PDA

View Full Version : கவிதை கணிதம்



மீனாகுமார்
17-02-2007, 10:45 AM
கணித கவிதை

நம் இன்றைய மக்களின் அறியாமைக்கும், நம் பழங்கால அறிவொளிக்கும், இப்பக்கம் ஒரு சான்று. இது போல் புதையுண்டு கிடக்கிறது எண்ணிலடங்காச் சான்றுகள்.

பொதுப்பணி பொறியியல் (எத்தனை பேருக்கு இது Civil Engineering என்று தெரியும் ?), கட்டிடக்கலை ( Structural Engineerin ), கட்டுமானக்கலை ( Architectural Engineering ), நவீன இயற்கணிதம் ( Modern Algebra ) போன்று பல "பெயர்"களிட்டு ( அதற்கு அவர்கள் patent வாங்கி) நாமும் அவர்கள் சொன்னதைக் கற்றிருப்பது ஞாபகமிருக்கும்.

கொடி கட்டிப் பறக்கும் இன்றைய நவீன அறிவியலின் ஆணி வேர் பிதாகரஸ் தேற்றம் ( Pythogorous theorem ). ஞாபகமிருக்கிறதா ?

கீழே உள்ள கவிதையைப் படியும்:



"..............................................

..............................................



ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக்

கூறதாக்கி

கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில்

பாதிசேர்த்தால்

வருவது கர்ணந்தானே......

..............................................

.............................................."

இயற்றியவர் : தமிழ் புலவன் என்று மட்டுமே தெரியும். ஆனால் இதற்க்குச் சமமான தத்துவத்தை பின்னால் ஒருவர் கூறி நானு(மு)ம் ஏற்றுக் கொண்டவர் பிதாகரஸ்.

காலம்: தெரியவில்லை. ஓட்டுச் சுவடியில் கிடைத்தது.


விளக்கம்:

ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக் கூறதாக்கி கூறிலே ஒன்றுதள்ளி :

நீளத்தின் 8 ல் 7 பகுதி

குன்றத்தில் பாதிசேர்த்தால் வருவது கர்ணந்தானே :

உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணம்.


பிதாகரஸ் தேற்றம்:

கர்ணத்தின் வர்க்கம் -- அடிப்பக்கத்தின் வர்க்கம் + குத்துயரத்தின் வர்க்கம்.

இது போன்று அறிவியலில் வரும் "பால்வீதி;" பற்றி முன்பே "வெள்ளிவீதி" என்று பாடி வெள்ளிவீதியார் என்றே பெயர் பெற்றவர் பற்றி தெரியுமா ? "தனிஊசல் தத்துவம்" ( Theory of Simple Pendulum ), கண்ணாடி ஊடகத்தில் ஒளி ஊடுருவாது என்ற தத்துவம், "எந்திர லாபம்" ( Mechanical Advantage ) போன்ற நவீன இயற்பியல் தத்துவங்கள்

எல்லாம் நம் சங்க காலப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

நன்றி: கன்னதாசன், மதுரை, கருத்து தினபூமி தீபாவளி மலர் 1998 ல் வெளியானது.

Gurudev
17-02-2007, 11:55 AM
அருமை! அருமை! இப்படியானவற்றை நிறையவே தாருங்கள்

அறிஞர்
17-02-2007, 12:49 PM
புதிய தகவலாக இருக்கிறது எனக்கு.. நன்றி மீனாக்குமார்.

மற்ற நண்பர்களும். தங்களுக்கு தெரிந்த கணித கவிதைகளை இங்கு கொடுங்கள்..

ஆதவா
17-02-2007, 12:52 PM
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டுக்
கூறதாக்கி
கூறிலே ஒன்றுதள்ளி குன்றத்தில்
பாதிசேர்த்தால்
வருவது கர்ணந்தானே......

தனியாக இதன் விளக்கம் யாருக்காவது தெரிகிறதா?,, நம் பழங்காலத்து புலவர்கள் பெரிய இவர்களாட்டம் எழுதி வைத்து பிரயோஜன என்ன? இன்று தேற்றம் என்றால் பிதாகரஸ் என்ற நிலமைக்கு போய்விட்டது.. புலமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாலும் பொதிக்கப்பட்ட பொருள் விளங்காமல் போனதனால் அது யாருக்கும் தெரியாமலே போய்விட்டது... இன்னும் பல மருத்துவ நூல்கள் தமிழிலுண்டு... இன்னமும் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். யாருக்கும் தெரியாத வண்ணம் எழுதி இவர்கள் சம்பாதித்தது என்ன?...

எடுத்துக்காட்டிய மீனாக்குமாருக்கு நன்றி...

மனோஜ்
17-02-2007, 04:11 PM
ஒரு கவிதையில் இத்தனை மர்மங்கள் விளக்கங்கள் நன்று
வெளியிட்டமைக்கு நன்றி மீனாக்குமார்

ஓவியா
17-02-2007, 05:34 PM
அட அறியா விசய்மதான்

நன்றி மீனாகுமார்,

அருமையான பதிவுதான். தொடருங்கல்

pradeepkt
19-02-2007, 04:39 AM
இதைப் பற்றி வெகுநாட்களுக்கு முன்பு மன்றத்தில் விவாதித்த நினைவு இருக்கிறது. நல்ல தகவல்.

அமரன்
19-02-2007, 04:05 PM
மிகவும் புதியதாக இருக்கின்றது. காற்றுவாக்கில் கூட கேள்விப்பட இல்லை. நன்றி ஐயா நன்றி.

அரசன்
23-04-2007, 01:02 PM
நம் தமிழ் இலக்கியங்களில் அறிவியல், விஞ்ஞானம், மெய்ஞானம் போன்றவைகள் பல அறிவியல் ஆரய்ச்சிகள் கூறுமுன்பே நம் தமிழ் இலக்கியங்களில் கூற்ப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது போன்ற தங்களது படைப்புகளை தொடர்ந்து வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இன்னும் நம் தமிழில் கூறப்பட்டுள்ள பல அரிய தகவலுடன் பதிப்பை தொடருங்கள். வாழ்த்துக்கள்!

lolluvathiyar
23-04-2007, 02:45 PM
நண்றி மீனாகுமார்,
நமது தமிழ் மொழியில் பல வின்ஞான தகவல்
பொதிந்து இருக்கு.
ஆனால் அந்த தமிழ் பாமர மக்களுக்கு புரியாமல்
போய்விடவே, அவை திருடபட்டு எளிமை படுத்தி
பிறகு நகக்கே கற்பிக்க படுகிறது.
காலம் மாறிவிட்டது,
இனி உலகமயம் நோக்கி போவதால் இதை பற்றி விவாதம் பன்னுவதில் பயன் இல்லை

ஆனால், அறிஞர்கள் பண்டிதர்களை வைத்து இன்னும் நல்ல ஆராய்ச்சி பண்ணினால்
இன்னும் கண்டுபிடிக்க முடியாத பல விசயங்கள் நமக்கு கிடைக்கும்

தமிழ் மொழி மட்டுமல்ல, இந்தியவில் உள்ள பழைய காவியங்களை, கோவிகள்
வரலாறு மொழி ஆர்வலர்களை மட்டும் வைத்து பார்க்காமல், வின்ஞானிகளையும்
வைத்து பார்த்தால், பல புதிய விசயம் கிடைக்கும்

காவியங்கள் மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள சில
பழக்க வழக்கங்களை, வெறும் மூட நம்பிக்கை என்று பார்க்காமல்
அதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் பல அறிவியல் விசயங்கள் கிடைக்கும்

ஏ.கா
நளவென்பாவில் நளன் அடுப்புக்கு தீ பத்தாமலே சமைக்க தெரிந்தவன்
என்ற கூறபட்டிருகிறது.
நளவென்பாவை யாப்பிழக்கனம் அறிந்த வின்ஞானிகளை கொண்டு
ஆறாய்ந்தால், எரிபொருள் தட்டுபாட்டுக்கு ஏதவது வழி பிறக்கும்.

ஓவியா
24-04-2007, 03:39 AM
நல்ல கருத்துக்கள் வாத்தியார் ஐய்யா. நன்றி