PDA

View Full Version : இந்தியா ஸ்ரீலங்கா தொடர் முடிவுMathu
17-02-2007, 03:34 PM
2 : 1 என்ற ரீதியில் தொடரை வெற்றி கொண்டிருக்கிறது இந்தியா
வாழ்த்துகள் அனைத்து வீரர்களுக்கும்.

அனைவரும் நன்கு ஆடிநார்கள் பாவம் செவாக் கவலைக்கிடமாக
ஆட்டமிளந்தார் இல்லாவிட்டால் தரமான ஆட்டத்தை பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

யுவராஜ் உலக கோப்பைக்குரிய Fபோம்க்கு வந்திருக்கிறார்.

ஆனாலும் தாதா கை ஓங்கிகொண்டே போகிறது தொடருக்குரிய நாயகனாக தெரிவாகி இருக்கிறாரே. முடியாத நிலையிலும்
நிதானமான 58. இதே வேகத்தை உலக கோப்பையிலும் காட்டடும்.
:rolleyes: :D :rolleyes:

அமரன்
18-02-2007, 05:17 PM
அனைவராலும் விரும்பத்தக்க நேர்த்தியான ஆட்டம் இந்திய வீரர்களது ஆட்டம். உத்தப்பா கங்குலி சிறந்த ஆரம்ப வீரர்கள். கங்குலி அடிபட்ட புலி. பாய்ந்து விளாசுகின்றது.

leomohan
18-02-2007, 05:21 PM
தனிப்பட்டவர்களின் சாதனையை விட இந்தியாவின் வெற்றிதான் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதையே அவர்கள் உலக கோப்பையிலும் செய்து காட்டவேண்டும்.

ஷீ-நிசி
19-02-2007, 03:15 AM
ஆம்! வீரர்கள் அனைவரும் தக்க நேரத்தில் சரியான ஃபார்ம்க்கு வந்திருப்பது மனதிற்கு தெம்பை அளிக்கிறது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா தொடர்ந்து 5 போட்டிகள் (3 இங்கிலாந்து + 2 நியூஸிலாந்து) தோல்வியடைந்திருப்பது நம்மவர்களுக்கு மனதளவில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்திருக்கும்.. ஷேவாக்கின் ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் வேண்டும்.. தாதா தவறுகள் செய்யாமல் விளையாடுகிறார். யுவ்ராஜ் ஃபார்ம்-க்கு வந்தால் பவுலர்களின் நிலை என்னவாகும் என்பது கடந்த போட்டி ஒரு உதாரணம்.. இன்னும் டெண்டுல்கர் ஆட்டம், உத்தப்பாவின் தொடக்கம், ஜாகீர், ஸ்ரீசாந்த் அகர்கர் வேகங்கள் கலக்கினால்.. ஸ்பின் மன்னர்கள் சுழற்றினால் இன்னும் ஒருமுறை 1983 நம் பக்கம் திரும்பும்.... இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

அறிஞர்
19-02-2007, 03:59 PM
ஷீ-நிசியின் கனவுகள் வெற்றியில் முடிய வாழ்த்துக்கள்.

அமரன்
19-02-2007, 04:03 PM
நிஷி. இந்த யுவராஜ் பையன் உள்நாட்டில் கலக்குகின்றமாதிரி அதாவது சுழல் பந்தை எதிக்கொள்வதைப்போல வெளி நாட்டில் அதாவது வேகத்தை எதிர்கொள்வதில்லையே.

ஷீ-நிசி
19-02-2007, 04:06 PM
நிஷி. இந்த யுவராஜ் பையன் உள்நாட்டில் கலக்குகின்றமாதிரி அதாவது சுழல் பந்தை எதிக்கொள்வதைப்போல வெளி நாட்டில் அதாவது வேகத்தை எதிர்கொள்வதில்லையே.

அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லையே. யுவ்ராஜின் பிரச்சினையே ஃபார்மில் இல்லாமல் இருந்ததுதான். இப்பொழுது சரியாகிவிட்டது என்றே எண்ணுகிறேன்..

ஆதவா
19-02-2007, 06:04 PM
நம்மவர்கள் முழுத் திறமை காட்டும் பஷத்தில் கோப்பை நமக்கே!!! அங்கே தானே சிக்கல் இருக்கு

Mathu
19-02-2007, 10:59 PM
நம்மவர்கள் முழுத் திறமை காட்டும் பஷத்தில் கோப்பை நமக்கே!!! அங்கே தானே சிக்கல் இருக்கு

இது கொஞ்சம் பேராசை தான், ;) :D ;)

aren
20-02-2007, 01:37 AM
நம் மக்கள் இந்தியாவில் ஆடும் ஆட்டங்களில் அபாரமாக தங்களுடைய திறமையைக் காட்டுவார்கள், ஆனால் வெளிநாடுகளில் ஆடும் ஆட்டங்களில் அத்தகைய திறமை வெளிப்படுவதில்லை. ஆகையால் இந்தியாவில் பெற்ற வெற்றியைபற்றி பெருமையடைய வேண்டாம்.

இதே ஆட்டத்தை உலகக்கோப்பை நடக்கும் மேற்கு இந்திய தீவுகளில் காட்டட்டும் பார்க்கலாம்.

அனைத்து ஆட்டக்காரர்களும் உத்தப்பா கார்திக் தவிற பல வருடங்களாக இந்திய குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமைகளை காட்டுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
20-02-2007, 02:19 AM
இது கொஞ்சம் பேராசை தான், ;) :D ;)

இது பேராசை அல்ல நண்பரே.... ஒவ்வொரு குடிமகனுக்கும் இது சாதாரண ஆசைதான்...

அமரன்
20-02-2007, 10:46 AM
இது பேராசை அல்ல நண்பரே.... ஒவ்வொரு குடிமகனுக்கும் இது சாதாரண ஆசைதான்
அதுமட்டுமல்ல. இது சாத்தியமான ஆசையும்கூட. உலக அணிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் பலரைக்கொண்டுள்ளது இந்திய அணி. அவர்கள் அனைவரும் முழுத்திறமையைக் வெளிக்காட்டினால் அவர்கள்முன் எவரும் நிற்கமுடியாது. அத்துடன் நிரந்தரத் திறமைமிக்க பந்துவீச்சாளர்கள் கண்டறியப்படவேண்டியவர்கள்.

ஓவியா
20-02-2007, 07:08 PM
இந்தியா வெற்றி பெற்றால் சந்தோஷம்தான்

எனக்கும் ஆசையாதான் இருக்கு.
மோகன் டிரீட்டுக்கு ரெடியா ஆகுங்கள்.

மன்மதன்
20-02-2007, 07:21 PM
இந்த நேரம் பார்த்து எந்த விளம்பர கம்பெனியும் வீரர்களை புக் செய்ய கூடாது ஆண்டவா..:D அப்புறம் அதுவே போதும், கப் வேணாம் என முடிவெடுத்துடுவார்களே !! :D

Mathu
21-02-2007, 11:00 AM
இது பேராசை அல்ல நண்பரே.... ஒவ்வொரு குடிமகனுக்கும் இது சாதாரண ஆசைதான்...

உங்கள் ஆதங்கம் புரிகிறது ஷீ-நிசி... ஆனாலும் என்ன பண்ணுவது,
தாதாவை பார்க்கவில்லையா நோகடித்தால் வீரம்பிறக்கிறது......

:angry: :angry: :)

அமரன்
21-02-2007, 01:55 PM
இந்த நேரம் பார்த்து எந்த விளம்பர கம்பெனியும் வீரர்களை புக் செய்ய கூடாது ஆண்டவா..:D அப்புறம் அதுவே போதும், கப் வேணாம் என முடிவெடுத்துடுவார்களே

கங்குலியின் விளம்பரப்படங்கள் வெளிவராத்தால்தான் விளாசுகிறாரோ?

அறிஞர்
21-02-2007, 01:56 PM
இந்த நேரம் பார்த்து எந்த விளம்பர கம்பெனியும் வீரர்களை புக் செய்ய கூடாது ஆண்டவா..:D அப்புறம் அதுவே போதும், கப் வேணாம் என முடிவெடுத்துடுவார்களே !! :D
இதற்கு ஒரு... கட்டுபாடு கொண்டுவரவேண்டும்....

ஷீ-நிசி
21-02-2007, 04:35 PM
கட்டுப்பாடு எல்லாம் வராது. வீரர்களின் விளம்பர வருமானத்தில் ஒரு பகுதி போர்டுக்கும் செல்லாமலா இருக்கும்? பின் எப்படி அவர்கள் கட்டுப்பாடு விதிப்பார்கள்?

அறிஞர்
21-02-2007, 04:43 PM
கட்டுப்பாடு எல்லாம் வராது. வீரர்களின் விளம்பர வருமானத்தில் ஒரு பகுதி போர்டுக்கும் செல்லாமலா இருக்கும்? பின் எப்படி அவர்கள் கட்டுப்பாடு விதிப்பார்கள்?
முன்பே அவர்களுக்கு நல்ல வருமானம் வருதே....... இப்படி வேறு சைடில் ஒரு வருமானமா.. :confused: :confused:

ஓவியன்
22-02-2007, 05:43 AM
இந்த தொடரில் கங்குலியின் மட்டை பட்டொளி வீசியது என்றால் மிகையாகாது. ஆனால் இந்த வெற்றியை வைத்துக் கொண்டு இந்திய அணி மீண்டும் வெற்றியின் பாதையில் திரும்பி விட்டது என்று சொல்ல முடியாது.

இதிலே இலங்கை அணியில் பலமான பந்து வீச்சாளர்கள் (முரளிதரன், சமிந்தா வாஸ்) கலந்து கொள்ளவில்லை என்பதனை நாம் கவனத்திலே கொண்டே ஆக வேண்டும்.

அத்துடன் இது சொந்த மண்ணிலே ஈட்டிய வெற்றி - வெளி நாடுகளிலும் இது தொடரட்டும் நான் இந்தியா மீண்டும் வலுவான அணியாகிவிட்டது என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

மயூ
22-02-2007, 06:20 AM
இந்தியாவீற்கு வாழ்த்துக்ள்....

முடிந்திருந்தால் விமான நிலையத்தில் வீரத் திலகம் இட்டு அனுப்பி இருப்பேன்.. என்ன செய்வது அங்கே பாதுகாப்பைக் காரணம் காட்டி விட மாட்டார்களே!

அமரன்
22-02-2007, 11:49 AM
இந்த தொடரில் கங்குலியின் மட்டை பட்டொளி வீசியது என்றால் மிகையாகாது. ஆனால் இந்த வெற்றியை வைத்துக் கொண்டு இந்திய அணி மீண்டும் வெற்றியின் பாதையில் திரும்பி விட்டது என்று சொல்ல முடியாது.

இதிலே இலங்கை அணியில் பலமான பந்து வீச்சாளர்கள் (முரளிதரன், சமிந்தா வாஸ்) கலந்து கொள்ளவில்லை என்பதனை நாம் கவனத்திலே கொண்டே ஆக வேண்டும்.

அத்துடன் இது சொந்த மண்ணிலே ஈட்டிய வெற்றி - வெளி நாடுகளிலும் இது தொடரட்டும் நான் இந்தியா மீண்டும் வலுவான அணியாகிவிட்டது என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

உண்மைதான். இருந்தாலும் முரளீதரனின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சுலபமாக எதிர்கொள்வார்கள். அதிலும் கங்குலி;திராவிட்,சச்சின் போன்றோர் கில்லாடிகள். யுவராஜும் சளைத்தவரல்ல.

மதுரகன்
23-02-2007, 04:48 PM
உண்மைதான். இருந்தாலும் முரளீதரனின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சுலபமாக எதிர்கொள்வார்கள். அதிலும் கங்குலி;திராவிட்,சச்சின் போன்றோர் கில்லாடிகள். யுவராஜும் சளைத்தவரல்ல.

அதைத்தான் நானும் கூறவந்தேன் முரளிதரன் மேலை நாடுகளுக்கு கலக்கமளித்தாலும் இந்தியர்களுக்கு தண்ணி பட்ட பாடு சச்சின் தொடக்கம் நேற்று வந்த தோனி வரை விளாசுவார்கள்...
வாஸ் இல்லை என்றாலும் வரும்போது இலங்கை காப்டன் மகேல சொன்னதை கவனிக்கவும் வாஸ் முரளி இல்லாமலே வென்றுவிடுவோம் என மலிங்கவை புகழந்தனர் மலிங்க அடிவாங்கியதும் பழையபடி அவர்கள் இல்லை என்கிறார்கள்...
என்ன கதை இது...

அறிஞர்
23-02-2007, 04:55 PM

புதியவர்களை ஊக்கப்படுத்துவது, பிறகு பின் வாங்குவது. இது மாதிரியான தகவல்கள் சகஜம் தான்.

aren
24-02-2007, 06:38 AM
முரளிதரன் ஷார்ஜா போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 7 for 30 பத்து ஓவர்களில் எடுத்தது நம் மக்களுக்கு மறந்துவிட்டது போலிருக்கிறது. அந்த மாட்சில் டெண்டுல்கர், திராவிட், கங்குலி, அசாருதீன் போன்ற திறமைசாலிகள் ஆடினார்கள் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன். ஆகையால் முரளியை தவறுதலாக குறைவாக எடைபோடவேண்டாம்.

இந்தயா இருக்கும் குரூப்பில்தான் இலங்கையும் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
24-02-2007, 01:58 PM
இந்தயா இருக்கும் குரூப்பில்தான் இலங்கையும் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி வணக்கம்
ஆரென்
இருவரும் வெற்றி பெறுவார்கள் தானே....