PDA

View Full Version : சானியா-பெங்களூர் ஓபன்



அறிஞர்
16-02-2007, 04:32 PM
பெங்களூரில் சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை டடியானா போட்செக்கை 3-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சானியா மிர்சா.

கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்.

மனோஜ்
16-02-2007, 05:39 PM
இந்தியாவில் நடந்தால் கன்டிப்பாக நம் நாட்டவர் ஜெயிப்பது நிச்சம்

அமரன்
17-02-2007, 09:08 AM
சானியா சிறந்த வீராங்கனை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும் வெளிநாடுகளில் ஆடும் திறன் குறைவடைகின்றது. சொந்த நாட்டில் ஜொலி ஜொலிக்கின்றார்.

ராஜா
17-02-2007, 03:33 PM
நான் சானியாவைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய சாதனைகளையும் உதாசீனம் செய்யவில்லை.

ஆனால் நீங்கள் அனைவரும் இந்திய வீராங்கனை என்ற பற்றோடு ரசிகர் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்.

ஆனால் நான் விமர்சகர் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.

நெருக்கடியான நேரங்களில் இரட்டைத் தவறு செய்வதில் இருந்து அவர் இன்னும் மேம்படவே இல்லை.

கிடைத்தே ஆகவேண்டிய புள்ளிகளைப் பெறும் நேரத்தில் தேவையற்ற ஆக்ரோஷம் காட்டி பந்தை எல்லை தாண்டி அடிப்பதையும் குறைத்துக் கொள்ளவில்லை.

எதிராளி வலுவாக இருக்கும்போது தாக்குதல் முறையை மாற்றிப் பார்ப்பது ஒரு கலை.. திறமை. ஆனால் அந்த வகையிலும் அவர் செயல்திறன் கவலை அளிப்பதாகவே உள்ளது.

போட்டி நீண்ட நேரம் நடந்தால் அதற்கேற்ப உடல்திறனை சோர்வின்றி வைத்துக் கொள்வது இன்னொரு முக்கிய அம்சம்.
ஆனால் இவர் இருக்கின்ற வலுவை முதல் செட்டிலேயே காட்டிவிட்டு அடுத்த செட்டுகளில் அல்லாடுகிறார்.

இதுபோன்ற குறைபாடுகளில் அன்றிருந்த சானியா மாதிரிதான் இன்றும் இருக்கிறார். கொஞ்சம் கூட முன்னேறவில்லை.

அதனால்தான் சொல்கிறேன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது என்பது மிகக் கடினமான ஒன்று என்று.

கால் இறுதி போதும், அரை இறுதி வந்தது அதிசயம்.. ஹைதராபாத்தில் உலகப் பட்டம் வென்றார் என்று எல்லாம் திருப்தி பட என் மனம் மறுக்கிறது.

கொஞ்சம் விளம்பரங்களை ஒதுக்கிவிட்டு முழுமூச்சாக உழைத்து ஏன் சிகரங்களை இந்த வாராது வந்த மாமணி எட்டக்கூடாது என்று என் சிற்றறிவு கேள்வி எழுப்புகிறது.