PDA

View Full Version : நிழல் முகங்கள்



அமரன்
19-02-2007, 11:32 AM
இனியவள் அவள் பெயர். ஆனால் அவளது வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை. அவளது ஊர் கிராமமுமில்லாத நகரமுமில்லாடத இரண்டும் கலந்த கலவை. அங்கு வாழும் மனிதர்களில் சிலர் விவாசாயத்தை நம்பி வாழும் உழவர்கள். இன்னும் சிலர் அத்தகைய விவசாயிகளின் விளைச்சல்களைக்கொண்டு தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர்கள். அத்தகைய கிராமத்தில் இனியவள் தனது இரு பெண்பிள்ளைகளுடன் கால ஓட்டத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றாள். பகலில் அந்த ஊரில் பெயர் சொல்லக்கூடிய நல்லவர்களில் ஒருவரான அறிவுடைநம்பியின் பருத்திக்காட்டில் வேலை செய்யும் இனியவள் இரவில் அவரது பருத்தியாலையில் இயத்திரங்களுடன் இயந்திரமாக சுழன்றுகொண்டிருப்பாள். அவளது கணவனை காலன் கவர்ந்தபின் அவளது இந்த கடின உழைப்பின் காரணமாக ஓலைக்குடிசை ஓட்டு வீடானது. அவளது பெண்பிள்ளைகளின் உடலில் பொழிவும் அவர்களது அறிவில் ஒளியும் கூடியது. அவளது இந்த வளர்ச்சி சிலருக்கு ஆச்சரியமாகவும் இன்னும் சிலருக்கு ஆனந்தமாகவும் பலருக்குப் பொறாமையாகவும் இருந்தது. பொறாமைத்தீ இவளது கற்பையே சுட முனைந்தது. அன்று வழமைபோல பருத்திக்காட்டில் வேலை முடித்து வீடு நோக்கிப் பொய்கொண்டிருக்கும்போது சில கள்ளுண்ட கருப்பு ஆடுகளது வசவுகளுக்கு ஆளானாள். நம்பியின் வயல்காட்டில் பகலும் மனைக்கட்டிலில் இரவும் இவள் வேலை பார்ப்பதாகவும் அதனால்தான் நம்பி கிள்ளிக்கொடுக்கவேண்டிய இவளுக்கு அள்ளிக்கொடுப்பதாவும் சொல்லால் சுட்டார்கள். அச்சுடுசொல்லின் வடுக்களுடன் வீடு வந்த கல்யாணி இரவு வேளைக்குப் போகாது இரவுநேரச்சிந்தனையில் ஆழ்ந்தாள். இப்படி ஊரின் கேவலப் பேச்சுக்கு மத்தியில் வாழ்வதைக்காட்டிலும் சாவதே மேல் என்று நினைத்து இருமகள்களுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தாள். ஆனாலும் அவளது மனத்திரையில் அவளது வளர்ச்சியில் சந்தோசமடையும் சிலரது முகங்கள் பளிச்சிட்டன. இறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள். அதிகாலையில் எழுந்து வழமைபோல பருத்திக்காட்டுக்குப் போனாள்.

ஓவியா
19-02-2007, 01:24 PM
இறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.

அருமையான கருத்து


இந்த சமுதாயத்தில் பேர்போடும் பெண்களின் நிலை பெரும்பாடுதான் போல!!

நன்றி நக்கீரன்

மயூ
19-02-2007, 01:34 PM
ம்... நல்ல ஒரு பக்கக் கதை!!! :)

இளசு
21-04-2007, 09:54 PM
மெச்சவைக்கும் கருத்துள்ள கதை..

வீணர்கள் பேச்சை எட்டி மிதித்து, காறி உமிழ்ந்த நாயகியைப் போற்றுகிறேன்..

நன்றி நரன்!

ஓவியன்
22-04-2007, 04:45 AM
கதையின் முடிவு பலருக்கு வழிகாட்டும்.
நல்லவர்களுக்காகவே வாழ்வோம் நல்லதே செய்வோம்.

மனோஜ்
22-04-2007, 03:24 PM
நல்ல முடிவு நல்லதேரு மாற்றம்
ஆனால் எங்கே படித்த ஞாபகம்

கலையரசி
14-03-2010, 05:23 PM
கெட்டவர்களின் பேச்சைத் துச்சமாக மதித்து எதிர்நீச்சல் போட முடிவு செய்த இனியவளின் முடிவு இனிமையாக இருந்தது.

கீதம்
16-03-2010, 07:40 AM
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா? மூடப்பூச்சிகளுக்காக இனிய வாழ்வை முடிப்பதா? நம்பிக்கையூட்டும் கதையைத் தந்த அமரன் அவர்களுக்குப் பாராட்டுகளும், இத்திரியை மேலெழுப்பி படிக்கத் தந்த கலையரசி அவர்களுக்கு நன்றியும்.

சிவா.ஜி
16-03-2010, 09:11 AM
ஆஹா....பாஸ் நான் மன்றம் வர்றதுக்கு முன்னால எழுதின கதையா....?

வழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு. இனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...

இனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.

வாழ்த்துக்கள் பாஸ்.

ஓவியன்
16-03-2010, 09:17 AM
வழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு.

இனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...

இனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.

ஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...?? :lachen001:

மதி
16-03-2010, 09:20 AM
அண்ணே.. நானும் இப்போ தான் படித்தேன்... நல்ல கருத்துள்ள கதை... அடுத்த கதை எப்போ அமரன்..?

மதி
16-03-2010, 09:21 AM
ஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...?? :lachen001:
இருக்கலாம்.. ருக்கலாம்...க்கலாம்..கலாம்.. லாம்.. ம்ம்ம்ம்ம்ம் :D:D:D:D

aren
17-03-2010, 03:27 AM
பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், நாம்தான் அதை செவி கொடுத்து கேட்கக்கூடாது.

இனியவள் நினைத்தது சரியே.

நல்ல கருத்துள்ள கதை அமரன். நீங்கள் ஏன் இப்பொழுதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை.

xavier_raja
17-03-2010, 01:21 PM
மன்னிக்க வேண்டும், சப்பென்று இருந்தது இந்த கதை.