PDA

View Full Version : உலககோப்பையின் சிறந்த துடுப்பாட்டவீரர்



அமரன்
20-02-2007, 05:40 PM
சச்சின் டெண்டுல்கர்
ரிக்கி பொண்டிங்
பிரையின் லாரா
மொஹமுத் யூசுப்

இவர்களில் உலககோப்பையின் சிறந்த துடுப்பாட்டவீரராக தெரிவுசெய்யப்படும் வீரர் யார்?
அல்லது வேறு குறிப்பிடாத யாராவதா?

ஆதவா
20-02-2007, 05:42 PM
வாக்கெடுப்பு ஆரம்பியுங்க

ஓவியன்
22-02-2007, 06:40 AM
இலங்கையின் சங்ககாராவும் கவனிக்கத் தக்கவர்!

ஷீ-நிசி
22-02-2007, 06:45 AM
முதலில் துடுப்பாட்டக்காரர் என்றால் என்ன?

அதிரடி ஆட்டக்காரா, தடுப்பாட்டக்காரரா?

aren
22-02-2007, 07:38 AM
எனக்கென்னவோ இந்த முறை யாராவது புதியவர் ஒருவர் இந்த மகுடத்தைச் சூடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நியூஜிலாந்தின் லூ வின்செண்ட், ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸி, இந்தியாவின் உத்தப்பா, பாகிஸ்தானின் இம்ரான் நஸீர், இந்தியாவின் இர்பாஃன் பதான், இங்கிலாந்தின் பால் காலிங்வுட் அல்லது கெவின் பீட்டர்சன், மேற்கு இந்தீஸின் கிரிஸ் கெய்ல் அல்லது தென் ஆப்பிரிக்காவின் ஆப்ரகம் டிவில்லியர்ஸ் ஆகியோரில் ஒருவராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அமரன்
22-02-2007, 11:39 AM
முதலில் துடுப்பாட்டக்காரர் என்றால் என்ன?
அதிரடி ஆட்டக்காரா, தடுப்பாட்டக்காரரா

உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரை கூடிய ஓட்டங்கள் குவிப்பவர்தான் சிறந்த துடுப்பாட்டவீரர்.

அமரன்
22-02-2007, 11:40 AM
இலங்கையின் சங்ககாராவும் கவனிக்கத் தக்கவர்!

உண்மைதான். அவரது திறமை சென்ற உலகக்கிண்ணத்துக்குப்பின் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

அறிஞர்
02-03-2007, 06:49 PM
அன்பரே.. பத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களை சேருங்கள்... ஓட்டெடுப்பு நடத்துங்கள்...

டெண்டுல்கர்/லாரா நன்றாக விளையாடுவார்கள்.. என எண்ணுகிறேன்.

virumaandi
03-03-2007, 08:26 AM
சச்சின் அல்லது லாரா.. இவர்கள் மேல் அதிகம் எதிர்பார்ப்புடன் உள்ளேன்...

virumaandi
03-03-2007, 08:34 AM
உலக கோப்பை அட்ட வனையை யாராவது வெளியிடுங்களேன்..

ஓவியன்
19-03-2007, 09:48 AM
இதுவரைக்கும் ஹிப்ஸ் தான் தூள் கிளப்பி இருக்கிறார், பாப்பம் என்ன தான் நடக்குது என்று.

எனக்கு சங்ககாராவில் தான் நம்பிக்கை அதிகம்.