PDA

View Full Version : முப்பரிமாண மின் பொம்மலாட்ட கிரிக்கெட் வ



v.pitchumani
20-02-2007, 06:01 AM
www.cricinfo.com வலைதளத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் வர்ணனையாளரின் வர்ணனையினை உடனடியாக அதற்கேற்ற அசைவுகளுடன் முப்பரிமாண மின் பொம்மலாட்டமாக மாற்றி படியடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ( simulated Players) நேரடியாக ஒளிபரப்பில் பார்ப்பது போல் மின்பொம்மலாட்ட கிரிக்கெட்டியினை 30-4-0 வினாடிகள் காலதாமதத்தில் வலைதள பொம்மலாட்ட ஒளிபரப்பில் காட்ட ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி வலைதள பொம்மலாட்டமாக வலைதள ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விளையாட்டு அரங்கின் எந்த பக்கத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோமோ அந்த பக்கத்திலிருந்து பார்க்கும்படியாக மென்பொருள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் விளையாடும் வீரர்களை நாம் இன்னார்தான் என கண்டுகொள்ள இயலாதவாறு உள்ளது. இதற்காக நகரும் எழுத்து கட்டத்தில்(scrolling Box) அப்போதைய விளையாட்டு தகவல்கள் உடனடியாக வந்து கொண்டே இருக்கும். இதற்கான மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்ய மேற்படி வலைதளத்தில் வசதியுள்ளது. கணடு மகிழுங்கள்.
---வே.பிச்சுமணி
கூடுதல் தகவலுக்கு. 18.2.07 நாளின் இந்து நாளிதழின் பக்கம் 13 யை பார்க்க.

சே-தாசன்
20-02-2007, 06:39 AM
அருமையான தகவல். முயற்சி தொடரட்டும்.

மனோஜ்
20-02-2007, 06:47 AM
அருமையான இனைய சுட்டி நன்றி நண்பா பதிவிறக்கம் செய்தேன்

praveen
20-02-2007, 09:12 AM
நல்ல தகவல் நண்பரே. கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க இன்னொரு தளம்.

அமரன்
20-02-2007, 10:49 AM
ஆம் நண்பர்களே. சொல்லணுமென எண்ணுகையில் பிச்சுமணி முந்திக்கொண்டு விட்டார்.