PDA

View Full Version : சிறந்த பந்துவீச்சாளர்அமரன்
20-02-2007, 05:48 PM
நடைபெறவுள்ள கிறிக்கட் உலகக்கோப்பையில் அதிக இலக்குகளை விழுத்தும் பந்துவீச்சாளர் யராக இருக்கலாம்.
எனது வாக்கு சாமிந்தவாஸுக்கு. உங்க வாக்கு?

leomohan
20-02-2007, 05:51 PM
நடைபெறவுள்ள கிறிக்கட் உலகக்கோப்பையில் அதிக இலக்குகளை விழுத்தும் பந்துவீச்சாளர் யராக இருக்கலாம்.
எனது வாக்கு சாமிந்தவாஸுக்கு. உங்க வாக்கு?

கிரிகெட் சூதாட்டம் வெளிவந்ததிலிருந்து கிரிகெட்டின் மேல் இருந்த காதல் போய்விட்டது நண்பரே.

leomohan
20-02-2007, 05:53 PM
இந்திய ஆட்டக்காரர்களின் பெயர் இல்லையே :-(

அமரன்
20-02-2007, 05:54 PM
கிரிகெட் சூதாட்டம் வெளிவந்ததிலிருந்து கிரிகெட்டின் மேல் இருந்த காதல் போய்விட்டது நண்பரே
எங்கும் கறுப்பு ஆடுகள் இருக்கும். அதற்காக ஒட்டு மொத்தமாக வெறுப்பது சயானதா?

அமரன்
20-02-2007, 05:57 PM
இந்திய ஆட்டக்காரர்களின் பெயர் இல்லையே

இந்தியாவில் உலகப்பிரசித்தமான துடுப்பாட்டக்காரர் இருப்பது போல பந்துவீச்சாளர்கள் கபில்தேவ்,சிறீநாத் இருவருக்கும் பின் இல்லை என்பது எனது பணிவான கருத்து.

மன்மதன்
20-02-2007, 07:40 PM
இந்திய ஆட்டக்காரர்களின் பெயர் இல்லையே :-(

அதானே..!!

அறிஞர்
20-02-2007, 07:48 PM
இரு இந்தியர் பெயரை... சொல்லுங்கள் மோகன்... மன்மதன் ஓட்டெடுப்புக்கு சேர்த்துவிடுவார்.

Mathu
20-02-2007, 10:29 PM
இந்தியாவில் உலகப்பிரசித்தமான துடுப்பாட்டக்காரர் இருப்பது போல பந்துவீச்சாளர்கள் கபில்தேவ்,சிறீநாத் இருவருக்கும் பின் இல்லை என்பது எனது பணிவான கருத்து.

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது தான் ஆனால்
ஷகீர்கான் மீண்டும் புதுதெம்புடன் களமிறங்கி இருக்காரே....! :p
சிறீசந்தும் ஒரு சுற்று வர வாய்ப்பிருக்கிறது. :rolleyes: ;)

Mathu
20-02-2007, 10:33 PM
ஆனாலும் உலக கோப்பையில் வலம் வர இருப்பவர்கள்
இவர்களில் எவரும் இல்லை.....

:p :rolleyes: :p

அமரன்
21-02-2007, 01:58 PM
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது தான் ஆனால்
ஷகீர்கான் மீண்டும் புதுதெம்புடன் களமிறங்கி இருக்காரே....! :p
சிறீசந்தும் ஒரு சுற்று வர வாய்ப்பிருக்கிறது

ஜாகீரின் வீச்சு பண்பட்டு ஜொலிஜொலிக்குது உண்மைதான். ஆனால் நம்பிக்கைத்தன்மை இல்லாமல் இருக்கு. எப்போ தூள்பறத்துவார். எப்போ துவள்வார் எனத்தெரியாது இருக்கின்றது.

அறிஞர்
21-02-2007, 01:59 PM
இந்த போட்டியில் ஜாகீர் கான், கும்ப்ளே.. இடம் பெறுகிறார்கள்.. இந்தியருக்கு ஓட்டு போட விரும்புகிறவர்கள் ஓட்டு போடலாம்.

அமரன்
21-02-2007, 02:02 PM
இந்த போட்டியில் ஜாகீர் கான், கும்ப்ளே.. இடம் பெறுகிறார்கள்.. இந்தியருக்கு ஓட்டு போட விரும்புகிறவர்கள் ஓட்டு போடலாம்

நன்றி அறிஞரே. நான் இணைக்க முயற்சித்தேன். முடியவில்லை. எப்படி இணைப்பது.

aren
21-02-2007, 02:07 PM
நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறார். அவருடையை வேகமான பந்துவீச்சும் அதனுடன் சேர்ந்து ஸ்விங்கும் எதிர் ஆட்டக்காரர்களைத் திக்குமுக்காட வைக்கும் என்று நினைக்கிறேன். அவர் 145கிமீ வேகம் சாதாரணமாக போடுகிறார் அதுவும் ஸ்டம்பை நோக்கு ஒவ்வொரு பந்தையும். சில சமயங்களில் 150கிமீ வேகத்தையும் மிஞ்சுகிறது.

அதுமாதிரி ஆஸ்திரேலியாவின் ஷான் டைட் என்பவரும் வெகு வேகமாக பந்துவீசுகிறார். மட்டையை சரியான நேரத்தில் பந்திற்கு நேராக கொண்டுவரவில்லையென்றால் ஸ்டம்ப் பறந்துவிடும். அவர் 160கிமீ பந்து விச்சை இரண்டு வாரங்களுக்குமுன் தொலைகாட்சியில் பார்த்து அசந்துவிட்டேன்.

இந்த இருவரும் சிறப்பாக பந்துவீசினால் ஆடுபவர்களுக்கு கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆகையால் என்னுடைய ஓட்டு இந்த இரண்டு பந்து வீச்சாளர்களுக்குத்தன.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
21-02-2007, 02:11 PM
உண்மைதான் அரென். ஆனால் அவரது பந்துவீச்சில் நேர்த்தி குறைவு என்று நினைக்கின்றேன்.

அறிஞர்
21-02-2007, 02:28 PM
ஆரெனின் விருப்பமும் சேர்க்கப்பட்டுள்ளது

praveen
21-02-2007, 02:30 PM
மக்ராத் - பந்து வீசுவதில் சிறந்த அனுபவசாலி, அவர் இந்த உலக கோப்பைக்கான போட்டியில் பிரகாசிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

அறிஞர்
21-02-2007, 03:08 PM
நன்றி அறிஞரே. நான் இணைக்க முயற்சித்தேன். முடியவில்லை. எப்படி இணைப்பது. எடிட் போல் என்பதை கிளிக் செய்து மாற்றவேண்டும்.

ஆதவா
21-02-2007, 03:18 PM
நம்ம கங்குலி/..???

leomohan
21-02-2007, 03:35 PM
தேச பக்தியில் ஓட்டு ஜாகீர்கானுக்கு. ஆட்டம் எக்கேடுகெட்டால் போனால் நமக்கு என்ன எல்லாம் match fixing தானே.

ஓவியன்
22-02-2007, 06:04 AM
இந்த கருத்து அழிக்கப் படுகிறது

ஓவியன்
22-02-2007, 06:24 AM
இவர்களில் மக்கிராத், முரளி, வாஸ், கும்பிளே மற்றும் கலீஸ் அனுபவஸ்தர்கள் அவர்களின் அனுபவம் ஒவ்வொரு பந்து வீச்சிலும் பிரகாசிக்கும். முக்கியமாக முரளி மற்றும் மக்கிராத்!!!

இருவரும் துடுப்பாட்ட வீரரின் அணுகுமுறைக்கேற்ப பந்தினை வீசுவதில் வல்லவர்கள்!.

பாகிஸ்தானிய பந்து வீச்சாளர் ஒருவரினதும் பெயரைக் காணவில்லையே?? ( அக்தார், ரசாக்???)

என்ன இருந்தாலும் எனது வாக்கு முரளிதரனுக்குத் தான் - நானும் ஒரு இலங்கைத் தமிழனல்லவா!!!

மயூ
22-02-2007, 06:24 AM
என் தெரிவு இலங்கையின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் முரளி தரன்.

ஷீ-நிசி
22-02-2007, 06:39 AM
என்னால் யாரையுமே யூகிக்க முடியவில்லை. இது கொஞ்சம் கடினம்தான்.... நியூஸிலாந்து போலர்களில் ஒருவர் வர வாய்ப்புள்ளது..

aren
22-02-2007, 07:30 AM
மக்களுக்கு ஷான் போலாக் மேல் ஏன் அவ்வளவு கடுப்பு என்று தெரியவில்லை. ஒருவரும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிடவேயில்லையே.

நம் இர்பாஃன் பதான் சிறப்பாக பந்து வீசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, ஏனெனில் அவரும் மிகவும் திறமையானவர்.

saguni
22-02-2007, 11:30 AM
முடிந்தால் கேள்விப்படாத சில பெயர்களை நீக்கிவிட்டு ஷான் பொல்லாக் பெயரை நுழைத்தால் நல்லது. இன்றைய தேதியில் அவர்தான் நம்பர்1ல் உள்ளார்.

அமரன்
22-02-2007, 11:35 AM
நம்ம கங்குலி

ஆதவா நிஜமாக்கேட்கின்றீர்களா அல்லது கிண்டலா?

ஓவியன்
25-02-2007, 07:07 AM
மக்களுக்கு ஷான் போலாக் மேல் ஏன் அவ்வளவு கடுப்பு என்று தெரியவில்லை. ஒருவரும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிடவேயில்லையே.

.

உண்மை நண்பரே!

சிறந்த பந்து வீச்சாளர் யார் எனப்து போல - சிறந்த சகல துறை ஆட்டக் காரர் யார் என்று ஒரு வாக்கெடுப்பு வைத்தால் பொலக் வெற்றிக் கொடி நாட்டுவார்!.

அறிஞர்
26-02-2007, 04:16 PM
பிரட்லீ (ஆஸ்திரேலியா).. விளையாடுவாரா....

உதயசூரியன்
26-02-2007, 04:38 PM
முரளிதரன் தான் என் விருப்பம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மன்மதன்
26-02-2007, 05:13 PM
இர்பான் பதான் ஃபிட்டாகி இருக்காராம்..

ஷீ-நிசி
27-02-2007, 03:59 AM
பிரட்லீ (ஆஸ்திரேலியா).. விளையாடுவாரா....

99% சந்தேகம்தான் அறிஞரே....

ஷீ-நிசி
27-02-2007, 04:02 AM
இர்பான் பதான் ஃபிட்டாகி இருக்காராம்..

உ.கோப்பையில் சாதிப்பாரா என்பது சந்தேகம்தான் மன்மதன் அவர்களே!

உள்ளூரில் நடந்த தியோடர் கோப்பை போட்டியில் 8 ஓவருக்கு 40
ரன்களுக்கும்மேல் கொடுத்துள்ளார் 2 விக்கெட் எடுத்துள்ளார்.. அதுவும் டெயில் எண்டர்ஸ்...

அறிஞர்
27-02-2007, 12:49 PM

இதன் மூலம் தான் தகுதியை நிறுபித்துள்ளார் போல்.

பாலாஜி என்ன ஆனாருங்கோ.....

அமரன்
27-02-2007, 02:13 PM
பாலாஜி என்ன ஆனாருங்கோ

யாருங்க அவரு. எங்கேயோ கேட்ட பெயரா இருக்கு.

உதயசூரியன்
27-02-2007, 05:15 PM
பாலாஜி என்ன ஆனாருங்கோ.....

தமிழன் என்ற அடை மொழி தான் ஆப்பு அடிச்சிடுச்சி..

அது மட்டுமில்லை தமிழ் நாட்டில் இருந்து தேர்வு செய்ய மாட்டார்கள்.. அப்படி இருந்தாலும் எல்லொருமே.. தயிர் சாதங்கள் தான் வெங்கட்ராமன் தொடங்கி பாலாஜி வரை...

விளையாட்டை பார்க்காமல் மற்றதை பார்பது எப்பதான் முடிவுக்கு வருமோ... இந்த மனபாண்மை அரசியலை விட மோசமானது

வாழ்க தமிழ்
வாழ்த்துக்கள்

poo
28-02-2007, 07:07 AM
தினேஷ் கார்த்திக் தமிழன்தானே?!.. தமிழகத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழவேண்டுமே தவிர, தயிர்சாதமா...கருவாட்டுக் குழம்பா-வென கவலை வேண்டாம்.. (அண்ணன் இளசுவின் குடியரசு கவிதை ஞாபகம் வந்துபோகுது... ) இப்படியே நதிமூலம் ரிஷிமூலம்னு போனா.. கடைசியில நம்ம பக்கத்து வீட்டுக்காரனுக்கு கிடைக்கலேயென்னு - கோபம் மிஞ்சும்!!

அமரன்
02-03-2007, 09:59 AM

தமிழன் ஒருவன் அணியில் இருக்கின்றான் என்பதே பெருமைதான். டினேஷ் கார்த்திக்கை நினைந்து சந்தோஷிப்போமே.

அறிஞர்
02-03-2007, 02:10 PM
பாகிஸ்தான் அணியிலிருந்து அக்தர், ஆசிப் உடல் தகுதி காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

அமரன்
02-03-2007, 02:52 PM
பாகிஸ்தான் அணியிலிருந்து அக்தர், ஆசிப் உடல் தகுதி காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்

இதில் வேறு ஒரு காரணமும் இல்லையா

மன்மதன்
02-03-2007, 06:37 PM
பாகிஸ்தான் அணியிலிருந்து அக்தர், ஆசிப் உடல் தகுதி காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

ரசாக் கூட இல்லையாமே..

அமரன்
02-03-2007, 06:45 PM
ரசாக் கூட இல்லையாமே

பாகிஸ்தான் அணியினர் பேசாமல் நாடு திரும்பலாமே.

அறிஞர்
02-03-2007, 06:45 PM
பாவம் பாகிஸ்தான்...
இந்தியாவுக்கு எதிராக போட்டி இருந்தால்.. எல்லாரும் நல்லா விளையாடுவார்கள்..

மன்மதன்
02-03-2007, 07:25 PM
பாகிஸ்தான் அணியினர் பேசாமல் நாடு திரும்பலாமே.

கென்யா, பங்களாதேஷ் கூட எல்லாம் ஆடலாமே..
(புது வீரர்களை பற்றி எப்பவும் தப்புக்கணக்கு போடக்கூடாது.. அஃப்டிரி, அக்தர் போன்ற வீரர்கள் அங்கு அதிகமப்பா..)

அமரன்
02-03-2007, 09:17 PM
கென்யா, பங்களாதேஷ் கூட எல்லாம் ஆடலாமே..
(புது வீரர்களை பற்றி எப்பவும் தப்புக்கணக்கு போடக்கூடாது.. அஃப்டிரி, அக்தர் போன்ற வீரர்கள் அங்கு அதிகமப்பா..)

ஏற்றுக்கொள்கின்றேன். புதியவர்களின் பலம் பலவீனம் பற்றி தெரியாததனால் எதிரணியினர் தடுமாறலாம்.

virumaandi
03-03-2007, 08:21 AM
தினேஷ் கார்த்திக் தமிழன்தானே?!.. தமிழகத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழவேண்டுமே தவிர, தயிர்சாதமா...கருவாட்டுக் குழம்பா-வென கவலை வேண்டாம்.. (அண்ணன் இளசுவின் குடியரசு கவிதை ஞாபகம் வந்துபோகுது... ) இப்படியே நதிமூலம் ரிஷிமூலம்னு போனா.. கடைசியில நம்ம பக்கத்து வீட்டுக்காரனுக்கு கிடைக்கலேயென்னு - கோபம் மிஞ்சும்!!

என்னங்க.. அதுவும் ஒரு ஆதங்கம் தானே..

தமிழ்னாட்டு அனியில் வேறு சிலரும் சாதனை படைக்கின்றனர்..
உதாரனம்..

ராபின் சிங்க் ரிட்டயர்டு ஆகும் நேரத்தில் தான் சேர்த்தார்கல்...
காரனமே இல்லாமல் பாலாஜியை கழட்டி விட்டார்கள்>>
சிரி ராம், பத்ரி, போன்றொரும் தினேஷ்கார்த்திக்கை விட நன்கு விளையாட கூடியவர்கள்...

virumaandi
03-03-2007, 08:34 AM
உலக கோப்பை அட்ட வனையை யாராவது வெளியிடுங்களேன்..

அமரன்
04-03-2007, 07:37 PM
உங்கள் விருப்பத்தின் படி மிக விரைவில்.

ஓவியன்
19-03-2007, 07:38 AM
அட, நம்ம முரளி அதிக வாக்குப் பெற்று முன்னனியிலே இருக்காரே!. இவர் பந்து வீசும் போது இவரது கண்கள் பார்க்க என்னவோ போலிருக்கும். அதனால் எனது இந்திய நண்பர்கள் வேடிக்கையாக, உங்கட முரளி மூன்று பந்து வீசினா (கண்களையும் சேர்த்து தான்) நாம எப்படி அடிக்கிறது? என்று கூறுவார்கள்.

எது எப்படி இருந்தாலும் முன்னணியில் இருக்கும் முரளிக்கு எனது வாழ்த்துக்கள்!

மன்மதன்
19-03-2007, 07:45 AM
பாகிஸ்தான் அணியினர் பேசாமல் நாடு திரும்பலாமே.

திரும்பிட்டாங்க..

மனோஜ்
19-03-2007, 08:04 AM
பாக்கிஸ் இப்படி பாக்கியம் இல்லா பேயிடுச்சே பாவம்..

அமரன்
19-03-2007, 08:59 AM
பாக்கிஸ் இப்படி பாக்கியம் இல்லா பேயிடுச்சே பாவம்..

அவர்களுக்கு அடிக்குமேல் அடி. அணியின் தோல்வி. பொப்வுல்மரின் மரணம்.