PDA

View Full Version : சோகம்



Mano.G.
26-02-2007, 04:56 AM
சோகம்.
--------------------------------------------------------------------------------
சோகம்.
சோகம் மனதை தழுதழுக்க
கண்ணீர் துளிகள் கண்களின் ஓரத்தில் முட்டி நிற்க
ஆண் என்ற அகம்பாவம் அழவிடாமல் தடுக்கிறதே
அழுவதென்றால் பெண் தானா
ஏன் ஆண் அழக்கூடாதோ


மனோ.ஜி.

விகடன்
07-06-2007, 08:58 PM
கௌரவத்தின் தலைக்கனத்தால் படும் அவஸ்த்தை.

அருமையான கவிதை.

ஓவியன்
17-06-2007, 06:53 AM
ஆனால் இப்போது ஆண்களுக்குள்ள பிரச்சினைகளால் அவர்களால் முனுபோல் அழுகையைக் கட்டுப் படுத்த முடிவதில்லை என்பதே உண்மை.

ஆண்களும் இப்போது அழ ஆரம்பித்து விட்டார்கள், நான் பல தடவை நேரிலே கண்டுள்ளேன்.

அமரன்
09-11-2007, 03:29 PM
உணர்ச்சிகளின் வெளிப்பாடே கண்ணீர்
கண்ணீர் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியே சோகம்..
கண்ணீர் விட ஆண்களைத் தடுப்பது எது?
அகம்பாவமா? ஏறுபோல் நடப்பதைக் கட்டிக்காக்கின்றோம் என்ற தப்பர்த்தப் பற்றா?
சின்னவயதில் ஆண்கள் அழுவதில்லையா..?
இதுவும் ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற ஊசிபோன சமுதாய சட்டமே/அழுதால் வந்த சங்கடங்களின் விளைவே...

அதனை இப்போது பலர் மீறுகின்றனர்..
ஒரு சிலர் வீறுடன் சொல்கின்றனர்..
இன்னும் சிலர் வீராப்பாக கொல்கின்றனர்..

பூமகள்
09-11-2007, 04:00 PM
உணர்ச்சிகளின் வெளிப்பாடே கண்ணீர்
கண்ணீர் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியே சோகம்..

அதனை இப்போது பலர் மீறுகின்றனர்..
ஒரு சிலர் வீறுடன் சொல்கின்றனர்..
இன்னும் சிலர் வீராப்பாக கொல்கின்றனர்..
நல்ல வரிகள் பாராட்டுகள் மனோ அண்ணா மற்றும் பின்னூட்டமிட்ட அமரன் அண்ணா.

கண்ணீர் மானிடத்தின் பொதுவுடைமை..!
அடங்கா வருத்தத்தின் வடிகால்..!
இதில் ஆண் பெண் பேதம் கற்பித்தது
வீண் மடமைக் கூட்டம்..!!

வீரத்தினை விதைக்க கூடவே களைகளும்
விதைபடுவது போல்..!
காளையர் அழக்கூடாதென்று..
களைகள் விதைத்தது யார்??

கவலை அடக்கி வைக்க தவறான இடத்தில்
வெளிப்பட்டு அழிக்குமாம்..!

அழுது விடுவது சிறந்தது என்கிறது
அண்மையில் மருத்துவ அறிக்கை..!

அழுவது இழுக்கல்ல... மீண்டு வராததே இழுக்கு..!

mgandhi
09-11-2007, 06:05 PM
ஆண் என்ற அகம்பாவம் அழவிடாமல் தடுக்கிறதே

நன்றி மனோ.ஜி.