PDA

View Full Version : உரிமையுடன் வம்பிழு - பாகம்2lenram80
17-02-2007, 02:41 PM
நீ செந்தமிழ் நாடு எனச் சொல்லும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!
உன் தந்தையைக் காணும் போதினிலே
ஒரு கோபம் பிறக்குது நுனி மூக்கினிலே!
------------------------------------
அடிப் போடி! நீ இல்லையென்றால் வேறொருத்தி!
அதற்காக,
நரைக்கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிரையென பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!
------------------------------------
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!
அய்யோ! என்னவள் என்னருகில் வந்துவிட்டாள்!
------------------------------------
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
ஆம்! ஒரே அணியில் என் மனைவி, என் மாமியார், என் கொழுந்தியாள்!
-----------------------------------------
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு!

எந்த பெண்ணிடம் வள்ளுவன் திட்டு வாங்கினானோ?
இப்படி ஒரு குறளை எழுத!!
------------------------------------------
தெளிந்த நெற்றி!
தெளிவான கண்கள்!

கூரான புருவம்!
தேரான உருவம்!

செய்து வைத்த மூக்கு!
வன்முறை செய்யாத நாக்கு!

மெல்லின முகம்!
வல்லின நகம்!

கொஞ்சம் பொறு!
இவையெல்லாம் உன்னருகிலுள்ள உன் நண்பியிடம் உள்ளவை!
எதைப் பார்த்து உன்னிடம் நான் ஏமாந்தேன்?
பலநாள் முயன்றும் விடை கிடைக்காத கேள்வி இது!
-------------------------------------------
ஓடுகிறேன் விரட்டுகிறது! விடாமல் துரத்துகிறது!
ரெண்டு கால், ரெண்டு கை, ரெண்டு கண்
என எண்ணிக்கை சரியாக இருந்தாலும்
எல்லா உறுப்புகளும் இடம் மாறி
அகோரமாய் இருந்தது அந்த அதிசய மிருகம்!
என்ன சொல்ல சொல்ல வேண்டிக்கிடக்கிறது?
என் திருமணத்திற்கு முந்தைய நாள் நான் கண்ட கனவு இது!
----------------------------------------------

அட, என்ன காளியம்மன் ஆலயத்தை விட்டு வெளியில் வந்து ருத்ர தாண்டவம் போடுகிறது?
ஓ! என் பொண்டாட்டி தான் வீட்டுக்கு வெளியில் நிற்கிறாளோ!
--------------------------------------------

(சிவன் கோயிலில்) கணவன்: சனிஸ்வரர் பேர்ல ஒரு அட்சனை பண்ணுங்கோ!
அர்ச்சகர்: ஓ! உங்க வொய்ஃப் பேர்ல அட்சனை பண்ணவா? சரி!
------------------------------------

ஆதவா
17-02-2007, 02:50 PM
எடுத்துக்காட்டுக் கவிதைகளுடன் அசத்திய லெனினுக்கு எனது பாராட்டுக்கள்..

கவிதைகளை இம்மாதிரி பயன்படுத்துவது என்னைப் பொருத்தவரை சரியே என்று நினைக்கிறேன். மன்றத்தினர் என்ன சொல்கிறார்கள்?

சில நகைச்சுவையாகவும் இருக்கிறது....

மனோஜ்
17-02-2007, 03:46 PM
இந்த சூத்திரம் நல்லா இருக்கே லெனின்
கவிதை கருத்து
இது அருமைதான் ஆதவா

ஓவியா
17-02-2007, 05:32 PM
ரசனையை ரசித்தேன்

வாழ்க நகைச்சுவை சிந்தனை


ஆமா உங்களுக்கு பெண்கள் ஏதேனும் தீங்கு செய்தார்கலா?? இப்படி போட்டு வாங்கறீங்கலேபா. பாவம்பா அவங்க