PDA

View Full Version : சொர்க்கத்தில் ஒரு காதல் - பகுதி 1ஆதவா
24-02-2007, 07:40 PM
வணக்கம் பெரியோர்களே!!
அறிஞர் அவர்களிடம் முழுத் தழுவலில் இஷ்டமில்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. இருப்பினும் என் நண்பர்கள் சிலர் உந்துதலினால் இச்சிறு கதைத் தழுவலை எழுதுகிறேன்.. கொஞ்சம் தவறு இருந்தால் மன்னிக்கவும். இது இன்றே எழுதி முடிக்கப்பட்டது. பகுதி பகுதியாக பதிக்கிறேன்... இது ஒரு ஆங்கிலப் படத்தை தழுவி எழுதப்பட்ட கதை... கரு என்னுடையதல்ல... காட்சிகளும் அந்த ஆங்கிலப் படத்தினுடையது.... முழுக்கவிதையும் என் சொந்தம். கவிதை படித்துவிட்டு அது எந்த ஆங்கிலப் படமென்று சொல்லுங்கள் பார்க்கலாம்...
இனி.......................


கவிதைநாயகன் கதிரவன்
கவிதைநாயகி பூங்குழலி....

கற்பனைக்கு எட்டாத சில
கவிதைகளில் புனைவதுண்டு.....
இக்கவிதையும் கற்பனைக்கு எட்டாத
ஒரு நிஜமாம்.....
முதலில் பாத்திர அறிமுகங்கள்......

கவிதைநாயகி பூங்குழலியின் வாயிலாக......

மேகக்கூட்டங்களின் ஊடான இடைவெளியில்
மெல்ல பறந்து கொண்டு
தரை இறங்குகிறேன்.
செந்நிறப் புழுதிகளுக்கிடையில்
வர்ணப் பூக்களின் சகதியில்
மெல்ல கண்ணயர்ந்து
உணர்வுகள் கசங்கிய நிலையில்
மெளனியாக பயணம் செய்கிறேன்
என் தோழியின் கை பட்டு
கனவு கலைக்கப் பட்டு எழுந்தேன்
ஒரு மருத்துவமனைப் பூங்காவில்

நிமிட நேரச் சிமிட்டல்கள்
பறவையின் சிறகுகளுக்கும்
தாளாத வாறு பறக்க,
நித்திய கனவைக் கலைத்துவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது விழிகள்.

என் வீடு
என் உலகம்
என் வாழ்க்கை
எல்லாமே இந்த மருத்துவமனைதான்.
தேன்மொழி இனிய நண்பி
குறிப்புகளில் தவறு நேர்ந்தால்
குட்டும் தோழி..

என் மருத்துவமனை வேலைகளில்
குறிப்பானது கவனித்துக்கொள்ளல்.
அனைவரையும் ஆதர்சனத்தோடு
அன்பாக விளாச வேண்டும்
மனம் இழந்த விலங்குகளுக்கிடையில்
மனம் குன்றிய மனிதர்களின்
உலாவலை செவ்வனே சரி செய்வது
என் தலையாய பணி.

மருத்துவமனை யிலொருவன் சொன்னான்
நீ உயரப் போகிறவள்;
நீ சிறந்தவள்;
உன் கைகள் கடவுளின் கரங்கள்;
உன் வியர்வைகள் இரத்தம்;
உன் உணர்ச்சிகள் அன்புக் கடல்" என்று
எனக்கு உச்சி குளிர்ந்தது.

கண்களின் மிரட்டலில் சொக்கிப்போய்
முன்னம் கண்ட நித்திய கனவில் மூழ்கினேன்
வாழ்விலே நான் நினைத்த படிகள்
கரைசேரும் என் ஓடங்கள்
விளக்கொளியாய் என் மருத்துவக் கறைகள்.
நினைத்துப் பார்க்கவே
நெஞ்சில் ஊறுது சர்க்கரைத் துளிகள்.

கறையில்லாத பற்களில் நகைத்துக்கொண்டே
நகர்ந்து சென்று என் தோழி தேன்மொழியிடம்
சொன்னேன் என் பணி மாற்றத்தை..

மெல்ல சிரித்துக்கொண்டிருக்கும்
இதயத்தோடு பயணம் செய்கிறேன்.
என் உள்ளத்துச் சிரிப்புகளில்
ஊறிப்போகிறது ரத்தமுற்ற இதயம்.
அக்கா மலர்விழியை அழைத்தேன்
என் ஆறாம் விரலாகிய கைப்பேசியிலிருந்து.
என் உள்ளக் குமுறலைச் சொல்லி சிரித்தேன்
அக்கா குழந்தைகள்
அக்காவின் கணவன்.
எல்லாரிடமும் இன்பம் பகிர்ந்தேன்.

என் உறவுகளின் சந்தோசத்தில்
இன்றே இறந்துவிடலாமோ?

கண்கள் மெல்ல கார் கண்ணாடியில்
பயணிக்க,
அங்கே எனக்கெதிரே எமனாய்
ஒரு நீளமான வாகனம்..................

தொடரும்....

drjperumal
24-02-2007, 08:02 PM
ஆஹா கவிதைகள் அற்புதம் தொடருங்கள் நாங்கள் வாசித்து மகிழ்கிறோம்

ஆதவா
25-02-2007, 03:13 AM
நிச்சயமாக..... இத்தொடர் முடிக்காமல் வேறெதுவும் எழுதப் போவதில்லை... உங்களின் ஆதரவு என்றும் தேவை........

மயூ
25-02-2007, 03:18 AM
அருமை ஆதவா நிச்சயம் தொடரு!

ஷீ-நிசி
25-02-2007, 03:47 AM
நல்ல முயற்சி ஆதவா.. இது போன்ற முயற்சிகள் தொடராமல் போவதற்கே வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன சில சூழ்நிலையினிமித்தம்..

கவிதையில் சரளம் இன்னும் மெருகேறும். இது இம்முயற்சியின் பலம்..
புதியதாக படிக்கவிரும்புகிறவர் முதலிலிருந்தே படிக்க வேண்டும் என்பது இம்முயற்சியின் பலவீனம்..

என்னும் வாழ்த்துக்கள்....

(எவன் தோல்வியடையவில்லையோ அவன் முயற்சி செய்யவில்லை என்பதுதானே பொன்மொழி)

ஆதவா
25-02-2007, 06:59 AM
இருவருக்கும் நன்றி.. முழுகவிதையையும் நேற்றிரவே வடித்துவிட்டேன்.. நீளம் அதிகமாக இருந்தால் படிப்பதற்கு சலிப்பாகிவிடும் என்பதால் பத்துப் பகுதிகளாகப் பிரித்துள்ளேன்....

இளசு
25-02-2007, 11:28 AM
சொற்கள் மிக இலகுவாக கட்டுப்படும் சில கவிஞர்களுக்கு..
ஆதவா - நீங்கள் அந்த வகை.

இமைச்சிமிட்டல் தாளாமல் பறக்கும் பறவைகள்..
ஆறாம் விரலாகிவிட்ட அலைபேசி..

கவர்கிறீர்கள்..ஆதவா..
பத்துப் பாக தொடருக்கு ஒட்டுமொத்த முன்வாழ்த்துகள்..

---------------------------------------------

நண்பன் பார்வையிட்டிருக்கிறார்.. அதுவே இன்னும் ஒரு சிறப்புப் பாராட்டுதான் இல்லையா ஆதவா..?

ஆதவா
26-02-2007, 07:05 AM
உங்கள் எல்லாருக்கும் நன்றி...... நண்பன் அவர்கள் விமர்சனம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருப்பேன்.... நமக்கு அந்த பாக்கியம் இல்லை போலும்...

மனோஜ்
03-03-2007, 03:24 PM
கவிதை படம் தொடருங்கள் நண்பா...

ஆதவா
03-03-2007, 04:46 PM
நன்றி மனோ

ஓவியா
09-04-2007, 12:45 AM
தேன்மொழி இனிய நண்பி
குறிப்புகளில் தவறு நேர்ந்தால்
குட்டும் தோழி.. ஹி ஹி ஹி


என்ன இது இன்ப அதிர்ச்சி!!!!!!!!!!


அன்பின் ஆதவா,
எதோ தோன திடீரேன்று கைகள் 'ஓவியா' என்று கூகலாண்டவரிடம் வரங்களை கையேந்த வந்தது இந்த கவிதையும்.

பரிட்சையின் காலக்கடத்தில் நான் தவறவிட்ட கவிதை.

மன்னிக்கவும் இன்றுதான் பார்த்தேன்.

அருமையான ஆரம்பம்.

நவரச கவிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆதவா
09-04-2007, 01:49 AM
ஹி ஹி ஹி


என்ன இது இன்ப அதிர்ச்சி!!!!!!!!!!


அன்பின் ஆதவா,
எதோ தோன திடீரேன்று கைகள் 'ஓவியா' என்று கூகலாண்டவரிடம் வரங்களை கையேந்த வந்தது இந்த கவிதையும்.

பரிட்சையின் காலக்கடத்தில் நான் தவறவிட்ட கவிதை.

மன்னிக்கவும் இன்றுதான் பார்த்தேன்.

அருமையான ஆரம்பம்.

நவரச கவிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி அக்கா!! கவிதையைத் தேடிக்கொடுத்த கூகுள் ஆண்டிக்கும் நன்றி...

பரீட்சை முடிந்துவிட்டதா?

ஓவியன்
10-04-2007, 03:18 AM
செந்நிறப் புழுதிகளுக்கிடையில்
வர்ணப் பூக்களின் சகதியில்
மெல்ல கண்ணயர்ந்து
உணர்வுகள் கசங்கிய நிலையில்
மெளனியாக பயணம் செய்கிறேன்

ஆதவா!
ஒரு காவியனின் பலமே வார்த்தை வங்கியும், அதிலிருந்து தகுந்ததை தகுந்த நேரத்திலே எடுத்துப் பாவனை செய்யும் பாங்குமேயாகும். அது உங்களிடம் நிறையவே இருக்கின்றது.வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

அடடா மறந்து விட்டேனே போதுமென்ற மனமிருந்தால் காவியனாவது எங்கனம்?
போதாதென்ற மனதுடன் கவியில் சிகரங்களைத் தொட்டு வர இந்த ஒவியன் வாழ்த்தி நிற்கின்றான்.

ஆதவா
10-04-2007, 04:43 AM
நன்றிங்க ஓவியன்