PDA

View Full Version : தொலைந்த இடத்தில்



ஆதவா
17-02-2007, 02:19 PM
விழுந்து விட்டோம் என
எழுந்திடாதா இருக்கிறோம்?
தொலைத்து விட்டோம் என
துலாவாதா இருக்கிறோம்?
விழுந்த இடத்தில் துலைத்திருப்போம்
தொலைத்த இடத்தில் விழுந்திருப்போம்..

ஓவியா
17-02-2007, 05:38 PM
ஆதவா இந்த கவிதை பல வகையில் பல விசயத்தை ஒப்பிட்டு பார்க்கலாம். எல்லொருக்கும் பொருந்தும் ஒரு குட்டி கவிதை.

ஞானக்கண் திறக்க ஒரு கவிதை
பாராட்டுகிறேன்

ஆதவா
17-02-2007, 06:12 PM
ஆதவா இந்த கவிதை பல வகையில் பல விசயத்தை ஒப்பிட்டு பார்க்கலாம். எல்லொருக்கும் பொருந்தும் ஒரு குட்டி கவிதை.

ஞானக்கண் திறக்க ஒரு கவிதை
பாராட்டுகிறேன்

எல்லாம் உங்க பாக்கியம் தான்...:)

ஷீ-நிசி
19-02-2007, 02:47 AM
திடீரென்று உண்டான கவிதை போல் உள்ளதே ஆதவா.. நல்லதொரு கருத்துக்களை அடக்கின கவிதை..

ஆதவா
19-02-2007, 09:54 AM
ஆமாம் ஷீ! தீடீர்தான்.... மிக்க நன்றி..

அமரன்
19-02-2007, 11:36 AM
ஆமாம் ஷீ! தீடீர்தான்.... மிக்க நன்றி
திடீர் மாவு திடீர் மசாலா மாதிரி திடீர்க் கவி. ஆனாம் முன்னிரண்டில் இல்லாத சத்தும் சுவையும் பின்னுள்ளதில். மேலோட்டமாகப் படித்தால் கிறுக்கல். ஆழ்ந்து படித்தால் இது ஒரு வாழ்வின் படிக்கல். வாழ்த்துக்கள் பல ஆதவா.

மதுரகன்
19-02-2007, 04:21 PM
விழுந்த இடத்தில் துலைத்திருப்போம்
தொலைத்த இடத்தில் விழுந்திருப்போம்

சிறப்பான கவிதை ஆதவா உங்கள் கவிதைகளின் அடுத்த பரிமாணம் தென்படுகின்றது இதில்..

மன்றத்திற்கு வரும் நாட்கள் குறைவாக இருப்பதால் படிக்கவே நேரம் சரியாக உள்ளது...

விமர்சனம் முழுமையாக எழுதமுடியாமைக்கு ஒரு மன்னிப்பு...

ஆதவா
19-02-2007, 05:05 PM
மிக்க நன்றி