PDA

View Full Version : சாகரன் அண்ணாவுக்கு கவியஞ்சலி



பிச்சி
17-02-2007, 02:05 PM
பூசி மெழுகப் பட்ட அழகு
நெருப்புக் கனலுக்குள்
தண்மை வாய்ந்த துளிகளை
இட்டு அணைக்கிறாயே
தேவலோகத்து அற்ப மானிடனே!

கசந்து போன மாலையில்
அமர்ந்து கொண்டு
நாற்றங் கமழும் பூக்களின்
மத்திய இடைவெளியில்
கோரப் பற்கள் தெறிக்க
சிரிக்கிறாய்; இங்கொரு
ஈர உயிரை எடுத்து விட்டு..

உதடுகளின் அலையில்
குருட்டு பாஷை போட்டு
வெடித்துப் போன காயங்களுடன்
உறவாடும் நீசர்களுக்கு மத்தியில்
தடாகத் தாமரையாய்
பரந்து விரிந்து
மலர்ந்த ஒரு புஷ்பத்தை மட்டும்
உருவிக்கொண்டாய்
பார்வையில் நரம்புகளின்றி..

சாகிறேன் என்று
எந்த குயிலாவது பாடுமா?
செவிட்டுத் தனமான உனக்கு
கேட்டதா புரியாத ராகங்கள்?
சாகரனைத் துலைத்துவிட்டாய் பூமியில்
துளிகூட அர்த்தமின்றி..

காதுவழி நெருப்பு
பாய்ந்ததும்
கண்களில் நீர்த்துளிகள் கோர்க்கிறது
ஈரம் உன் நெஞ்சில்
அப்பியிருந்தால்
ஈனச் செயல் செய்திருப்பாயா?

பூக்களில் உள்ளம் சமைத்த
நேர்த்தியான மஞ்சள் முகத்தில்
இரத்தமே உயிரெனத் தூண்டும்
பொட்டு வைத்து
வண்ண சேலைகளின் அணிவகுப்பில்
வண்டுகளும் காய்ந்து போகும்
அண்ணிக்கு (சாகரன் அண்ணாவின் மனைவி)
அலங்காரக் கெடுதி செய்து
கொலைகாரனானாய்...

நெருப்பில் கொதிக்க வைத்த
இதயத்தைக் கொண்ட உனக்கு
எங்களின் எச்சரிக்கைகள்

தவிழ்ந்து வரும் குழந்தையைத்
தட்டிவிட்டு கொன்றாய்
விடிந்து வரும் ஒரு பகலை
குத்திக் குத்தி தொளைத்தாய்
கோரங்களின் அதிகரிப்பில்
எங்கள் ஆக்கங்களே
உன்னை சபிக்கும்
சாகரன் மட்டும் மீண்டும் வந்தால்
உன் வாழ்வு எம்மிடமிருந்து தப்பிக்கும்...

அழுதவிழிகளுடன்
பிச்சி///////

ஓவியா
17-02-2007, 05:45 PM
பூக்களில் உள்ளம் சமைத்த
நேர்த்தியான மஞ்சள் முகத்தில்
இரத்தமே உயிரெனத் தூண்டும்
பொட்டு வைத்து
வண்ண சேலைகளின் அணிவகுப்பில்
வண்டுகளும் காய்ந்து போகும்
அண்ணிக்கு (சாகரன் அண்ணாவின் மனைவி)
அலங்காரக் கெடுதி செய்து
கொலைகாரனானாய்...

சிந்தனை சிற்ப்பியாய் நீ செதுக்கிய வரிகள், அழகிருந்தும் ரசிக்க முடியவில்லையே. கொடுமைடா.

கவிதை சிறப்பாக உல்லது பிச்சி. நன்றி

அழுதவிழிகளுக்கு ஆதரவாய் இருவிழிகள்.

பரஞ்சோதி
18-02-2007, 05:09 AM
சகோதரிகளின் கவியஞ்சலிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.

ராஜா
18-02-2007, 05:35 AM
ஆமாம் பரம்ஸ்..!

பெண்கள் அற்புதமானவர்கள்.. இன்பமோ துன்பமோ எவ்வித உணர்வையும் உடனடியாக வெளிப்படுத்தி விடுவார்கள்.. எவ்வித நடிப்புமின்றி..

மனோஜ்
18-02-2007, 06:28 AM
பிச்சி ஆவர்களே கண்ணீரை சேமியூங்கள் இன்னும் எத்தனை நம்மவர்கள் இருக்கிறார்கள் ஆறுதலுடன் இழப்பை ஈடுகட்ட முடியாது தான்