PDA

View Full Version : சவத்துணி அவதாரங்களும் பக்த கோடிகளும்..rambal
30-03-2003, 04:52 PM
சவத்துணி அவதாரங்களும் பக்த கோடிகளும்..

சவத்துணிகளில்
விழும் பிம்பங்களிலிருந்து
அவர்கள் அவதரிக்கிறார்கள்...

காட்டு இரைச்சல்
கருவிகளின் உதவியோடு
அருள்வாக்கு தருகிறார்கள்...

புத்தனாகவும்
கிறிஸ்துவாகவும்
தோற்றம் தருகிறார்கள்...

ராமன் மனிதனிலிருந்து
கடவுளானால்
இவர்களும்...

கிறிஸ்து நல்ல மேய்ப்பாளர்
என்றால்
இவர்களும் தான்...

அவர் ஆட்டை மேய்த்தால்
இவர்கள்
மக்கள் உருவில் இருக்கும் மாக்களை...

இப்படியான மாயாபுரி சொர்க்கத்திலிருந்து
எதார்த்த நரகலுக்கு வருகிறார்கள்...
பக்தர்களின் தயவால்...

எதார்த்த நரகத்திற்கு
வந்த பின்னும்
கடவுள் வேஷம் காக்கிறார்கள்...

சாயம் வெளுத்த நரியாய்
குரங்குத்தோல் உரித்த மனிதனாய்
ஒருநாள் ஆகிறார்கள்...

இருந்த போதும்
பக்தர்களின் பக்திக்கு
மட்டும் குறையே இல்லை...

என்ன செய்ய முடியும் அவர்களால்
மனிதத் தோல் உரித்து
வேறு எதுவோ ஆகிவிட்ட பின்னால்...

இப்படித்தான்
சவங்களும் மாக்களுமாய் சேர்ந்து
எதார்த்த நரகத்தை சொர்க்கமாக்கிவிட்டார்கள்...

தமிழ்குமரன்
31-03-2003, 12:48 PM
வாழ்க

madhuraikumaran
31-03-2003, 10:56 PM
உங்கள் கவிதைப் பணி இங்கும் தொடரட்டும் ராம்பால்...

என்றென்றும் உங்கள் ரசிகன்...

kaathalan
01-04-2003, 01:01 AM
பக்ககோடிகளின் பக்திக்கு அளவே இல்லாமல் போய்விட்டது

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒன்று

'பிரேமானந்தனை' சந்திக்க அவரின் பக்ககோடிகள் நீதிமன்றவளாகத்தை நிறைந்து இருந்தார்கலாம்.கவிதையில் பலவற்றை வெளிச்சம் போட்டுகாட்டிவீட்டீர்கள்

பாராட்டுக்கள்,நன்றி

Narathar
02-04-2003, 05:31 AM
பக்ககோடிகளின் பக்திக்கு அளவே இல்லாமல் போய்விட்டது

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒன்று

'பிரேமானந்தனை' சந்திக்க அவரின் பக்ககோடிகள் நீதிமன்றவளாகத்தை நிறைந்து இருந்தார்கலாம்.


கவிதையில் பலவற்றை வெளிச்சம் போட்டுகாட்டிவீட்டீர்கள்

பாராட்டுக்கள்,நன்றிஅப்போதும் அவர் வாயிலிருந்து லிங்கம் எடுத்துக்கொடுத்தாரா இல்லையா?

விசாரித்துச்சொல்லுங்கள்........... நாராயனா... என்னே பக்தி என்னே பக்தி

Nanban
05-11-2003, 01:50 PM
மூட நம்பிக்கைகளுக்கு ஒரு சாட்டையடி.....

திருந்த மனமில்லாத பக்தர்களும், திருந்த விடாத சாமிகளும்.......

ராமின் சாட்டையடி திருத்துமா???

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2003, 02:16 PM
அற்புதம் ராம் அவர்களே,

அழகாய் சொன்னீர்கள், இவர்கள் திருந்துவது எந்நாளோ? தெள்¢ந்த சிந்தனையும், நம்பிக்கையும் அற்ற இடங்களில் தான் இது நடக்கும்.

உண்மையான பக்தியுடன் (கரிசனத்துடன்) எழுதியுள்ளீர். வரும் தலைமுறைகள் நிச்சயம் இதை மாற்றும் என்ற நம்பிக்கையுடன்

madhuraikumaran
05-11-2003, 03:31 PM
இது ராமின் மற்றொரு குறியீட்டுக் கவிதை... முதலில் படித்த போது நானும் அவர் போலிச்சாமிகளையும் பக்த கோடிகளையும் தான் சாடியிருக்கிறார் என நினைத்தேன்.

பின்னாளில் அவர் விளக்கம் சொன்ன பின் தான் முழுதாய்ப் புரிந்தது..

சவத்துணி = வெள்ளைத் துணி = வெள்ளித்திரை

பிம்பங்கள் = நடிகர்கள்

பக்த கோடிகள் = ரசிகர்கள்

திரைக் கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளைச் சாடியிருக்கிறார் ! நல்ல சாட்டையடி !

சொடுக்கிய சாட்டைகள் இன்னமும் காற்றில் முள் நுனியோடு அலைந்திருக்கையில் சொடுக்கிய கைகளைக் காணவில்லை...

மீண்டு(m ) வருமா?... சாட்டையடிகள் ?

Chiru_Thuli
05-11-2003, 03:46 PM
மதுரைக்குமரன் தந்த விளக்கத்திற்குப் பிறகு, திரும்பப் படித்துப் பார்த்தேன். மிக்க அருமை ராம் அவர்களே!

இது போன்ற கவிதைகளப் படித்து விட்டு , அவ்வப்போது நான் எழுதும் சிறு கிறுக்கல்களை நினைக்கும் போது நான் இன்னும் சிறியவனாகிறேன்.

வாழ்த்துக்கள்!

நன்றி மதுரைக்குமரன்.

இளசு
05-11-2003, 08:45 PM
பொதுவாய் நான் செண்ட்டிமெண்ட் பார்ப்பவன் கிடையாது..

.

இருப்பினும் மன்றத்தின் வெள்ளோட்ட முதல் நாளில்

பதிக்கப்பட்ட முதல் இரண்டு கவிதைகளில் ...

ஒன்றில் சவத்துணி வரும்

இன்னொன்றில் பிணம் வரும்...நெருப்பென்றால் வாய் வேகாதுதான்..

இருப்பினும் அன்று எனக்கு ஏற்பட்ட

மனநெருடலை என்னால் தவிர்க்கமுடியவில்லை...இன்று மீண்டும் பார்த்து பழைய நினைவலைகள்...மற்றபடி இது நல்ல கவிதை..

முத்து
05-11-2003, 09:11 PM
அருமையான கவிதை ....

சில நாட்களில் வருவதாய்ச் சொன்ன

ராம்பாலை இன்னமும் காணவில்லை ...

Nanban
10-01-2004, 09:17 AM
விளக்கத்துடன், மீண்டும் படித்தால், வேறு கோணம்......