PDA

View Full Version : கேரட்



mgandhi
21-02-2007, 05:06 PM
கேரட்

தாவரவியல்ற் பெயர்; (Daucus Carota)
கேரட்டில் வைட்டமின் சத்து நிரம்ப உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்தை ஈரல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றி உடம்பினுள் சேமித்து வைக்கும்.
கேரட்டை தோல் சீவக்கூடாது,தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன.

ஈரபதம்-86.0 கிராம்
புரதம்-0.9 கிராம்
கொழுப்பு -0.10.2 கிராம்
தாதுக்கள்-1.1 கிராம்
இழைப்பாண்டம்-1.2 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-10.6 கிராம்
கால்சியம்- 80மி.கி
மக்ளீசியம்- 14 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 5 மி.கி
பாஸ்பரஸ்- 30மி.கி
அயம்- 2.2 மி.கி
சோடியம்- 35.6 மி.கி
பொட்டாசியம்- 108 மி.கி
செம்பு- 0.13 மி.கி
சல்ஃபர்- 27 மி.கி
வைட்டமின் ஏ- 3150 ஐ.யூ
தயமின்- 0.04 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.02மி.கி
நியாஸின்- 0.6 மி.கி
வைட்டமின் சி- 3 மி.கி

100கிராமில் 47 கலோரி உள்ளது.

கேரட் இரத்தத்தை சுத்தப்படுத்தி புத்துணர்வூட்டும்.
உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திற்கும்.
பெண்கள் கேரட் விதைகளை தங்களுடைய கர்பத்தின் தொடக்ககாலத்தில் பயன்படுத்தக் கூடாது.
கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்திகருச்சிதைவுக்கு காரணமாகும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்றுத்தின்றால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.இதைத்தின்றால்உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும்சீரனத்தை துரிதப்படுத்தும்
கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.கேரட் சூப் வயிற்றுப்போக்கை குனப்படுத்தும்
கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும்.
கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம்,தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.
புற்றுநோய்,ஏலும்புருக்கி,சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து பர்க நல்ல பலன் கிடேக்கும்.

அறிஞர்
21-02-2007, 08:30 PM
சத்துள்ள காய்... தகவலுக்கு நன்றி காந்தி

அதான், கேரட் ஜூஸ் சென்னை சரவண பவனில் 40 ரூபாயாமே..

ஓவியா
21-02-2007, 08:42 PM
சத்துள்ள கேரட் ஜூஸ் லண்டனில் 3.00


இது எப்படி :D

xe.com Universal Currency Converter Results
Live mid-market rates as of 2007.02.21 21:39:18 UTC.
3.00 GBP
United Kingdom Pounds = 257.975 INR India Rupees
1 GBP = 85.9916 INR 1 INR = 0.0116290 GBP


:eek: சத்துள்ள கேரட் ஜூஸ் :eek:

ஓவியன்
22-02-2007, 07:15 AM
ஒரு கரட்டிலே இந்தளவு விடயங்கள் இருக்கிறதா?

முயலுக்கு கரட் என்றால் கொள்ளைப் பிரியம் - எனக்கும் கரட்டென்றால் கொள்ளைப் பிரியம்.

ஹா,ஹா!!!