PDA

View Full Version : முரண்தொடர்Pages : [1] 2

பாரதி
22-02-2007, 03:25 PM
தமிழுக்கு வேண்டும் செம்மொழி
அங்கீகாரம் கேட்டது
வடமொழியிடம்!!

ஆதவா
22-02-2007, 03:29 PM
கரு நன்றாகத்தான் இருக்கிறது நண்பரே! வார்த்தைகளை சற்று இடம் மாற்றுங்கள். கவிதை இன்னும் அழகு பெறும்.

அமரன்
22-02-2007, 03:32 PM
தமிழுக்கு வேண்டும் செம்மொழி
அங்கீகாரம் கேட்டது
வடமொழியிடம்!!


சிந்திக்கவேண்டிய விடயம் கவி வடிவில்.

ஷீ-நிசி
22-02-2007, 03:36 PM
கரு நன்றாகத்தான் இருக்கிறது நண்பரே! வார்த்தைகளை சற்று இடம் மாற்றுங்கள். கவிதை இன்னும் அழகு பெறும்.

கரு அருமையான ஒன்று

ஆதவா, எப்படி இருக்கலாமென்று சொல்?

அறிஞர்
22-02-2007, 03:39 PM
பாரதி அண்ணாவின்... சிறு கவிதைகளை காண்பதில் மகிழ்ச்சி..
-----
ஆதவா.. தாங்கள் எண்ணும் வடிவத்தை இங்கு கொடுங்கள்..

ஆதவா
22-02-2007, 03:54 PM
எனக்கும் சரிவர தெரியாது நண்பரே! ஆனால் படித்தவுடன் அது ஒட்டாமல் போனதினால் அவ்வாறு சொன்னேன்.. இருந்தாலும் நான் சொன்னதற்காக இதோ என் வாக்கிய அமைப்பு.

செம்மொழி அங்கீகாரம்
தமிழுக்கு, கேட்டது
வடமொழியிடம்.....

செம்மொழி அங்கீகாரம்
வேண்டியது தமிழ்,
வடமொழியிடம்.....

ஷீ-நிசி
22-02-2007, 04:03 PM
பாரதியுடையுதும் நன்றாக உள்ளது...

உங்களுடையதும் நன்றாக உள்ளது

அமரன்
22-02-2007, 04:13 PM
செம்மொழி அங்கீகாரம்
வேண்டியது தமிழ்,
வடமொழியிடம்

ஒரே கருத்து என்றாலும் படிக்க இது நன்றாக இருக்கு என நினைக்கின்றேன். பாரதியினுடையது இன்னொரு வகை அழகு.

பாரதி
23-02-2007, 12:07 AM
நான்கு தூண்களில் ஒன்றாம் நீதிமன்றம்.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டி
வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்!

-------------------------------------
கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.
-------------------------------------

பாரதி
23-02-2007, 12:55 PM
சுதந்திரப்பெருமிதம்
குண்டுபுகா கண்ணாடிக்
கூண்டிற்குள்ளிலிருந்து!!

அறிஞர்
23-02-2007, 01:34 PM
நான்கு தூண்களில் ஒன்றாம் நீதிமன்றம்.
சட்டத்தைக் காப்பாற்ற வேண்டி
வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்!.
------------------------------------- சிந்திக்க வைக்கிறது... இதற்கு தனிச்சட்டம் தேவையோ..

அறிஞர்
23-02-2007, 01:35 PM
சுதந்திரப்பெருமிதம்
குண்டுபுகா கண்ணாடிக்
கூண்டிற்குள்ளிலிருந்து!!
அனைவருக்கும் கிடைத்த மகா சுதந்திரத்தின் விளைவால் இந்நிலையோ..

மனோஜ்
23-02-2007, 07:15 PM
சரியாக சொன்னீர்கள் அறிஞரே
வெளில வந்தா சுதந்திரமா போட்டு தள்ளீர்வாங்க அப்படி தானே பாரதி அவர்களே

பாரதி
24-02-2007, 12:17 PM
கொலைக்குற்றம் ருசுவானது
தண்டனை வழங்கினார் நீதிபதி
சாகும் வரைத் தூக்கு!

இளசு
24-02-2007, 09:17 PM
நீ...ண்ட இடைவெளிக்குப்பிறகு படைப்புகள் தரும்
தம்பிக்கு முதலில் வாழ்த்தும் வரவேற்பும்..ஊக்கமும்..

முரண்களின் தொடர்தான் வாழ்க்கைப் பயணமோ என எண்ணும் அளவுக்கு...
எத்தனை எத்தனை முரண்கள் நம் கண்ணெதிரே...

சமூகப் பார்வையில் மட்டுமல்ல.. சுயப்பார்வையிலும்.. சுற்றியுள்ளவர்களைப் பார்க்கையிலும்...

பார்வைகளைப் பதிவுசெய்வது முதல் கட்டம்..
தீர்வுகள் பின்னர் வரக்கூடும்... வரவேண்டும்..


தொடர்க பாரதி....
தொடுக்க அண்ணனும் கூடவே....

----------------------------------------


களத்துமேடும் இல்ல..
களஞ்சியமும் இல்ல..
கதிரறுப்பு முடிஞ்சிருச்சு..!

பாரதி
25-02-2007, 01:22 PM
விதைத்தால்
முளைக்கின்றன
விதைகள்!

pradeepkt
26-02-2007, 05:40 AM
விதைத்தால்
முளைக்கின்றன
விதைகள்!
அண்ணா, நிஜமாகவே சிந்திக்க வைத்த தொகுப்பு உங்களுடையது. எனக்குப் பிடித்தது இது... இதையும் அதிகப் பிரசங்கித்தனமாகக் ஒரே ஒரு எழுத்து மாற்றுகிறேன். புடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

புதைத்தால்
முளைக்கின்றன
விதைகள்!

இளசு
27-02-2007, 08:53 PM
கான்வெண்ட் சிறுமி
கால் தடுக்கியதும்
கத்துகிறாள் : அம்ம்ம்ம்மா!

அறிஞர்
27-02-2007, 09:06 PM
புதைத்தால்
முளைக்கின்றன
விதைகள்!
பாரதி அண்ணாவின் கருத்தும்... பிரத்தீப்பின் ஒரு எழுத்து மாற்றமும் அருமை....
தொடரட்டும்.

அறிஞர்
27-02-2007, 09:07 PM
கான்வெண்ட் சிறுமி
கால் தடுக்கியதும்
கத்துகிறாள் : அம்ம்ம்ம்மா!எப்படின்னாலும் தாய்மொழிக்கு நிகரில்லை...

poo
28-02-2007, 08:11 AM
நிதர்சனங்கள் என்றென்றும் முரணே..

சின்ன வரிகளில் எத்துணை பெரிய அர்த்தங்கள்..

வாழ்த்துக்கள் அன்பு நண்பர் பாரதிக்கும்.. அதைத் தொடருக்கும் அன்பு அண்ணனுக்கும்!!

பாரதி
01-03-2007, 12:47 AM
நன்றி அறிஞர், மனோஜ், இனியவன், பெஞ்சமின், பெருமாள், ராம், பர்ஹான், லைக்சன்ரைஸ்பேபி, மயூரேசன், முகிலன், நக்கீரன், பார்த்திபன், ராஜேஷ்குமார், செல்வன், விசாகன், அண்ணா, பிரதீப், பூ.

அன்பு பிரதீப்,

உண்மையிலேயே உங்கள் திருத்தம் மிக அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கிறது.

அண்ணா...
எல்லா வகை கவிதைகளையும் ஒரு கை பார்க்கும் உங்கள் திறமை என்னை வியக்க வைக்கிறது!!

இளசு
05-03-2007, 09:56 PM
ஊனமுற்றவர் வாழ
உதவாதவரே
உண்மையில் ஊனமுற்றவர்..

(கருத்து - கலைஞர்)

இளசு
05-03-2007, 09:58 PM
மிகப்பெரிய நிறுவனம்
இறங்கியது இந்தியாவில்
சில்லறை வணிகம் செய்ய..

_ ( செய்தி - மும்பைக்கு வால்-மார்ட் குழு வருகை)

அறிஞர்
05-03-2007, 11:54 PM
மிகப்பெரிய நிறுவனம்
இறங்கியது இந்தியாவில்
சில்லறை வணிகம் செய்ய..

_ ( செய்தி - மும்பைக்கு வால்-மார்ட் குழு வருகை)
அருமை.....
மேற்கத்திய நாடுகளில் பறந்து கிடக்கும் வால்-மார்ட்டின் படையெடுப்பு பற்றி.. அருமை வரிகள்..

பாரதி
06-03-2007, 02:09 PM
எரிபவை நட்சத்திரங்கள்
மறையப் போகின்றவைகளுக்கு பெயர்
எரி(றி) நட்சத்திரங்கள்!
-------
மற்றவர்களின் பார்வை கூட உங்கள் கைவண்ணத்தில் கவிதையாக மாறுவது சற்றே வியப்புதான்...! ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா... தொடருங்கள்.
__________________

அறிஞர்
06-03-2007, 04:00 PM
எரிபவை நட்சத்திரங்கள்
மறையப் போகின்றவைகளுக்கு பெயர்
எரி(றி) நட்சத்திரங்கள்.
__________________
எரி(றி) நட்சத்திரங்கள்... பற்றிய சிந்தனை அருமை.

அமரன்
06-03-2007, 04:34 PM
பொதுவாக காதலித்தால் கவிதை வரும் என்பார்கள். உண்மைதான்போலும். இங்கு சமுதாயத்தைக் காதலிப்பவர்களின் குறல்கள் கவிதைகளாக விதைக்கப்படுகின்றன. பாரதி அண்ணா, அண்ணன் இளசு இருவர் கவியும் நன்று.

இளசு
06-03-2007, 06:28 PM
நன்றி பாரதி, அறிஞர்,நக்கீரன்...

--------------------------------

வாகன ஓட்டியின் பார்வையில் -

கொளுத்தும் மதியம்...
தகிக்கும் வெப்பம் ...
மெ..ல்..ல... மாறும் சிவப்பு விளக்கு..!

ஆதவா
06-03-2007, 06:33 PM
ஹைக்கூக்கள் அருமையாக இருக்கிறது இளசு ஐயா!

மனோஜ்
06-03-2007, 06:36 PM
அறிஞர்கள் கூறும் கருத்துக்களுக்கு இனையேது
ஒவ்வெறு வரிகளும் முத்துக்களாய்

இளசு
06-03-2007, 06:46 PM
நன்றி ஆதவா ( ஐயா என்ற அடைமொழி வேண்டாமே)..

ஆமாம், நினைவில் ஒட்டிய குறும்பா கருத்துகளை பகிர்கிறேன்..
பாரதிக்கு எசப்பாட்டாய்..

நன்றி மனோஜ்....
--------------------------------

வாகன ஓட்டியின் பார்வையில் -

கொளுத்தும் மதியம்...
தகிக்கும் வெப்பம் ...
மெ..ல்..ல... மாறும் சிவப்பு விளக்கு..!

காலப்பரிமாணம் எப்போதும்
காத்திருப்பவன் கண்ணோட்டத்தில்...
காதலிக்குக் காத்திருக்கும்
கணங்களும் யுகங்கள்...

வழக்கமாய் வடபழனி செல்பவன்
அன்று ஏதோ தி.நகர் வண்டிக்கு தவமிருக்க
வரிசையாய் காலியாய் வடபழனி பஸ்கள் வரும்...இல்லையா?

காத்திருத்தல் பற்றி இன்னும்...


காத்திருந்து சலித்து சிகரெட்
பற்ற வைத்த உடனே
சட்டென வந்து நிற்கும் பேருந்து..

அறிஞர்
06-03-2007, 07:13 PM
காத்திருந்து சலித்து சிகரெட்
பற்ற வைத்த உடனே
சட்டென வந்து நிற்கும் பேருந்து..
அருமை இளசு..
இதைப் பார்த்தவுடன்.. சிரிப்பு தான் வந்தது.
பல பேரை இந்த சூழ்நிலையில் கண்டிருக்கிறேன்....

இளசு
06-03-2007, 07:38 PM
நன்றி அறிஞர்...

பொறுமையாய் முழு விருந்தாய் கவிதை படைத்திட
ஏனோ கைகூடவில்லை.. அதனால்தான் துரித உணவாய்... இப்படி ஏதாவது.... அதற்கும் இப்படி ஊக்கம் தந்தால் ..
இன்னும் இன்னும் எழுத ஆசை வருகிறது..

விதை,எரி-நட்சத்திரம் என வீரிய க-விதைகள் இடும்
பாரதியின் பாத்தியில் இளைப்பாற ஊடுபயிராய் நானும்..

அறிஞர்
06-03-2007, 09:14 PM
பொறுமையாய் முழு விருந்தாய் கவிதை படைத்திட
ஏனோ கைகூடவில்லை.. அதனால்தான் துரித உணவாய்... இப்படி ஏதாவது.... அதற்கும் இப்படி ஊக்கம் தந்தால் ..
இன்னும் இன்னும் எழுத ஆசை வருகிறது..
.. எழுதுங்கள்.. எழுதுங்கள்..எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...


விதை,எரி-நட்சத்திரம் என வீரிய க-விதைகள் இடும்
பாரதியின் பாத்தியில் இளைப்பாற ஊடுபயிராய் நானும்..
பாரதி பாத்தியில் வளரும் பயிர்களுக்கு
உரமிடவேண்டியது.. எங்கள் கடமையல்லவா..

paarthiban
07-03-2007, 09:38 AM
சேற்று வயலில் நாற்று நடும்
சேறான பெண்டுகளின்
பாட்டு வருது - சுத்தமாக

paarthiban
07-03-2007, 09:39 AM
வரப்பை மூடிய விளைச்சல்
போன வருசமே
நான் வித்து விட்ட வயலில்

paarthiban
07-03-2007, 04:17 PM
இசம் ,படிமம் தெரியாது
இருண்மை புரியாது
ஆனலும் நானும் ஒரு கவிஞன்

அமரன்
07-03-2007, 04:47 PM
விதை,எரி-நட்சத்திரம் என வீரிய க-விதைகள் இடும்
பாரதியின் பாத்தியில் இளைப்பாற ஊடுபயிராய் நானும்

இதைப் பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.

அமரன்
07-03-2007, 04:48 PM
பார்த்தீபனின் படைப்புகள் படிக்கப் படிக்க சமூகசிந்தனையைக் கூட்டுகின்றது.

இளசு
07-03-2007, 05:04 PM
நக்கீரன்.
நன்றி உங்கள் மறுமொழிக்கு..

பார்த்திபன்

மிக நல்ல பார்வையும் சொற்சிக்கனமும் இருக்கிறது..
பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்கள்..
ஊக்கப்படுத்தி செம்மைப்படுத்த நம் மன்றம் இருக்கிறது..
வாழ்த்துகள்.

அறிஞர்
07-03-2007, 08:52 PM
வரப்பை மூடிய விளைச்சல்
போன வருசமே
நான் வித்து விட்ட வயலில்
இதை தான் விதி என்பதா...

அழகாக எழுதுகிறீர்கள்.. பார்த்திபன்..

இளசு
10-03-2007, 07:35 AM
செய்தி - வீசப்பட்ட பெண் சிசுக்கள்
இடம் - தஞ்சை முட்புதர்; திருவண்ணாமலை கோவில்
நாள் - உலக மகளிர் தினம்

இளசு
12-03-2007, 07:06 PM
கனமழையை எதிர்கொண்டும்
காலி குடம் நிரம்பவில்லை -
கவிழ்த்து வைக்கப்பட்டிருந்ததால்..

ஆதவா
12-03-2007, 07:12 PM
நன்றி ஆதவா ( ஐயா என்ற அடைமொழி வேண்டாமே)..

சார் என்றால் அது ஆங்கிலாமாகிவிடுமே என்பதால் ஐயா என்றேன்.. அதுபோக நீங்கள் எல்லா தகுதியிலும் பெரியவர். (உங்கள் வயது என்ன என்றே எனக்கு தெரியாது.) ஆக ஐயா என்றேன்..இனி மாற்றிக்கொள்ளலாம்...

காத்திருந்து சலித்து சிகரெட்
பற்ற வைத்த உடனே
சட்டென வந்து நிற்கும் பேருந்து..

இவைகள் ஹைக்கூக்களா?

இளசு
12-03-2007, 07:34 PM
ஆதவா

ஐயா என்ற அடைமொழியை அடைய பெரிய தகுதிகள் வேண்டும்..
...
(வயதால் மட்டுமே அது வந்துவிடாது..:rolleyes: )
இதுவரை ஆர்க்கிமெடீஸ் அவர்களை மட்டுமே நான் ஐயா என விளித்து எழுதியிருக்கிறேன்.

சொல்லி அழைக்கத்தானே பெயர்..!
இளசு என அழையுங்கள்... போதும்..


என் வயது 44....( அய்யோ ..சொல்ல வைக்கிறாங்களே..):angry:

இவை ஹைக்கூக்களா?

இல்லை..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1066
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8285

பல கட்டுமான விதிகள் உள்ள ஹைக்கூக்கள் வடிக்க
இன்னும் மொழி வசப்படவேண்டும்..
ஆனால் ஆசைக்கு வெட்கமின்றி நானும் எழுதுவேன்..
இனிய பென்ஸின் அடுத்த போட்டியில்...:p
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=180783#post180783

இளசு
17-03-2007, 01:31 AM
கழுத்து கனக்கிறது
கடையில் சங்கிலியை
அடகு வைத்த நேற்றிலிருந்து.

paarthiban
20-03-2007, 12:56 PM
நிறம் கருத்து, இனம் மோதி
மின்சாரம் தாக்கி கரைஞ்சுருகி அழுது
அழியும்போது மழைன்னு எனக்கு நல்ல பேரு

இளசு
20-03-2007, 11:56 PM
அழிந்து நிலைப்பவர் - தியாகி!

வாழ்த்துகள் பார்த்திபன்..

அதிகம் எழுதுங்கள். என் அன்பு வேண்டுகோள்..

இளசு
31-03-2007, 05:21 PM
வெறிநாய் தொல்லை தமிழகத்தில்
கடிபட்டவர் தவிர மற்றவர்
காட்டுவது ஜீவகாருண்யம்!

பாரதி
31-03-2007, 06:23 PM
விடுமுறை அறிவித்து அனைத்தையும் நிறுத்தி
'பந்த்' நடத்தியது அரசு - வெற்றியாம்!
தொடர்ந்து அறிவிப்புகள் ()! தொலைக்காட்சியில்!

இளசு
31-03-2007, 06:28 PM
சபாஷ் பாரதி!

நல்லவர்க்கும் துஷ்டருக்கும் சேர்த்து
நண்பராய் நடிப்பவர் -ஒரு நாள்
நடுத்தெருவில் நிச்சயமாய்!

பாரதி
31-03-2007, 06:31 PM
ஆமாம் அண்ணா... யாரும் பயணம் செய்ய வேண்டாம் - பேருந்துகள் கிடையாது, தொடருந்துகள் கிடையாது, விமானங்கள் கிடையாது. யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம் - விடுமுறை. யாரும் கடைகளை திறக்கக்கூடாது ------------- உத்தரவு! எல்லாம் சரி... தொலைக்காட்சிக்கு விடுமுறை - பந்த் - கிடையாதாமா..??

பாரதி
31-03-2007, 06:35 PM
சபாஷ் பாரதி!

நல்லவர்க்கும் துஷ்டருக்கும் சேர்த்து
நண்பராய் நடிப்பவர் -ஒரு நாள்
நடுத்தெருவில் நிச்சயமாய்!

-----------------------------------
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
----------------------------------
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை தகர்க்க நினைக்கும் மாக்களுக்கு எப்படி புரிய வைக்க...?

இளசு
31-03-2007, 06:38 PM
-----------------------------------
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
----------------------------------
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை தகர்க்க நினைக்கும் மாக்களுக்கு எப்படி புரிய வைக்க...?

ஒதுங்கிப்போவது பயத்தால் அல்ல
ஒவ்வா அருவெறுப்பால் என
எப்படிப் புரியவைக்க சேற்று எருமைக்கு?

ஆதவா
31-03-2007, 06:59 PM
முரண் தொடர் ஒவ்வொன்றும் சாட்டையடி.. வலிமையான சாட்டையடி.........

தொடருங்கள் பாரதி அண்ணா!

மனோஜ்
31-03-2007, 07:28 PM
பதிலுக்கு பதில் முரண்தொடர் அருமை அருமை

இளசு
04-04-2007, 10:59 PM
33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!

ஓவியா
05-04-2007, 01:17 AM
பாரதியாண்ணாவுக்கு ஒரு சபாஷ்.

அனைத்துக் குட்டி கவிதைகளும் (முரண்தொடர்கள்) அருமை.

வளமான சிந்தனை. ஒரு வரி = ஒரு சாடையடி.

நன்றி அண்ணா
தொடருங்கள்

ஓவியா
05-04-2007, 01:21 AM
33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!


ஒரு இடத்திலாவது
அந்த 33 சதம்
பிரதம மந்திரி.....ஹி ஹி ஹி

ஆதவா
05-04-2007, 01:40 AM
33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!

வெளுத்து வாங்கிட்டீங்க போங்க..

paarthiban
05-04-2007, 10:08 AM
33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!

நெத்தியடி அண்ணா. பார்லிமெண்ட்டுக்கு அனுப்பலாம் .

விகடன்
05-04-2007, 12:51 PM
முரண்கவிதை என்று சிறு சிறு தொகுப்பாக தருவது நன்றாக இருக்கிறது.

இளசு
06-04-2007, 06:58 AM
நன்றிகள் அனைவருக்கும்!


----------------------------
அறிவு பலமாய் வேண்டாம் என்றது
இதயம் பலவீனமாய் வேண்டும் என்றது
இறுதியில் பலவீனம் பலத்தை வென்றது!

இளசு
06-04-2007, 11:11 PM
அறிவு இமைத்தது அரைநொடி..
ஆசை அழைத்துச் சென்ற
பாதை நீள்கிறது.. யுகம் தாண்டி..!

இளசு
06-04-2007, 11:16 PM
எல்லாம் எல்லாரும் ஏற்கனவே
சொல்லியாகி விட்டது என்றபின்னும்
சொல் புதிது கண்டான் பாரதி!

ஆதவா
07-04-2007, 03:56 PM
எல்லாம் எல்லாரும் ஏற்கனவே
சொல்லியாகி விட்டது என்றபின்னும்
சொல் புதிது கண்டான் பாரதி!


அருமை அண்ணா!!! பாரதி பற்றீ யார் சொன்னாலும் மெய் சிலிர்க்கும் எனக்கு....

என்றாவது ஒருநாள் நீண்ட கட்டுரை ஒன்று எழுதுவேன்.

ஓவியன்
08-04-2007, 04:56 AM
நண்பர் பாரதியின் ஒவ்வொரு பதிவையும் பார்த்தேன், ஒவ்வொன்றும் நல் முத்துக்கள். அவற்றினை மெருகேற்றும் மன்றத்துக் கவிகள் முக்கியமாக தன் பாணியினால் கவி ஒவ்வொன்றையும் அக்குவேறு ஆணி வேறாக ஆராயும் இளசு அண்ணா! (நான் அண்ணாவென்று தான் அழைப்பேன், பெயர் சொல்வதிலும் இது நெருக்கத்தை அதிகரிக்குமென்பதற்காக) என இந்த திரி அசத்தலாக இருக்கின்றது.

எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

இளசு
13-04-2007, 06:52 AM
பல மனஅலைகளில் பல படகுகள்.
பிடி-வாதக்கயிறுகள் பிணைக்குமா?
பிணக்கை இன்னும் வளர்க்குமா?

poo
13-04-2007, 09:36 AM
இரு தமிழர்கள்..
"ஹாய் விஷ் யூ ஏப்பி டமில் நீய் இயர்"
"தேங்ஸ், சேம் டு யூ" - ரொம்பப் பழசா?
அப்புறம் இன்னும் சொல்றாங்க!!

gayathri.jagannathan
13-04-2007, 10:22 AM
இரு தமிழர்கள்..
"ஹாய் விஷ் யூ ஏப்பி டமில் நீய் இயர்"
"தேங்ஸ், சேம் டு யூ" - ரொம்பப் பழசா?
அப்புறம் இன்னும் சொல்றாங்க!!


இந்தத் திரியை இப்போது தான் பார்க்க நேர்ந்தது..

முரண்தொடர் கவிதை அடிகள் எல்லாமே நெத்தியடி...

வலிமையான சமூகப் பார்வையின் உணர்வுகள்,ஏக்கங்கள் இவற்றினை அழகாக (ஆழமாக) வெளிப்படுத்தியுள்ள இளசு, பார்த்திபன்,பாரதி,பூ அனைவருக்கும் பாராட்டுக்கள் பல....

எண்ணத்தில் உள்ள சமூகம் கண் முன்னே விரியக் காணும் நாள் எப்போது?...

leomohan
13-04-2007, 10:49 AM
அற்புதமான திரி. ஒவ்வொருவரும் அசத்துகின்றனர். தனித்தனியே ஒவ்வொரு கவிதையையும் பாராட்டினால் அதற்கே பதிவுகள் 100 தாண்டும்.

அருமை. இத்திரியை இத்தனை நாள் தவறவிட்டேன் என்று நோகிறேன்.

paarthiban
13-04-2007, 11:21 AM
எல்லாரும் கலக்குறாங்க. எனக்கு கை துறுதுறுக்குது.
கைதட்ட (கவிதை எழுத அல்ல).பாராட்டுகள் பூ அண்ணா,இளசு அண்ணா.

இளசு
14-04-2007, 10:00 PM
தமிழர்கள் தமிழில் உரையாட அழைக்கும் பூவுக்குப் பாராட்டு..

கருத்தளித்த ஓவியன், காயத்ரி, மோகன், பார்த்தி உள்ளிட்ட
நண்பர்களுக்கு நன்றி..


---------------------------------------------------------------
இளமை இன்னும் -ஆனால் மூத்தவள்
இளையாள்களை விட வேகமாய் நடப்பவள்
எங்கள் தமிழ்த்தாய்!

பாரதி
15-04-2007, 02:12 AM
இளமை இன்னும் -ஆனால் மூத்தவள்
இளையாள்களை விட வேகமாய் நடப்பவள்
எங்கள் தமிழ்த்தாய்!

ஆம் அண்ணா....
நூற்றாண்டுகள் கண்ட மரம் போல வலிமையாய்
இன்று பிறந்த குழந்தையின் மழலையாய்
என்றும் இருப்பள் நம் தமிழ்த்தாய்.

இளசு
15-04-2007, 09:58 AM
நூற்றாண்டுகள் கண்ட மரமும் அவள்
இன்று பிறந்த மழலையும் அவள்
நம் தமிழ்த்தாய்.

இந்த இனிய முரண் நம் மொழிக்கு மட்டுமே சொந்தம் பாரதி..

ஏனைய மூத்த மொழிகள் போல் தளராமல்
நாவிலும் ஓலையிலும் அச்சிலும்
ஒலிநாடா, குறுந்தகடு, இணையத்திலும்
நாளை வரும் புது நுட்பத்திலும்
மாறி மாறித் தேரேறி வரும்
வாழத்தெரிந்த - வாழவைக்கும் தேவதை அவள்!

இளசு
15-04-2007, 09:16 PM
என்னைக் காலம் நேற்று
எழு என்றபோது அமர்ந்திருந்தேன் -
இன்று படுக்கப்போட்டு விட்டது!

இளசு
16-04-2007, 06:01 PM
குளிர்காலத்துக்காக கோடையில் உழை
கோடையை எண்ணி குளிரில் மகிழ்
கற்றுக்கொடுக்குது கட்டெறும்பு..

ஓவியா
16-04-2007, 06:41 PM
குளிர்காலத்துக்காக கோடையில் உழை
கோடையை எண்ணி குளிரில் மகிழ்
கற்றுக்கொடுக்குது கட்டெறும்பு..

அருமை இளசு.

நன்றி.

மனோஜ்
16-04-2007, 06:51 PM
குளிர்காலத்துக்காக கோடையில் உழை
கோடையை எண்ணி குளிரில் மகிழ்
கற்றுக்கொடுக்குது கட்டெறும்பு..
எறும்பிடம் மிருந்து உழைப்பை கற்றுக்கொள் அப்படிதானே அண்ணா:icon_good:

இளசு
16-04-2007, 07:00 PM
எறும்பிடம் மிருந்து உழைப்பை கற்றுக்கொள் அப்படிதானே அண்ணா:icon_good:

நன்றி ஓவியா, மனோஜ்..

எறும்புப் பாடங்கள் நான்கு - எங்கோ படித்தது..

1. Never Quit - Find a way or make it. விடாதே... வழி கண்டுபிடி அல்லது உருவாக்கு..
2. Think ahead - Think winter all summer
எதிர்நோக்கி சிந்தனை செய்..
3. Think Positive - Think summer all winter
வரும் நல்லதை நம்பு..
4. Do what all you can
முடியுமட்டும் செய்!
(பாரதி கொடுத்த மூவரி முரண் எல்லைக்குள்
அவற்றில் இரண்டு மட்டும் சொன்னேன்.)

இளசு
17-04-2007, 05:59 AM
பல கோடி மக்கள் வேலையில்லாமல்
பல ஆயிரம் ரயில்-சாலை சந்திப்புகள்
ஆளில்லாமல்!

ஓவியன்
17-04-2007, 06:12 AM
பல கோடி வேலையில்லா மக்கள்...
பல ஆயிரம் ரயில்-சாலை சந்திப்புகள்
ஆளில்லாமல்!

சில வரிகள் தான் ஆனால் என்னமாதிரி நமது நாடுகளிலுள்ள பிரச்சினைகளை வெளிச்சம் போடுகிறது.

அருமை அண்ணா!

இளசு
17-04-2007, 06:15 AM
நன்றி ஓவியன்

தமிழகத்தில் மட்டும் 1100 ஆளில்லா ' லெவல் கிராசிங்குகள்' இருப்பதாய் ரயில்துறை மேலாளர் நேற்று சொன்னார்.

ஓவியன்
17-04-2007, 06:20 AM
உண்மைதான் வேண்டிய வேளைகளில் வேண்டிய இடங்களில் வேண்டிய வசதிகள் இருப்பதில்லை. ஆனால் இவ்வாறு வேண்டாத இடங்களில் தேவைக்கு அதிகமாக செய்து வைக்கிறார்கள்.

pradeepkt
17-04-2007, 06:23 AM
என்ன செய்ய???
நேற்று அநியாயமாக 11 அரசு ஊழியர்கள் உடல் சிதறி இறந்தனர்.
படித்த மக்களே கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தால் யார் என்ன செய்வது?

பரஞ்சோதி
17-04-2007, 08:38 AM
ஒவ்வொருத்தருக்கும் தனிமனித ஒழுக்கம் என்ற பண்பு அதிகரிக்காத வரை இது போன்றவை நிகழும்.

பரஞ்சோதி
17-04-2007, 08:42 AM
தென்னை மரத்தில்
ஓலை தட்டி
கோக்குடன் விக்ரம்

ஓவியன்
17-04-2007, 08:43 AM
தென்னை மரத்தில்
ஓலை தட்டி
கோக்குடன் விக்ரம்

அருமை அண்ணா!!

இளசு
20-04-2007, 09:48 PM
பரம்ஸ்...

நல்ல முரண் காட்சிப்பா.. பாராட்டுகள்!

(மேலைநாடுகளில் ஏப்பம் விடுவது அநாகரீகம்..
ஆனால் ஒரு கூட்டமே கோக் குடித்து ஏப்பம் விடுவதைப்
பெருமையாகக் காட்டி விக்ரம் நடித்த ஒரு விளம்பரம்..!
இடத்துக்குத் தக்க வேஷம் கட்டும் கோக்!)

---------------------------------------------------

நலிந்த எழுத்தாளர் கூட்டம்
மலிவான வாடகைக்கு மண்டபம்
கூட்டநாள் : அஷ்டமி!

poo
21-04-2007, 06:38 AM
கூட்டம் நடந்த மாதம்கூட மார்கழியாக இருந்திருக்கும் அண்ணா... ஒற்றைவாடிப் போல இருக்கும் மண்டபங்கள்தான் இவர்களது அவை.. கலை அரங்கங்களெல்லாம் பட்டுச் சால்வை போர்த்திவரும் படைப்பாளிகளுக்குத்தான்!

- முகத்தில் அறைகின்றன முரண்கள்..

ஓவியா
22-04-2007, 06:36 PM
தென்னை மரத்தில்
ஓலை தட்டி
கோக்குடன் விக்ரம்நலிந்த எழுத்தாளர் கூட்டம்
மலிவான வாடகைக்கு மண்டபம்
கூட்டநாள் : அஷ்டமி!

தூள்.

நல்ல சிந்தனை.

இளசு
22-04-2007, 09:24 PM
நன்றி பூ... நன்றி ஓவியா..

இன்றைய முரண்காட்சிப்பா..


இந்தியத்தாய்க்கு இரு பிள்ளைகள்..
இத்தாலி விண்கலனை ஏவும் விஞ்ஞானி
இன்னொரு நாட்டுக்கு ஆள் கடத்தும் எம்.பி!

ஓவியா
22-04-2007, 09:36 PM
ஹி ஹி ஹி

நல்ல சூடு.

பாரதி
23-04-2007, 01:28 AM
செய்தித்தாள்களைப்படித்தே, குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஒரு முரண்பா வடிக்கும் உங்கள் திறன் வியப்பாக இருக்கிறது அண்ணா..!!

அரசியல்வாதிகள் பயப்படும் வகையில் அரசியல் அமைந்தால்தான் நாடு உருப்படும்.

poo
23-04-2007, 05:28 AM
நம் நெஞ்சு எரிந்தாலும் துணிந்து எதையும் செய்யமுடியாத நிலையில் தவிப்பதைத்தான் "இரு பிள்ளைகள்" என்று சொல்லி விட்டீர்களோ..
இந்த கொடுமைக்கு என்ன தீர்வோ?!..

பாரதி
05-06-2007, 09:13 PM
மார்கழியில் உவப்பாய்
சித்திரையில் வெறுப்பாய்..
ஒரே சூரியன்!

பாரதி
07-06-2007, 11:43 PM
கண்களில் கருப்புத்துணி கட்டி
கையில் துலாக்கோல் ஏந்தி
நீதி தேவதை!

ஓவியா
08-06-2007, 12:49 PM
மார்கழியில் உவப்பாய்
சித்திரையில் வெறுப்பாய்..
ஒரே சூரியன்!

நல்ல சிந்தனை. நன்றி.


கண்களில் கருப்புத்துணி கட்டி
கையில் துலாக்கோல் ஏந்தி
நீதி தேவதை!

அண்ணா இது புரியவில்லையே

விகடன்
08-06-2007, 12:59 PM
கண்களில் கருப்புத்துணி கட்டி
கையில் துலாக்கோல் ஏந்தி
நீதி தேவதை!

அண்ணா இது புரியவில்லையேஅதைத்தன்ன் அண்ணாவும் சொல்லிக் கவலைப்படுகிறார் போலும்.

அக்னி
08-06-2007, 01:05 PM
Originally Posted by பாரதி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=219106#post219106)
கண்களில் கருப்புத்துணி கட்டி
கையில் துலாக்கோல் ஏந்தி
நீதி தேவதை!

அண்ணா இது புரியவில்லையே
நீதிமன்றில் உள்ள நீதி தேவதையின் கண்ணைக் கட்டி வைத்திருப்பதைக் குறித்து வருகிறது. கவிதையின் முரணாக நீதி தேவதையின் கண்களையே இருட்டாக்கி விட்டார்களே என்ற கருத்து வெளிப்பட்டாலும்,
ஆழ நோக்கில்,
பக்கச் சார்பற்று, நீதி நிலைநிறுத்தப்பட, கண்மூடிக்கொண்டு வாதப்பிரதிவாதிகளை பார்க்காது வாதப்பிரதிவாதங்களை மட்டுமே செவிமடுத்து தீர்ப்பு வழங்கும் தேவதையின் குறியீடாக உணர்த்தப்படுகின்றது.
இது முக்கியமாக, நீதிபதிகளுக்கு பக்கச்சார்பின்மையை நினைவுறுத்த நீதிமன்றில் நிலைநிறுத்தப்பட்ட தேவதை சிலையாகவே நான் எண்ணுகின்றேன்.

ஓவியா
08-06-2007, 06:35 PM
நன்றி அக்கினி. சிறப்பான கண்ணோட்டம்.

இளசு
08-06-2007, 09:53 PM
மீண்டும் முரண்தொடரைத் தொட்டிருக்கும் தம்பிக்கு பாராட்டுகள்!

சித்திரை மாதம் மழையைத் தேடி ஓடுகிறாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி வாடுகிறாய்

கவியரசு கண்ட முரண்... வாழ்வில்
என்றும் மாறா முரண்...

உன் கருப்புத்துணி முரணை ஒட்டி
அண்மையில் படித்ததை கொஞ்சம் மாற்றி
என் வெள்ளைத் துணி முரண்..


சமாதானக் கொடி
இறங்கியதும் ஆனது
இவனுக்கு கோடித்துணி!

இளசு
16-06-2007, 06:35 AM
நவீன காமதேனு

கன்றுக்காக சுரந்த பால்
கறந்த மனித இனம் தாண்டி
கட்-அவுட் மேல்!

ஷீ-நிசி
16-06-2007, 07:04 AM
நவீன காமதேனு

கன்றுக்காக சுரந்த பால்
கறந்த மனித இனம் தாண்டி
கட்-அவுட் மேல்!

சூழ்நிலைக்கு ஏற்ற முரண்.. ரசித்தேன்...


பொழுதுபோக்க பிறந்த சினிமா...
அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து,
அரைமணி நேரம் நிற்க வைத்தது!
டிக்கெட் வேண்டி, நீண்ட வரிசையில்.....

ஓவியன்
16-06-2007, 07:34 PM
நவீன காமதேனு

கன்றுக்காக சுரந்த பால்
கறந்த மனித இனம் தாண்டி
கட்-அவுட் மேல்!

உண்மைதான் அண்ணா!
எத்தனை குழந்தைகள் ஒரு சொட்டுப் பாலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த உலகத்திலே!

அமரன்
16-06-2007, 07:58 PM
வீரனாய் மடிந்து
மாவீரனாய் வாழ்கிறான்
போர்வீரன்

ஓவியன்
16-06-2007, 08:02 PM
வீரனாய் மடிந்து
மாவீரனாய் வாழ்கிறான்
போர்வீரன்

உண்மைதான் அமரா!
நச் வரிகளுக்குப் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

அமரன்
22-06-2007, 08:57 PM
உண்மைதான் அமரா!
நச் வரிகளுக்குப் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

நன்றி ஓவியன்.

அமரன்
22-06-2007, 08:57 PM
பட்டிணி கிடந்து
செத்தவன் வாயில்
அரிசி

ஓவியன்
22-06-2007, 09:01 PM
உண்மைதான் அமர்!


அரிசியுடன் சில்லறைகளும் போடுவார்கள், முதலே போட்டிருந்தால் இந்த வாய்கரிசி அவன் வயிற்றுக்கு அரிசியாக இருந்திருக்கும்.

அமரன்
23-06-2007, 06:53 PM
நன்றி ஓவியன். உங்கள் பின்னூட்டம் இட்ட வித்து கவிதையாக...
விதவையாய் வாழ்ந்தவள்
சுமங்கலியாய் போகிறாள்
நெற்றிக்காசுடன்

ஓவியன்
23-06-2007, 06:57 PM
அசத்துறீங்க அமர் − பாராட்டுக்கள்.

பென்ஸ்
24-06-2007, 03:03 AM
நன்றாக போகிறது..
பாரதி பார்த்தால் சந்தோச படுவார்...

பாரதி..
நீங்களும் நண்பர்களுக்கு உதவலாமே...

இளசு
24-06-2007, 10:14 AM
அமரனின் முரண்கள் அருமை. பாராட்டுகள்!

தொடர்வோம் பாரதி தலைமையில்..

பாரதி
24-06-2007, 01:37 PM
அண்ணா, பென்ஸ்..

நான் இயன்ற வரையில் படிக்கத்தான் செய்கிறேன். இணையத்தொடர்பில் உள்ள பிரச்சினையால் பல பதிவுகளுக்கும் கருத்துக்கள் எழுத முடிவதில்லை. ஆகவே தவறாக எண்ண வேண்டாம்.

அண்ணன் முன்பொரு முறை சொன்ன முரண்:
எத்தனை ஊற்றியும் (மழை விழுந்தும்?)
நிரம்ப வில்லை
கவிழ்ந்த குடம்..

இதேதான் எனக்கும் தோன்றியது சற்றே வித்தியாசமாய்..

எத்தனை மழை விழுந்தும்
நிரம்பவே இல்லை
கடல்.

அமரன்
24-06-2007, 01:42 PM
பாரதி அண்ணாவின் முரணுக்கும் இளசு அண்ணாவின் முரணுக்கும் பெரிய வித்தியாசம் கருத்தில். சுவையில் இரண்டும் ஒன்றே. நன்றி அண்ணன்களே.

அமரன்
25-06-2007, 04:50 PM
செய்தி:கின்னஸ் சாதனைக்காக 16 வயது மகனை சிசேரியன் செய்யவைத்த வைத்திய தந்தை...

சாகாது இருக்க
சாதனை செய்கிறனர்
சிசேரியன் மூலம்

அக்னி
25-06-2007, 04:55 PM
செய்தி:கின்னஸ் சாதனைக்காக 16 வயது மகனை கருச்சிதைவு சிகிச்சை செய்யவைத்த வைத்திய தந்தை...

சாகாது இருக்க
சாதனை செய்கிறனர்
கருச்சிதைவு

அது கருச்சிதைவு அல்ல. சிசேரியன் அறுவைச் சிகிச்சை என்றல்லவா படித்திருந்தேன்...

அமரன்
25-06-2007, 04:57 PM
அது கருச்சிதைவு அல்ல. சிசேரியன் அறுவைச் சிகிச்சை என்றல்லவா படித்திருந்தேன்...

அப்படியா மாற்றிவிடுகின்றேன்.

ரிஷிசேது
04-07-2007, 04:33 PM
வடமொழிக்கு
நினைவூட்டியது−தமிழ்
செம்மொழியென்று


இப்படியும் செய்யலாமோ?

அமரன்
05-07-2007, 10:01 AM
இப்படியும் செய்யலாமோ?
சுவையாக உள்ளது.

பாரதி
05-07-2007, 01:05 PM
வடமொழிக்கு
நினைவூட்டியது−தமிழ்
செம்மொழியென்று


இப்படியும் செய்யலாமோ?

நன்றாகத்தான் இருக்கிறது ரிஷி. ஆனால் சரியான முரணா..?

என்னுடைய ஆதங்கம் என்ன என்றால் தமிழை செம்மொழி என்று கருதுபவர்களே செம்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொடுங்கள் என்று மாற்று மொழியிடம் வேண்டுகோள் விடுக்கிறார்களே என்பதுதான்.

ஓவியன்
06-07-2007, 12:19 PM
உண்மைதான் அண்ணா!

நீங்கள் கூறுவது சிந்திக்க வேண்டிய விடயமே!.

அமரன்
17-07-2007, 10:29 AM
இக்கவிதை நான் ஏற்கனவே எங்கோ பதிந்தேன்...முரணாகத்தெரிவதால் இங்கே பதிகின்றேன்.


நேர்த்திகடன் முடிக்க
ஆடு வெட்டுகின்றான்
கடன் வாங்கி

ஓவியன்
17-07-2007, 10:41 AM
நன்றாக உள்ளது அமர் இதே போன்று நான் முன்பு எங்கோ(விகடனாக இருக்கலாம்.......) படித்த முரண் இது

படிப்பதோ
எல்.கே.ஜி, யு.கே.ஜி!
ஆனால் சுமப்பதோ
5 கே.ஜி, 10 கே.ஜி!

இளசு
20-07-2007, 07:35 PM
பத்துக் குயில்களின்
பண்ணை விஞ்சியது
நாலைந்து கோட்டான்களின்
நாராச அலறல்!

இளசு
20-07-2007, 07:36 PM
என் சொந்த சாக்கடை
என்றெண்ணி அடைகாத்தால்
நாளடைவில்
நாறும் வீடு!

இளசு
20-07-2007, 07:37 PM
என் வீட்டுக் கொள்ளி
என்றெண்ணி எடுத்து
தலை சொறிந்தவன்
நிலை அந்தோ !

இளசு
20-07-2007, 07:38 PM
தமிழ் மண்ணை அழிக்க
தமிழரைப் பிரிக்க
தமிழரன்றி எவருண்டு?

ஓவியன்
20-07-2007, 07:40 PM
என் சொந்த சாக்கடை
என்றெண்ணி அடைகாத்தால்
நாளடைவில்
நாறும் வீடு!
உண்மைதான் அண்ணா!
நான் சில வேளை நினைப்பதுண்டு, கழிவுகள் துர் நாற்றமாக இருப்பது கூட காரணத்தோடு தானென்று.
இல்லையென்றால் கழிவுகளை அகற்றாமல் வீடுகளிலேயே வைத்திருப்பார்களே.......!

நாற்றமடிப்பதாலே தானே அவற்றை உடனுக்குடன் அகற்றி சுகாதாரமாக இருக்கிறோம், இது கூட ஆண்டவனது படைப்பின் சிறப்பே.

இளசு
20-07-2007, 07:42 PM
கடுகளவும் மாற்றம் செய்ய முடியா
காரியங்களில் காட்டுவார்
கன வேகம்..வீரம்!

இளசு
20-07-2007, 07:43 PM
தோட்டக் குயிலிசை
தொட்டில் மழலை..
குவிந்த கவனம் சிதறியது
குழாயடி வாய்ச்சண்டை வீரர்களால்!

இளசு
20-07-2007, 07:46 PM
பனையில் தேள் கொட்டியதாம்
தென்னையில் விஷம் வைக்கிறார்
வையம் வெல்ல விழைபவர்!

ஆதவா
20-07-2007, 07:46 PM
பத்துக் குயில்களின்
பண்ணை விஞ்சியது
நாலைந்து கோட்டான்களின்
நாராச அலறல்!


என் சொந்த சாக்கடை
என்றெண்ணி அடைகாத்தால்
நாளடைவில்
நாறும் வீடு!


கவிதைகளில் சில கற்பனையில் இருந்து பிடுங்கியெடுக்கப்படும். சில வாழ்க்கையிலிருந்து உரித்து எடுக்கப்படும்... கற்பனைகள் பெரும்பாலும் மகிழ்ச்சி ஊட்டலாம். உரித்து எடுக்கப்படுபவைகள் பெரும்பாலும் ரணம் கலந்ததாகத்தான் இருக்கும்..

இப்போது புரிந்துகொண்டது என்னவெனில் இளசு அண்ணாவின் மனத்தில் கவிதை எழுதுவதற்கு முன்பு என்ன இருந்தது என்பதுதான்... சில குயில் நிறத்துக் கோட்டான்களால் பண்ணைக்குக் கேடாக இருப்பது பண்ணைக்காரனின் கவலையாக இருக்கிறது. பல நேரங்களில் இருந்துவிட்டு போகட்டும் என்று உப்பிட்டு வளர்ப்பதும் தவறுதானே?.. பண்ணையின் கதவை மூடாமலும் வரும் பறவைகளை வடிகட்டலும் தான் கோட்டான்களுக்கு முடிவு என்று நினைக்கிறேன்.

கிடந்த சங்கு ஒன்றை ஊதினேன்
குரல் வெடித்தது
சப்தம் வரவில்லை.
அது செவிட்டுச் சங்காம்.
ஊதுவதை நிறுத்திவிட்டு
உடைத்தேன்
காதைப்பிளந்தது
சங்கின் சப்தம்.

இளசு
20-07-2007, 07:48 PM
குருடனுக்கு விளக்கேற்றி
வீணாய்ப் போனது
விலைமதிப்பற்ற எண்ணெய்!

பாரதி
23-07-2007, 12:47 AM
என் வீட்டுக் கொள்ளி
என்றெண்ணி எடுத்து
தலை சொறிந்தவன்
நிலை அந்தோ !

அண்ணா..
என் வீட்டுக்கொள்ளி − என்பதை
தன் வீட்டுக்கொள்ளி − என்று மாற்றலாமா...?

அனல் கக்கும் கவிதைகள்...!!!
காட்டுத்தீயாய் மனதை பற்றுகிறது.
அனைவருக்கும் நன்றி.

இளசு
02-08-2007, 10:02 PM
ஓவியன், ஆதவா, பாரதி...

கருத்துகள் நன்று! நன்றி!!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

அதே பழைய நடனம்..இன்றுமா?
அலுத்தனர் பார்வையாளர்!
மாற்றிவிட்டேன் − காலணிகளை!!

சாராகுமார்
03-08-2007, 07:23 AM
கவிதை அருமை பாரதி அவர்களே.100 பொன்மணி பரிசு உங்களுக்கு.

இளசு
05-08-2007, 05:27 PM
ஏறும் அலைகள் மட்டுமே அழகு
என்றது அக்காலம்!
இறங்கும் அலைகளும் அழகுதான்
என்பது இக்காலம்!

விகடன்
05-08-2007, 05:34 PM
விடமுண்டான்,
வியக்கின்றனர்...
அவனாயுளை எண்ணி
நலத்தை எண்ணி சர்க்கரை வாயில்
நாழிகைகளில் மரணம்
எங்கும் கலப்படம்.

ஓவியா
06-08-2007, 03:07 AM
குருடனுக்கு விளக்கேற்றி
வீணாய்ப் போனது
விலைமதிப்பற்ற எண்ணெய்!

அருமை மிகவும் ரசித்தேன்.

ந*ன்றி.

இளசு
19-08-2007, 01:15 PM
இப்பொழுதெல்லாம்
காயம் ஆக நாளாகிறது..
காயம் ஆறவும்தான்..

சிவா.ஜி
19-08-2007, 01:31 PM
இப்பொழுதெல்லாம்
காயம் ஆக நாளாகிறது..
காயம் ஆறவும்தான்..

பிரமாதம் இளசு.அசத்தலாக இருக்கிறது.இப்போதெல்லாம்..என்ற வார்த்தைதான் எத்தனை அர்த்தங்கள் கொடுக்கிறது....அருமை.

இளசு
19-08-2007, 01:37 PM
நன்றி சிவா...

ஞாயிறு அவசரமில்லாப் பொழுதில் ஏதோ சட்டென வந்தது..
சுருக்கமாக இருந்ததால் − கவிதைன்னு........................................

பாரதி
19-08-2007, 01:50 PM
அருமை அண்ணா..!

கவிதை எழுதவும்தான்.... என்று மனதில் தோன்றியது..!!

இளசு
19-08-2007, 01:54 PM
கவிதை எழுதவும்தான்.... என்று மனதில் தோன்றியது..!!

ஹ்ஹ்ஹ்ஹ்ஹா! பாரதி ''டச்''! ரசித்தேன்!

சிவா.ஜி
19-08-2007, 02:14 PM
நன்றி சிவா...

ஞாயிறு அவசரமில்லாப் பொழுதில் ஏதோ சட்டென வந்தது..
சுருக்கமாக இருந்ததால் − கவிதைன்னு........................................

சுருக்கமாக சொல்வதுதான் மிகப்பெரிய சவால். அது சரிவர கைவருகிறது உங்களுக்கு. ஓரிரண்டு வரிகளை அநாயசியமாக எழுதிவிட்டு படிப்பவரை ஓரிரண்டு மணிக்கூறுகளாவது யோசிக்க வைப்பதுதான் இப்படிப்பட்ட குறுங்கவிதைகளின் வெற்றி. அதில் அமோக வெற்றிபெற்ற வெற்றியாளர் நீங்கள். மனதார பாராட்டுகிறேன்.

இளசு
29-08-2007, 06:39 PM
விருப்ப ஓய்வு..
கட்டாயம் எடுக்கவும்..
தொழிற்சாலை அறிவிப்பு!

இளசு
29-08-2007, 06:42 PM
தீயணைப்பு வண்டியும்
தீவைப்பில்!
ஆக்ரா கலவரம்..

ஆதவா
29-08-2007, 06:44 PM
தீயணைப்பு வண்டியும்
தீவைப்பில்!
ஆக்ரா கலவரம்..

அட!1 சம்மட்டி அடி.. அழகான முரண்.. அழவேண்டிய கரு... வாழ்த்துக்கள் அண்ணா. கருவுக்காக அல்ல, கவிதைக்காக.

இனியவள்
29-08-2007, 06:45 PM
அழகிய முரண் அண்ணா
நச்சென்று இருந்தது

பாரதி
31-08-2007, 07:06 AM
விருப்ப ஓய்வு..
கட்டாயம் எடுக்கவும்..
தொழிற்சாலை அறிவிப்பு!

அசத்தலான வாழ்வியல் முரண்!

நான் பணி புரிந்த ஆலையில் இந்தப்பிரச்சினை வந்த போதுதான் அதன் வலி தெரிந்தது. பல ஆண்டுகள் பணிபுரிந்த நண்பர்கள் கண்ணீர்விடுவதை காண சகிக்கவில்லை.

நிர்வாகத்திற்கு சாதகமாகத்தான் எல்லா சட்டங்களும் இருக்கின்றன அல்லது இயற்றப்படுகின்றன..ஹும்...

அண்ணாவிற்கு என் அன்பு.

இளசு
02-09-2007, 06:04 AM
நிர்வாகத்திற்கு சாதகமாகத்தான் எல்லா சட்டங்களும் இருக்கின்றன அல்லது இயற்றப்படுகின்றன..கருத்துகளுக்கு நன்றி ஆதவா, இனியவள்.
.பாரதி,நீ சொன்னது மட்டுமல்ல.... வன்முறைச் சண்டியர்களின் கொடுமைகளை அரங்கேற்ற − எத்தனை சொல் சாகசங்கள் இன்றைய உலகில்!

யூஃபிமிஸம் என ஆங்கிலத்தில் சொல்வார்கள் −
தமிழில் இடரடக்கல் என நினைவு..

எடுத்துக்காட்டாய் மலங்கழித்து கழுவுவதை − ''கால் கழுவுதல்' என்பது..

இன்றைய உலகில் எத்தனை எத்தனை அக்கிரமங்கள் இந்த வகை யூஃபிமிசச் சொற்களால் அரிதாரம் பூசி உலாவுகின்றன..


ஒரு ஏழைநாட்டைத் தாக்கினால் − போர் அல்ல − கேம்பெய்ன்!
அந்தநாட்டுக்கு மருந்து, உணவு தடை செய்தால் − தண்டனை அல்ல − சாங்க்ஷன்!

கவிதையில் வந்த கட்டாய ஆள்குறைப்பு − வாலண்ட்டரி ரிட்டயர்மெண்ட்!!

இன்னும் புனிதம், மதம் என்ற முகமூடிச்சொற்கள் அணிந்து அரங்கேறும்
கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும் அவலம்!

விபச்சாரத்தை எஸ்கார்ட் என அழைத்து மகிழ்கிற மனித இனம்...

கொடுமைகள் செய்யலாம்.. ஆனால் மென்மையான தலைப்பு தேவை என அலைகிறது!
இந்த இழிநிலை எண்ணும்போது −−−


தேன் தடவிய கத்தி
நெஞ்சாங்குழியில் இறங்கினால்
இனிக்குமா என்ன?

சிவா.ஜி
02-09-2007, 07:19 AM
ஆக்ரா கலவரக்கவிதையும்,கட்டாய ஒய்வும் மிக மிக அருமை.வேதனிக்க வைக்கும் முரண்...அதே சமயம் பலத்த சிந்தனையை மேற்கொள்ள வைக்கிறது.யூஃபிமிசத்தின் முரண் சொற்களின் பட்டியல் அசத்துகிறது.மென்மேலும் கற்றுக்கொள்ள பல உண்டு இங்கு.மனம் நிறைந்த பாராட்டுக்கள் இளசு.

இளசு
02-09-2007, 08:47 PM
நன்றி சிவா..

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
ருசி குறையும்போதெல்லாம்
பட்டினி கிடந்து
பசியைக் கூட்டிக்கொள்கிறேன்!

இளசு
03-09-2007, 07:49 PM
சிரித்து சிரித்து கவனம் ஈர்த்த
சின்னக் குழந்தைக்கு அலுத்ததும்
பொம்மை உடைத்து கத்தி அழுதது!

அக்னி
03-09-2007, 09:04 PM
வருத்தி துடிக்கவைத்த
வேதனையில் அல(ரற்)றிய ஓர் உயிர்...
குருதிதோய்ந்தபடியே அழுகையில்
எட்டிப்பார்த்த இன்னோர் உயிர்...
பார்(கா)த்திருந்தவர்கள்...
சிரித்து மகிழ்ந்தார்கள்...
பேறுகால நிகழ்வுகள்...

இளசு
03-09-2007, 09:26 PM
சபாஷ் அக்னி...

ஓர் அழுகை இனிக்கும் என்றால்
அன்று பிறந்த மழலை அழுகைதான்..

அருமையான ஆனால் இனிய முரண்!

அக்னி
03-09-2007, 09:30 PM
நன்றி அண்ணா...

அருமையான தொடர்கள்... சிந்திக்கவைக்கும் முரண்கள்...
அனைவருக்கும் பாராட்டுக்கள்...யூஃபிமிஸம் என ஆங்கிலத்தில் சொல்வார்கள் −
தமிழில் இடரடக்கல் என நினைவு..

இடக்கரடக்கல் என்று தமிழில் வழங்குவதுண்டு.

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல்

இளசு
03-09-2007, 09:36 PM
ஆம்..இடக்கரடக்கல்தான் சரியான சொல்!
நன்றி அக்னி − பிழை திருத்தியமைக்கு!!

இன்று வன்முறை, வரம்புமீறலை மறைக்கப் பயன்படுகிறது...

அக்னி
03-09-2007, 09:45 PM
ஆமாம் அண்ணா...
அனைத்துமே, மருவி, திருகி போகும் உலக இயல்புகள்,
மனிதவாழ்வை எங்கு கொண்டு சென்று நிறுத்தப்போகின்றதோ என்பது புரியாத தெரியாத புதிர்தான்...

பாரதி
04-09-2007, 01:32 AM
சிரித்து சிரித்து கவனம் ஈர்த்த
சின்னக் குழந்தைக்கு அலுத்ததும்
பொம்மை உடைத்து கத்தி அழுதது!

! ! ! ! !

அக்னி
05-09-2007, 07:27 PM
வெட்டப்பட்டது...
அழ வைத்தது...
வெங்காயம்...

இளசு
05-09-2007, 07:31 PM
சிரித்து சிலேடையை ரசித்தேன்..
உரித்துப் பார்க்க இருபொருள்
தரும் அக்னியின் வெங்காயம்!!

அக்னி
05-09-2007, 07:35 PM
நன்றி அண்ணா...
பல தரம் எழுதி, திருப்திபடாமல் அழித்து, கடைசியில் இருவரிகளே, இரு பொருளையும் தாங்கி காப்பாற்றியது.

ஓவியன்
05-09-2007, 07:44 PM
நீண்ட காலத்தின் பின்னர் இந்த திரிக்கு வந்தேன்........
அண்ணாவின் அழகான முரண்களுடன் கை கோர்த்து வரும் அக்னியின் முரண்களும் மற்றவர்களது பின்னூட்டங்களும் அழகு.

வெட்டப்பட்டது...
அழ வைத்தது...
வெங்காயம்...

பட்ட வெங்காயம் எப்படி அழவைக்கும்.............? :innocent0002:
ஓ வெட்டும் போது கண்ணில் பட்டதா.............? :icon_wink1:

அக்னி
08-09-2007, 02:21 PM
வாக்கு தவறாமை,
நாணயம்... அன்று...
வாக்குத் தவறாமைக்கு,
நாணயம்... இன்று...
கவிச்சமரில் உதித்தது... முரணாக தென்பட்டதால் இங்கேயும் அழைத்து வருகின்றேன்...

இளசு
10-09-2007, 08:24 PM
அருமை அக்னி..
நல்ல முரண்!

-------------------------

முழு வாதமும் அழுகைக்கண்ணீர்
முடிவாக ஒரு வெற்றிப் புன்னகை!
பெண்!

அக்னி
11-09-2007, 10:46 PM
கண்ணீரின் பிடிவாதம் புன்னகையின் பிறப்பாக்கம் அருமை அண்ணா...

ஏற்றிய விளக்கைச் சுற்றி,
இடப்பட்டது
(கண்ணாடித்) தடுப்பு...
சீராக, பிரகாசித்தது..,
சுடர்...

அக்னி
11-09-2007, 10:58 PM
பிறந்தபோதே,
நெருங்கத் தொடங்கியது,
மரணம்...

இளசு
17-09-2007, 08:39 PM
தடுப்பும் ஜோதி வளர்க்கும் முரண்...

பிறப்பு - ஸ்டேட்டிக்
இறப்பு - டைனமிக்..
ஒன்று உறுதியாய் ஓர் கணத்தில் சமைந்த நிலை..
ஒன்று நெருங்கி வரும் ஓயாத சலன அலை..


அருமை அக்னி!

பாரதி
22-09-2007, 06:11 PM
பிறந்தபோதே,
நெருங்கத் தொடங்கியது,
மரணம்...

எத்தனை உண்மை..!!

பிறப்பது உறுதியில்லை எனினும்
இறப்பது உறுதியான ஒன்றுதான்..

வாழ்த்துக்கள் அக்னி.

என்னவன் விஜய்
22-09-2007, 08:47 PM
சேற்றில் எருமை
சுத்தமான நெய்யாம்
தொலைகாட்சியில் விளம்பரம்

என்னவன் விஜய்
22-09-2007, 08:58 PM
நெற்றியில் ஒற்றை ரூபாயுடன்
அனாதைப்பிணம்

ஓவியன்
24-09-2007, 05:14 AM
வலையில் அகப்பட்டு
பசித்திருந்த பெருங்கயல்,
தான் புசித்தாறியது
அங்கிருந்த சிறு கயலை...!

பென்ஸ்
24-09-2007, 05:22 AM
வலையில் அகப்பட்டு
பசித்திருந்த பெருங்கயல்,
தான் புசித்தாறியது
அங்கிருந்த சிறு கயலை...!

அருமை ஓவியன்...

மரணம் என்றறிந்த பின் ரணம் குறைவே
மரணம் என்றோ என்ற ரணம் வராதே...
அதனால் பசியாறி இருக்கும்

ஓவியன்
24-09-2007, 12:30 PM
மரணம் என்றறிந்த பின் ரணம் குறைவே
மரணம் என்றோ என்ற ரணம் வராதே...
அதனால் பசியாறி இருக்கும்

அழகான பின்னூட்டம் அண்ணா!

நீங்கள் கூறுவதும் உண்மைதான் அண்ணா!, மரணம் என்றோ என்று பயந்திருப்பதிலும் கொடிய ரணம் வேறொன்றுமில்லை தான்....

இளசு
04-10-2007, 10:58 PM
வலையில் அகப்பட்டு
பசித்திருந்த பெருங்கயல்,
தான் புசித்தாறியது
அங்கிருந்த சிறு கயலை...!

ஓவியனின் '' சர்வைவல் - வாழ்ந்திருத்தல்' நிமித்தமான முரண்காட்சியும்
பென்ஸின் கூறுபோட்ட அழகான பின்னூட்டமும் அருமை!

இளசு
04-10-2007, 11:00 PM
உடைந்த கடிகாரமும்
ஒருநாளில் இருமுறை
சரியான நேரம் காட்டும்!

ஆதவா
05-10-2007, 10:26 AM
தடுப்பும் ஜோதி வளர்க்கும் முரண்...

பிறப்பு - ஸ்டேட்டிக்
இறப்பு - டைனமிக்..
ஒன்று உறுதியாய் ஓர் கணத்தில் சமைந்த நிலை..
ஒன்று நெருங்கி வரும் ஓயாத சலன அலை..


அருமை அக்னி!

ஆஹா! மிக அருமை... இப்படிப்பட்ட விமர்சனங்களை எங்கும் கண்டதில்லை.... தொடருங்கள் அண்ணலே!

ஜெயாஸ்தா
08-10-2007, 02:36 AM
அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!

ஆதவா
08-10-2007, 07:05 AM
அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!

மொத்தமே ஐந்து வார்த்தைகள். சிக்கனமாய் சிரிக்கிறது கவிதை..... அடித்தாலும் நன்மைக்கே!!!
அருமை.....

ஓவியன்
09-10-2007, 02:32 AM
அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!

மாணவர் திருந்த வேண்டுமென ஆசிரியர்கள் அடிக்கும் அடி போன்றதோ இந்த அடி....

சில வரிகள், ஆனால் கன கச்சிதக் கவிதை...
பாராட்டுக்கள் ஜே. எம் இன்னும் நிறைய எழுதுங்க...

ஜெயாஸ்தா
09-10-2007, 02:39 AM
என் சிந்தனைக்கு ஊட்டச்சத்து கொடுத்த ஆதவா மற்றும் ஓவியனுக்கு நன்றி....!

பிச்சி
11-10-2007, 09:14 AM
அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!

கச்சிதமான கவிதை

கஜினி
11-10-2007, 11:32 AM
பூக்கடை விற்று
பிழைப்பு நடத்துகிறாள்
விதவை.

பென்ஸ்
11-10-2007, 12:11 PM
பூக்கடை விற்று
பிழைப்பு நடத்துகிறாள்
விதவை.

முரண் நன்று...
இருப்பினும்
"பூக்கடை"க்கு பதில் "பூ" வைத்திருக்கவேண்டுமோ.... கவிதையும், விதவையும் :)

ஆதவா
12-10-2007, 01:04 PM
முரண் நன்று...
இருப்பினும்
"பூக்கடை"க்கு பதில் "பூ" வைத்திருக்கவேண்டுமோ.... கவிதையும், விதவையும் :)

பின்னீட்டிங்க....

ஜெயாஸ்தா
13-10-2007, 02:15 PM
நல்ல
பாம்பு...!

ஜெயாஸ்தா
16-10-2007, 10:55 AM
வெண்மைக்கு
இழுக்கு....
விதவைகோலம்.!

கருமை
கௌவரவிக்கப்படுகிறது...
கார்மேகம்...!

கஜினி
16-10-2007, 11:18 AM
முரண் நன்று...
இருப்பினும்
"பூக்கடை"க்கு பதில் "பூ" வைத்திருக்கவேண்டுமோ.... கவிதையும், விதவையும் :)

சட்டென்று தைத்த முள்போல் ஆனது மனசு. அருமையான பின்னூட்டம். கவிஞர்களிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கஜினி
16-10-2007, 11:18 AM
வெண்மைக்கு
இழுக்கு....
விதவைகோலம்.!

கருமை
கௌவரவிக்கப்படுகிறது...
கார்மேகம்...!

கலக்கல் முரண்.

ஜெயாஸ்தா
16-10-2007, 12:11 PM
நன்றி கஜினி.

இளசு
12-11-2007, 09:28 PM
அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!

அருமை ஜெயாஸ்தா..
வைரம் போல் சிறிய ஆனால் கனமான கவிதை!


பூ (க்கடை) விற்று
பிழைப்பு நடத்துகிறாள்
விதவை.

சபாஷ் கஜினி!
பென்ஸின் விமர்சனம் அபாரம்..:icon_b:

இளசு
12-11-2007, 09:32 PM
தள்ளினால் சரிவது வீழ்வதற்கா?....
தளர்ந்து குனிந்து முட்டி வீழ்த்த...!
டாய்-சீ !


http://en.wikipedia.org/wiki/Tai_chi_chuan

அக்னி
12-11-2007, 09:32 PM
உறவு துறந்து துறவு...
துறவு துறந்து உறவு...

(கவிச்சமரில் உதித்தது.)

இளசு
12-11-2007, 09:42 PM
உறவு துறந்து துறவு...
துறவு துறந்து உறவு...

(கவிச்சமரில் உதித்தது.)


ஹஹ்ஹ்ஹா... அருமை அக்னி!

உறவு சேர்க்கும் துறவிகளால்
துறவுக்குச் சேர்ந்தது இழிவு...:mad:

அக்னி
12-11-2007, 09:44 PM
உடைந்த கடிகாரமும்
ஒருநாளில் இருமுறை
சரியான நேரம் காட்டும்!
காட்டும் நேரம் பார்க்கப்
பக்கத்தில் தேவை...
பழுதாகாத இன்னொரு கடிகாரம்...

அடித்தது
மழை...!
வளமாய்
சிரித்தது பூமி...!
அடிவாங்கிய பூமியின் ஈரம்,
ஆனந்தக் கண்ணீரோ...

பூக்கடை விற்று
பிழைப்பு நடத்துகிறாள்
விதவை.
பூச்சூடி வாழ்க்கை கொடுத்தாள்
ஒரு பெண்...
பூக்கார விதவைக்கு...

வெண்மைக்கு
இழுக்கு....
விதவைகோலம்.!

அலங்காரமில்லா கோலம்...
விதவைக்கோலம்...

அருமை முரண்கள் தந்த அனைவருக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள்...

அக்னி
12-11-2007, 09:52 PM
தள்ளினால் சரிவது வீழ்வதற்கா?....
தளர்ந்து குனிந்து முட்டி வீழ்த்த...!
டாய்-சீ !


http://en.wikipedia.org/wiki/Tai_chi_chuan
அப்போ பெண் முட்டினால்,
டீ-சீ யா..? தமிழுக்குமட்டும்...

வித்தியாச முரண் அண்ணா...


ஹஹ்ஹ்ஹா... அருமை அக்னி!

உறவு சேர்க்கும் துறவிகளால்
துறவுக்குச் சேர்ந்தது இழிவு...:mad:
உண்மைதான் அண்ணா...
முற்றும் துறப்பவருக்கும், துறக்க வேண்டும் என்ற விருப்பம் தவிர்க்க முடியாது...
ஆனால், துறவில் முற்றைத் தொலைத்தால் அது இழிவுதான்...

அக்னி
15-11-2007, 01:10 AM
கிழிந்த ஆடை ஏழ்மை...
மனித தாழ்நிலை...
கிழித்த ஆடை புதுமை...
மனித உயர்நிலை...

நன்றி: ஆடை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13303) கவிதை...

ஆதி
15-11-2007, 09:09 AM
எனக்கும் சரிவர தெரியாது நண்பரே! ஆனால் படித்தவுடன் அது ஒட்டாமல் போனதினால் அவ்வாறு சொன்னேன்.. இருந்தாலும் நான் சொன்னதற்காக இதோ என் வாக்கிய அமைப்பு.

செம்மொழி அங்கீகாரம்
தமிழுக்கு, கேட்டது
வடமொழியிடம்.....

செம்மொழி அங்கீகாரம்
வேண்டியது தமிழ்,
வடமொழியிடம்.....

"வடமொழியிடம்
கேட்டது தமிழ்
செம்மொழி அங்கீகாரம்"

இப்படி சொன்னால் அர்த்தம் சிதையுமா ?

அமரன்
17-11-2007, 08:35 AM
மேற்சட்டை இடையில்
சந்தோசத்துடன் சாமிதரிசனம்
கீழ்சட்டை மட்டுமே.
தோசமாம் சாமி தாரிசனம்...!

(எங்க ஊரில் மேற்சட்டை அணிந்து கோவிலுக்குள் போகமுடியாது? அதனால் எல்லோருர் சட்டையும் இடுப்புத்துண்டாகும். மேலே சட்டை இல்லாமல் ஒருசாரார் கோவிலுக்குள்ளே போக முடியாது..இந்நிலை இப்போதும் அங்கே இருக்காம்)

அமரன்
17-11-2007, 08:39 AM
மக்கள்
உழைப்பை மறந்து கல்லாக
உழைக்கும் கல்லாக தெய்வம்.

(ஐரோப்பிய நாடுகளில் அநேக கோவில்கள் வியாபாரஸ்தலங்கள். அதற்காக நான் பக்தி அற்றவனல்லன். உண்டியலில் போடும் காசு, அர்ச்சனை சீட்டு இரண்டிலும் நிர்வாகசெலவு போக, மீதி நன்மை பிறபித்தால் மேன்மை என்பது எனது கொள்கை..இங்கே அது இல்லை.. கோவில் தனிமனித சொத்து)

அக்னி
23-11-2007, 03:42 PM
இல்லாததை நினைத்து
இருப்பதை அழிக்கின்றோம்
தகுதியைக் காட்டி-வேலை
நிராகரிக்கப்படுகையில்..!
கவிச்சமரில் வந்த அமரகவி...
அழகிய முரண் கவியாக...

தகுதி அதிகமாம்...
வேலை இல்லை...

பாரதி
23-11-2007, 04:06 PM
மேற்சட்டை இடையில்
சந்தோசத்துடன் சாமிதரிசனம்
கீழ்சட்டை மட்டுமே.
தோசமாம் சாமி தரிசனம்...!

இந்த சாதிசனம் என்று ஒழியுமோ அன்றுதான் சாமி தரிசனம் நிஜமாகும்.


கவிச்சமரில் வந்த அமரகவி...
அழகிய முரண் கவியாக...

தகுதி அதிகமாம்...
வேலை இல்லை...

பிரமாதம்!

இளசு
25-11-2007, 08:48 PM
கடல் எனது பயம்
கப்பல் எரியும் வரை.....

ஓவியன்
25-11-2007, 08:54 PM
கடல் எனது பயம்
கப்பல் எரியும் வரை.....

ஒரு கோட்டினை சிறிதாக்க
அதனிலும் பெரிய கோடு வரையும்
ஒப்பிட்டு மனமாற்றும் வழிமுறை....

அருமை அண்ணா....!!

james
20-12-2007, 10:43 AM
சுதந்திரப்பெருமிதம்
குண்டுபுகா கண்ணாடிக்
கூண்டிற்குள்ளிலிருந்து!!

ஆழமான கருத்து...

இளசு
28-01-2008, 08:24 PM
செப்டிக் டாங்க் சுத்தப்படுத்த
இந்த நகரசபை இப்போது
மனிதர்களை பயன்படுத்துவதில்லை -நச்சு வாயு தாக்கி இறந்தவனை
நம்மில் ஒரு மனிதனாகவே அங்கீகரிக்காத
நகரசபை அதிகாரி வாக்குமூலம்!

( இது ஓர் அண்மைக்கால உத்தரப்பிரதேச உண்மைச் சம்பவம்..

பாருக்குள்ளே நல்ல நாடு - நம் பாரத நாடு..)

meera
28-01-2008, 11:30 PM
சுதந்திரப்பெருமிதம்
குண்டுபுகா கண்ணாடிக்
கூண்டிற்குள்ளிலிருந்து!!


பாரதி அண்ணா அழகாய் தருகிறீர்கள். உஙளுடன் சேர்ந்து நானும் சில முரண்களை தர அனுமதிக்க வேண்டுகிறேன்..

சுதந்திர மாதாவின்
சுவாசம்
ஆக்ஸிஜன் சிலின்டரில்..

meera
28-01-2008, 11:32 PM
பட்டு நெசவாளன்
மனைவி
நூல் புடவையில்..

meera
28-01-2008, 11:34 PM
விவசாயி வயிறு
சுறுங்கிய நிலையில்
விற்பனையாளன்
வயிறு
சுமக்க முடியாமல்...

இளசு
29-01-2008, 06:23 AM
வாங்க மீரா.. நலமா?

பாரதி திரி தொடங்கியவுடனே நான் உட்பட எல்லாரும் இதில் சேர்ந்து தொடுக்க ஆரம்பித்துவிட்டோம்..

பேரிதயப் பாரதியிடம் இதற்கெல்லாமா அனுமதி கேட்பார்கள்???!!!

உங்கள் முரண்களின் உண்மை சுடுகிறது..

விவசாயி, தொழிலாளி என உருவாக்குபவன் பெறுவது கொஞ்சம்..
நுகர்வோன் அளிப்பதில் பெரும்பகுதி இடைத்தரகனுக்கு என்பது
நவீன பொருளாதார விகாரம்... என் கொதிப்பைக் கூட்டும் விவகாரம்!

தொடருங்கள் மீரா... பாராட்டுகள்!

meera
29-01-2008, 09:06 AM
நலம் அண்ணா. நீங்க நலமா?

இந்த திரியை இன்று தான் கண்டேன் அனைத்தும் அருமை.

உங்க பாராட்டுக்கு நன்றி அண்ணா.

எனது பங்கும் இங்கு உண்டு.

mania
29-01-2008, 09:12 AM
ஹை மீரா.....நலமா....???
அன்புடன்
மணியா:)

இதயம்
29-01-2008, 09:14 AM
வங்கியில் கடன் வாங்க
அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்
நீங்கள் பணக்காரர் என்று..!!

meera
29-01-2008, 12:34 PM
ஹை மீரா.....நலமா....???
அன்புடன்
மணியா:)

நான் நலம் தல.நீங்க நலமா?

எங்க தல ஆளே காணோம்.நான் கூட விளம்பரம் தரலாம் என்றிருந்தேன். ஹி ஹி ஹி:icon_shout::icon_shout:

சுகந்தப்ரீதன்
19-02-2008, 09:36 AM
சாகத்
துணிந்தவனுக்கு பயம்..!
எப்படி சாவதென்று...!!

சாம்பவி
19-02-2008, 10:02 AM
கன்னம் சுட்டது........
கண்களில் ஈரம்.. !

சுகந்தப்ரீதன்
19-02-2008, 10:13 AM
அழுகுரல் கேட்டு
அனைவரும் சிரித்தனர்-
குழந்தை பிறப்பு..!!

ஆதி
19-02-2008, 10:30 AM
உறவுகள் உடைந்த போது
இணைந்தன பிரிவுகள்..

சுகந்தப்ரீதன்
19-02-2008, 12:27 PM
வாழ்வின் முடிவில்
சாவின் தொடக்கம்..!!

சாம்பவி
19-02-2008, 12:44 PM
முப்பாட்டனின் முடிவு....
கல்யாணச் சாவு... !

இளசு
19-02-2008, 08:13 PM
அடடா ஆளுக்கு ஆள் பின்னுறாங்களே..

இதோ நானும் வருகிறேன் -

--------------------------------------------
உயரே இருந்தால் காப்பு -கவசம்
அருகே இருந்தால் புகைப்பனி மாசு
- ஓசோன் !

பூமகள்
20-02-2008, 07:36 AM
நிரந்தரமில்லாத ஒன்றை
நிரந்தரமென ரசிப்பதை
நினைத்து நினைத்து
சிரித்தது - கண்ணாடி..!

தாமரை
21-02-2008, 12:56 PM
கண்ணாடியில் தன்னை
பார்க்காத கண்ணாடி

இளசு
21-02-2008, 08:08 PM
பூவும் தாமரையும் தமிழாடும் பாங்கு அழகு..

--------------------------------------
எத்தனை பலவீனமோ
அத்தனை வீரப்பொய்யுணர்ச்சி -
ஏறிவிட்ட குடிபோதை!

இளசு
07-03-2008, 06:05 AM
தொடக்கம்:
மக்களுக்கு உதவ (மட்டும்)
பதவி வேண்டும்

தொடர்ச்சி:
பதவி தொடர (மட்டும்)
மக்கள் உதவ வேண்டும்

நாகரா
07-03-2008, 06:30 AM
கண்ணாடிகள் ஒன்றையொன்று
பார்த்துக் கொள்ள
அவற்றிடையில்
என் முடி திருத்தப்பட
நான் கண் மூடி இருக்கிறேன்

பாரதி
12-03-2008, 01:23 PM
சேருமிடம் சென்று சேர்கிறது
தொடர் வண்டி
தண்டவாளங்கள் பிரிந்திருப்பதால்..!

அமரன்
12-03-2008, 06:31 PM
அருகருகே இருந்தும்
ஒன்றையொன்று காணவியலாத
கண்கள்-ஒரு
காட்சியைக் காண்கின்றன.

அக்னி
12-03-2008, 06:52 PM
தொடரும் முரண் தொடர்கள் அருமை.
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

*****

ஈ மொய்த்தது,
இமை மூடியதால்...

அக்னி
12-03-2008, 07:00 PM
இதயம் கிடைத்தது...
தொலைந்தது இதயம்...

அக்னி
13-03-2008, 03:06 PM
சேருமிடம் சென்று சேர்கிறது
தொடர் வண்டி
தண்டவாளங்கள் பிரிந்திருப்பதால்..!
இதைப் பார்க்கையில் என் மனதிலும் ஒரு முரண்...

கரடும் முரடும்
தடங் கற்களும்
தடைக் கட்டைகளும்
சீரான (தொடரூந்துப்) பாதைக்காக...

பூமகள்
15-03-2008, 01:43 PM
மரணமில்லா காகிதப் பூக்கள்
காற்று தூவிச் சென்றன..
மரணம் தோய்ந்த
சவப்பெட்டிகளின் மேல்..!!

நன்றி: மீரா அக்கா..
இந்த ஹைக்கூ (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=334990&posted=1#post334990) கவிதை எழுதி இக்கவிதை எனை படைக்க வைத்தமைக்காக..!!

அமரன்
16-03-2008, 08:48 PM
கருவறையாகவும்
கல்லறையாகவும்
நிலவறை!

அமரன்
18-03-2008, 11:25 AM
தண்டனைகள் வழங்கப்படுவது
திருந்துவதற்காகவாம்..
யார் திருந்துவதற்காக
மரண தண்டனை!
+++++++++++++++++++
யாரோ செய்த தவறுக்கு
யாருக்கோ மரண தண்டனை.
-கருக்கலைப்பு.

பூமகள்
18-03-2008, 01:41 PM
கலைந்த கனவுகளில்
கலையாது தொடரும்
நினைவுகள்...!!

சுகந்தப்ரீதன்
18-03-2008, 02:27 PM
நீங்கி போனவை
நினைவில் நீங்காமல்..!!

ஓவியன்
17-04-2008, 06:06 AM
தாழும் போது
கூடுகிறது மதிப்பு
தராசுத் தட்டில்

குறுங்கவிதைகள் பகுதியில் இருந்தது, இந்த அழகிய முரண். நிலை உயரும் போது பணிதல் வேண்டும் என்பது இதுதானோ...???

பாராட்டுக்கள் ஈஸ்வரன் - இன்னும் நிறைய எழுதுங்க...

அமரன்
21-04-2008, 09:12 PM
சொற்களின் சுருக்கத்தில்
விரிகின்றன கருத்துகள்
-தமிழ்

எண்ணம்
22-04-2008, 12:15 AM
முரண் தொடரில் அனைத்து முரண்களும் அருமை. சிந்திக்க வைப்பதோடு மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

தொடரட்டும் முரண்கள் மன்றத்து உறவுகளின் ஆதரவோடு.

ஓவியன்
22-04-2008, 01:58 AM
சொற்களின் சுருக்கத்தில்
விரிகின்றன கருத்துகள்
-தமிழ்

சுருக்கமாக விளங்குகிறது அமரா...!! :)

பாரதி
22-04-2008, 06:22 AM
தமிழ்பேசு தங்கக்காசு
நிகழ்ச்சியின் விளம்பரதாரர்
சேலஞ்ச் சோப் அன் வாஷிங் பவுடர்!

செல்வா
22-04-2008, 06:35 AM
தமிழ்பேசு தங்கக்காசு
நிகழ்ச்சியின் விளம்பரதாரர்
சேலஞ்ச் சோப் அன் வாஷிங் பவுடர்!

:eek::eek::eek::D:D:D:icon_ush::icon_ush::icon_ush:

எண்ணம்
23-04-2008, 03:44 AM
வெயிலின் கொடுமை - தேகத்திற்கு
கானல் நீர் - தாகத்திற்கு


தவறான வினாவிற்கு முழு மதிப்பெண்
பொதுத்தேர்வு.

rocky
23-04-2008, 05:32 AM
பலருடன் உறவு
கொள்பவள் என்று
ஊருக்கு வெளியே
இருக்கச் சொன்னார்கள்,
அவளுடன் உறவு
கொண்ட பெரியவர்கள்.

பூமகள்
23-04-2008, 05:47 AM
தமிழ்பேசு தங்கக்காசு
நிகழ்ச்சியின் விளம்பரதாரர்
சேலஞ்ச் சோப் அன் வாஷிங் பவுடர்!
சேலஞ்ச் சோப் வார்த்தை
ஜொலித்தது மேடையில்..!
சிரித்தது தமிழ்
தங்கக் காசுகளில்..!

(நானும் கவனித்தேன்.. இங்கே சிலேடையையும் சுவைத்தேன்..நன்றிகள் பாரதி அண்ணா.:icon_b:)

meera
23-04-2008, 08:27 AM
காவி உடை
கவசமானது
போலிச்சாமியார்களுக்கு.