PDA

View Full Version : இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து



அமரன்
19-02-2007, 11:04 AM
மும்பாயில் மிகவும் பரபரப்பான இடமது. காலை மாலை இரண்டு வேளையும் சத்தம் நிறைந்த இடம். வாகனங்களின் இரைச்சல், தொழிற்சாலை இயந்திர இரைச்சல் என இரைச்சலுக்குமத்தியில் மிகவும் ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தான் வடிவுக்கரசன். அந்த வெளி இரைச்சல்களுடன் வீடினுள் தொலைக்காட்சிப்பெட்டியில் உயர் ஒலியில் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். அவனைவிடப் பத்து வயது இளமையான தங்கை அவன் அறையில் இருந்த கணனியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள். அதிலிருந்தும் சத்தம் வந்துகொண்டிருந்தது. இவற்றுக்குமத்தியில் ஒருவன் தூங்கிக்கொண்டிருக்கின்றான் என்றால் அவனது தூக்கத்தின் தன்மையைக் கூற வேண்டியதில்லை. அந்த நேரத்தில் ஒரு சிறிய இரைச்சலுடன் ஒரு விமானம் இவர்களின் வீட்டின் மேலாகப் போனது. அந்த இரைச்சல் கேட்டதும் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான் பதினொரு வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து மும்பாயில் வாழும் ஈழத்துத் தமிழன் வடிவுக்கரசன்.

மயூ
19-02-2007, 01:06 PM
ம்ஹூம்...
எந்தச் சத்தமும் அவனுக்கு உறைக்காதுங்க.... :)

ஓவியா
19-02-2007, 01:17 PM
எங்கே குண்டு மழை பொழிந்துவிடுமோ என்று ஒரு பயம்.

சில விசயங்கள் நம் மனதில் ஆழமாய் பதிந்து பொதிந்துவிடும்.

நன்றி நக்கீரன்.

அமரன்
19-02-2007, 03:11 PM
எங்கே குண்டு மழை பொழிந்துவிடுமோ என்று ஒரு பயம்.

சில விசயங்கள் நம் மனதில் ஆழமாய் பதிந்து பொதிந்துவிடும்.
ஆம் உண்மைதான். சிறுவயதில் ஏற்பட்ட ஆறாத வடுப் போன்றது இது.

இளசு
21-04-2007, 09:59 PM
விமானம், ஹெலிகாப்டர் மட்டுமல்ல
விழா வெடிச்சத்தம் கூட
சில வடுக்களைக் கீறி ரத்தம் வழிய வைக்கிறதை
சுருக்கமாய்ச் சொன்ன சுருக்கென தைக்கும் கதை..

போர் வன்முறை இல்லா உலகம் என்று மலரும்?

பாராட்டுகள் நரன்!

ஓவியன்
06-05-2007, 11:08 AM
முன்பெல்லாம் ஈழத்தில் எங்கள் காதுகள் மிகக் கூர்மையாக தொழிற்பட்டன, எங்காவது வெகு தூரத்துல் போர் விமானச் சத்தம் கேட்டால் கூட உடனே ஓடி பாதுகாப்பிடங்களை நாடிவிடுவோம். இப்போது வரலாறு திரும்பிவிட்டது, துரத்தி துரத்தி குண்டு வீசியவர்களும் குண்டு வீச்சு விமானங்களைக் கண்டு ஒளியும் காலம் வந்துவிட்டது

அன்புரசிகன்
06-05-2007, 11:15 AM
உண்மை தான் நரன். இப்பொழுதும் சிலவேளை திடுக்கிட்டு நித்திரை விட்டு எழும்பியிருக்கிறேன். (கட்டார் விமான நிலையம் மிக அருகாமையில் உள்ளது)
பாராட்டுக்கள் நரேன்.

மனோஜ்
06-05-2007, 02:05 PM
சுழுலை அருமையாக உணர்த்தும் கதை நரன்

அக்னி
22-05-2007, 05:00 PM
இந்தச் சிறு சிறுகதை, மனதில் யுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பை விரிவாக உணர வைக்கிறது...

அமரன்
23-05-2007, 05:45 PM
இந்தச் சிறு சிறுகதை, மனதில் யுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பை விரிவாக உணர வைக்கிறது...
நன்றி அக்னி. இவ்வடு மாறாத வடுவாக மனக்களில் எழுதபட்ட ஒன்று.

சக்தி
23-05-2007, 06:57 PM
நெஞ்சை தொட்ட கதை. போர்கள் மனிதனை என்றும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்றதில்லை. இதை அனைவரும் அறிவர். இருந்தும் ஏனோ அதை தடுப்பார் யாருமில்லை

அமரன்
24-05-2007, 06:49 AM
நன்றி ரோஜா. போரைத் தடுத்தால் ஆயுதச் சந்தை வீழ்ச்சி கண்டு விடுமே. அதனால்தானோ என்னவோ போர்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சிவா.ஜி
24-05-2007, 10:55 AM
அமரன் எந்த காயமுமே ஏற்ப்பட்ட விணாடியில் தான் வலிக்கும்.வலி மறந்தாலும் வேதனை மறைவதில்லை. ஆனால் எல்லா வேதனைகளையும் ஆற்றும் மருந்து காலம். இப்போது அந்த வேதனையை விவரிக்கும் மனப்பக்குவத்துக்கு வந்து விட்டது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

அமரன்
25-05-2007, 01:10 PM
உண்மைதான் சிவா.G
ஒரு காலத்தில் கேட்டுப் ப்யந்து ஓடியதைப் பற்றி எழுதுமளவுக்கு மனப்பக்குவத்தைத் தந்தது காலமே. உங்க பின்னூட்டத்துக்கு நன்றி.