PDA

View Full Version : அன்புள்ள நன்பர்களே



vijayan_t
28-02-2007, 12:02 AM
அன்புள்ள நன்பர்களே,

நான் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எனது சொந்தஊர் ஆகும். 95களில் தென் மாவட்டங்களில் எனது மென்பொருள் ஆக்கங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. எனது தமிழ் வைரஸ் நீக்கி பிரபலமான ஒன்றாகும். கால ஓட்டத்தில் சென்னைக்கு புலம் பெயர்ந்து தற்பொழுது ஜப்பானில் 2 வருடங்களாக பணிபுரிகின்றேன். தாயகம் திரும்பும் நாளை எதிர்நோக்கியிருக்கின்றேன். கணனித்துறையில் முத்திரை பதித்த நான் இளங்கலை-வனிகவியலை தவிற வேறெதுவும் படித்ததில்லை.

10 வருடங்களுக்கு முன்பு கணனி மற்றும் மென்பொருட்கள் குறித்த நிறைய தமிழ் கட்டுரைகள் தமிழ்-கம்ப்யூட்டர் இதழில் எழுதியிருக்கின்றேன். தமிழ் கணிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது.

உங்களுடன் அளவளவுவதில் மகிழ்சி.

மயூ
28-02-2007, 12:37 AM
கணனி வல்லுனர் ஒருவரா? வாருங்கள்...
ஏற்கனவே பல வல்லுனர்கள் இங்கே உள்ளார்கள் ... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஷீ-நிசி
28-02-2007, 02:40 AM
வாங்க விஜயன்..


கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கன்னா. இதை உணர்ந்துகொன்டேன் துன்பமெல்லாம் .........

இந்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளது நண்பரே! தொடர்ந்து இங்கே பங்களித்திடுங்கள்...

vijayan_t
28-02-2007, 02:53 AM
வாங்க விஜயன்..
இந்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளது நண்பரே! தொடர்ந்து இங்கே பங்களித்திடுங்கள்...

நடிகர்திலகம் நடித்துள்ள "அவன்தான் மனிதன்" திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளான இவைகள் கவியரசர் கண்ணதாசனின் ஆக்கமே.

இளசு
28-02-2007, 06:55 AM
வாருங்கள் நண்பர் விஜயன் அவர்களே

தமிழ் கம்ப்ப்யூட்டர் ஆக்கங்கள், கணினி மென்பொருள் கண்டுபிடிப்புகள், தமிழ் ஆர்வம், கவியரசு ரசனை..

பக்குவமான கலவையில் உள்ள உங்களை இங்கே வரவேற்பதில்
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்..

பங்களித்து, சுவைத்து இனிய மன்ற உலா வர வாழ்த்துகள்!

praveen
28-02-2007, 08:10 AM
நண்பனே, நானும் உங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் தான் மதுரை. உங்கள் சாப்ட்வேர் பற்றி நான் அறிவேன். உங்களை நேரில் நான் பார்த்ததில்லை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் வனிகவியல் படித்து மென்பொருள் நோக்கி சென்றிருக்கீர்கள் என்றால், நான் வனிகவியல் படித்து வண்பொருள் தேடி சென்றிருக்கிறேன்.

மனோஜ்
28-02-2007, 08:32 AM
வருக விஜயன் அவர்களே வாழ்த்துக்கள்
தாங்களின் கணனி மற்றும் மென்பொருட்கள் குறித்த நிறைய தமிழ் கட்டுரைகள் இங்கு எதிர்பார்ப்புடன் தருவீர்களா

டாக்டர் அண்ணாதுரை
28-02-2007, 08:53 AM
புதியவன் புதியவரை வரவேற்கிறேன்.

poo
28-02-2007, 09:06 AM
வரவேண்டும் நண்பரே...

உங்களைப் போன்றோரை சக உறுப்பினராய் பெருவதில் பெருமிதம் கொள்வோம் நாங்கள்..

அமரன்
28-02-2007, 11:52 AM
வணக்கம். வாருங்கள் விஜயன். ஏலவே பல கணிணி விற்பன்னர்களைக்கொண்ட மன்றத்துக்கு உங்கள் வரவும் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கின்றேன்.

ஆதவா
28-02-2007, 12:32 PM
வாருங்கள் விஜயன்... நல்ல வைரஸ் ஒன்று மன்றத்திற்கு தாருங்கள்.... ஓ!!! தவறு.. தவறு... நல்ல பதிவு தாருங்கள்..

அறிஞர்
28-02-2007, 12:36 PM
வாருங்கள் அன்பரே.. தங்கள் வருகை மன்றத்தை சிறப்பிக்கட்டும்.

தங்களுடைய கட்டுரைகளை இங்கு பதியுங்கள். பலருக்கு உபயோகமாக இருக்கும்.

pradeepkt
28-02-2007, 01:03 PM
வணக்கம் உசிலம்பட்டி விஜயன்.
போற போக்குல களனிப் பல்கலைக்கு அடுத்த மீட்டிங் மதுரைப் பக்கத்துலதான் நடக்கும் போல...

மன்மதன்
28-02-2007, 04:25 PM
புதிய நண்பர் விஜயனை மன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்..

mukilan
28-02-2007, 04:29 PM
வருக விஜயன். வணிகவியலில் கற்று கணிணியியல் விற்பன்னரா? பாராட்டுக்கள், மன்றத்தில் கணிணி அறிவியல் பற்றி தமிழில் பதியுங்கள். என் போன்றோர் அறிந்து கொள்வதற்காக.

ஓவியன்
01-03-2007, 08:52 PM
நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும், நீங்கள் ஜப்பானில் தொழில் புரிந்து வருகின்ரமையால் அந்த நாட்டு மக்களின் உழைப்பினைப் பற்றியெல்லாம் நிறைய எழுதலாமே?

ஓவியா
06-03-2007, 04:42 PM
நண்பர் விஜயனுக்கு வணக்கம்

தங்களை இரு கரங்கூப்பி வருக வருக என்று அழைக்கிறேன். :)

உங்கள் சிந்தனையில் உதிக்கும் விசயங்களை இங்கே அள்ளி வழங்கி எங்களுடன் இணைந்திருக்கவும்.

சில்பாக்கு நீங்க போட்ட பின்னூட்டம் சும்மா நச்சுனு இருந்துசீங்கோய் :D

வெற்றி
10-03-2007, 10:17 AM
வாருங்கள் நிபுனரே...விஜயன்
தமிழால் தமிழில் தமிழ் தளத்தில் சேருவோம்

அன்புரசிகன்
13-03-2007, 10:32 AM
வாருங்க உசிலம் பட்டி விஜஜன். உங்களுக்கு முத்துப்பேச்சியைத்தெரியுமா? (ஜென்டில் மன் பாடல் ஒன்று)

கணணிப்பகுதிக்கு விஜஜம் ஒன்று மேற்கொண்டு அங்கிருக்கும் சந்தேகங்களை சும்மா டக்கு டக்குன்னு தீர்த்து வையுங்க.

பிச்சி
15-03-2007, 02:44 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

விகடன்
24-03-2007, 05:15 PM
கணிணி வ்ல்லுனர்கள் அதிகமாக இருக்கிறார்கள் போலும்.

உங்கள் வரவு எனக்கு கட்டாயம் உதவும்.

உங்களின் கருத்தை எனது கணிணி சம்பந்தப்பட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட திரியில் எதிர்பார்க்கிறேன்.

மேலும் உங்கள் சேவை இங்கே சிறந்து "பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்" என்பதுபோல நாமும் கணிணியில் உங்கள் அளவிற்கு வல்லுனராக இல்லாவிட்டாலும் ஒரு சொற்ப தேர்ச்சியாவது அடைவோம் என்பதில் ஐயம் இல்லை.
வருக அன்பரே வருக... வருக...

vijayan_t
17-04-2007, 04:04 AM
அன்புள்ள நன்பர்களே, வேலைப்பளுவின் காரணமாக சிறிதுகாலம் தொடர்புகொள்ளமுடியாத சூழ்நிலையிலிருக்கின்றேன். மீன்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகின்றேன். நன்றி.