PDA

View Full Version : தெரிகிறதா உன் ஏமாற்றம்?

ஆதவா
20-02-2007, 09:14 AM
சர்ச் வாசலில் புடைசூழ
பேண்டு வாத்தியங்களின்
இசையில், காது செவிடாக
என் கண்கள் குருடாக்கப்பட்டு
தயாராக நிற்கப் படுகிறேன்
முற்றிலும் புதிதான
வெள்ளை கவுனோடு!

என் கைகளில் பூத்த வியர்வைகள்
சூடேறத் தொடங்குகிறது.
உன் வருகையில்
மேலும் என்மனமானது
நொந்து போகிறது..
பொய்யான சிரிப்பால்
கரையான பற்களைக்
காட்டி விட்டு
என்னருகே நிற்கிறாய்
நாற்றங் கலந்த பிணமாக..

பாதிரியாரின் வார்த்தைகளுக்கு
உதடுகள் மட்டும் பதில் சொல்கிறது
உள்ளம் முற்றிலும் மறுக்கிறது.
நீர்த்துளி விழுகையினை
காதலன் பிரிவு என்றெண்ணாமல்
பொய்யான பவுடர் பூசிக்கொண்டு
சுற்றி நிற்கிறார்கள்
சுற்றத்தார்கள்.

உள்ளத்தின் மறுப்பு
உதடு வரை வருவதற்கும்
மேல்கையில் துடைத்துவிட்ட
கண்ணீரின் வெப்பம் ஆறுவதற்கும்
சற்று நேரம் பிடித்தது,

தூரத்தில் சிவப்பு வண்ணக்
காரில் அதோ! வருகிறான்
என் மனதை முற்றிலும் அறிந்தவன்
உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?
காரிலிருந்து இறங்கியவன்
காதல் கண்களைக் காட்டி
கை நீட்டி
என்னை அழைக்கிறான்.

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்
என் பாவாடைக் கவுனை
இழுத்து பிடித்தவாறு
அவன் நீட்டிய விரல் நோக்கி
ஓடுகிறேன்..
நீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு..

அவன் சிரிப்பில்
என் உலகமே மாறிவிட்டது.
கர்த்தர் இன்னும்தான் இருக்கிறார்.

உன் ஏமாற்றம் இப்போது
உனக்குத் தெரிகிறது.
பெண் ஏமாற்றம் எப்பவும்
இப்படித்தான் இருக்கும்....

(சிலகாட்சிகளுக்கு நான் மரியா கரேவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன்...கவிதை என்னுடையது; கரு அவளுடையது.)

ஷீ-நிசி
20-02-2007, 10:13 AM
சர்ச் வாசலில் புடைசூழ
பேண்டு வாத்தியங்களின்
இசையில், காது செவிடாக
என் கண்கள் குருடாக்கப்பட்டு
தயாராக நிற்கப் படுகிறேன்
முற்றிலும் புதிதான
வெள்ளை கவுனோடு!

பேண்டு வாத்தியங்கள் இசையில்
காது செவிடாக, என்றபோதே அதன் தொடர்ச்சியாக கண்கள் குருடாக என்று நிஜத்தையும், உவமையும் சேர்த்திருப்பது படிக்க இலகுவாயிருக்கிறது..

முற்றிலும் புதிதான வெள்ளை கவுனோடு, இங்கே ஏதோ சொல்லவந்ததுபோல் வந்து சொல்லாமல் விட்டதுபோல் உள்ளது...

என் கைகளில் பூத்த வியர்வைகள்
சூடேறத் தொடங்குகிறது.
உன் வருகையில்
மேலும் என்மனமானது
நொந்து போகிறது..
பொய்யான சிரிப்பால்
கரையான பற்களைக்
காட்டி விட்டு
என்னருகே நிற்கிறாய்
நாற்றங் கலந்த பிணமாக..

கைகளில் பூத்த வியர்வைகள்...
வியர்வையை பூவாய் ஆக்கினீர்கள்.. கைகள் கிளையோ?!

சூடேறத் தொடங்கியது என்றால் எப்படி?

மண்மகளின் சஞ்சலமான மனதால், நல்ல பற்களும், கறையுள்ளதாய், அவனின் உண்மையான சிரிப்பும் பொய்யாய், அவனின் வாசனையும் நாற்றமாய்...

பாவம் அவன் என்ன செய்திடுவான்?

பாதிரியாரின் வார்த்தைகளுக்கு
உதடுகள் மட்டும் பதில் சொல்கிறது
உள்ளம் முற்றிலும் மறுக்கிறது.
நீர்த்துளி விழுகையினை
காதலன் பிரிவு என்றெண்ணாமல்
பொய்யான பவுடர் பூசிக்கொண்டு
சுற்றி நிற்கிறார்கள்
சுற்றத்தார்கள்.

நீர்த்துளி விழுகையினை
காதலன் பிரிவு என்றென்னாமல்...

அவள் அழுகிறாள்.. அது அவர்களின் பார்வையில் காதலன் பிரிவிற்காய் அழுகிறாளா என்றறியாமல் இருப்பதாய் சுற்றத்தார்...

நான் புரிந்துகொண்டது சரியா?!

உள்ளத்தின் மறுப்பு
உதடு வரை வருவதற்கும்
மேல்கையில் துடைத்துவிட்ட
கண்ணீரின் வெப்பம் ஆறுவதற்கும்
சற்று நேரம் பிடித்தது,

மேல்கையில் துடைத்துவிட்ட கண்ணீரின் வெப்பம்...

அழுகின்ற பெண் துடைத்துக்கொள்ளும்போது ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு... அது ஆறுவதற்கும், உள்ளத்தினுள் சொல்லலாமா, வேண்டாமா என்ற போராட்டத்தில் மறுப்பு தெரிவிக்கலாம் என்றென்னி உதட்டில் வந்துவிட்ட நேரமும் சரியாக இருந்தது....

மனப்போராட்டத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்

தூரத்தில் சிவப்பு வண்ணக்
காரில் அதோ! வருகிறான்
என் மனதை முற்றிலும் அறிந்தவன்
உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?
காரிலிருந்து இறங்கியவன்
காதல் கண்களைக் காட்டி
கை நீட்டி
என்னை அழைக்கிறான்.

உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?

இது காதலனின் கேள்வியோ?

கண்களினால் கேள்வி கேட்டவன் கண்களாலே அழைக்கிறான்..

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்
என் பாவாடைக் கவுனை
இழுத்து பிடித்தவாறு
அவன் நீட்டிய விரல் நோக்கி
ஓடுகிறேன்..
நீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு..

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்

காதல் நிறைவேறிடாத மனதிற்கு

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்

மிகவும் பொருந்தக்கூடிய வரிகள்தான்...

அவனை நோக்கி ஓடும்போது தவறி விழாத படி
பாவாடை கவுனை (ஆக்ஸிமோரான்) தூக்கிப்பிடித்து... காட்சி கண்முன்னே ஓடுகிறது...

நீர்த்துளிகளை துடைத்துவிட்டு...

துடைக்காமலே செல்லலாமே! துடைக்கும் கரங்கள்தான் அங்கே இருக்கின்றனவே!

அவன் சிரிப்பில்
என் உலகமே மாறிவிட்டது.
கர்த்தர் இன்னும்தான் இருக்கிறார்.

உன் ஏமாற்றம் இப்போது
உனக்குத் தெரிகிறது.
பெண் ஏமாற்றம் எப்பவும்
இப்படித்தான் இருக்கும்....

காதல் கைகூடினால்தான் கர்த்தர் இருப்பதாய் தெரிகிறது...

கடைசி நான்கு வரிகள்
பெண் ஏமாற்றம் மட்டுமல்ல மாற்றமும் இப்படித்தான் இருக்கும்..

விருப்பமில்லாத திருமணத்தில் மணப்பெண்ணாய் நின்றுகொண்டிருக்கும் காதலித்த பெண்ணின் நிலை..

கவிதையில் காட்சிகளாய்...

ஆதவா
20-02-2007, 10:22 AM
அருமை ஷீ!!! அழகான ஆழமான விமர்சனம்.. வரிகளை நன்கே புரிந்து எழுதி இருக்கிறீர்கள்... என் கவிதையின் கரு கடைசி வரிகளில் ஒற்றையாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள்......

உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?

இது காதலனின் கேள்வியோ?

இது மணமகனிடம் காதலி கேட்கும் கேள்வி... அந்த இடத்தி சின்ன இடைவெளி விட்டிருக்கவேண்டும்.. மறந்துவிட்டேன்..

மிக்க நன்றிங்க தலிவா!

ஷீ-நிசி
20-02-2007, 10:30 AM

இங்கே இன்னும் கொஞ்சம் விமர்சனம் தோன்றுகிறது....

அவன் காரிலிருந்து இறங்குகிறான்.. அவன் கண்ட காட்சி.. அவள் மணக்கோலத்தில்.. இவள் அவனிடம் கேட்கிறாள்... இதைக் காண்பதினால் நான் உன்னை மறந்து வேறொருவனை மறப்பேன் என்று நினையாதே!

அவன் காரிலிருந்து இறங்குகிறான்.... அவன் கண்ட காட்சி... அவள் மணக்கோலத்தில்.. அவன் இவளிடம் கேட்கிறான்.. மணக்கோலத்திற்கு நீ மாறியவுடன் என்னை மறந்தாயோ...

உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?

இரு வகையிலும் பொருந்தக்கூடிய வரிகள்... இருவர் மனமும் மாறிடவில்லை. அவன் விரலினாலே சைகை செய்து வந்துவிடு என அழைக்கிறான்.. இவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடுகிறாள்.. காதல் மிக வலிமையானதுதான்...

ஆதவா
20-02-2007, 11:00 AM

வொண்டர் ஷீ!! எனக்கே தெரியாத மறைந்திருக்கும் பொருளை ஆராய்ந்திருக்கிறீர்கள்.... பெயருக்கேற்றார்போல் அற்புதம்தான் நீங்கள்..

அமரன்
20-02-2007, 11:23 AM
கவியும் நிஷியின் கருத்தாழம்மிக்க கருத்துரையும் அருமை. தொடருங்கள் இப்புதுமையை.

மதுரகன்
20-02-2007, 04:41 PM
ஆதவா நான் நிச்சயமாக கூறுகின்றேன் உங்கள் வரிகளின் அடுத்த பரிமாணத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் அற்புதம்..
இந்தப்பரிமாணம் தாண்டி எத்தனையோ சாதனை படைக்க வாழ்த்துக்கள்..

ஆதவா
20-02-2007, 04:45 PM
ஆதவா நான் நிச்சயமாக கூறுகின்றேன் உங்கள் வரிகளின் அடுத்த பரிமாணத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் அற்புதம்..
இந்தப்பரிமாணம் தாண்டி எத்தனையோ சாதனை படைக்க வாழ்த்துக்கள்..

அட அதெல்லாம் இல்லீங்க.. எனக்கு அந்த வித்தியாசம் தெரியல.. இருந்தாலும் மிக்க நன்றிங்க மது...

மதுரகன்
20-02-2007, 04:57 PM
அட என்னங்க என்னுடைய வேலையே கவிதைப்புத்தகம் எது கண்டாலும் வாங்கி வாசிப்பது..
இது வரை நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் வித்தியாசம் அப்படியே தெரிகிறது வார்த்தைகளின் கோலத்தில்...

ஆதவா
21-02-2007, 03:27 PM
அட என்னங்க என்னுடைய வேலையே கவிதைப்புத்தகம் எது கண்டாலும் வாங்கி வாசிப்பது..
இது வரை நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் வித்தியாசம் அப்படியே தெரிகிறது வார்த்தைகளின் கோலத்தில்...

அடே சாமி.... எல்லாமேவா? நல்ல பழக்கம். நமக்குத்தான் கொடுப்பினை இல்லை...

அறிஞர்
22-02-2007, 02:42 PM
திருமண காட்சி, ஏமாற்றம், வலி, சிரிப்பு... அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கவிதையும், ஷீ-நிசியின் அலசலும் அருமை..

ஆதவா
26-02-2007, 03:35 PM
திருமண காட்சி, ஏமாற்றம், வலி, சிரிப்பு... அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கவிதையும், ஷீ-நிசியின் அலசலும் அருமை..

நன்றிங்க அறிஞர்....

மன்மதன்
26-02-2007, 05:39 PM
திருமணநாள் அன்று கூட ஒரு பெண் தன் விருப்பம் போல முடிவை தானே எடுக்கமுடியும்.. எடுக்க வேண்டும்..அந்த தைரியம் வேண்டும் என ஆதவா விரும்புகிறார். அழகு.. அழகு... அதே நேரம், முந்தைய நாளே இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூட தோன்றுகிறது..

ஷீ.நிசியின் விமர்சனத்தில் கவிதை இன்னும் மெருகேறியது என்றால் மிகையல்ல...

ஆதவா
26-02-2007, 05:43 PM

மிக்க நன்றிங்க..

ஆம்...... அந்த தைரியம் வேண்டும்....

முந்திய நாளே முடிவு எடுக்க முடியாமல் போய்விடும்... எல்லாரும் சம்மதிக்க வைக்கவே பார்ப்பார்கள்.. கல்யாணதினத்தன்று எல்லார் முன்னிலையிலும் காதலனுடன் கைசேர்ந்தால் வாயடைத்துப் பார்ப்பார்கள்..... என்ற எண்ணமாக இருக்கலாம்.....

மன்மதன்
26-02-2007, 06:00 PM
அதுவும் சரி....

மனோஜ்
26-02-2007, 06:06 PM
ஆதவா உங்கபானி ஷி நிசி அவர்களும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாறா
பாவம் அந்த புதுமாப்பிளை திருதிருனு முலுச்சுறுப்பாறு இல்ல:eek: :eek:
அருமையான நடப்பதை பொன்ற கவிதைவரிகள் வாழ்த்துக்கள் ஆதவா

இளசு
26-02-2007, 06:27 PM
ஆதவா,

கவிதை அருமை..

நிற்கப் படுகிறேன் என்பதிலெயே கவிதை நின்றுவிட்டது.

நிற்பது என்பது சுயச்செயல்.. குழந்தைப் பருவம் முடிந்துவிட்டால்..
நோய் தாக்கும் வரை - நிற்பது என்பது சுயச்செயல்.

ஆனால் -
பெற்றோர் ,உற்றார், சமூக நிர்ப்பந்தங்களால்..
பெண்- நிற்கப்படுகிறாள்.. பல சமயங்களில்..
குறிப்பாய் கல்யாண மேடைகளில்..

அவளைப் பொருத்தவரை இது சரியான முடிவே..

ஆனாலும் நிச்சயக்கப்பட்டு மணமேடை வரும்
அந்த ' நாற்றம் பிடித்த கறைப்பல்லனுக்கு'
இந்தத் தண்டனை அநாவசியம்..அநீதி..

-----------------

அண்மையில் சென்னையில் மணமகன் தாலி கட்டியவுடன் கழற்றி
தன் தாயையும் அறைந்து அலறிய மணப்பெண் பற்றி படித்தேன்.
விருப்பமில்லையாம்.. இன்னொருவனைக் காதலித்தவளாம்..

மணமகன் வீட்டார் செய்த பாவம் என்ன?

----------------------------------------

ஷீ-நிசியின் ஆழமான விமர்சனம் அழகு..அருமை!

ஆதவா
27-02-2007, 01:59 AM
மிக்க நன்றி.... மஞ்சு மற்றும் இளசு அவர்களுக்கு.... மணமகன் முன்பே மணப்பெண்ணிடம் பேசியிருக்கலாம்...... அவள் மனதை புரிந்து வைத்திருக்கலாம்.... இல்லை என்றால் இந்த கதிதான்.... :)

pradeepkt
27-02-2007, 05:01 AM
ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு வேளை அவை வாசகனின் கற்பனையில் இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டீர்களா என்று தெரியவில்லை. என் கீழ்க்கண்ட விமர்சனம் மணமகனிடம் முன்பே சொல்லிவிடவில்லை என்ற அடிப்படையில் அமைந்தது. தவறெனில் தெரியப் படுத்தவும்.

மணமகன் முன்பே பேசி இருக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். இக்கவிதையில் அவன் அப்பெண்ணை ஒன்றும் கட்டாயப் படுத்தியது போல் தெரியவில்லை. அத்தோடு அவனிடம் இந்தப் பெண் தன் மனதை முழுமையாக வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. அப்படி இருக்க அவனை நாற்றங் கலந்த பிணமெனவும் பொய்யான சிரிப்பு கொண்டவன் எனவும் சொல்ல வைத்தது என்ன?

அத்தோடு ஒரு வேளை அப்பெண்ணே அவனிடம் இக்காதல் குறித்து முன்பே நேரடியாகச் சொல்லி இருக்காவிடில் அப்படித் திருமணத்தன்று தைரியமாக (?!) முடிவு எடுத்தது எவ்விதத்தில் நியாயம்? அப்பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை இருப்பது போன்றே மணமகனுக்கும் ஒரு நியாயமான வாழ்க்கை இருக்கிறது அல்லவா? இதே போல் அவனும் கலியாணத்தன்று பச்சை வண்ணக் காரில் வரும் பெண்ணுடன் ஓடிப் போனால் இந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகும்? அப்போது நாம் இதை ஒரு தைரியமான பேச்சு என்று சொல்லுவோமா?

மிக்க நன்றிங்க..

ஆம்...... அந்த தைரியம் வேண்டும்....

முந்திய நாளே முடிவு எடுக்க முடியாமல் போய்விடும்... எல்லாரும் சம்மதிக்க வைக்கவே பார்ப்பார்கள்.. கல்யாணதினத்தன்று எல்லார் முன்னிலையிலும் காதலனுடன் கைசேர்ந்தால் வாயடைத்துப் பார்ப்பார்கள்..... என்ற எண்ணமாக இருக்கலாம்.....
தப்பா நினைக்காதீங்க... இது வெட்கக்கேடு. இப்படி முந்தைய தினம் தைரியமில்லாமல் திருமணத்தன்று இன்னொருவனின் வாழ்க்கையை நினைக்காது தன்னலம் மட்டும் கருதி ஓடிப் போகிறது ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, மனித ஜாதியிலேயே சேர்த்தியில்லை. இதுக்குத் தைரியம்னு பேர் கொடுக்கிறது கேவலத்திலும் கேவலம்.

மிக்க நன்றி.... மஞ்சு மற்றும் இளசு அவர்களுக்கு.... மணமகன் முன்பே மணப்பெண்ணிடம் பேசியிருக்கலாம்...... அவள் மனதை புரிந்து வைத்திருக்கலாம்.... இல்லை என்றால் இந்த கதிதான்.... :)
அந்தப் பொறுப்பு இருவருக்கும் இல்லையா? அவன் கதியை நினைத்து வருந்துகிறேன். அத்தோடு இந்தப் பெண்ணைப் போன்ற ஒரு ஜந்துவை மணந்திருந்தால் அவன் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று நினைத்து மகிழ்கிறேன்.

ஆதவா
27-02-2007, 05:52 AM
ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு வேளை அவை வாசகனின் கற்பனையில் இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டீர்களா என்று தெரியவில்லை. என் கீழ்க்கண்ட விமர்சனம் மணமகனிடம் முன்பே சொல்லிவிடவில்லை என்ற அடிப்படையில் அமைந்தது. தவறெனில் தெரியப் படுத்தவும்.

மணமகன் முன்பே பேசி இருக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். இக்கவிதையில் அவன் அப்பெண்ணை ஒன்றும் கட்டாயப் படுத்தியது போல் தெரியவில்லை. அத்தோடு அவனிடம் இந்தப் பெண் தன் மனதை முழுமையாக வெளிப்படுத்தியதாகவும் தெரியவில்லை. அப்படி இருக்க அவனை நாற்றங் கலந்த பிணமெனவும் பொய்யான சிரிப்பு கொண்டவன் எனவும் சொல்ல வைத்தது என்ன?

அத்தோடு ஒரு வேளை அப்பெண்ணே அவனிடம் இக்காதல் குறித்து முன்பே நேரடியாகச் சொல்லி இருக்காவிடில் அப்படித் திருமணத்தன்று தைரியமாக (?!) முடிவு எடுத்தது எவ்விதத்தில் நியாயம்? அப்பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை இருப்பது போன்றே மணமகனுக்கும் ஒரு நியாயமான வாழ்க்கை இருக்கிறது அல்லவா? இதே போல் அவனும் கலியாணத்தன்று பச்சை வண்ணக் காரில் வரும் பெண்ணுடன் ஓடிப் போனால் இந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகும்? அப்போது நாம் இதை ஒரு தைரியமான பேச்சு என்று சொல்லுவோமா?

மிக்க நன்றிங்க..

தப்பா நினைக்காதீங்க... இது வெட்கக்கேடு. இப்படி முந்தைய தினம் தைரியமில்லாமல் திருமணத்தன்று இன்னொருவனின் வாழ்க்கையை நினைக்காது தன்னலம் மட்டும் கருதி ஓடிப் போகிறது ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, மனித ஜாதியிலேயே சேர்த்தியில்லை. இதுக்குத் தைரியம்னு பேர் கொடுக்கிறது கேவலத்திலும் கேவலம்.

அந்தப் பொறுப்பு இருவருக்கும் இல்லையா? அவன் கதியை நினைத்து வருந்துகிறேன். அத்தோடு இந்தப் பெண்ணைப் போன்ற ஒரு ஜந்துவை மணந்திருந்தால் அவன் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று நினைத்து மகிழ்கிறேன்.

உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு மிகவும் நன்றி.... இதில் என்னுடைய பதில்கள்..

இக்கவிதை ஒரு வாழ்க்கையின் ஒரு காட்சி. அவ்வளவே... திருமண தினத்திற்கு முன் என்ன நடந்தது அல்லது பின் என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு இங்கு விடையில்லை...
எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அப்பெண்ணை மிகவும் கட்டாயப் படுத்தி சம்மதிக்கவைத்திருக்கலாம்.. காதலனுக்கு சேதி தெரிந்து கல்யாணதினத்தன்று அவளை கூட்டிப் போக வந்திருக்கலாம்.. இங்கே மணமகன் வாழ்க்கை மட்டுமே கேள்விக்குறி.. அவனைப் பற்றி இவள் யோசிக்கவில்லை.. காதல் கண்களை மறைத்துவிட்டது.

இவள் கண்களுக்கு மணமகன் ஏன் அப்படித் தெரிகிறான்?.... விருப்பமில்லாத கணவனாகப் போகிறவனல்லவா? அதனால் கூட இருக்கலாம்.... ஓடிப் போய் கல்யாணம் செய்யும் யுக்தி யாருக்கும் பிடிக்காது. எனினும் இது ஒரு காட்சி.. அக்காட்சியில் விளைந்த கரு.. கற்பனைதான் என்றாலும் எங்காவது ஒரு மூலையில் இம்மாதிரி நடந்திருக்கும்....

அன்புரசிகன்
27-02-2007, 09:59 AM
தப்பா நினைக்காதீங்க... இது வெட்கக்கேடு. இப்படி முந்தைய தினம் தைரியமில்லாமல் திருமணத்தன்று இன்னொருவனின் வாழ்க்கையை நினைக்காது தன்னலம் மட்டும் கருதி ஓடிப் போகிறது ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, மனித ஜாதியிலேயே சேர்த்தியில்லை. இதுக்குத் தைரியம்னு பேர் கொடுக்கிறது கேவலத்திலும் கேவலம்.

அந்தப் பொறுப்பு இருவருக்கும் இல்லையா? அவன் கதியை நினைத்து வருந்துகிறேன். அத்தோடு இந்தப் பெண்ணைப் போன்ற ஒரு ஜந்துவை மணந்திருந்தால் அவன் வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று நினைத்து மகிழ்கிறேன்.

தடித்த எழுத்தில் இருப்பவை...
அவளுக்கு தைரியமில்லாததை சொல்வதிலும் அது அவளின் சாதூர்யத்தனம் என்றும் கருதலாம். அவனின் நிலைக்குக்காரணம் அவளின் பெற்றோர் உண்மையை மறைத்தது. அது அவளின் குற்றமல்ல. ஒருவேளை அவளின் காதல் அவனுக்கு தெரிந்திருந்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தால் அவள் செய்ததில் தப்பேதுமில்லையே. தவிர முன்னோர் தமக்கு சாதகமாக உருவாக்கிய வியாக்கியானங்களை வைத்துக்கொண்டு இளையவர்களின் மனதை புண்ணாக்குவதில் என்ன நியாயம். (மெளனம் சம்மதம் - 1000 பொய்சொல்லி ஒரு திருமணம் நடத்தலாம் போன்றவை) அவள் முந்தைய தினம் மொனமாய் இருந்தது அவளின் இயலாமையாகக்கூட இருக்கலாமே.

இது என்னுடய சிறு கருத்து. அனுபவம் ஏதும் இல்லை.

pradeepkt
27-02-2007, 12:48 PM
நன்றி ஆதவா/அன்பு ரசிகன்,
என் பதிவின் முதலிலேயே விமர்சன நோக்கத்தைச் சொல்லி விட்டேன். ஆதவன் ஒரு நிகழ்ச்சியைக் கவிதை ஆக்கி இருக்கிறார், அது வரைக்கும் சரி. ஆனால் இதைச் சரி என்று மக்கள் நினைத்து விடக் கூடாது என்பதற்காகவே எனது கருத்து ... எதுக்கும் ஒரு :) போட்டுக்கிறேன்.

என் கீழ்க்கண்ட விமர்சனம் மணமகனிடம் முன்பே சொல்லிவிடவில்லை என்ற அடிப்படையில் அமைந்தது. தவறெனில் தெரியப் படுத்தவும்.

என் ஆதங்கம் எல்லாம், இது போல் இரு பாலாரும் நடந்தாலும் ஆண் செய்யும்போது அவனை ஒரு விதமாகவும் பெண்ணென்னும்போது வேறு விதமாகவும் நினைக்கும் நம் மனப்போக்குதான்.

அவளுக்கு தைரியமில்லாததை சொல்வதிலும் அது அவளின் சாதூர்யத்தனம் என்றும் கருதலாம். அவனின் நிலைக்குக்காரணம் அவளின் பெற்றோர் உண்மையை மறைத்தது. அது அவளின் குற்றமல்ல. ஒருவேளை அவளின் காதல் அவனுக்கு தெரிந்திருந்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தால் அவள் செய்ததில் தப்பேதுமில்லையே. தவிர முன்னோர் தமக்கு சாதகமாக உருவாக்கிய வியாக்கியானங்களை வைத்துக்கொண்டு இளையவர்களின் மனதை புண்ணாக்குவதில் என்ன நியாயம். (மெளனம் சம்மதம் - 1000 பொய்சொல்லி ஒரு திருமணம் நடத்தலாம் போன்றவை) அவள் முந்தைய தினம் மொனமாய் இருந்தது அவளின் இயலாமையாகக்கூட இருக்கலாமே.

இது என்னுடய சிறு கருத்து. அனுபவம் ஏதும் இல்லை.

சரிதாங்க. ஆனா, காதலுக்கு முதல் தேவை தைரியம்தான். பெற்றோர் உண்மையை மறைத்திருக்கலாம். அவள் மறைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? முந்தைய தினம் இருந்த இயலாமை அவளது குற்றமே! காதலனைக் கண்ட போது பொங்கி வரும் வீரம் அதை முதலிலேயே கல்யாண மாப்பிள்ளையிடம் சொல்லுவதில் ஏன் வரவில்லை? என்ன தயக்கம் வேண்டிக் கிடக்கிறது? சரி, பெற்றோர் தற்கொலை அது இது என்று மிரட்டி இருந்தாலும் இப்போது மட்டும் செய்ய மாட்டார்களா என்ன? அந்தப் பெண் வெறும் உணர்ச்சிவசப் பட்டதாலேயே இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

இதுவும் என் கருத்துதான்... அனுபவம் ஏதுமில்லை :D

அன்புரசிகன்
28-02-2007, 03:14 AM
காதலுக்கு முதல் தேவை தைரியம்தான். பெற்றோர் உண்மையை மறைத்திருக்கலாம். அவள் மறைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? முந்தைய தினம் இருந்த இயலாமை அவளது குற்றமே! காதலனைக் கண்ட போது பொங்கி வரும் வீரம் அதை முதலிலேயே கல்யாண மாப்பிள்ளையிடம் சொல்லுவதில் ஏன் வரவில்லை?

ஒத்துக்கொள்கிறேன்.

raj6272
28-02-2007, 04:24 AM
கவிதை படிக்கும்போதே ஒரு விஷுவல் பார்த்த மாதிரி எபெக்ட் கொடுத்தது கவிஞரின் பலம், வெல்டன் ஆதவா

poo
28-02-2007, 07:37 AM
முதலில் வாழ்த்துக்கள் ஆதவன்..
கவிதை பக்கத்தில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...
தொடரட்டும் உங்கள் வெற்றிநடை.

*****

முற்றிலும் புதிதான வெள்ளை கவுனோடு....
முற்றிலும் வேறான கலர் கனவுகளோடு...
கரம் இணைத்துவிட்டாள்..கர்த்தரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு!

ஆதவா
28-02-2007, 11:37 AM
நன்றி அனைவருக்கும்..