PDA

View Full Version : முரண்தொடர்Pages : 1 [2]

நாகரா
23-04-2008, 09:06 AM
சாமி யார்?
என்ற மெய்ஞ்ஞானம் ஒரு சிறிதும்
இல்லாத மடச் சாமியார்

எண்ணம்
24-04-2008, 01:11 AM
தனனையறியாத போலிச் சாமியார்
சீடருக்கு ஞானோபதேசம்.

எண்ணம்
24-04-2008, 03:53 AM
துப்பாக்கி கொள்ளை
காவல் நிலையத்தில்

கீழுள்ள செய்தியைக் கொண்டே இதை இங்கு பதித்தேன்.
தவறாயின் நீக்கி விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்


தர்மபுரி அருகே அதிய மான்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி நள்ளிரவு `மர்ம' கும்பலால் 6 துப்பாக்கிகள் மற் றும் ஒரு வாக்கிடாக்கி ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டன.

நன்றி: http://www.tamilparis.com/news/118/ARTICLE/4857/2008-02-17.html

விகடன்
24-04-2008, 04:25 AM
முரண் தொடர் என்ற பகுதிக்குள் இந்த ஆக்கம் வரமுடியுமா எண்ணம்?
எந்த வகையில் இது முரண்ண் தொடராக அமையும்??????
சிறு விள்ளக்கத்தையும் தரமுடியுமா???

பி.கு:: நான் கொஞ்சம் டியூப் லைட்டுங்க...

எண்ணம்
24-04-2008, 08:08 AM
முரண் தொடர் என்ற பகுதிக்குள் இந்த ஆக்கம் வரமுடியுமா எண்ணம்?
எந்த வகையில் இது முரண்ண் தொடராக அமையும்??????
சிறு விள்ளக்கத்தையும் தரமுடியுமா???

பி.கு:: நான் கொஞ்சம் டியூப் லைட்டுங்க...


பொது மக்களின் பாதுகாப்பிற்காகவே காவல் நிலையம். ஆனால்அத்தகைய காவல் நிலையத்திலையே துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதே

விகடன்
24-04-2008, 10:10 AM
அடடா...
கவிதை மேலிருந்ததை கவனிக்கவே இல்லை.!!!
கையொப்பத்தை பார்த்து அதுதான் முரண்தொடரென்று நினைத்துவிட்டேன்....

எனது தவறுதான்...
மன்னிக்க.

எண்ணம்
24-04-2008, 10:17 AM
தாங்கள் என்னிடத்தில் மன்னிப்பு கேட்பதா.......... தயவு செய்து அந்த வரியை நீக்கி விடுங்கள்

சாம்பவி
27-04-2008, 07:36 AM
விடிந்துவிட்டது
வடமொழி சுப்ரபாதம் தாலாட்ட
ஆழ்ந்த உறக்கத்தில் தமிழன்

கால் கடுக்க நிற்கும்
வெங்கியின் முகத்தில் விஷமப் புன்னகை
சுப்ரபாதம்.... !!!!

பாரதி
27-04-2008, 07:30 PM
அத்துணையும் துறந்த
மகாவீரரைக் காக்க
சுற்றிலும் கோட்டை!

நம்பிகோபாலன்
28-04-2008, 07:09 PM
செங்கோட்டையில்
சுதந்திர தின விழா
குண்டு துளைக்காத
கண்ணாடி பேழைக்குள்
பிரதமர் கொடியேற்றம்....

பாரதி
28-04-2008, 10:41 PM
சுதந்திரப்பெருமிதம்
குண்டுபுகா கண்ணாடிக்
கூண்டிற்குள்ளிலிருந்து!!


செங்கோட்டையில்
சுதந்திர தின விழா
குண்டு துளைக்காத
கண்ணாடி பேழைக்குள்
பிரதமர் கொடியேற்றம்....

ஒரே கவிதை...!!

நம்பிகோபாலன்
29-04-2008, 06:59 AM
மன்னிக்க பாரதி...என் எண்ணங்களை பிரதிபலிக்கரிது உங்களின் மூன்று வரிகள்.

பாரதி
29-04-2008, 09:12 AM
மன்னிக்க பாரதி...என் எண்ணங்களை பிரதிபலிக்கிறது உங்களின் மூன்று வரிகள்.

அன்பு நண்பரே... மன்னிப்பெல்லாம் நம்மிடையே ஏன்..? தயவு செய்து தவறாக எல்லாம் கருத வேண்டாம். ஒத்த சிந்தனை உடைய கருத்துக்கள் பலருக்கும் வரலாம். நான் வெறுமனே இரண்டும் ஒரே கருத்துடையவை என்பதைக் காட்டவே ஒப்பிட்டேன்.

உங்கள் கவிதையை ஒப்பிட்ட பின்னர் சிறிது நேரத்திலே, எனக்கு ஒரு வியப்பு காத்திருந்தது.

ஏற்கனவே இளசு அண்ணா முரண்காட்சிப்பா பதிவில் இதே போல் கவிதை தந்திருக்கிறார் என்று இன்றுதான் அறிந்தேன்..!! கவிதையின் பொருள் சற்று வேறுபட்டாலும் திஸ்கி மன்றத்தில் இருந்த அந்த கவிதை இதோ...!சுதந்திர தினவிழா
கொடியேற்றும் தலைவர்..
கூண்டுக்குள்..

ஆக..... இப்போது என்ன சொல்ல?!!

அக்னி
26-05-2008, 07:34 AM
ஆக்கத்திற்கான அணுக்களே,
அழிவுக்கும் ஆக்கமாய்...

இளசு
19-06-2008, 05:15 PM
நன்று அக்னி..

-----------------------

ஃபயர் = தீ, நெருப்பு
அன்று நான் படித்தபோது..

தீ-ன்னா என்ன?
ஓ! ஃபயரா?
இன்று என் மகள் படிக்கும்போது!

--------------------------------------

தமிழ்ப்பாடம் படிக்கும்போது ஆங்கிலத்தில் விளங்கிப் படிக்கும் நிலை
நம் தமிழ்க்குழந்தைகளுக்கு .....

பூமகள்
19-06-2008, 05:37 PM
பணிப்பெண் வரன்
பணிகின்றனர் பெற்றோர்..
ஆயுட்காப்பீட்டு வரதட்சணை..!

நம்பிகோபாலன்
19-06-2008, 05:59 PM
தன் படிப்பையும்
தகுதியையும்
பெண் வீட்டாருக்கு
விற்றான்
வரதட்சணை.....

இளசு
12-07-2008, 10:54 AM
ஆங்கிலப்படக்கதை
அப்பட்ட திருட்டுத்தழுவல்
அழகிய தமிழில் தலைப்பு!

ஓவியன்
12-07-2008, 11:02 AM
ஆங்கிலப்படக்கதை
அப்பட்ட திருட்டுத்தழுவல்
அழகிய தமிழில் தலைப்பு!

திருடிய கதைக்கு
தமிழில் தலைப்பு - சொந்தம்..!!

அழகான கரு, அசத்தல் அண்ணா..!! :icon_b:

இளசு
12-07-2008, 11:04 AM
திருடிய கதைக்கு
தமிழில் தலைப்பு - சொந்தம்..!!இந்தக் கூடுதல் எள்ளல்
இன்னும் சுவையாய்!

சபாஷ் ஓவி!

ஓவியன்
12-07-2008, 11:09 AM
நன்றி அண்ணா..!! :)

சந்திரன், தான் ஒளி பெறும் சூரியனுக்கு
நன்றி கூறுகிறதோ இல்லையோ..
நாம் கூறுவோம்
நம் சூரியனுக்கு....!! :)

mania
12-07-2008, 02:29 PM
திருடிய கதைக்கு
தமிழில் தலைப்பு - சொந்தம்..!!

அழகான கரு, அசத்தல் அண்ணா..!! :icon_b:

சபாஷ் ஓவியன்.....அசத்தல்.....:D
அன்புடன்
மணியா...:)

பாரதி
12-07-2008, 05:22 PM
அருமை அண்ணா...!
பாராட்டு ஓவியன்...!!

தீபா
12-07-2008, 05:58 PM
அனைத்து மீண்டும் ஒருமுறை படித்து வியந்தேன்

பாரதி, இளசு இருவரும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள். கொஞ்சம்
நேரம் அமைந்தால் அனைத்துக்கும் ஒரு சிறு விமர்சனம் இடுகிறேன்.
(ஏதோ நம்மளால முடிஞ்சது!!) ஒவ்வொரு முரண்பாக்களும் அப்படியே அட்சரசுத்தமாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டதைப் போன்று..... இரவு முழித்து பகல் உறங்குவதைப் போல லாவகமாக
அமைக்கப்பட்டிருக்கிறது...

பாரதி பாரதியாகவும், இளசு இளம்பூரணராகவும் மன்றத்தில்
இருப்பதும் அவர்களோடு இத்தென்றல் உலாத்துவதும்... அடட்டா
என்னே பெருமை!!!!!!

கடுமழை பெய்துமே காண்கில துவாரம்
சுடுமழை சுட்டுமே சூடிலை - நாளும்
வடுமழை தாளா கெடுதலும் ஓடும்
இடுமழைப் பாவினா லே

தொடர்ந்து கலக்குங்கள்......

நாகரா
21-07-2008, 07:21 AM
மரங்களை வெட்டிச் செய்த
காகிதத்தில் பெரிதாய் விளம்பரம்
"மரம் வளர்ப்போம்"

நாகரா
21-07-2008, 08:09 AM
மனிதத்தை வன்பில் சாய்க்கும் போதெல்லாம்
மதங்கள் சட்டென மறந்துவிடும் வாசகம்
தம் மறைகள் பறை சாற்றும் "அன்பே சிவம்"

aren
21-07-2008, 09:04 AM
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
முழங்கினார் சட்டசபையில்
ஜாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.

ராஜா
21-07-2008, 09:35 AM
சூரிய கிரகணத்தை முன்னிட்டு
பள்ளிக்கு அரைநாள் விடுப்பு.
விடுபட்ட அறிவியல் வகுப்பு..
ஞாயிறு ஸ்பெஷல் கிளாசில்..

நம்பிகோபாலன்
21-07-2008, 10:25 AM
பிரிவின் வலியை
கற்றுகொடுத்தது
எங்களின்
கூட்டு குடும்பம்...

aren
22-07-2008, 01:56 AM
காலை
கண்ணகி பட்டிமன்றம்
தலைவர் தலைமையில்

இரவு
தலைவர் தனியறையில்
அருகில் விலைமகள்!!!

இளசு
22-07-2008, 06:03 AM
நாகரா, ஆரென், நம்பிகோபாலன்..

சுடும் முரண்காட்சிகளை குறும்பாக்களாய் தரும் பாங்கு சிறப்பு...

வாழ்த்துகள் அனைவருக்கும்!

பூமகள்
22-07-2008, 06:21 AM
தமிழில் கலந்த ஆங்கிலம்
எதிர்த்து ஓவியக் கேள்வி..
கேள்வித் தலைப்பு..
"ஹிட் லிஸ்ட்"

(போட்டாச்சுங்க பெரியண்ணா...!!;))

இளசு
22-07-2008, 06:24 AM
தமிழில் கலந்த ஆங்கிலம்
எதிர்த்து ஓவியக் கேள்வி..
கேள்வித் தலைப்பு..
"ஹிட் லிஸ்ட்"வெட்டி வா என்றால்
கட்டிவந்து தருவது
தம்பிகள் மட்டுமல்ல!
தங்கைகளும்!:icon_b::icon_b:


(திரிநாயகர்கள் ராஜா,அமரன் கூட்டணியினருக்கு விண்ணப்பம் -
தயவு செய்து எனக்கு ஆட்டோ, தாதா அனுப்ப வேண்டாம்!:traurig001:)

aren
22-07-2008, 06:34 AM
நாகரா, ஆரென், நம்பிகோபாலன்..

சுடும் முரண்காட்சிகளை குறும்பாக்களாய் தரும் பாங்கு சிறப்பு...

வாழ்த்துகள் அனைவருக்கும்!

அப்படின்னா நான் எழுதியது சரி என்கிறீகளா?

இளசு
22-07-2008, 06:38 AM
அப்படின்னா நான் எழுதியது சரி என்கிறீகளா?

அன்பின் ஆரென்,

அடுத்த தேர்தல் வரபோகும் சூடு மன்றத்தில் வீசுகிறது இப்போதே!


அரசியல் மேடைகள், அரசியல்வாதி (சின்ன) வீடுகள் என
நீங்கள் எழுதியவை முரண்காட்சிகளானாலும் நிகழ்க்காட்சிகள்தானே !

ராஜா
22-07-2008, 08:12 AM
காலை
கண்ணகி பட்டிமன்றம்
தலைவர் தலைமையில்

இரவு
தலைவர் தனியறையில்
அருகில் விலைமகள்!!!

காலையில் கண்ணகி.. மாலையில் மாதவியோ..?

இதயம்
22-07-2008, 08:21 AM
காலையில் கண்ணகி.. மாலையில் மாதவியோ..?
அண்ணா... எங்கயோ போய்ட்டீங்க...!!!

வீட்டில் அண்ணி இல்லையோ..?

(பொருத்தமான ஸ்மைலி போட்டு அண்ணன் வயித்தை கலக்க வைக்கலாம்னா ப்ராக்ஸி நோகடிக்குது..!!! ச்ச்சே..!!!)

ஓவியா
22-07-2008, 08:41 AM
காலையில் கண்ணகி.. மாலையில் மாதவியோ..?

அண்ணா இது தப்பு, மாதவி விலைமகள் அல்ல. :sauer028:

கண்ணமா அண்ணிக்கு ஒரு போன் போடவா!! அப்புறம் மன்னார்குடியே மசாலாவகிடும். :lachen001:

எங்க, உங்கள் கால் மேலே கால போட்டுகிட்டு ஸ்டைலா கால ஆட்டிகிட்டே சிரித்த முகமா ஒரு மன்னிப்பு கேளுங்க பார்ப்போம். :D

நாகரா
22-07-2008, 11:15 AM
விலைமகளிடம் தன் கற்பை
இழந்துவிட்ட இளைஞனுக்கு ஆசை
கற்புள்ள பெண்ணை மணமுடிக்க

பூமகள்
22-07-2008, 02:26 PM
அண்ணா இது தப்பு, மாதவி விலைமகள் அல்ல. :sauer028:

விளக்கம் தேவை அக்கா...:confused:
மாதவி நாட்டிய நங்கை என்று அறிவோம்.. ஆனால்.. எத்தகைய பெண் என்று தெளிவாகப் படித்ததில்லை..

தெரிந்தால் பலர் தெரியாமல் சொல்ல மாட்டார்கள் அல்லவா??:icon_ush:

mukilan
22-07-2008, 02:32 PM
ஓவியா கூறியது சரிதான். மாதவி தாசிகுலப் பெண்ணாகப் பிறந்தாலும் கோவலன் ஒருவன் தவிர வேறு எந்த ஆடவன் மீதும் மையல் கொண்டதில்லை. வரைவின்மகளிராய் இருந்தும் கற்பு நெறி பிறழாமல் வாழ்ந்ததாலேயே கற்பில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா எனப் பட்டி மன்றம் வைத்து விவாதிக்கின்றனர்.

அது சரி இப்படிக் கேடு கெட்ட கேவலனுக்கு கண்டனப் பொதுக்கூட்டம் கூட்டத்தான் யாருமே முன்வரவில்லை.

பூமகள்
22-07-2008, 02:43 PM
விளக்கத்துக்கு நன்றிகள் முகில்ஸ் அண்ணா.. :)

அப்படியே பார்த்தாலும்...

திருமணமான ஒருவரின் மீது மையல் கொள்வது.. எவ்விதத்தில் நியாயம்??

திருமணம் கொண்ட ஆண்.. மாற்றான் வீட்டு மனை பார்ப்பதும் நியாயமில்லையே...

ஒழுக்கத்தின் கோட்பாடுகள் அங்கேயே உடைபட்டுவிட்டதாக உணர்கிறேன்..

அவ்வகையில் எனக்கு கோவலன்.. மாதவி இருவர் மீதும் கோபமே..

நம்பிகோபாலன்
25-07-2008, 11:00 AM
சாலையை கடக்க
முயன்ற பொழுது
அடிபட்டு இறந்தார்
போக்குவரத்து அதிகாரி...

ஆதி
25-07-2008, 11:15 AM
ஓவியா கூறியது சரிதான். மாதவி தாசிகுலப் பெண்ணாகப் பிறந்தாலும் கோவலன் ஒருவன் தவிர வேறு எந்த ஆடவன் மீதும் மையல் கொண்டதில்லை. வரைவின்மகளிராய் இருந்தும் கற்பு நெறி பிறழாமல் வாழ்ந்ததாலேயே கற்பில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா எனப் பட்டி மன்றம் வைத்து விவாதிக்கின்றனர்.

அது சரி இப்படிக் கேடு கெட்ட கேவலனுக்கு கண்டனப் பொதுக்கூட்டம் கூட்டத்தான் யாருமே முன்வரவில்லை.

உங்கள் பதிவை படித்ததும் ஞாபகம் வந்தது தாமரையின் கவிதை..

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா
பட்டிமன்றம் நடந்தது..

இருவாதங்களையும் கேட்ட
நடுவர் அடித்து சொன்னார்..

கற்பிழந்தவன் கோவலனே!

தீபா
25-07-2008, 11:30 AM
அண்ணா இது தப்பு, மாதவி விலைமகள் அல்ல. :sauer028:

கண்ணமா அண்ணிக்கு ஒரு போன் போடவா!! அப்புறம் மன்னார்குடியே மசாலாவகிடும். :lachen001:

எங்க, உங்கள் கால் மேலே கால போட்டுகிட்டு ஸ்டைலா கால ஆட்டிகிட்டே சிரித்த முகமா ஒரு மன்னிப்பு கேளுங்க பார்ப்போம். :D

நீங்கள் சொல்வது உண்மைதான் ஓவியா அவர்களே! என்னைப் பொறுத்தவரையில் கண்ணகியும் சரி, மாதவியும் சரி, கற்புக்கரசி என்று சொல்லத்தக்க வகையில் நடந்துகொள்ளவில்லை என்பதே உண்மை... இது என் கருத்து மட்டுமெ!

அமரன்
25-07-2008, 11:34 AM
நண்பர்களுக்கு அன்புவேண்டுகோள்..
திரி திரியாதிருக்க தொடரப்போகும் கருத்தாடலை பிறிதொரு திரியில் வைத்துக்கொள்வோமா..

நன்றி!

பூமகள்
26-07-2008, 02:57 PM
மதுக்கடை எதிரே..
அரசின் விளம்பர பலகை..

"drinking kills
driving skills"

(எங்கள் ஊரில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டது)

poornima
26-07-2008, 03:01 PM
மதுக்கடை எதிரே..
அரசின் விளம்பர பலகை..

"drinking kills
driving skills"

(எங்கள் ஊரில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டது)

இது என்ன ஆச்சரியம்.. மதுக்கடை பெயர்ப்பலகையிலேயே இருக்கும்
குடி குடியைக் கெடுக்கும்.குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்..

சும்மா கலாய்த்தேன்.. :-)

நம்பிகோபாலன்
30-07-2008, 10:18 AM
மதுவிலக்கு பிரச்சாரம்
தலைமைவகித்தார்
சாராய
ஏலத்தில் வென்ற
தொழிலதிபர்......

poornima
30-07-2008, 10:28 AM
அழகாய் வீடுகட்டி
அன்னை இல்லம் என்று
பெயரிட்டார்கள்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லத்தில்

பி.கு : என்னுடையதல்ல கவிதை

அக்னி
30-07-2008, 11:36 AM
மதுவிலக்கு பிரச்சாரம்
தலைமைவகித்தார்
சாராய
ஏலத்தில் வென்ற
தொழிலதிபர்......
மதுவிலக்குப் பிரச்சாரம்...
கூட்டத்திற்கு வர,
மது இலவசம்...


அழகாய் வீடுகட்டி
அன்னை இல்லம் என்று
பெயரிட்டார்கள்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லத்தில்...

பி.கு : என்னுடையதல்ல கவிதை
அன்னை இல்லாத அன்னையில்லம்...

அழகிய கவிதைகள்...
பாராட்டுக்கள்...

நம்பிகோபாலன்
12-08-2008, 07:51 AM
ஆயிரம் பேரை
வெடிகுண்டில் மரணித்த
தீவிரவாதி
நீதிமன்றத்தில் கேட்கிறான்
உயிருக்கு பாதுகாப்பு
வேண்டுமென்று....

shaktii
12-08-2008, 09:40 AM
தலையின் இருந்த போது உயிர் என்றாய்
இலையில் விழுந்த போதோ ....
- இரட்டை நாக்கு

poornima
12-08-2008, 09:51 AM
காதல் காட்டில்
மான்கள்
வலைவிரிக்க
வேடர்கள் சிக்கிக்
கொண்டனர்

கோகுலம் திரைப்படத்தில் பழனிபாரதி

பாரதி
18-08-2008, 03:46 PM
பந்தயத்தில் முதலில் வந்தாலும்
பதக்கம் கிடைப்பது
கடைசியில்தான்.

இளசு
18-08-2008, 04:59 PM
பந்தயத்தில் முதலில் வந்தாலும்
பதக்கம் கிடைப்பது
கடைசியில்தான்.

காலத்துக்கேற்ற காட்சி முரண்..

ரசித்தேன் பாரதி..

குழந்தை பெரியவராவதன் முக்கிய மைல்கல் -
திருப்திக்குக் காத்திருத்தல்.

நினைத்த கணம் Gratification - குழந்தைகளுக்கும் , மிருகங்களுக்கும்- மட்டுமே சரி!

மனமுதிர்வின் அடையாளம் - இடம்,காலம், மரபுகளுக்கு
மதிப்பளித்துப் பொறுத்திருத்தல்..

நிறைய விளையாட்டுகள், நெறிகள், முறைமைகள் -
நாம் வாழ்க்கையில் முதிர்வதற்கான இலகுவான பாடங்கள்!

aren
19-08-2008, 12:31 AM
பந்தயத்தில் முதலில் வந்தாலும்
பதக்கம் கிடைப்பது
கடைசியில்தான்.

பந்தயத்தில்
கடைசியில் வந்தால்தான் வெற்றி
கால்ஃப் விளையாட்டில்

பாரதி
19-08-2008, 02:06 AM
கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.


பந்தயத்தில்
கடைசியில் வந்தால்தான் வெற்றி
கால்ஃப் விளையாட்டில்

அசத்தல் ஆரென்!
மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி போல்....!!

aren
19-08-2008, 02:28 AM
இவன் பெற்ற பிள்ளை
இவனைகடைசிவரை
காப்பாற்றவேண்டும்!!!

இவனைப் பெற்ற தாயோ
இன்று முதியோர் இல்லத்தில்!!!

நம்பிகோபாலன்
19-08-2008, 06:13 AM
பண வீக்கத்தை
பற்றி
பண புழக்கதில்
அகப்பட்ட
பாராளுமன்ற
விவாதம்
நேரடி ஒளிபரப்பு….

aren
22-08-2008, 02:15 AM
காதலை வெற்றி செய்ய
காதல் கவிதை!!!

எழுதியவன்
காதலில் தோற்று
தாடி வளர்ப்பவன்!!!

தீபா
22-08-2008, 04:54 AM
காதலை வெற்றி செய்ய
காதல் கவிதை!!!

எழுதியவன்
காதலில் தோற்று
தாடி வளர்ப்பவன்!!!

தோல்வியின் நடையில் வெற்றியின் பயணம்.. அடடா அருமை திரு.ஆரென்.

நம்பிகோபாலன்
22-08-2008, 09:25 AM
ஒருவனது வீழ்ச்சியில்
இன்னொருவன் வெற்றி
தீர்மானிக்கபடுகிறது......

இளசு
23-08-2008, 09:48 PM
பந்தயத்தில்
கடைசியில் வந்தால்தான் வெற்றி
கால்ஃப் விளையாட்டில்
மெதுவாக மிதிவண்டி ஓட்டும் போட்டி போல்....!!

இரண்டும் அசத்தல்..!

-------------------------------------------------

சொந்தமாய் முரண் ஒன்றும் சட்டென தோன்றவில்லை இக்கணம்..

இன்று முழுதும் மனதில் மீண்டும் மீண்டும் சந்தமிடும்
வாலியின் முரண்வரிகளைப் பதிக்க விழைகிறேன் -

பொருள்கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை!
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை!!

அக்னி
23-08-2008, 10:07 PM
இரண்டும் அசத்தல்..!


ஆமாம் அண்ணா...

உடலில் உபாதை எங்கு வரினும்,
மருந்தை (கசப்பை) உண்ணும் வாய் போல...
ஊசி வலியைத் தாங்கும் கை போல...

poornima
24-08-2008, 08:10 AM
செங்கல் சுமக்கும் சிறுவன்
அறிவிப்பு படித்தான்
இளமையில் கல்

- நம்மதில்லை இது

aren
25-08-2008, 02:05 AM
குதிரைப் பந்தயத்தில்
தோற்றால்
சாவு - குதிரைக்கு
இன்னொரு குதிரை - ஜாக்கிக்கு!!!

நம்பிகோபாலன்
29-08-2008, 10:06 AM
உன்னை காணவில்லை
நான் தொலைந்து போனேன்.

அமரன்
29-08-2008, 10:08 AM
முரண் தொடருக்கு அமைவானது இல்லை எனில் தெரிவியுங்கள்..

என்றும் இளமையாக
முதிர்கன்னிகளைப் பாடும்
கவிதைகள்.

நம்பிகோபாலன்
29-08-2008, 10:52 AM
எழுதபட்ட கவிதைகளில்
என் சொல்லபடாத காதல்....

ஓவியன்
04-02-2009, 06:36 AM
பலத்த பாதுகாப்புக்களுக்கு
மத்தியில்
கோலகாலமாக நடந்தேறின*
சுதந்திரதின(!!) கொண்டாட்டங்கள்..!!

samuthraselvam
04-02-2009, 07:09 AM
குருட்டு சிறுமியின் கண்களில் ஒளி.
தட்டில் விழுந்த ஒத்தை நாணயத்தின் ஒலியால்..

லீலுமா

பாரதி
04-02-2009, 03:35 PM
ஆரென், நம்பி கோபாலன், அக்னி, அமரன், ஓவியன், சமுத்திரச்செல்வம் ஆகியோரின் கவிதைகளுக்கு பாராட்டுகள்.

சமதானம் கேட்கவும்
சமாதானம் பேசவும்
சமமாய் ஆயுதம் வேண்டும்!

இளசு
22-02-2009, 06:47 PM
பாராட்டுகள் அன்பின் ஆரென், நம்பி கோபாலன், பூர்ணிமா, அக்னி, அமரன், ஓவியன், சமுத்திரச்செல்வம் & பாரதி..

--------------------------------------------------

கொன்று குவிக்கும்
கொடூர மயானத்தின் பெயர் -
பாதுகாப்பு வளையம்..

இளசு
01-03-2009, 06:52 PM
சாரம் தாங்கிய சவுக்கு ஓரம் கட்டப்படும்..
பாரம் தாங்கா வாழை வாசலில் கட்டப்படும்..
புதுமனை புதுவிழா!

( கருத்து - மறைந்த திரு. நாகேஷ் ஆற்றிய உரையிலிருந்து)

ஆதவா
02-03-2009, 01:14 AM
சாரம் தாங்கிய சவுக்கு ஓரம் கட்டப்படும்..
பாரம் தாங்கா வாழை வாசலில் கட்டப்படும்..
புதுமனை புதுவிழா!

( கருத்து - மறைந்த திரு. நாகேஷ் ஆற்றிய உரையிலிருந்து)

இது வழக்கமாக நடைபெற்றுதான் வருகிறது!!!

நடிக்கவே தெரியாத நடிகைக்கு விருது கொடுத்ததைப் போன்றூ!

aren
14-08-2009, 06:21 AM
பட்டுப்புடவை நெய்யும்
நெசவாளியின் கல்யாணம்
மனமகள் கட்டியது
வெறும் நூல்புடவை!!!

aren
14-08-2009, 06:23 AM
பலத்த பாதுகாப்புக்களுக்கு
மத்தியில்
கோலகாலமாக நடந்தேறின*
சுதந்திரதின(!!) கொண்டாட்டங்கள்..!!

ஆமாம்
இன்று பாகிஸ்தானில்
நாளை
இந்தியாவில்!!!!

இளசு
14-08-2009, 06:26 PM
பட்டுப்புடவை நெய்யும்
நெசவாளியின் கல்யாணம்
மனமகள் கட்டியது
வெறும் நூல்புடவை!!!

ஆமாம் ஆரென்..

காஞ்சீவரம் திரைப்படத்தின் கரு இது என அறிகிறேன்..
இங்கே சில வரிகளில் சுருக்கமாய் உங்கள் கவிதை..

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

aren
15-08-2009, 11:58 AM
ஆமாம் ஆரென்..

காஞ்சீவரம் திரைப்படத்தின் கரு இது என அறிகிறேன்..
இங்கே சில வரிகளில் சுருக்கமாய் உங்கள் கவிதை..

பாராட்டுகள் அன்பின் ஆரென்!

ஆமாம் காஞ்சீவரம் படத்தின் முன்னோட்டத்தை விஜய் டிவியில் காண்பித்த்தார்கள் அதன் எதிரொலிதான்.

படத்தை இன்று காத்திருந்து பார்த்தேன் ஆனால் படம் மனதில் ஒட்டவில்லை. தன் மகளின் கல்யாணத்திற்காக பட்டு நூலைத் திருடுவது பிரகாஷ்ராஜ் காரக்டரையே அழித்துவிட்டது போன்று தோன்றுகிறது.

பாரதி
15-08-2009, 12:57 PM
சாரம் தாங்கிய சவுக்கு ஓரம் கட்டப்படும்..
பாரம் தாங்கா வாழை வாசலில் கட்டப்படும்..
புதுமனை புதுவிழா!

( கருத்து - மறைந்த திரு. நாகேஷ் ஆற்றிய உரையிலிருந்து)
அட....! அசத்தலா இருக்கே அண்ணா...!
சவுக்கு ஓரம் கட்டப்படுமா.... இல்லை ஓரங்கட்டப்படுமா..?
தூள் கிளப்புங்க அண்ணா.பட்டுப்புடவை நெய்யும்
நெசவாளியின் கல்யாணம்
மனமகள் கட்டியது
வெறும் நூல்புடவை!!!

பல இடங்களில் இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்றே நம்புகிறேன்.
அரிசி விதைக்கும் விவசாயியின் வீட்டில் கம்பங்களியும், கஞ்சியும்தான் மிஞ்சும்.

நல்லா இருக்கு ஆரென். தொடர்ந்து எழுதுங்க.

பாரதி
29-12-2009, 03:10 PM
குளங்களை மூடி
குடிலாக்கினர் மனிதர்.
சாலைகளில் குளங்களை
உண்டாக்கியது மழை!

குணமதி
29-12-2009, 03:29 PM
இலங்கை இனக்கொடுமை.

உதவுங்கள் மக்களுக்கு! - தமிழ்நாட்டு மக்கள் போராட்டம்.
உதவினர், இலங்கை அரசுக்கு!

50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

குணமதி
09-02-2010, 04:35 AM
பொருளியல் வளர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது.

பொருள்களின் விலைகள் மிக உயர்ந்தன.


என்ன வளர்ச்சி? யாருக்கு வளர்ச்சி?

M.Jagadeesan
23-10-2010, 09:36 AM
எனக்கும் சரிவர தெரியாது நண்பரே! ஆனால் படித்தவுடன் அது ஒட்டாமல் போனதினால் அவ்வாறு சொன்னேன்.. இருந்தாலும் நான் சொன்னதற்காக இதோ என் வாக்கிய அமைப்பு.

செம்மொழி அங்கீகாரம்
தமிழுக்கு, கேட்டது
வடமொழியிடம்.....

செம்மொழி அங்கீகாரம்
வேண்டியது தமிழ்,
வடமொழியிடம்.....

செம்மொழி அங்கீகாரம் கேட்டது
தமிழ்மொழி வடமொழியிடம்

M.Jagadeesan
23-10-2010, 09:54 AM
பஸ்ஸிலே ஏறிய பக்கிரி
"திருடர்கள் ஜாக்கிரதை"-என்ற பலகையைக் கண்டு
பலரிடம் திருடிய பணத்தைப்
பத்திரப் படுத்திக் கொண்டான்.

பாரதி
23-10-2010, 10:43 AM
தமிழகத்தில் மூன்று மணி நேரம் மின்தடையாம்.
தடையில்லா மின்சாரம் சென்னையில்!

கேசுவர்
25-11-2010, 03:16 PM
நகைச்சுவை கேட்டு
விழுந்து விழுந்து
சிரித்தது வாய்.
வலி வயிறுக்கு!

aren
16-02-2011, 04:01 AM
மின்சாரம்
பணம் கொடுத்தாலும்
வருவதில்லை!!!

வியர்வை
தானாகவே வருகிறது
இலவசமாக!!!