PDA

View Full Version : சுகம்



Mano.G.
26-02-2007, 05:25 AM
சுகம்
:062802sleep_prv: விடியற்காலைத் தூக்கம்,
வேலைக்கு கிளம்புவதற்கு தாக்கம்,
அதனால் கிடைப்பதுவோ எச்சரிக்கை கடிதம்,
மாதக்கடைசியில் சம்பளம் வாங்கும் போது வருத்தம்,

:wuerg019: ருசிக்காக சாப்பிட்டது உணவு,
அதனால் உடம்புக்கு வந்ததோ நோவு,
கையை கடிப்பதோ மருத்துவ செலவு,
தனக்கு பிறகு தேவையோ அடுத்தவரின் தயவு,

தினமும் தேடி அலைவது இன்பம்,
மனக்கட்டுப்பாடால் கிடைப்பது பேரின்பம்,
:ernaehrung004: :medium-smiley-029:செலவு செய்து தேடுவதோ சிற்றின்பம்,
இறுதியில் வந்து சேர்வதோ துன்பம்:medium-smiley-100:


மனோ.ஜி.

இளசு
27-02-2007, 08:44 PM
முற்பகல் செய்யின்..?
நியூட்டனின் மூன்றாம் விதி--
நம் விதி!

பாராட்டுகள் மனோஜி..

அறிஞர்
27-02-2007, 08:50 PM
இன்பத்தையும், துன்பத்தையும் எளிதான வரிகளில் காணமுடிகிறது..

மனோஜி புதுக்கவிதைகள் இன்னும் தொடரட்டும்.

poo
28-02-2007, 08:30 AM
இத்தனை எளிதாக பெரிய தத்துவம்..

-இன்னும் கொடுங்கள் அண்ணா!

விகடன்
07-06-2007, 08:56 PM
கருத்துமிக்க கவிதை.