* உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு

* 12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் கிராமப்புற சாலை மேம்பாட்டிற்காக ரூ 4000 கோடி ஒதுக்கீடு

* 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை

* பள்ளிகல்வியை ஊக்குவிக்க ரூ 23142 கோடி ஒதுக்கீடு

* மேல்நிலை கல்விக்கு ரூ3794 கோடி ஒதுக்கீடு

* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு

* 912 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை

* 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம்

* ஆசிரியர் பயிற்சி கல்லுரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும்

* இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி

* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி ரூ969 கோடி ஒதுக்கீடு

* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு

* போலியோ ஒழிப்பிற்கு ரூ1290 கோடி ஒதுக்கீடு

* கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை

*ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ 12000 கோடி ஒதுக்கீடு மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

* சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு ரூ18000 கோடியாக அதிகரிப்பு

* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு

* முறைசாரா தொழிலாளர்கள் நலனுக்காக புதிய காப்பீடு திட்டம்

*தங்க நாற்சசக்கரசசாலையை விரைவில் முடிக்க நடவடிக்கை

* புதிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து பரிசீலனை

* சிறுதொழில்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

* வரி ஏய்ப்பை தடுக்க கடும் நடவடிக்கை

* கோவை விவசாய பல்கலைகழகத்திற்கு ரூ50 கோடி ஒதுக்கீடு

*டில்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ 350 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன.

2. பொது பட்ஜெட்: வரி குறைப்பு முக்கிய அம்சங்கள்

* பெட்ரோல் டீசலுக்கு உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு

* சமையல் எண்ணெய்க்கு வரி குறைப்பு

*பல்வேறு பொருட்களின் சுங்க வரி விகிதங்கள் குறைப்பு

* மருத்துவ சாதனங்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு

* பயோ டீசசலுக்கான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கம்

மதி
28-02-2007, 08:20 AM
இந்த வருடம் பட்ஜெட் எப்படிங்கோ..???
ஆன்றோர் சான்றோர் வந்து கருத்துக்களை சொன்னா நல்லாருக்கும்...!

praveen
28-02-2007, 08:31 AM
உடனே மன்றத்திற்கு தந்ததற்கு நன்றி நண்பரே.

மனோஜ்
28-02-2007, 08:37 AM
பட்ஜெட்வரி குறைப்பாவே இருக்கே
அனைத்தும் குறைப்புதானே