PDA

View Full Version : நன்றி காதலனே!

ஆதவா
22-02-2007, 01:43 PM
நானும் டிடோவும் (Dido)
சுடப்பட்ட சில வரிகளுடன் என் சொந்த கவிதை இது. கருவில் அவளுடைய தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் முழுமையாக என்னால் சொந்தம் கொண்டாட முடியாது....

தேநீரின் ஆறிய நிலையும்
படுக்கைகளில் கசங்கிய
பூக்களையும் தளர்வோடு
பார்த்துவிட்டு மெல்ல எழுகிறேன்.
கதிரவனின் கீற்றுகள்
என் ஜன்னலில் அமர
மறுத்து நிற்கிறது.
மழைக்கான அறிகுறியாய் மேகங்கள்
தொய்வான நிலையில் இருக்கின்றன.
என் கண்களுக்கு நேரே
மாட்டப்பட்டிருந்த
உன் புகைப்படம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!".

குளியலறையில் தண்ணீர்
வர மறுக்கிறது
நீ தொட்ட விரலில்
ரேகைகள் செல்ல மறுக்கிறது.
ஒட்டாத உடைகளுடன்
அலுவலகம் செல்லுகிறேன்.
என் கைப் பேசியில் பொதியப்பட்ட
உன் அழகு முகம் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"

சொத்துப் பிரச்சனையில்
வீட்டை இடிக்கக் காத்திருக்கின்றன
கேட்டர் பிள்ளர்கள்.
கடைசியாக இறுக்கி தாளிட
கைகள் கதவுகளைத் தேடுகிறது.
ஒரு பூங்கொத்தில் ஒளிந்திருந்த
உன் விழிகள் சொல்கிறது
"கலக்கமுறாதே காதலியே!"

வாழ்க்கை வசதிகளும்
இயற்கை நியதிகளும்
என்னை விட்டு நீங்குகின்றன.
என்னை விட்டு நீங்கிய உன்
நாவில் விழைந்த அந்த வார்த்தைகள்
தனித்துவிடப்பட்ட எனக்கு தைரியங்கள்.

நன்றி காதலனே!

(பிகு: கவிதையும் கருவும் என்னோடயது. காட்சிகள் அவளோடையது)

அறிஞர்
22-02-2007, 01:46 PM
கவிதை அருமை ஆதவா...

சுட்டதில், சொந்த கருத்து இணையும் போது.. மதிப்பு கூடும்....

டிடோ என்றால் யாரு.. (ஒன்றும் தெரியாமல் அப்பாவியாக)

அமரன்
22-02-2007, 01:46 PM
என்னை விட்டு நீங்கிய உன்
நாவில் விழைந்த அந்த வார்த்தைகள்
தனித்துவிடப்பட்ட எனக்கு தைரியங்கள்

இந்த வரிகள் எனாக்கு மிகவும் பிடித்த வரிகள். காதலில் பிரிவுகூட ஒருவிதத்தில் சுகம்தானில்லையா?.

ஆதவா
22-02-2007, 01:50 PM
கவிதை அருமை ஆதவா...

சுட்டதில், சொந்த கருத்து இணையும் போது.. மதிப்பு கூடும்....

டிடோ என்றால் யாரு.. (ஒன்றும் தெரியாமல் அப்பாவியாக)

டிடோ ஒரு பாடகி. மென்மையான குரலும் முகமும் ஆபாசமில்லாத நடிப்பும் கொண்டவள். எனக்கு மிகவும் பிடித்தவள்.. அவள் பாடலில் சில வரிகளும் காட்சிகளும் எனக்கு கண்களின் நீரை வரவழைத்தவைகள்...,,,

அறிஞரே! இதில் நான் சுட்டவைகள் சில என் கருத்துக்கள் பல.. எனக்கு தற்சமயம் இம்மாதிரி கவிதைகள் எழுதிட ஆசை.. முழுமையாக சொந்தம் கொண்டாட வேண்டுமென்பதுதான்.... முயல்கிறேன்... என் இன்னொரு கவிதையும் இந்த வகையில் எழுதப்பட்டிருக்கிறது.. படியுங்களேன்..

ஆதவா
22-02-2007, 01:51 PM
இந்த வரிகள் எனாக்கு மிகவும் பிடித்த வரிகள். காதலில் பிரிவுகூட ஒருவிதத்தில் சுகம்தானில்லையா?.

மிக்க நன்றிங்க நக்கீரன்.. என் சொந்த வரிகள் அவை.... அந்த வரிகளுக்காகவே எழுதப்பட்ட கவிதைதான் அவை....

காதல் பிரிவினிலும் காதலன் சொன்ன வார்த்தை அவ்வளவு பலம் என்று காண்பித்திருக்கிறேன்...

அறிஞர்
22-02-2007, 01:53 PM
டிடோ ஒரு பாடகி. மென்மையான குரலும் முகமும் ஆபாசமில்லாத நடிப்பும் கொண்டவள். எனக்கு மிகவும் பிடித்தவள்.. அவள் பாடலில் சில வரிகளும் காட்சிகளும் எனக்கு கண்களின் நீரை வரவழைத்தவைகள்...,,,

அறிஞரே! இதில் நான் சுட்டவைகள் சில என் கருத்துக்கள் பல.. எனக்கு தற்சமயம் இம்மாதிரி கவிதைகள் எழுதிட ஆசை.. முழுமையாக சொந்தம் கொண்டாட வேண்டுமென்பதுதான்.... முயல்கிறேன்... என் இன்னொரு கவிதையும் இந்த வகையில் எழுதப்பட்டிருக்கிறது.. படியுங்களேன்..
அவர்கள் கவிதைகள் தமிழிலா இருக்கிறது.

தமிழில் சொந்த கருத்துக்களுடன் வரும் பொழுது.. உங்கள் கவிதையாக மாறிவிடுகிறது.

அதை மீண்டும் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றும் பொழுது தான் பிரச்சனை வரும்..

பல கவிஞர்களும் மற்றவருடைய கவிதைகளில் சில கருத்துக்களை சுட்டு... தங்கள் எண்ணங்களை கலந்து கொடுக்கிறார்கள்.

இதில் தவறில்லை.. தொடருங்கள்...

ஆதவா
22-02-2007, 02:00 PM

அவர் பாடல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. அவளொரு பாப் பாடகி.. எனக்கு மொழி மாற்றத்திலெல்லாம் இஷ்டமில்லை.. உண்மையிலேயே இந்த கருத்து நான் சொந்தமாக நினைத்ததுதான். அது டிடோவின் பாடலுக்கு அப்படியே ஒத்துப்போவதால் அவள் பெயரையும் இணைத்துவிட்டேன்.. ஏதாவது ஒரு ரூபத்தில் நம் கவிதைகள் அங்கங்கே திரிவதைக் கண்டிருக்கிறேன்... உதாரணத்திற்கு

நீளும் கண்களின் விரிப்புகளில்
மரங்களும் கொடிகளும்
ஊடான நிழல்களின் வடிவங்களும்
தெருவில் நடந்து போகும்
ஒரு பெண்ணின் நடையும்
தெரிகிறது.
யதார்த்தமாக அவள் கண்களை
நான் பார்க்கையில்
மெல்ல இழுத்து போர்த்துகிறாள்
புடவைத் தலைப்பு...

இது என் சொந்த கவிதைதான்... ஆனால் இதே மாதிரி ஒரு கவிதை நான் எங்கோ படித்ததாக நினைப்பு.... அந்த காரணத்திலேயே இதுநாள் வரை இக்கவிதை எழுதாமல் இருக்கின்றேன்... மற்றவர்களின் கவிதையை காப்பி அடித்து எழுதியிருக்கிறான் என்ற அவப்பெயர் என்றும் எனக்கு வேண்டாம்....

உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிப்பவை... நன்றி அறிஞரே!!!

அறிஞர்
22-02-2007, 02:02 PM

தழுவிய கவிதைகள்... என புதிய திரி தொடங்கி.. கொடுக்கலாமே...

ஆதவா
22-02-2007, 02:05 PM
தழுவிய கவிதைகள்... என புதிய திரி தொடங்கி.. கொடுக்கலாமே...

கொடுக்கலாம் அறிஞரே! ஆனால் நான் முன்னம் சொன்னமாதிரி முழுத் தழுவலில் எனக்கு இஷ்டமில்லை. அதேசமயம் அங்கே எழுதப்பட்ட அனைத்தும் முழுச் சொந்தமில்லாமல் போய்விடும். அதே போல் என்னிடம் அவ்வளவு தழுவல் சரக்கு இல்லை..

அறிஞர்
22-02-2007, 02:17 PM
கொடுக்கலாம் அறிஞரே! ஆனால் நான் முன்னம் சொன்னமாதிரி முழுத் தழுவலில் எனக்கு இஷ்டமில்லை. அதேசமயம் அங்கே எழுதப்பட்ட அனைத்தும் முழுச் சொந்தமில்லாமல் போய்விடும். அதே போல் என்னிடம் அவ்வளவு தழுவல் சரக்கு இல்லை..
இருக்கும் சரக்கை கொடுங்கள்.. நாங்கள்.. இன்புறுவோம்.

ஆதவா
22-02-2007, 02:21 PM
இருக்கும் சரக்கை கொடுங்கள்.. நாங்கள்.. இன்புறுவோம்.

ஏற்கனவே ஒரு சரக்கு இங்க (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8007) இருக்குங்க.... எடுத்து பருகுங்க..