PDA

View Full Version : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள்



மயூ
20-02-2007, 07:09 AM
http://www.wpc-fr.net/images/articles/vista-vous-etes-pret/windows_vista-1130432490_i_6261_full.jpg (http://www.wpc-fr.net/images/articles/vista-vous-etes-pret/windows_vista-1130432490_i_6261_full.jpg)
சூழலியல் நிபுனர்கள் விஸ்டாவினால் பெருமளவு சூழல் பிரைச்சனைகள் ஏற்படப் போவதாகக் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் விஸ்டாவினால் பல கணனிகள் பயனற்றுப் போய் கழக்கப்பட வேண்டி உள்ளமையாகும்.

விஸ்டாவில் பயன்படும் Encryption முறை பழைய கணனிகளில் பயன்படப் போவதில்லையாம் அத்துடன் விஸ்டாவில் பயன்படும் உயர் திறனுடன் கூடிய வரைகலை இடைமுகப்பு காரணமாகப் பழைய கணனிகளில் விஸ்டாவைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
http://nieuwsblad.typepad.com/photos/uncategorized/ewaste.jpg (http://nieuwsblad.typepad.com/photos/uncategorized/ewaste.jpg)
வணிகத் துறையில் பயன்படும் கணனிகளில் சுமார் அரைவாசிப் பங்கு கணனிகள் இந்த விஸ்டா மாற்றத்தினால் கழிக்க வேண்டி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் சுமார் 10 மில்லியன் கணனிகள் கழிக்கப்பட வேண்டி உள்ளது.

பசுமைப் புரட்சி இயக்கத்தினர் (Green Peace) இந்த முயற்சியின் மூலம் மின்-கழிவுகள் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைக்ராசாப்ட் தான் எதிர்பார்த்தபடி விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 க்கு வணிகத் துறையில் இருந்து பெருமளவு வரவேற்புக் கிடைத்துள்ளதாகச் சொல்லியுள்ளது.

அண்மையில் அப்பிள் கணனிகளுக்கான ஆபீஸ் 2007 பதிப்பு ஆபீஸ் 2008 என்ற பெயருடன் வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது சண்சொலாரிஸ, மற்றும் இன்டெல் ஆக்கிடெக்சரில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ்
20-02-2007, 07:51 AM
நம்ம இந்தியர் இதற்கும் ஒரு வழி கன்டுபிடிக்காமலா பெயிருவார்கள்
பார்ப்பபொம்

சே-தாசன்
20-02-2007, 09:07 AM
நல்ல தகவல் அண்ணா. மேலும் vista பற்றிய தவலை எதிர்பார்க்கிறேன்

sujan1234
17-12-2008, 04:02 PM
விஸ்டா வேலை செய்வதங்கு கணினி செயல்திறன் எவ்வாறு இருக்க வேண்டும்