PDA

View Full Version : முடிவல்ல சாதனையின் ஆரம்பம்மனோஜ்
24-02-2007, 07:14 AM
''வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்''

கவிஞர் தாரா பாரதியின் அற்புதமான வரிகள். விரல்கள் இல்லாவிட்டாலும் ‏ ஏன் கை கால் எதுவுமே இல்லாவிட்டாலும் சாதிக்க முடியும் என்று சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை தீபத்தின் கதை இது.

கதையல்ல... நிஜம்!

1982, டிசம்பர் 4. ஆஸ்திரேலியா, மெல்பர்ன் தேவாலயத்தில் பாதிரியார் உருக்கமாகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ''துன்பம் எந்த வடிவில் எப்போது வந்தாலும் சகோதரர்களே! அதை இன்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்..!'' பிரசங்கத்தை முடிப்பதற்குள் துன்பம் இந்த வடிவில் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்...

அவர் மனைவிக்கு பிரசவ நேரம் அது. ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. தலைப் பிரசவம் ஆயிற்றே..! ஆர்வத்துடன் ஓடிச் சென்றவருக்கு அதிர்ச்சி. தொட்டிலில் குழந்தைக்குப் பதிலாக... என்ன இது..? கை கால் எதுவுமின்றி சதுரமாக..? தலை மட்டும் இருக்கிறதே..? ஆனால் அவர் வாயிலிருந்து வந்த சொற்கள் ''இறைவனைப் போற்றுவோம்'' என்பதுதான் (சொன்னதைச் செய்பவர் போலும்). குழந்தையின் புன்னகை முகம் கண்ணீரை வரவழைத்தது!

சில நிமிடங்களில் வந்த மருத்துவரின் முகத்தில் குழப்ப ரேகைகள். என்ன சொல்லித் தேற்றுவது இந்தப் பெற்றோரை?

''டாக்டர் எனது குழந்தை...?''

''நீங்கள் தொட்டிலில் பார்த்தது உங்கள் குழந்தைதான்..''

''எதனால் இப்படி..?''

''எந்தக் குறிப்பிட்ட மருத்துவ காரணமும் இல்லை. மற்ற குழந்தைகளைப் போல கை, கால்களுடன் இருக்கும்படி செய்ய வேறு சிகிச்சையும் இருப்பதாகத் தெரியவில்லை... ஐ'யம் சாரி!''

''இது எத்தனை நிமிடங்கள் உயிருடன் இருக்கும் டாக்டர்?''

சில பரிசோதனைகளுக்குப் பிறகு டாக்டர் சொன்ன பதில் ஆச்சரியம் தந்தது...!

''உங்கள் கேள்வியில் தவறு இல்லை. இதுபோல மிக வித்தியாசமாகப் பிறக்கும் குழந்தைகள் சில நாட்களில் இறந்து விடுவது உண்டு. ஆனால், இந்தக் குழந்தை வித்தியாசமாக உள்ளது. கை கால் இல்லை என்பதைத் தவிர வேறு எந்தக் குறைபாடும் இல்லை. மூளை வளர்ச்சி, இருதயத் துடிப்பு, நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், பார்வை, கேட்கும் திறன் அனைத்தும் நார்மலாக உள்ளது. ஆயுள் பற்றி எந்தக் குறையும் இல்லை. நீங்கள் விரும்பினால் அவனை ஒரு நார்மல் குழந்தை போல வளர்க்கலாம். ஆனால், இறுதிவரை உங்கள் துணை தேவை. அன்றாட காரியங்களை யாருடைய உதவியும் இல்லாமல் செய்ய முடியாது.''

‏ டழ்ஹண்ள்ங் ற்ட்ங் கர்ழ்க் அவனை நிச்சயம் ஒரு சாதனையாளனாக ஆக்கிக் காட்டுவோம்!'' என்று சொன்னவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் டாக்டர். ''எனது குழந்தை சிகப்பாக இல்லை, அழகாக இல்லை, புத்திசாலியாக இல்லை, உயரமாக இல்லை'' என்று பெற்றோர்கள் குறைசொல்லும் உலகில் இப்படியும் ஒரு தந்தையா..?

அந்த வினாடி முதல் அந்தத் தாய் தந்தையரின் மூச்செல்லாம் சண்ஸ்ரீந் யன்த்ண்ஸ்ரீண்ஸ்ரீ தான். ''என்னவெல்லாம் இல்லை என்று பார்ப்பதை விட என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்'' என முடிவெடுத்தனர். ஆசையாய் வளர்த்தனர். நிக் பள்ளி செல்லும் பருவம் வந்தது. அட்மிஷனுக்காக பல பள்ளிக் கூடங்களை அணுகினர். கிடைத்தது ஒரே பதில் தான். ''நார்மலாக இல்லாத உங்கள் குழந்தையை எங்கள் பள்ளியில் சேர்க்க முடியாது. இதற்கு ஆஸ்திரேலிய சட்டம் உள்ளது தெரியுமா?''

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? மற்ற குழந்தைகளைப் போல் நிக்கை வளர்க்க வேண்டும் என்பது அந்தத் தாயின் லட்சியக் கனவாயிற்றே? கோர்ட் படி ஏறினார். எந்த வக்கீலையும் அணுகவில்லை. தானே வாதாடினார். அந்தத் தாயின் நியாயமான கருத்துக்களும் கண்ணீரும் சட்டத்தையே மாற்ற வைத்தது.. 'நிக்'கிற்கு ஒரு பிரபல பள்ளியில் இடமும் கிடைத்தது.

ஆர்வத்துடன் பள்ளி சென்ற நிக் மாலை கண்ணீருடன் திரும்பினான். அனைத்துக் குழந்தைகளும் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதையும் கேலி செய்வதையும் அந்தப் பிஞ்சு உள்ளத்தால் தாங்க முடியவில்லை.... ஆனால், தாய் தந்தையரின் அறிவுரை அவனை மாற்றியது... ''இறைவன் படைப்பில் எப்போதும் ஒரு குறிக்கோள் (டன்ழ்ல்ர்ள்ங்) இருக்கும். உன் மூலமாக இறைவன் மற்றவர்களுக்கு நம்பிக்கை தர நினைக்கிறார். உன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதில்தான் உன் கவனம் இருக்க வேண்டும்'' என்ற அறிவுரை மனதில் பதிந்தது. அவனுள் இருந்த தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்தான்.

அடுத்தநாள் முதல் கேலி செய்பவர்களை அலட்சியப்படுத்தினான். என்ன அதிசயம்...! ஏகப்பட்ட புதிய நண்பர்கள் கிடைத்தனர். நிக் படிப்பில் படு சுட்டி! அதற்குப் பின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை பிடிக்க ஆரம்பித்தது!

இன்று நிக் ஒரு பி.காம். பட்டதாரி மட்டுமல்ல அனைவரும் விரும்பும் மிகச்சிறந்த நம்பிக்கைப் பேச்சாளர்.

''அன்புச் சகோதரர்களே! உங்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கையை, திறமையை ஏனோ தானோவென எடுத்துக் கொள்ளாதீர்கள். அதன் மதிப்பை உணருங்கள். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குங்கள். நாம் வாழப் பிறந்தவர்கள்'' என்று கணீர் குரலில் உருக்கமாகப் பேசுவதைக் கேட்கக் காத்துக் கிடப்பது பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, பல கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்களும் தான்...!

நம்மில் பலர் கனவுகளும், இலக்குகளும் பற்றி யோசிப்பதே இல்லை. அல்லது எப்போதாவது யோசிக்கிறோம். ''என்னுடைய 28வது வயதில் எனக்கென ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட காரை ஓட்டிக்கொண்டிருப்பேன். பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரி டி.வி. நிகழ்ச்சியில் என்னை அழைத்துப் பேட்டி காணும் அளவுக்கு சாதிப்பேன். பல நல்ல நூல்களை எழுதி இருப்பேன்'' என்று தனது கனவினைப் பட்டியலிடுகிறார்.

ஒவ்வொருவரும் தனது பிறவியின் மகத்துவத்தை உணர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகம் ''கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை'' (சர் அழ்ம்ள், சர் கங்ஞ்ள், சர் ரர்ழ்ழ்ண்ங்ள்) என்பது. பெயரே ஒரு உந்துதலைத் தருகிறதல்லவா?.

நிக் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது ''எதையும் விருப்பத்துடன், ஆர்வத்துடன், முழு முயற்சியுடன் செய்யுங்கள். வாழ்கின்ற வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக செய்யுங்கள். லட்சியக் கனவினையும் குறிக்கோளையும் நோக்கி சந்தோஷமாக உழையுங்கள்'' என்பதுதான்.

ஒரு பக்கம் கை ரேகை பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி செய்யும் கூட்டம் மாறவில்லை. மாறாக ஏறிக் கொண்டிருக்கிறது... மறுபக்கம் நிக் போன்ற சாதனை உள்ளங்கள்..!

''நிக்கின் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்க்கையே நமக்கு ஒரு தூண்டுகோல் அல்லவா?

''மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். நான் வித்தியாசமாக இருக்கின்றேனாம். நான் அவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றேன். ஏன் இப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கின்றனர்!'' என்கிறார் நிக்.

இது எப்படிங்க இருக்கு?

நிக் பற்றிய உண்மைக் கதையை என்னுடன் எனது வியாபார குரு திரு.குலின் தேசாய் (சிட்டி பேங்க் வைஸ் ப்ரெசிடெண்ட், நியூஜெர்ஸி, அமெரிக்கா) பகிர்ந்து கொண்டபோது நான் தூக்கத்தைத் தொலைத்தேன் ‏ எனக்குள் விழித்தேன் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்தத் துடித்தேன் எதுவும் முடியும் எனப் புதிதாய் உயிர்த்தேன்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு மாற்றம் வருவது நிச்சயம் என நம்புகிறேன்.

''இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டதே'' என்று அவனது பெற்றோர் அதை முடிவு என்று அஞ்சவில்லை. ''மற்றவர்களுக்கு ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டோமே'' என்று நிக் அதை முடிவு என்று எண்ணவில்லை.

நம்பிக்கையின் ஆரம்பம் ‏ சோதனையின் முடிவு!

சோதனைகள் வாழ்வின் முடிவல்ல சாதனையின் ஆரம்பம்!

நன்றி சிபி தமிழ்
மேலும் இவறது புகைபடம் தகவல் இங்கு (http://www.keetru.com/literature/essays/rasikow_3.html)

aren
24-02-2007, 07:27 AM
மனதைத் தொடும் பதிவு. நிச்சயம் இந்தப் பதிவு பல உறுப்பினர்களை நல்ல திசையில் எடுத்து செல்லும்.

இந்த பதிவை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

poo
24-02-2007, 08:48 AM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... நெஞ்சைத் தொடுகிறது.. அவரது முகத்தைப் பாருங்களேன்... எத்தனை பூரிப்பு.. அடடா.. வாழ்வை ரசிக்க மறந்த என்னை நிந்திக்கிறேன்.. நானே!


நன்றி நண்பரே.. தகவல் பகிர்ந்தமைக்கு!

தாமரை
24-02-2007, 08:53 AM
நல்ல பதிவு. நிக் மட்டுமல்ல அவரை பெற்றொரும் அவருடன் பழகிய நண்பர்கள்.

''மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். நான் வித்தியாசமாக இருக்கின்றேனாம். நான் அவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றேன். ஏன் இப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கின்றனர்!''

என்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள நான் என்ன செய்யப் போகிறேன்???

அறிஞர்
26-02-2007, 09:44 PM
இவரை பற்றி... ஈமெயிலில் படித்து வியந்திருக்கிறேன்.
மீண்டும் தமிழில் படித்தது.... அருமை.

கிறிஸ்தவ மதப்போதகராக பணியாற்றுகிறாரல்லவா...

மனோஜ்
27-02-2007, 12:59 PM
இவரை பற்றி... ஈமெயிலில் படித்து வியந்திருக்கிறேன்.
மீண்டும் தமிழில் படித்தது.... அருமை.

கிறிஸ்தவ மதப்போதகராக பணியாற்றுகிறாரல்லவா...

அறிஞரே வாழ்வின் உயர்வை எட்டி பிடிக்க எத்தனையே முயற்சிகள் இவரின் முயற்சி உன்மையில் என்னை மெய்சிலிர்கவைத்தது இது மன்றத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் அல்லவா

பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

அறிஞர்
27-02-2007, 01:19 PM
அறிஞரே வாழ்வின் உயர்வை எட்டி பிடிக்க எத்தனையோசிகள் இவரின் முயற்சி உண்மையில் என்னை மெய்சிலிர்க வைத்தது இது மன்றத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் அல்லவா

பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
அனைவருக்கும் மிகவும் பிரயோசனமானது. நன்றி உங்களுக்கு தான்.

இவரை போன்றே... சமீபத்தில் என்னை கவர்ந்த மற்றொரு வித்தியாசமான ஒரு நபர் உண்டு. அவர் காது கேட்காத, பேசமுடியாத ஊமை. மேலும் அவருக்கு கண்களும் தெரியாது, (Blind & Deaf). மற்றவர்கள் பார்வையில் ஒரு ஜடம். ஆனால் வாழ்க்கையில் சாதித்தார். அவர் பெயர் ஹெலன் கெல்லர்.

அமரன்
27-02-2007, 02:16 PM
நம்பிக்கைதான் மூலதனம். சோர்ந்து போகும் நேரங்களில் படித்து எழுச்சியடையவேண்டியதுதான்.

அக்னி
28-04-2007, 01:22 AM
உண்மையிலேயே ஒவ்வொருவருக்கும் வாழ்வில் குறைகளிருக்கும். ஆனால் குறைகளுக்குள்ளேயே வாழ்வைத் தொடக்கிய "நிக்" போன்றவர்கள், ஒவ்வொருவருக்கும் பெரும் முன்னுதாரணமாக, உந்துதலாக இருக்கிறார்கள்.

இவர்கள் மனிதப் பிறப்பின் குறைகளல்ல..,
வாழ்வை வென்ற சாமான்யர்கள்..!

சுட்டிபையன்
28-04-2007, 02:42 AM
அழகாண பதிப்பு மனோஜ் அண்ணா, ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பாதிப்பு இருக்கும், அதை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி தூரத்தில் வைத்து விட்டு, எமக்கு என்று ஒரு லட்சியத்தை உருவாக்கி அந்த இலட்ச்சியத்தை நோக்கி வீறு நடை போட வேண்டும் எந்தத் தடை வந்தாலும் மனம் கலங்காமல், அப்படியானோருக்கு நிக் ஒரு மாபெரும் எடுத்துக் காட்டு. நிக்கை ஒரு திறமைசாலி என்பதை விட ஒரு மகாவீரண் என்று சொல்லலாம். சிறுவயதில் இருந்து எத்தனை ஆயிரம் தடைகள் வந்திருக்கும் (பொதுவாக தெருவில் ஒருத்தன் நொண்டி நொண்டி நடக்கும் போதே எத்தனை பேர் கிண்டல், கேலி பேசுவார்கள்) அத்தனை தடைகளையும் தாண்டி இவளவு முன்னேறி உள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, சந்தர்ப்பமிருந்தால் அவரை சந்திக்க விரும்புகிறேன்

arun
28-04-2007, 05:30 AM
உண்மையிலேயே மனதை தொடும் பதிவு இது கிடைத்த வாழ்க்கையை வீணடிக்காமல் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என கண்டிப்பாக நினைக்க வைக்கும்

ஷீ-நிசி
28-04-2007, 07:00 AM
மனோஜ் உண்மையில் என் கண்களில் நீர்த்துளிகள் கோர்த்துக்கொண்டன... நன்றி இங்கே பகிர்ந்தமைக்கு... நீங்கள் கொடுத்த புகைப்படத்தை பார்க்கும்போதே மனம் கடினமாகிறது.. என்ன ஒரு மனிதர்.. கிரேட்.. நன்றி மனோஜ்..


வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே,
வாழும் பாடம் இவர்கள்..
வாழக் கற்றுக்கொள்வோம்!

ஷீ-நிசி
28-04-2007, 07:04 AM
நிர்வாகிகளே! இத்திரியை ஒட்டியாக்க விண்ணப்பம் வைக்கிறேன்...

Gobalan
28-04-2007, 10:47 AM
நெஞ்சத்தை தொடும் மிக நல்ல படைப்பு. என் கண்களிலும், அருண் எழுதி இருப்பது போல், நீர் துளிகள் வந்து விட்டது இதை படித்து முடிப்பதர்க்குள்.

என்னை போல் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் 'நிக்கின்' இந்த வாழ்க்கை வரலாறு. நாமும் இறைவன் தந்த இந்த வாழ்க்கையை வீணாக செல்ல அனுமதிக்க கூடாது என்று தோன்றியது எனக்கு. நன்றி, மனோஜ். கோபாலன்.

ஓவியா
28-04-2007, 02:30 PM
பதிபுக்கு நன்றி மனோஜ், உங்கள் கடவுள் பக்தி ஓங்குக.

மதிப்புமிகு 'நிக்கின்' அவர்களின் வழ்க்கை என்ற குருந்தட்டை நான் பார்த்துள்ளேன். மிகவும் அருமையாக இருக்கும். அவரின் செயல்கள் 'என்னாலும் முடியும்' என்பது போல் எவருக்கும் ஓரு உற்ச்சாகமாவே இருக்கும்.

அவரின் பேச்சுத்திறன் அபாரம்.

நீசல் குழத்தில் தன்னை மறந்து நீந்துவார் இந்த சாதனை மனிதர். இதை கண்டு ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றேன்.

அவர் கூரிய ஒரு வார்த்தை என் நெஞ்சை தொட்டது. 'எந்த ஒரு சமய்த்திலும் என் மனைவின் கன்னத்தை நான் ஆசையாக தொட முடியாது, என் காதலியின் கைகளை பிடித்து அன்பாக உலா வர முடியாது' எனக்கு அப்பொழுதுதான் குறையற்ற உடல் பெற்ற நாம் எவ்வளவு பாகியசாலிகள் என்று தோண்றியது.


அவரின் ஆன்மீக உரையில் சொக்கி போகலாம்.

மனோஜ்
28-04-2007, 02:39 PM
நன்றி நண்பர்களே உண்மையில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி

மனோஜ்
30-04-2007, 06:57 AM
நிர்வாகிகளே! இத்திரியை ஒட்டியாக்க விண்ணப்பம் வைக்கிறேன்...

நன்றி ஷீ உங்கள் ஆதரவுக்கு

அன்புரசிகன்
30-04-2007, 04:02 PM
என்னுடைய துர்ரதிஷ்டம். இன்றுதான் இந்தக்கதையினைப்படித்தேன். சதனை வீரர்களை அடக்கிய கதை. (நாயகன், நாயகனின் பெற்றோர், நாயகனின் நண்பர் பட்டாளம்)

பென்ஸ்
30-04-2007, 04:09 PM
மனோஜ்...
இ-மெயிலில் இது எனக்கு வந்திருந்தது... ஆனாலும் ஆனத்த தமிழில் வாசிக்கும் சுகம் அருமைதான்....
நன்றி மனோஜ்....

நான் சில வாத்தைகளை சிவப்பினால் காட்டியுள்ளேன்.. கவணிக்கவும்...

மனோஜ்
02-05-2007, 10:30 AM
நன்றி அண்ணா அவை தவறு இருக்கிறதா ?
இல்லை சிறப்பாக அமையவா?

பரஞ்சோதி
02-05-2007, 11:33 AM
மிக மிக அருமையான பதிவு.

கை கொடுங்க மனோ தம்பி.

பாராட்ட வார்த்தைகள் இல்லை.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் சாதிக்க மறுக்கும் மனித பிறவிகளுக்கு இவரது வாழ்க்கை சரியான சவுக்கடி. பாடம் பயில கொடுத்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்.