PDA

View Full Version : ரூ.1.5 லட்சம் வர வருமான வரி விலக்கு?



mgandhi
26-02-2007, 03:47 AM
ரூ.1.5 லட்சம் வர வருமான வரி விலக்கு?
நடுத்தர பிரிவினர் பயன்பெறுவர்

புடெல்லி, பிப். 26: வருமான வரி விலக்கு உச்சவரம்பு, மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்தில் இருந் ரூ.1.5 லட்சமாக உயர்கிற. இதனால், கோடிக்கணக்கான நடுத்தர சம்பளக்காரர்கள் பயன்பெறுவர்.
மத்திய பட்ஜெட்ட நாடாளுமன்றத்தில் 28ம் தேதி நிதி அமச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்கிறார். அதில் நடுத்தர வருவாய்ப் பிரிவினர், மாத சம்பளக்காரர்கள் பயன்பெறும் வகயில், வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று டெல்லியில் நிதித் ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1 லட்சமாக இப்போள்ள உச்சவரம்புத் தொக ரூ.1.5 லட்சமாக உயரும். இதனால், கோடிக்கணக்கான நடுத்தர வருவாய் பிரிவினர் பயன்பெறலாம் என்று அவர்கள் கூறினர்.
வருமான வரி செலுத்வோர் எண்ணிக்க இந்த நிதி ஆண்டில் பல மடங்கு அதிகரித்ள்ள. எனவே, அரசுக்கு நேரடி வரி வருவாய் பெருகியுள்ள. அதற்கேற்ப, வருமான வரி விலக்கு உச்சவரம்ப உயர்த்த முடிவு செய்யப்பட்ட.
எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போ வரி விகிதங்கள் நம்நாட்டில் மிகக் குறவாகவே உள்ளன. குறந்தபட்சம் 10 சதவீதமாகவும் அதிகபட்சம் 30 சதவீதமாகவும் உள்ளன. எனவே, அவற்றக் குறக்கும் வாய்ப்பு இல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரி விலக்கு உச்சவரம்புத் தொகய மேலும் ரூ.50 ஆயிரம் அதிகரிப்பதன் மூலம், வரி செலுத்வோரில் கீழ்நில நடுத்தர வருமானப் பிரிவினர் விடுவிக்கப்படுவார்கள். இதனால், அவர்களின் வாழ்க்கத் தரம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும். அத்டன், வருமான வரித் ற கண்காணிக்க வேண்டிய வரி செலுத்வோர் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கயும் பெருமளவு குறந் விடும். அதன்மூலம், வரி ஏய்ப்பில் தொடர்ந் ஈடுபடும் வசதியுள்ள பிரிவினர் மீ அதிக கவனம் செலுத்த முடியும்.
மேலும், கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் வில அதிகரித்ள்ள. இதனால், நடுத்தர குடும்பங்களின் மாத பட்ஜெட் தொக உயர்ந் விட்ட.
இந்நிலயில், வரி வரம்புக்குள் இருக்கும் கீழ்நில நடுத்தர வருவாய்ப் பிரிவினர இந்த வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு மூலம் விடுவிப்பதால், அவர்கள குடும்ப பொருளாதார நில சீராகும் என்று மத்திய நிதி அமச்சர் ப. சிதம்பரம் கருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 1, 2006 முதல் பிப்ரவரி 15, 2007 வர நேரடி வரி வசூல் ரூ.1 லட்சத் 61 ஆயிரத் 777 கோடியாக உள்ள. இ முந்தய நிதி ஆண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.1 லட்சத் 15 ஆயிரத் 788 கோடியவிட 39.5 சதவீதம் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஷீ-நிசி
26-02-2007, 04:04 AM
மிக நல்ல செய்தி

aren
26-02-2007, 05:12 AM
எனக்கென்னவோ இது சரியாகப்படவில்லை. வரி சதவிகத்தை குறைத்து அனைவரையும் சிறிதளவாவது வரி செலுத்தும்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது 1.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர் குறைந்தது 20000 ரூபாயாவது வரி செலுத்துவார் என்று நினைக்கிறேன் (எனக்கு இது சரியாக தெரியாது, ஆகையால் மன்னிக்கவும்). ஆனால் இதை விட்டுவிட்டு 50000 ரூபாய் சம்பாதிப்பவர் 500 ரூபாய் வரி செலுத்தவேண்டும், 100000 ரூபாய் சம்பாதிப்பவர் 3000 ரூபாய் வரி செலுத்தவேண்டும் என்று விதிமுறையை மாற்றினால் வரி செலுத்துபவருக்கு அந்த வலி கொஞ்சம் தெரியும். பொது சொத்துக்களை நாசம் செய்யும்பொழுது இது நாம் வரி செலுத்திய பணம் என்ற ஒரு தாகம் ஏற்படும்.

தாம் செலுத்தும் வரி சரியாக உபயோகப்படுத்தப்படுகிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்படும். ஆகையால் அரசாங்கமும் சரியாக செயல்படும்.

இப்படி 80 சதவிகித்தனருக்கு மேல் வரியே செலுத்தவில்லையென்றால் அவர்களுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது. எல்லாம் இலவசமாக வேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அவர்கள் வரி செலுத்தினால், இப்படி இலவசமாக கேட்டால் வரியை ஏற்றுவார்கள் என்று தெரிந்து இலவசமாக கேட்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வார்கள் என்பது என்னுடைய கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
26-02-2007, 03:11 PM
எல்லாரும் குறித்த சதவீதம் வரி கட்டினால், கொஞ்சாமாவது பொறுப்பு வரும்.
---

drjperumal
26-02-2007, 03:18 PM
தற்போது உள்ள ஸ்லாப் முறை வரியை நீக்கி 2% வரி என்றால் அனைவரும் நேர்மையாக் வரி செலுத்துவார்கள், சிறு தொழில் , பெறுதொழில்,மற்றும் அனைத்து தொழில் செய்வோரும் பயன் அடைவார்கள்,அப்போதுதான் இந்தியா ஓளிரும்

மக்களுக்கு நிம்மதி

pradeepkt
27-02-2007, 04:27 AM
2%?????????

அந்த நாள் என்று வருமோ??? :D

மதி
27-02-2007, 04:35 AM
2%?????????

அந்த நாள் என்று வருமோ??? :D
ஆங்..
ஆச..தோச..அப்பளம்..வட..

:D :D

மனோஜ்
27-02-2007, 07:00 AM
நடுத்தற மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் எனினும் கொஞ்சமாவது வரி கட்டினால் தான் நாட்டின் மீது ஒரு இடுபாடுவரும்
அரசியல் வாதிகளின் ஊழல் விசியத்தில் நம்ம பணத்துல தான் அவ இதல்லா செய்றான் என்ற பேச்சு அடிக்கடி கேட்டதுன்டு வரி இல்லை என்றால் எவ எப்படி போனா எனக்கேன்ன என்ற நிலை அவர்கள் மனதில் வந்து விடும்