PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் பகுதி 3



ஆதவா
26-02-2007, 07:11 AM
பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176990&postcount=1) பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177033&postcount=1)

பகுதி 3

(இனி பொதுப்படையாக கவிதை செல்லும்...)

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அவள் இதழ் எழுப்பிய சத்தத்தில்
கோலா தவறி சிதறியது..
குழலி கத்தினாள்...
கதிரவனை திருடன் என்று நினைத்தாள்.
அவனோ இல்லை என்று தப்பித்தான்..
சிறு சங்கடம்தான்..

அவன் சொன்னான்.....
இனிமையான
இந்த
இல்லம் என்னுடையது என்று..

அவள்
அதைத் திருப்பி ஒப்பித்தாள்.
இந்த கட்டில்கள், ஜன்னல் வளைவுகள்
சரிகைகள், அலங்கார விளக்குகள்
பூந்தொட்டிகள், பூஜை அறைப் பூக்கள்
இன்னும் இன்னும்.....
என்னுடையது என்றாள்...
உடனே வீட்டை விட்டு வெளியேறு
என்றாள்...
ஆவேசமாய்

கதிரவன் அவளைப்
பைத்தியக்காரி என்று நினைத்தான்...

மெல்ல சமையல் அறை நோக்கி
ஆவேசமாய், நுழைந்தாள்...................

கூட சென்றான் கதிரவன்.
அங்கே அவள் இல்லை...

கனவாக இருக்குமோ?
சில சமயங்கள் நம் எண்ணங்களின்
ஓட்டத்தினால் பாதை சறுக்கி
இம்மாதிரி நிகழ்வதுண்டு..
மனம் ஒரு மாயம்.
அதன் வேலைகள் சில சமயம்
தோற்றுவிக்கும் பல காயம்..
இது அம்மாதிரிதானா?
விடு..........

குளியலறையில்
ஷவரின் மழைத் தூறலில்
ஒடுங்கிப் போயிருந்த
தலை முடிகளை சீவிவிட்டு,
பஞ்சு போன்ற துண்டை எடுத்து
முகத்தை ஒற்றி வைத்து
மெல்ல கண்ணாடியை நோக்கி
நின்றவனுக்குப் பின்னே..........
அவள்.....
சொல்கிறாள்

"உன்னை வெளியேறச் சொன்னேனே?"

அவன் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
திரும்பவும் பார்த்தான்...
எல்லாம் மாயை./.....

அன்றிரவு சில முடிவுகளாய்
மனதை ஒரு அலையாய் இல்லாமல்
ஒருமுகப் படுத்தினான்...
வீட்டிற்குச் சென்று
அவள் இருக்கிறாளா என்று பார்த்தான்.
இல்லை..
சமயலறையில்
இல்லை
குளியலறையில்
இல்லை......
நிம்மதி.

தொடரும்......

இளசு
27-02-2007, 08:40 PM
நிழலா .. நினைவா
நிஜத்தில் குழம்பும்
நாயகனின் மனதை
நயமாய் படம் பிடித்த வரிகள்..

தொடருங்கள் ஆதவா..

ஆதவா
28-02-2007, 03:12 AM
மிக்க நன்றி.... இளசு அவர்களே!

poo
28-02-2007, 07:44 AM
முதல்பாகம் தொட்டே படித்தேன்...
கொஞ்சம் குழப்பமாகத்தான் தோணுகிறது.. ஆங்கிலப்பட எண்ண ஓட்டமென ஆரம்பத்திலேயே சொல்லியிருப்பதால் தெளிவாகிக்கொண்டு படிக்க வேண்டும்போல..

வார்த்தைகள் விளையாடுகின்றன... வாழ்த்துக்கள்... இதுபோன்ற தொடர்களில் பலமே அதுதான்!!

மனோஜ்
28-02-2007, 08:25 AM
தொடரும் கவிதை காதலன் குழப்பம் தொடறட்டும் கவிதை காவியம்... ஆதவா

ஷீ-நிசி
28-02-2007, 08:48 AM
காதலியை?! பிரிந்திருந்தாலும் அவள் நினைவுகளை அவனால் பிரிந்திருக்கமுடியவில்லை. எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள்.. அவனின் அகக் கண்களில் தெரிவதால் அது மாயை...

நல்லாவே காட்சி படுத்தியிருக்கிறீர்கள் கவிதையை.. தொடருங்கள் நண்பரே!

poo
28-02-2007, 09:02 AM
படித்து முடித்ததும், பட்டென மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்,.. மன்னிக்கவும் ஆதவன்...

திறமையாக வண்டியை பாதையில் திருப்பிவிட்டிருக்கும் ஷீ-நிசிக்கு பாராட்டுக்களும்-நன்றிகளும்....

கொஞ்சம் பொறுமை.. நிறைய தனிமை (குறைந்தபட்சம் மனதிற்கும்.. எண்ணத்திற்கும்) இரண்டும் இருக்கும்போது மட்டுமே படிக்க வேண்டும் இதுபோன்ற கவிதைகளை...

பத்து பாகத்தையும் அதிகம் நேரம் கடக்காமல் அளியுங்கள்.. அப்போதுதான் தொடர்புகள் அறாமல் சிறப்பாக இருக்கும்..!

மீண்டும் வாழ்த்துக்கள்.. வெற்றிநடை தொடர்வதற்கு!

ஆதவா
28-02-2007, 09:15 AM
அனைவருக்கும் நன்றி... கதைப் போக்கை பார்த்து மீண்டும் பின்னூட்டமிடுவீர்கள் என்று நம்புகிறேன்.....

ஓவியா
09-04-2007, 01:03 AM
அவன் சொன்னான்.....
இனிமையான
இந்த
இல்லம் என்னுடையது என்று..

அவள்
அதைத் திருப்பி ஒப்பித்தாள்.

என்னாமோ நடக்குது கதையிலே......(பொறுமை ஓவியா பொறுமை)

சபாஷ் சரியான குழப்பம். (சும்மா)

என் ஆர்வம் தொடர்கின்றது.........அடுத்த பாகத்தை தேடி :auto003: ஓவி ரேஷிங் இன் 180 :auto003:

ஆதவா
09-04-2007, 01:54 AM
என்னாமோ நடக்குது கதையிலே......(பொறுமை ஓவியா பொறுமை)

சபாஷ் சரியான குழப்பம். (சும்மா)

என் ஆர்வம் தொடர்கின்றது.........அடுத்த பாகத்தை தேடி :auto003: ஓவி ரேஷிங் இன் 180 :auto003:

ஆக்ஸிடண்ட் இல்லாம வண்டி ஓட்டுங்க.... வண்டி நகரமாட்டேங்குதே!! :icon_nono:

மீண்டும் தொடரு.... அடுத்த பாகம் படிங்க அக்கா!

ஓவியன்
10-04-2007, 03:23 AM
என்ன ஆதவா நாயகனும் நாயகியும் இப்படியா சந்திக்கிறாங்க?
ஒரு த்ரில்லர் மாதிரி கதை போகிறதே?
பார்ப்போம் பார்ப்போம் - என்ன நடக்கிறது என்று?

ஆதவா
10-04-2007, 04:44 AM
இது ஆவி கதையப்பா!! அதனாலத்தான்...
நன்றி