PDA

View Full Version : சம்பளம்



Mano.G.
26-02-2007, 04:50 AM
சம்பளம்
--------------------------------------------------------------------------------
சம்பளம்.
மாதக் கடைசியில்
கையிலே வரும் பணம்
30 நாள் ஏ சி அறையில் காலாட்டி
மூளையை கசக்கி உழைத்த உழைப்புக்கும்,
வெய்யிலில் காய்ந்து,
முதுகெலும்பு உடைய
உழைத்த உழைப்புக்கும்,

கொடுக்கப்படும் ஊதியம்
சம்பளம்
வாங்கும் முன்னே போடப்படும் பட்ஜட்
வாங்கிய பின் காணாமல் போவதேன் ?

முதல் இரண்டு வாரம் சொகுசு வாழ்க்கை
ஏ சி ரூம் காரருக்கு,

வெய்யிலில் உழைப்பவருக்கோ
முதல் இரண்டு நாளே நல்ல சாப்பாடு,

உழைப்புக்கு ஏற்ற சம்பளம்
எப்போது வாங்க போகிறோம்
சேமிக்க போகிறோம்.


மனோ.ஜி

aren
26-02-2007, 05:01 AM
அழகான கவிதை வரிகள் மனோஜி அவர்களே.

ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலே நாமும் ஏதாவது சாதிக்கவேண்டும், முன்னேறவேண்டும் என்ற ஊந்துதல் பிறக்கும். வாங்கும் சம்பளம் 30 நாட்கள் கழித்தும் மீதம் இருந்தால் வாழ்க்கையின் உச்சிக்கு வந்துவிட்டோம் என்ற மமதை ஏற்பட்டு எதிர்பார்ப்புகளை குறைத்துவிடுவோம்.

ஆகையால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை இருந்தாலே சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும் என்பது என்னுடைய கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
26-02-2007, 05:43 AM
உழைப்புக்கு ஏற்ற சம்பளம்
எப்போது வாங்க போகிறோம்
சேமிக்க போகிறோம்.

--------------
உண்மையான வார்த்தைகள். எனக்கும் அவ்வப்போது தோன்றும் விஷயம் இது!

ஷீ-நிசி
26-02-2007, 05:49 AM
எல்லாரின் எண்ணமும் இதுவே.. என்று அந்த நாள் வந்திடும்?

விகடன்
05-08-2007, 12:54 PM
முன்னேற்றமடைந்தோர் அதே பாதையிலிருக்க இவர்கள் பின்னோக்கித்தள்ளப்படுவதுதான் கொடுமை.
வளர விட்டால் தம் பாடு அம்பேல் என்று எண்ணுவது. இலகுவாக ஏமாற்றக்கூடியதுமாக இருப்பதுவுந்தான் காரணமா?

அன்றாட வாழ்க்கையில் அடைக்கப்பட்டிருக்கும் உண்மை.

அமரன்
09-11-2007, 02:47 PM
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத வருத்தம்
அழையா விருந்தாளியாக உச்ச மன அழுத்தம்
இரண்டையும் விசையாகக்கொண்டு ஏற்றம் காணலாம்
எதிர் வினையாக, துவண்டு பள்ளத்தில் வீழலாம்..

எது எப்படியோ
எனக்குள்ளும் அடிக்கடி எழும் கேள்வி
உழைப்புக்கேற்ற ஊதியம் எப்போது..?
பாராட்டுக்கள் அண்ணா..!

ஆதி
13-11-2007, 07:22 AM
நல்ல கவிதை.. நல்ல சிந்தனை.. வாழ்த்துக்கள்..

சம்பளம் - வேர் சொல் என்ன என பலரும் தெரியுமென நம்புகிறேன்...

சம்பு(சம்பா நெல்) + அளம் (உப்பு) = சம்பளம் ஆயிற்று..

பழங்காலத்தில் சம்பும் அளமும் தான் ஊதியமாய் ஈவார்களாம்.. அது காலப்போக்கில் சம்பளமாயிற்று..

ஓவியன்
13-11-2007, 08:00 AM
சம்பு(சம்பா நெல்) + அளம் (உப்பு) = சம்பளம் ஆயிற்று..

பழங்காலத்தில் சம்பும் அளமும் தான் ஊதியமாய் ஈவார்களாம்.. அது காலப்போக்கில் சம்பளமாயிற்று..

அடடா அப்படியா ஆதி!
தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகள்..!! :)