PDA

View Full Version : நற்பண்புக்கதைகள் (கதை-2)



அமரன்
20-02-2007, 03:15 PM
நற்பண்புக்கதைகள் (கதை-1) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=175870#post175870)

கடவுள் எனும் மந்திரசொல்லால் அழைக்கப்படுபவர்கள் தம்மை நினைந்துருகி வழிபடும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவும் குணமுள்ளவர்கள். பழைய காலபடைப்புக்களில் அவை வரங்கள் எனப்படுகின்றன. அதுமாதிரியான ஒரு பழைய ஆனால் இக்காலத்துக்கும் பொருந்தும் கதை இது. ஒருபக்கதனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த இறைவன் அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவன் அழிந்து விடுவான் என்ற ஒரு சக்தியைக் கொடுத்தான். சக்திபெற்ற பக்தன் அச்சக்தியை பரீட்சிப்பதுக்காக இறைவன் தலையிலேயே கைவைக்க முனைந்து இறைவனின் தந்திரத்தால் தானே அழிந்தான். இறைவன் அவன் குணம் அறிந்து சக்தி கொடுக்காததால் வந்த வினை இது. அது பொல வெடிமருந்தைக் கண்டு பிடித்த நோர்வே நாட்டு நோபல் என்பவர் தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக்கண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சமாதானத்துக்கு பாடுபடுவோருக்கு வழங்கும்படி கூறினார். அது போல ஆக்கத்துக்குப் பயன்படும் என்று கருதிய அணு சக்தி அழிவுக்குப் பயன்படுகின்றது. அதை தடுக்க ஒப்பந்தம் ஒப்பந்தமாகப் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதெல்லாம் எதனால். யாருக்கு என்ன குணமறிந்து செயல்படாததாலா அல்லது குணம் மாறும் மனித உருவக் குரங்கினத்தாலா?

அறிஞர்
20-02-2007, 03:20 PM
நக்கீரணனின் கதை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது...

தனது ஆராய்ச்சி உலகம் முழுவதும் அறியப்படவேண்டும் என்ற நோக்கில்தான்... எல்லா கண்டுபிடிப்புகளும் இருக்கிறது. அதில் சில நல்லவையாக உள்ளது, சில கெட்டதாக உள்ளது.

எந்த குரங்கின் கையில் கிடைக்குதோ... அதின் பலன் அவ்வாறு இருக்கிறது.

praveen
21-02-2007, 05:22 AM
விஞ்ஞான கண்டுபிடிப்பில் எல்லாம் (பொதுவாக இதுவரை இல்லாத ஒன்றை) விரும்பி கண்டுபிடிக்கும் போது, அது முதலில் நன்மை பயக்கும் போல தோன்றினாலும், பயண்பாடு அதிகரிக்கும் போது தான் அதில் தொல்லைகளும் வருவது தெரியும். இதற்காக அதனை ஒதுக்க முடியாது. இவ்வாறு கண்டுபிடித்தவர்களே சிலர் அதற்கு மாற்று வழி தேடி வைத்திருப்பது சற்று ஆறுதல்.

ஆனால் புதுப்புது உத்திகள், பொருட்கள் கண்டுபிடிக்காமல் மனித இனம் முன்னேற முடியாது. இன்பம் இருக்கும் அனைத்திலும் (சில ஒரு அளவுக்கு மீறினால்) துண்பமும் இருக்கும். பாற்கடலை கடைந்த போது அமுதம் மட்டுமா வந்தது, ஆலகால விசமும் தான் வந்தது.

ஒன்றை இழக்காமல் மற்றொன்றை பெற இயலாது.

நண்பரே உங்கள் கதையில் கருத்துக்களே அதிகம் உள்ளது கதையை விட. தலைப்பு 2 என்றிருக்கிறது உள்ளே ஆரம்பிப்பது 1 என்று இருக்கிறது. சரி பாருங்கள் நண்பரே.

அமரன்
21-02-2007, 01:48 PM
நண்பரே உங்கள் கதையில் கருத்துக்களே அதிகம் உள்ளது கதையை விட. தலைப்பு 2 என்றிருக்கிறது உள்ளே ஆரம்பிப்பது 1 என்று இருக்கிறது. சரி பாருங்கள் நண்பரே

நண்பா ஒன்று என்று இருப்பது முதல் கதையின் சுட்டி.

மனோஜ்
22-02-2007, 05:11 PM
ஆக்கம் இருந்தால் ஒரு அழவும் இருக்கும் இது உலக நியதி நண்பா