PDA

View Full Version : தலைப்பிள்ளை



Mano.G.
26-02-2007, 05:23 AM
தலைப்பிள்ளை
--------------------------------------------------------------------------------
பெற்றோருக்கு முதலில் பிறந்ததால் தலைப்பிள்ளை,
இரண்டாவது பிறக்கும் வரையில் செல்லப்பிள்ளை,
தனியாக அனுபவித்தது ஆனந்தப் பட்டது,
பங்கு போட்டு அனுபவிக்க வேண்டியது,
வளர வளர பங்கும் குறையுது,
வளர்ந்ததும் குடும்ப சுமையும் கூடுது,

மனோ.ஜி
__________________

இளசு
11-03-2007, 10:11 PM
நானும் தலைப்பிள்ளை என்ற வகையில்
இக்கவிதையில் எனக்கும் பங்குண்டு மனோஜி..

சுமைகளும் அதற்குத்தக்க சுகம் தரும் அன்பான மரியாதையும்
இரட்டை தண்டவாளங்களாய் தலைப்பிள்ளை ரயில்களின் பயணம்..

மன்மதன்
12-03-2007, 05:55 AM
இரண்டாவதா பிறக்கும்வரையில் செல்லப்பிள்ளையா.. அப்புறமும் செல்லப்பிள்ளைதானே மனோ அண்ணா.. (அவர் பெயர் செல்லப்பிள்ளை எனில் ! )
தொடர்ந்து கவிதை பகுதியில் நீங்க எழுதணும் ஆமா..

மனோஜ்
12-03-2007, 07:30 AM
தலைப்பிள்ளைக்கு எப்பவும் தலைவலி அதிகம்தான் மனோஜு அண்ணா
கவிதை அழகு தொடருங்கள் தங்களின் கவியை

டாக்டர் அண்ணாதுரை
13-03-2007, 01:50 AM
தலைப்பிள்ளை என்றாலே...தகப்பனுக்கு அடுத்தவன் என்றுதானே பெரியவர்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றார்கள்.அதனால்தான் என்னவோ....தலைப்பிள்ளைகளுக்கு என்றுமே தலை போகின்ற அளவிற்கு தலைவலி!
அந்த தலைவலியைத்தான் தலையாய பொறுப்பு எனவும் அதுவே தலைவிதி எனவும் தலைமுறை தலைமுறையாக..........(இப்படியேதான்.....மாற்ற முடியாது ;தலையும் தப்பாது மனோஜி அவர்களே.....!!)

விகடன்
07-06-2007, 08:48 PM
சுகமான சுமைகள்தானே நண்பரே!
அனுபவிக்க தவறாதீர்.