PDA

View Full Version : உலக மொழிகள்



அமரன்
19-02-2007, 04:31 PM
உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது.
1.திராவிட மொழிகள்:
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,கன்னடம்
2.இந்தோ ஐரோப்பா மொழிகள்
ஆங்கிலம்,யெர்மன்,டச்சு,ஸ்வீடிஷ்
3.ரொமானிய மொழிகள்
இத்தாலி,பிரெஞ்சு,போர்த்துகீசு,ஸ்பானியா
4.இந்தோ இரானிய
ரஷ்யன்,செக்,பல்கேரியா,உக்ரேன்,சமஸ்கிருதம்
5.சீனதிபேத்திய
பர்மா,சீனா,தாய்லாந்து,கொரியா
6.செமிடோ
7.ஆபிரிக்கா மொழிகள்
8.அமெரிக்கா, மேற்கிந்திய மொழிகள்
9.காகேசிய மொழிகள்
10.மலேயா பாலினேசியா மொழிகள்
இன்னும்பல மொழிகள் இருந்தாலும் 5 கோடிக்கு அதிகமான மக்கள் பேசும் மொழிகள் 13.
1.சீன மொழி-100 கோடி
2.ஆங்கிலம்-40 கோடி
3.ரஷ்யன்-22கோடி
4.ஸ்பானியா-20 கோடி
5.இந்தி-16 கோடி
6.ஜப்பானிஷ்-20 கோடி
7.டச்சு-16.5 கோடி
8.வங்காளம்- 10 கோடி
9.போர்த்துகீசு-9 கோடி
10.அரபு- 9 கோடி
11.பிரெஞ்சு-9 கோடி
12.இத்தாலி-6 கோடி
13.தமிழ்- 5-6 கோடி

leomohan
19-02-2007, 04:36 PM
நல்ல பதிப்பு தொடருங்கள்.

ஆனால் இதில் சில குழப்பங்கள் உள்ளன. சில தவறுகளும் உள்ளன.

குறிப்பாக நீங்கள் கன்னடம், தெலுங்கு எடுத்துக் கொண்டால் அவை சமஸ்கிருதத்துடன் ஒன்றுகின்றன.

மேலும் சமஸ்கிருதம் ஈரானிய மொழியாகவோ மத்திய ஐரோப்பா மொழியாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

இது 1853 Max Mueller என்பவர் மொழியின் சில ஒற்றுமைகளை கொண்ட செய்த தவறான ஆய்வால் நிகழ்ந்தவை.

அமரன்
19-02-2007, 04:40 PM
ஆம் மோகன். ஆனாலும் அவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

leomohan
20-02-2007, 04:59 AM
ஆம் மோகன். ஆனாலும் அவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எவை உறுதிப்படுத்தப்படவில்லை?

நீங்கள் இட்ட பட்டியலின் மூலம் என்ன?

இந்திய மொழிகளை பற்றி இதுவரை எந்த இந்தியராவது ஆராய்ச்சி செய்ததுண்டா?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி மொழிகளை, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கலப்புடன் சேர்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் செய்த ஆராய்ச்சியை வைத்துக் கொண்டே நாம் இதை பேசுகிறோம். இது சரியான முடிவை தராது என்பது என் கருத்து.

இன்று தமிழில் நாம் பல நூறு வடமொழி சொற்கள் பயன்படுத்துகிறோம். அதை வைத்து தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து சொன்னால் நாம் ஏற்போமா?

சே-தாசன்
20-02-2007, 06:37 AM
அருமையான தகவல்கள். தொடரட்டும்

ஓவியா
20-02-2007, 06:56 PM
தகவலுக்கு மிக்க நன்றி நக்கீரன்

ஒரு விசயம்

10.மலேயா பாலினேசியா மொழிகள்

மலேய்சியா, இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர், கீல் தாய்லாந்து மற்றும் சில பிலிப்பைன்ஸ் தீவுகல் இந்த நாடுகளில் பகாசா எனப்படும் ஒரு மொழியை (சற்று) வித்தியாசமாக ஆனால் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் பேசுகின்றனர்.

ஒரு குறிப்பு,
உலகத்திலே 3வது அதிக ஜனத்தொகை உல்ல நாடாக இருக்கும் இந்தோனேசியாவின் பாசையே இரண்டாவது அதிகம் பேசும் மொழியாக கருத்துக்கள் கூறுகின்றன.

மன்மதன்
20-02-2007, 07:30 PM
தகவலுக்கு மிக்க நன்றி நக்கீரன்

ஒரு விசயம்

10.மலேயா பாலினேசியா மொழிகள்

மலேய்சியா, இந்தோனேசியா, புருனை, சிங்கப்பூர், கீல், தாய்லாந்து மற்றும் சில பிலிப்பைன்ஸ் தீவுகல் இந்த நாடுகளில் பகாசா எனப்படும் ஒரு மொழியை (சற்று) வித்தியாசமாக ஆனால் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் பேசுகின்றனர்.



ஒரு குறிப்பு,
உலகத்திலே 3வது அதிக ஜனத்தொகை உல்லா நாடாக இருக்கும் இந்தோனேசியாவின் பாசையே இரண்டாவது அதிகம் பேசும் மொழியாக கருத்துக்கள் கூருகின்றன.


கவிஞர் எழுத்துப்பிழை செய்யலாமா??:rolleyes: :rolleyes: நியாயமா??:D :D

leomohan
21-02-2007, 03:42 PM
உலகில் முதலாவதாக பேசப்படும் மொழி ஆங்கிலமா?

ஓவியா
21-02-2007, 08:23 PM
கவிஞர் எழுத்துப்பிழை செய்யலாமா??:rolleyes: :rolleyes: நியாயமா??:D :D

கவிதை என்பதே பொய், அப்படியாயின் கவிஞர் பொய் சொல்லும் பொழுது எழுத்துப் பிழையும் தாராளமாக செய்யலாம்.
சும்மா குறும்புக்கு :D :D


பாரதியண்ணா,
அன்பு தங்கையை மன்னிக்கவும்.

அறிஞர்
21-02-2007, 08:26 PM
தமிழ் மொழியும் இந்த வரிசையில் இருப்பது பெருமையாக உள்ளது...

இந்தி -16 கோடிதானா..

கொரிய மொழி இல்லையே..

விகடன்
19-06-2007, 04:19 PM
வியக்கத்தக்க பதிப்பு அமரன். பலநாட்களாக எந்த மொழி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று சந்தேகமிருந்தது. அதற்கு வடிகாலாய் அமைந்த உங்களின் ஆக்கம் வரவேற்கத்தக்கது.

lolluvathiyar
19-06-2007, 04:33 PM
கனக்கு இடிக்குதே




2.ஆங்கிலம்-40 கோடி ந*ம்ம* ஊரிலேயே 10 கோடி பேரு பேசுவாங்க*ளே
5.இந்தி-16 கோடி (30 கோடிய* தாண்ட*லாம்)