PDA

View Full Version : srjahவின் அறிமுகம்



srjah
21-02-2007, 07:55 AM
வணக்கம்மன்றத் தலைவரே! நண்பர்களே! நண்பிகளே! நான் இம்மன்றத்திற்கு புதியவன் என்னை இம்மன்றத்திற்கு அனுமதித்தற்கு நன்றிகள் பல. எனது ஆக்கஙகளைத் தரமுதல் இதிலுள்ள ஆக்கங்களைப் படித்துவிட்டு பின்பு கருத்துக்களையும் ஆக்கங்களையும் தர முயலுகிறேன். இத்தளம் எதேச்சையாக தட்டிப் பார்க்கும் போது கிடைத்தது. தேன்போலப் பாய்ந்தது என்னுள்ளத்தில் தமிழ் மன்றம். மன்றத்தமிழ் பொங்கிவழிய அமிழ்தினை உண்ண வந்துள்ளேன்இந்தப் புதியவன்தமிழன். தமிழே என் மூச்சு. வரவேற்பீர்கள் என நம்புகிறேன். நன்றி வணக்கம்.

praveen
21-02-2007, 07:58 AM
உங்களை முதன் முதல் ஆளாக வரவேற்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். வாருங்கள், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மயூ
21-02-2007, 08:04 AM
வாருங்கள் அன்பரே உங்கள் வரவு மன்றத்திற்கு நன்மை பயிக்கட்டும்.

மன்மதன்
21-02-2007, 08:06 AM
நல்வரவு அன்பரே. உங்களை பற்றிய விவரங்கள் ஏதும் கொடுக்கவில்லையே...!!

ஆதவா
21-02-2007, 08:10 AM
வாங்க ஸ்ரீ.... உங்கள் புனைப்பெயராவது சொல்லுங்கள் கூப்பிட... அட!! எழுதிட...

உங்களை வரவேற்கும்
மன்றத்து ஆதவன்..... (எல்லாம் நாமளே போட்டுக்கறதுதான்...)

srjah
21-02-2007, 08:33 AM
நான் ஈழத்தைச் சேர்ந்தவன். யேர்மனியில் வசிப்பவன். தமிழ்ப்பற்றுடையவன். எனது பெயரை மாற்றம் செய்யலாமா தலைவரே?விபரங்கள் உடனடியாகத் தருகின்றேன் எனது பெயர் srajah

Narathar
21-02-2007, 10:01 AM
வாங்க எஸ் ராஜா............
உங்கள் வரவு நல்வரவாகட்டும்....
நானும் ஈழத்தை சேர்ந்தவந்தான். உங்களை இங்கு வாழ்த்தி வரவேற்கின்றேன்

leomohan
21-02-2007, 10:50 AM
வாருங்கள் ராஜா. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

pradeepkt
21-02-2007, 11:07 AM
வாங்க ராஜா...
ஏற்கனவே ஒரு ரவுசு ராஜா மன்றத்தில் இருக்கிறார்.
நீங்களும் ஜோதியில் கலந்து கலக்குங்கள்.

அமரன்
21-02-2007, 01:35 PM
ஈழத்து உறவுக்கு இன்னொரு ஈழத்து உறவின் வணக்கங்கள். மன்றத்தின் மூலம் உங்களுடன் அளவளாவ முடிந்ததுக்கு மறத்துக்கு என் நன்றிகள். வாருங்கள் ராஜா. வந்து நம்மன்றா ஜோதியில் கலந்து கலக்குங்கள்.

அறிஞர்
21-02-2007, 01:54 PM
இராஜாவை மன்றத்தில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... பதிவுகள் தொடரட்டும்...

ஷீ-நிசி
21-02-2007, 03:31 PM
வரவேற்புகள்! வாழ்த்துக்கள் நண்பா!

இளசு
24-02-2007, 08:34 PM
நண்பர் ராஜா அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.

எங்கும் உலாவி, கருத்துகள், படைப்புகள் இட்டு
எந்நாளும் இணைந்திருக்க வாழ்த்துகள்..

ஓவியன்
01-03-2007, 09:04 PM
வருக வருக!

ஓவியா
06-03-2007, 03:50 PM
ஜப்பான்
ஆஸ்திரேலியா
அமேரிக்கா
குவைத்
இங்கிலாந்து
இந்தியா
மலேசியா
சிங்கபூர்
இலங்கை
சீனா
சுவீஸ்லன்ட்
பகரீன்
பிரான்ஸ்
கனடா
சவுதி அரேபியா


இப்பொழுது ஜெர்மனியில் இருந்து ஒரு தமிழ் உடன்பிறப்பு (நீங்கதான்).

வாருங்கள் ராஜா. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நினைக்கவே தேனாய் இனிக்குது.

வாருங்கள் தமிழை வாழ வைப்போம். :)



எனக்கு உலகம் சுத்தி நண்பர்கள்,
வீட்லே சொல்லிடாதீங்க மக்கா, பின்னிடுவாங்க :D :D

மனோஜ்
06-03-2007, 04:04 PM
நண்பர் ராஜா அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.
வருக வருக

மனோஜ்
06-03-2007, 04:06 PM
தங்களின் பதிவுகளை தெடங்க வாழ்த்துக்கள்