PDA

View Full Version : அன்புத் தமிழா கேளடா



அமரன்
21-02-2007, 02:33 PM
அன்புத் தமிழா கேளடா
அன்னைத் தமிழில் பாடடா

தமிழை அழிப்பவன் யாரடா
தமிழன் இருப்பைக் கூறடா

கோடிச்சொல் மொழியடா
கொடுத்து வைத்தவன் நீயடா

தமிழ் சுதந்திர மொழியடா
தடுத்துரைப்பவன் யாரடா

தமிழ் போரியல்மொழியடா
மன்றத்தில் வந்து நீ படியடா

விண்வெளிக்கு நீ சென்றுவா
விஞ்ஞானமதை நீ வென்றுவா

காதல்பாட்டு பலலட்சம்
கொண்டு தந்தது யாரடா

வாழ்வும் இரவல் மண்ணடா
வாழ்க்கை இதுதானா சொல்லடா

அடடா தமிழா படியடா
ஆதிமொழிதான் அழிவதா

மன்மதன்
21-02-2007, 03:19 PM
அடடா தமிழா படியடா
ஆதிமொழிதான் அழிவதா

கூடாது. கவிதையில் ஒரு விதை.. பாராட்டுகள்..

ஆதவா
21-02-2007, 03:23 PM
அருமை அருமை..... ஒரு குழந்தையாகிப் போனேன்... நாலும் தெரிந்தவர் நக்கீரர் போலத்தான் தெரிகிறது.. நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்....

அமரன்
22-02-2007, 11:18 AM
அருமை அருமை..... ஒரு குழந்தையாகிப் போனேன்... நாலும் தெரிந்தவர் நக்கீரர் போலத்தான் தெரிகிறது.. நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்

நன்றி ஆதவா. முதல்முயற்சியாதலால் ஏதாவது தவறு இருக்கலாம். சுட்டிக்காட்டினால் தொடர்ந்து முன்னேறலாம்.

ஆதவா
22-02-2007, 11:47 AM
குறைகள் ஏதுமில்லை.. மேலும் முயலுங்கள்..

மனோஜ்
22-02-2007, 12:56 PM
உமது கவிதையில் ஒரு குறை உன்டு

காதல்பாட்டு பலலட்சம்
கொண்டு தந்தது யாரடாஇது இந்த வரிகளில் பெருந்துமா பெருந்தும் என்றால் விளக்கவும் நக்கீரரே

ஆதவா
22-02-2007, 01:14 PM
உமது கவிதையில் ஒரு குறை உன்டு
இது இந்த வரிகளில் பெருந்துமா பெருந்தும் என்றால் விளக்கவும் நக்கீரரே

கவிதையில் தவறு இல்லை... உங்கள் பதில் தவறென எண்ணுகிறேன்.

அமரன்
22-02-2007, 01:43 PM
இது இந்த வரிகளில் பெருந்துமா பெருந்தும் என்றால் விளக்கவும் நக்கீரரே

நமது இலக்கியங்களில் காதல் கண்டதில்லையோ தாங்கள்.

leomohan
22-02-2007, 02:04 PM
மன்றத்தில் ஒரு பாரதியார். நல்ல கவிதை நக்கீரன்.

அமரன்
22-02-2007, 03:17 PM
மன்றத்தில் ஒரு பாரதியார். நல்ல கவிதை நக்கீரன்

பாராட்டுக்கு நன்றி. இதுதாங்க என் கன்னி முயற்சி. பாரதியார் அளவுக்கு வளரலாமான்னு தெரியல.

ஆதவா
22-02-2007, 03:21 PM
பாராட்டுக்கு நன்றி. இதுதாங்க என் கன்னி முயற்சி. பாரதியார் அளவுக்கு வளரலாமான்னு தெரியல.

வளருவீர்கள்.... நம்பிக்கைதான்................

வாழ்த்துக்கள்

மனோஜ்
22-02-2007, 03:36 PM
நமது இலக்கியங்களில் காதல் கண்டதில்லையோ தாங்கள்.

கவிதை மிகவும் மிகவும் அருமை நண்பா நீங்கள் நக்கீரர் அல்லவா அதான் சும்மா ஒரு:confused: கேல்வி விடுத்தேன்:D
ஆதவா தவறு என்பது எனக்கு தெரியும்;)
நக்கீரரே உமது படைப்புகள் பல நுறுவேளிவற வாழ்த்துக்கள்

இளசு
27-02-2007, 09:06 PM
ரசித்துப் படித்தேன் நக்கீரன்.. பாராட்டுகள்..

முதல் முயற்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்..

மிக அதிகம் வாசியுங்கள்..
அதிகம் எழுதிப்பதியுங்கள்..
விமர்சனங்கள் கூராக்கும்..
தொடருங்கள்..வளருங்கள்..

poo
28-02-2007, 08:23 AM
இதுபோன்ற உரிமைகளை உரிமையாய் சொன்னால்தான் உரைக்கும்....

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் நண்பரே!!