PDA

View Full Version : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்

மயூ
21-02-2007, 07:15 AM
http://bp3.blogger.com/_cXy91K5_Avs/RdaFuEzbuvI/AAAAAAAAABc/rJyoJDVnnwI/s400/gamiltamil.JPG (http://bp3.blogger.com/_cXy91K5_Avs/RdaFuEzbuvI/AAAAAAAAABc/rJyoJDVnnwI/s1600-h/gamiltamil.JPG)

தற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.

இது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.

ஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே!

praveen
21-02-2007, 07:50 AM
புதிய தகவலுக்கு நன்றி, நானும் பயன்படுத்தி பார்த்து மகிழ்கிறேன்.

மன்மதன்
21-02-2007, 08:15 AM
முடிந்தால் முடியாதது இல்லை என்பார்களே. பார்ப்போம் தமிழில் ஜிமெயில் நல்ல வரவுதான்.

ஆதவா
21-02-2007, 08:19 AM
தற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.

இது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.

ஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே!

இதற்கு என்ன அர்த்தம்... ஆங்கில மேற்கோள் காட்டவும்

மயூ
21-02-2007, 08:55 AM
இதற்கு என்ன அர்த்தம்... ஆங்கில மேற்கோள் காட்டவும்
ஹிந்தி interface தற்போது ஜிமெயிலுக்கு உண்டு. தமிழுக்கு இன்டஃபேஸ் வழங்கப்பட வில்லை என்பதைக் கூறியுள்ளேன்...

அமரன்
21-02-2007, 02:07 PM
பயனுள்ள தகவல். பயன்படுத்தினேன். பரவாயில்லை ரகம். இன்னும் முன்னேற இடமிருக்கு.

leomohan
21-02-2007, 03:45 PM
ஹிந்தி interface தற்போது ஜிமெயிலுக்கு உண்டு. தமிழுக்கு இன்டஃபேஸ் வழங்கப்பட வில்லை என்பதைக் கூறியுள்ளேன்...

நாம் நமது நேரத்தை ஒதுக்கி கூகிளை தமிழில் மொழி பெயர்க்க உதவினால் விரைவில் நடக்கும். நானும் நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.

விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் தொடுப்பு தருகிறேன். முன்பே தந்தும் இருந்தேன்.

குறிப்பு - தொடுப்பு மயூரேசனுக்காக அல்ல. அவர் யூனிகோட் மயூரேசன். இது மற்றவர்களுக்காக.

ஆதவா
22-02-2007, 02:29 AM
எனக்கு ஜிமையிலில் அந்த option இல்லையே!! எப்படிப்பா மயூ பண்ணுவது?

மயூ
22-02-2007, 02:36 AM
எனக்கு ஜிமையிலில் அந்த option இல்லையே!! எப்படிப்பா மயூ பண்ணுவது?
தமிழில் தட்டச்சு செய்து விட்டு check spelling என்பதை சொடுக்குங்கள்.
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/checkspelling.jpg

ஆதவா
22-02-2007, 02:37 AM
ஆமாம் அதில் தமிழ் மொழியே இல்லையே??

மயூ
22-02-2007, 02:39 AM
நாம் நமது நேரத்தை ஒதுக்கி கூகிளை தமிழில் மொழி பெயர்க்க உதவினால் விரைவில் நடக்கும். நானும் நேரம் கிடைக்கும் போது செய்கிறேன்.

விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் தொடுப்பு தருகிறேன். முன்பே தந்தும் இருந்தேன்.

குறிப்பு - தொடுப்பு மயூரேசனுக்காக அல்ல. அவர் யூனிகோட் மயூரேசன். இது மற்றவர்களுக்காக.
நக்கலுதானே.... :D :D

மற்றது மோகன் அவர்களே.. தமிழ் பலதடவை 100 வீதத்தை எட்டிய போதும் அவர்கள் தமிழ் இடைமுகத்தை வழங்கப் பின்னடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் என்று தெரிய வில்லை. அத்துடன் ஒவ்வொருத்தரும் தம் பாட்டுக்கு மொழி பெயர்ப்பதால் பெரும் இறுதியில் குளப்பம் ஏற்படும்.
உ+ம் Tool Box - கருவிப் பெட்டி??? கருவிப் பெட்டகம்??:confused:

மயூ
22-02-2007, 02:41 AM
ஆமாம் அதில் தமிழ் மொழியே இல்லையே??
அதைப் பற்றி அலட்டாமல் படத்தில் உள்ளவாறு செக் ஸ்பெல்லிங் கிளிக் செய்க..
பின்னர் மஞ்சள் நிறத்தில் காட்டும் சொற்களின் மேல் கிளிக் செய்ய அதற்கான பரிந்துரைகளைக் காட்டும்...
இப்போ சரியா???:confused:

pradeepkt
22-02-2007, 09:11 AM
அட என்ன ஆச்சரியம்..
இப்படி எல்லாம் கூட வந்து விட்டதா?
மயூரேசா, நன்றி.

அமரன்
22-02-2007, 12:00 PM
ஆதவாவின் வினாக்கள்மூலம் எனது சந்தேகமும் தீர்ந்தது. நன்றி

அமரன்
22-02-2007, 12:18 PM
ஜி மெயிலில் தமிழ் எழுத்துரு இல்லைத்தான். ஆனால் வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டும்போது அப்படியே தமிழில் வருகின்றது. எழுத்துப்பிழையும் பரீட்சித்துப்பார்க்கமுடிகின்றது.

ஓவியன்
05-04-2007, 09:24 PM
அட மயூரேசா!

இன்றுதான் என் கண்களில் இந்த திரி பட்டது!

நன்றிகள் நண்பரே!

leomohan
06-04-2007, 06:00 AM
நக்கலுதானே.... :D :D

மற்றது மோகன் அவர்களே.. தமிழ் பலதடவை 100 வீதத்தை எட்டிய போதும் அவர்கள் தமிழ் இடைமுகத்தை வழங்கப் பின்னடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் என்று தெரிய வில்லை. அத்துடன் ஒவ்வொருத்தரும் தம் பாட்டுக்கு மொழி பெயர்ப்பதால் பெரும் இறுதியில் குளப்பம் ஏற்படும்.
உ+ம் Tool Box - கருவிப் பெட்டி??? கருவிப் பெட்டகம்??:confused:

ஆம். சில மொழி பெயர்ப்பு சகிக்கவில்லை.

அன்புரசிகன்
06-04-2007, 07:25 PM
அதைப் பற்றி அலட்டாமல் படத்தில் உள்ளவாறு செக் ஸ்பெல்லிங் கிளிக் செய்க..
பின்னர் மஞ்சள் நிறத்தில் காட்டும் சொற்களின் மேல் கிளிக் செய்ய அதற்கான பரிந்துரைகளைக் காட்டும்...
இப்போ சரியா???:confused:

விடயத்திற்கு நன்றி.

பரஞ்சோதி
07-04-2007, 05:44 AM
புதிய செய்தி தம்பிக்கு நன்றி.

இதில் முன்னேற்றம் காணப்பட்டதா என்று தெரியலையே :(

மயூ
07-04-2007, 11:26 AM
புதிய செய்தி தம்பிக்கு நன்றி.

இதில் முன்னேற்றம் காணப்பட்டதா என்று தெரியலையே :(
உண்மையில் முன்னேற்றம் இல்லை என்றே சொல்லலாம்...
கூகள் தமிழுக்கு அவ்வளவாக முன்னுரிமை கொடுக்கத் தொடங்கிவில்லை!!!:traurig001:

ramanan4u
02-11-2007, 05:23 PM
மிக சிறந்த தகவல் மிக்க நன்றி

நாகரா
11-02-2008, 07:16 AM
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி மயூ

sarathecreator
11-02-2008, 08:25 AM
அகர முதல எழுத்தையெல்லாம் அறிய வைத்தாய் தேவி.. இதுபோல
தெரியாத தகவலையெல்லாம் தெரிய வைத்தாய் தமிழ்மன்றமே...