PDA

View Full Version : நற்பண்புக்கதைகள் (கதை-1)



அமரன்
19-02-2007, 12:05 PM
மாணவர்கள் பலர் இருக்கும் ஒரு குருகுலத்தில் குருவானவர் நற்பண்புகளிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாணவன் ஒருவனுக்கு பரிசளிப்பத்து அவன் திறமைக்கு மரியாதை செய்வது வழக்கம். அதுபோல யக்னவாகி எனும் ஒருவரிடம் பரந்த அதிகாரமும் பொன் பொருளுடன் அரசுக்கட்டிலும் இருந்தும்கூட எளிய முறையில் வாழ்ந்த ஜனகன் என்கின்றா மன்னன் குருகுலம் பூண்டான்.அவனது திறமையும் கற்றபடி ஒழுகும் பண்பும் குருவை அவனிடத்தில் அதிக பற்றுக்கொள்ள வைத்தது. இதனால் மற்றைய மாணவர்கள் குருவின் மேல் அதிருப்தி அடைந்தனர். ஒரு முறை எல்லாமாணவர்களும் ஒன்றாக இருந்து குருவின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். திடீரென ஆசிரமத்தைச் சுற்றி தீப்பிடித்துக்கொண்டது. இதனைக்கண்ட மாணவர்கள் கல்வியை விட்டு விட்டு தம் உடமைகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆனால் ஜனகர் மட்டும் தன்னையும் சுற்றத்தையும் ஏன் சகலதையும் மறந்து குருவின் போதனையில் லயித்திருந்தார். தீப்பிளம்புகள் குருவையும் ஜனகரையும் நெருங்கவே இல்லை. இதனைக்கண்ட மற்றய மாண்வர்கள் இது குருவின் திருவிளையாடல் என உணர்ந்தார்கள். தமது தவறை உணர்ந்தார்கள். இவ்வாறு சிறந்த பண்புடைய ஜனகனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசாகத் தந்தார் குரு. ஜனகர் தன் மகள் சீதாதேவியை ராமனுக்கு மணம்முடித்துக் கொடுக்கும்போது அம்மோதிரத்தையும் கொடுத்தார். அம்மோதிரம்தான் பின்னாளில் அனுமாரை சீதாப்பிராட்டிக்கு அடையாளம் காட்டியது.

மயூ
19-02-2007, 01:04 PM
இதெல்லாம் கேட்க நல்லாக இருக்கும்.. நடைமுறைக்குச் சாத்தியமா???
அப்போ தீப்பிடித்து பொசுங்கிய அந்த பச்சிளங் குளந்தைகளின் கதி என்ன?

அமரன்
19-02-2007, 03:19 PM
இதெல்லாம் கேட்க நல்லாக இருக்கும்.. நடைமுறைக்குச் சாத்தியமா???
அப்போ தீப்பிடித்து பொசுங்கிய அந்த பச்சிளங் குளந்தைகளின் கதி என்ன?
நண்பா கரும்பின் சக்கையையும் சேர்த்தா சாப்பிடுகின்றோம். இல்லையே. அதுபோல தேவையானதை எடுத்துக்கொள்ளலாமே.

ஆதவா
19-02-2007, 04:44 PM
அட நான் இங்க எழுதின விமர்சனத்தைக் காணோமே?.......

அருமையா இருக்குங்க நக்கீரன்... குழந்தைகளுக்கான கதையா இருக்கே!! பலே!! கிளைக்கதை பிள்ளைக் கதையாக ஜொலிக்கிறது.

அமரன்
19-02-2007, 04:46 PM
அட நான் இங்க எழுதின விமர்சனத்தைக் காணோமே?.......
எழுதியதை திருடிய அன்பானவன் யார்? இழுத்து வாருங்கள் அவனை மன்றத்துக்கு.

மனோஜ்
20-02-2007, 06:36 AM
இவ்வாறு சிறந்த பண்புடைய ஜனகனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசாகத் தந்தார் குரு. ஜனகர் தன் மகள் சீதாதேவியை ராமனுக்கு மணம்முடித்துக் கொடுக்கும்போது அம்மோதிரத்தையும் கொடுத்தார். அம்மோதிரம்தான் பின்னாளில் அனுமாரை சீதாப்பிராட்டிக்கு அடையாளம் காட்டியது
புதிய தகவல் எனக்கு நன்றி நக்கீரன்

praveen
20-02-2007, 12:25 PM
இன்று இரவு தூங்கு முன் என் குழந்தைக்கு சொல்ல ஒரு கதை கிடைத்தது.

நன்றி.