PDA

View Full Version : கம்ப்யூட்டரின் வரலாறு... தெரிந்து கொள்வோம



க.கமலக்கண்ணன்
26-02-2007, 07:36 AM
கம்ப்யூட்டரின் வரலாறு... தெரிந்து கொள்வோமா ?

முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1950ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது.

இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1951ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது.

மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முழுமையான மின்சார செல்லும் நெறியினை பயன் படுத்தப்பட்டது(IBM 360, CDC 6400). முதல் இயங்கு தளம் (operating systems) மற்றும் DBMSகள் அறிமுக படுத்தப்பட்டன. ஆன்லைன் சிஸ்டம் என்று சொல்ல கூடிய உடனடியாக செயல்படுத்தும் முறைகளை பரந்த அளவில் மேம்படுத்தப்பட்டது. என்றாலும் இயக்கம் அல்லாத தொகுப்பு முறையை சார்ந்த துளையிடப்பட்ட தகடுகள் மற்றும் காந்தசக்தி உடைய குழாய்களால் பெரும்பாலான செயல்முறைகள் செய்யப்பட்டன.

நான்காவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1970களின் மத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது முற்றிலும் சிப் என்று சொல்ல கூடிய கருவியால் ஆன கம்ப்யூட்டரகள் உருவாக்கபட்டு கொண்டு வரப்பட்டன. அது தனி கணனி (Personal Computer) மற்றும் நுண்ணிய செயல்படுத்துகருவிகளின் (Microprocessor) சந்ததிகளை பெருமளவுக்கு உற்பத்தி செய்ய வித்திட்டது என்றால் அது மிகை இல்லை. பகிர்தளிக்கும் செயல்முறைகள் (distributed processing) அலுவலகத்திற்கான தன்னியக்க முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டது. கேள்விகளுக்கான மொழிகள், எடுத்துரைக்கும் எழுத்து வடிவங்கள் (Ex : Microsoft Word) மற்றும் ஸ்ப்ரெட் சீட் (Ex : Microsoft Excel) போன்றவற்றை பெரிய எண்ணிகையில் மக்கள் கம்ப்யூட்டரில் வைக்கும் முறைக்கு முதன் முறையாக வந்தார்கள். ஒவ்வொரு நாளும் பல லட்சகணக்கான மக்கள் கம்ப்யூட்டரை பயன் படுத்தினர். நாம் இப்போது சரியாக கம்ப்யூட்டரின் நான்காவது தலைமுறையில் இருக்கிறோம். கம்ப்யட்டரை பயன் படுத்தி இணையதளங்களில் சென்று பார்க்கவோ அல்லது இமெயில் என்று சொல்லகூடிய மின் ஆஞ்சல் அனுப்பவோ சில திறமைகள் தேவை.

ஐந்தாவது - தலைமுறை கம்ப்யூட்டர் குறிப்பாக மிக வேகமான கம்ப்யூட்டர் பாகங்கள் (hardware) மிக எளிமையாக கையாழுகின்ற மென்பொருட்கள் (software) இவை செயற்கை நுண்ணரிவை [artificial intelligence (AI)] உபயோகப் படுத்ததுகின்றன. இயற்கையான மொழிகளை மீண்டு நிணைவுக்கு கொண்டுவருவது ஐந்தாவது தலைமுறை கணனியின் மிக அதிகபடியான உள்ளடக்கிய பகுதிகள். உங்களின் வைத்திருப்பது போதுமான நுண்ணரிவோடு கலந்துரையாடுவது சராசரி கணனியுடன், நீங்கள் ஐந்தாவது தலைமுறை கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்றால் ஒருவேளை 2015ல் இருந்து 2020க்கள் இருக்கலாம்.

http://www.geocities.com/kamal_kkk/Pic_1.gif
இது ஆரம்ப வியாபார கம்ப்யூட்டர்... 1950களுக்கு முன்னதாக UNIVAC I மட்டுமே கம்யூட்டரை தொடங்கி வைத்தது. இந்த படம் பிரங்க்போர்ட் என்ற இடத்தில் எடுக்கப்பட்டது.

http://www.geocities.com/kamal_kkk/Pic_2.gif
நிறுவுதல்... இந்த படம் 1956 ல் எடுக்கப்பட்டது. UNIVAC I உடைய CPU ன் பாதி மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் கற்பனையில் யோசித்து பாருங்கள், நீங்கள் இப்போது பார்க்கும் இந்த அச்சமூட்டுகின்ற பார்வைக்கு இருக்கும் இந்த கம்ப்யூட்டரின் ஒருபகுதிதான் " இந்த 20 வருடங்களில் காலசக்கரத்தில் சுழன்று படிபடியாக கைவிரலையும் தொடுகின்ற அளவிற்கு வந்து விட்டது என்று யாராவது சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?

தங்க கம்பி
28-02-2007, 03:25 PM
மிகவும் பயனுள்ள தகவல்கள். சிறுவயதில் பள்ளியில் படித்தது இப்பொழுது ஞாபகத்திற்க்கு வருகிறது.நன்றி.

அறிஞர்
28-02-2007, 03:28 PM
ஆஹா நியாபகம் வருதே நியாபகம் வருதே...

பள்ளியில் படித்த தகவல்கள் நியாபகம் வருகிறது.

படங்கள் இன்னும் சிறப்பு சேர்க்கிறது. நன்றி..
இது போன்ற தகவல்களை இன்னும் கொடுங்கள்..

க.கமலக்கண்ணன்
28-02-2007, 03:29 PM
நன்றி நண்பர்களே...

இது போன்ற வாழ்த்துக்கள்தான் புதிய செய்திகளை தேட புத்துணர்ச்சியாக இருக்கிறது.

ஆதவா
28-02-2007, 03:48 PM
அருமையான தொடக்கம்... நீளட்டும் நெடுக...

மன்மதன்
28-02-2007, 03:57 PM
நல்ல பயனுள்ள கட்டுரை. நிறைய கொடுங்க.

pradeepkt
01-03-2007, 03:38 AM
சூப்பருங்க.. கணினி வரலாறு நல்ல தொடர்.

அப்படியே வந்து இன்னைக்கு இருக்கிற டூயல் கோர் பிராசஸர் வரைக்கும் சொல்லுங்க. நீங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ள அடுத்தது வந்திருக்கும்... அதையும் சொல்லுங்க :D

ஷீ-நிசி
01-03-2007, 04:00 AM
நல்ல தகவல் நண்பரே! நன்றி!

நண்பர்களே! கம்ப்யூட்டரின் வரலாறு அவ்வளவுதான்.. அவர் முடித்துவிட்டார்.. தொடருங்கள், தொடருங்கள் என்றால் எப்படி?? தொடரின் முடிவில் அவன் தொடரும் என்று பதிக்கவில்லை நண்பர்களே!

praveen
01-03-2007, 04:22 AM
அது தான் இவ்வளவு பேர் கருத்து கூறுகிறமே, இன்னும் தொடருங்கள் நண்பரே.

anna
13-11-2008, 07:06 AM
என்ன நண்பரே வரலாற அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே.ஆட்டோகிராப் மாதிரி இருக்கு ஸ்கூல்ல படிச்சது எல்லாம் நினைவுக்கு வந்து விட்டது அருமையான முயற்சி தொடருங்கள்