PDA

View Full Version : அடிபடும் ஆஸ்திரேலியா

அறிஞர்
16-02-2007, 12:47 PM
உலக கோப்பைக்கு முன் நடைபெறும் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி தடுமாறுகிறது.

முன்பு இங்கிலாந்திடம் கோப்பையை இழந்தது.

இப்பொழுது.... சாப்பல்-ஹேட்லி கோப்பைக்கான போட்டியில் நியூசிலாந்திடம் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

ஆஸ்திரேலியா 148 (49.3 ஓவர்)
நியூசிலாந்து 149 (27 ஓவர், விக்கெட் இழப்பின்றி)

மயூ
16-02-2007, 12:52 PM
உலகக் கோப்பைக்கு முன்பு உலகின் முன்னால் நாடகம் ஆடுகிறார்களோ???
இவர்களை நம்ப முடியாது.. கடைசியில் போய் பின்னி எடுத்து விடலாம்...

அறிஞர்
16-02-2007, 12:57 PM
பார்க்கலாம்.. யாரு யாரை பின்னப்போறான்னு...

ஆதவா
16-02-2007, 01:43 PM
அறிஞரே இந்த போட்டியில் முக்கிய நபர்கள் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..........

அறிஞர்
16-02-2007, 01:48 PM
இருந்தாலும் உண்மையான அணியும் தடுமாறும் என்றே தோன்றுகிறது...

ஆதவா
16-02-2007, 01:51 PM
இருந்தாலும் உண்மையான அணியும் தடுமாறும் என்றே தோன்றுகிறது...

அது யானைக்கும் அடி சறுக்கும் என்பதாக......

நம்மவர்கள் விழுந்தால் பாதாளம்
அவர்களுக்கோ அது வெறும் குழிதான்.... சீக்கிரமே எழுந்துவிடுவார்கள்...

(என்னதான் இந்தியா விளையாடும் போது ஒரு உணர்வோடு நான் பார்த்தாலும் ஆஸ்திரேலியா ஒரு அருமையான அணி என்பதை மறுக்க முடியாதே!!! களத்தில் அவர்களின் விளையாட்டுத் திறமையைப் பார்த்து எல்லாரும் சொக்க வேண்டும்.... நம்மவர்கள் வெட்க வேண்டும்/)

அறிஞர்
16-02-2007, 04:29 PM

நம்மவர்கள் உலக கோப்பையில் அது போல் சொக்க வைப்பார்களா.... :confused: :confused:

Mathu
16-02-2007, 04:31 PM
சில காலமாகவே இவர்கள் ஆட்டம்காண்கிறார்கள் ஆனாலும் இவர்களை நம்ப முடியாது.
;) :D ;)

அறிஞர்
16-02-2007, 04:32 PM
சில காலமாகவே இவர்கள் ஆட்டம்காண்கிறார்கள் ஆனாலும் இவர்களை நம்ப முடியாது.
;) :D ;)
என்ன பண்ணுவது.. இது போல ஏமாற்று வேலை காட்டி... உலக கோப்பையில் தனி பலத்துடன் இறங்கி வெற்றி காண்பவர்கள்...

Mathu
16-02-2007, 04:46 PM
என்ன பண்ணுவது.. இது போல ஏமாற்று வேலை காட்டி... உலக கோப்பையில் தனி பலத்துடன் இறங்கி வெற்றி காண்பவர்கள்...

பார்க்கலாம் இந்த முறையாவது இவர்களை யாராவது அடக்கி வைப்பார்களா என்று.

சொந்த மண்ணில் மேற்குஇந்தியர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புவோம், தென்ஆபிரிக்கா எகிறும் தரையில் நன்கு ஆடலாம்.
:p :rolleyes: :p

அறிஞர்
16-02-2007, 04:48 PM
பார்க்கலாம் இந்த முறையாவது இவர்களை யாராவது அடக்கி வைப்பார்களா என்று.

சொந்த மண்ணில் மேற்குஇந்தியர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புவோம், தென்ஆபிரிக்கா எகிறும் தரையில் நன்கு ஆடலாம்.
:p :rolleyes: :p
என்னுடைய ஆதரவு.. சொந்த மண்ணிற்கு தான்...

மேற்கு இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு அடி கொடுக்கும் என நம்புவோம்.

leomohan
16-02-2007, 04:55 PM
ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து பலமாக இருக்கிறது. இது நமக்கு நல்ல விஷயம் தான். நான் இந்தியாவுக்கு தான் ஓட்டுப்போட்டிருக்கிறேன்.

அமரன்
16-02-2007, 06:12 PM
அறிஞரே இந்த போட்டியில் முக்கிய நபர்கள் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..........
ஆம். இது அவர்களின் சித்து விளையாட்டு. அவர்கள் பல்வீனமாக இருக்கின்றார்கள் என்று மற்றவர்கள் அசந்திருக்க வீறுகொண்டு எழுந்து வெற்றி வாகை சூடுவதுக்கான ஒரு நாடகம். பதுங்கிப் பாய்வார்கள் என நினைக்கின்றேன்.

ஆதவா
16-02-2007, 06:39 PM
ஆம். இது அவர்களின் சித்து விளையாட்டு. அவர்கள் பல்வீனமாக இருக்கின்றார்கள் என்று மற்றவர்கள் அசந்திருக்க வீறுகொண்டு எழுந்து வெற்றி வாகை சூடுவதுக்கான ஒரு நாடகம். பதுங்கிப் பாய்வார்கள் என நினைக்கின்றேன்.

எனக்கும் அப்படி ஒரு யோசனைதான்

அறிஞர்
16-02-2007, 06:57 PM
ஆம். இது அவர்களின் சித்து விளையாட்டு. அவர்கள் பல்வீனமாக இருக்கின்றார்கள் என்று மற்றவர்கள் அசந்திருக்க வீறுகொண்டு எழுந்து வெற்றி வாகை சூடுவதுக்கான ஒரு நாடகம். பதுங்கிப் பாய்வார்கள் என நினைக்கின்றேன்.
பதுங்கி.. பதுங்கி.. ஒரேடியா பதுங்கி போயிடாம இருந்தா சரிதான்.

அறிஞர்
16-02-2007, 06:57 PM
ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து பலமாக இருக்கிறது. இது நமக்கு நல்ல விஷயம் தான். நான் இந்தியாவுக்கு தான் ஓட்டுப்போட்டிருக்கிறேன்.
தேசப்பற்று மோகனை விட மாட்டேங்குது....

leomohan
17-02-2007, 06:13 AM
தேசப்பற்று மோகனை விட மாட்டேங்குது....

ஆமாம். அது என்னவோ உண்மை தான். ஒவ்வொரு உலக கோப்பையும் அவர்களே வெல்லவேண்டும் என்ற கனவு கண்டு பிறகு நிதர்சனத்திற்கு வரும் போது நெஞ்சு வலிக்கிறது. அவர்கள் காசு வாங்கிக்கொண்டு பெண்டாட்டி பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

மதுரகன்
19-02-2007, 04:26 PM
சொந்த மண்ணில் மேற்குஇந்தியர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புவோம், தென்ஆபிரிக்கா எகிறும் தரையில் நன்கு ஆடலாம்.

எனது கருத்தும் அதுவே...

இந்த முறை அரையிறுதிக்கு வரப்போவது...

எனது கருத்து

1.அவுஸ்திரேலியா
2.மேற்கிந்தியதீவுகள்
3.தென்னாபிரிக்கா
4.இந்தியா அல்லது இலங்கை அல்லது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா பெரும்பாலும் மேற்கிந்தியா அல்லது தென்னாபிரிக்காவால் வெளியேற்றப்படும்...

ஓவியன்
22-02-2007, 06:45 AM
நான் உங்கள் கருத்துக்களுடன் வேறுபடுகின்றேன் - உலகக் கோப்பை என்றவுடன் அவுஸ்திரேலியர்கள் பிசாசுகள் போல விளையாடத் தொடங்கி விடுவார்கள் (இதற்கு பொன்ரிங் மற்றும் கில்கிறிஸ்ட் நல்ல உதாரணங்கள்) , இது மற்றைய எந்த அணியினரிடமும் இல்லாத ஒன்று. இந்த தடவையும் அவுஸ்திரேலியா பலமான ஒரு அணியாகவே உலகக் கோப்பையில் வலம் அரும் என்பது என் கணிப்பு.

ஷீ-நிசி
22-02-2007, 06:57 AM
ஆம். இது அவர்களின் சித்து விளையாட்டு. அவர்கள் பல்வீனமாக இருக்கின்றார்கள் என்று மற்றவர்கள் அசந்திருக்க வீறுகொண்டு எழுந்து வெற்றி வாகை சூடுவதுக்கான ஒரு நாடகம். பதுங்கிப் பாய்வார்கள் என நினைக்கின்றேன்.

ஆஸ்திரேலியா ஜெயிச்சாலும் ஓஹோ என்கிறீர்கள், தோற்றாலும் விட்டுக்கொடுத்தார்கள் என்கிறீர்கள்... நியூஸிலாந்தின் திறமையை மதிக்கவே மாட்டீர்களா?

ஆஸ்திரேலியாவில் முக்கியமான ஆட்கள் இல்லையாம்?

யாரது? கில்கிறிஸ்ட், ரிக்கிபாண்டிங், பிரெட் லீ..

கவனியுங்கள்.. கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா 330 , 340 மேல்

அதிகமான ஸ்கோர் எடுத்தும்.. தோற்றார்கள்.. .

அவர்கள் போலிங்கில் பிரச்சினையுள்ளது... ஒருவேளை கில்கிறிஸ்ட், ரிக்கிபாண்டிங், இருந்து 400 க்கு போல் எடுத்தாலும், அதையும் சேஸ் செய்த அணி தெ.ஆப்ரிக்கா... பவுலிங்கில் மெக்ராத் இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதில் இல்லாத ஒரே ஆள் பிரெட் லீ.. அவர் இருந்தும் எத்தனையோ பேட்ஸ்மேன்கள் அவரை விளாசியிருக்கிறார்கள்.. ஆஸ்திரேலியாவின் பெர்ஃபார்மன்ஸ் குறைந்துள்ளது. இதை அந்த அணியினரே அறிந்துள்ளார்கள்.. அவர்கள் பலமிழந்துள்ளார்கள். மற்ற அணியினர் இவர்களின் தோல்வியால் பலம்கொண்டு காண்கிறார்கள்... ஆஸ்திரேலியா மீண்டு வரட்டும்.. அவர்கள் திறமையான அணிதான். ஆனால் இன்று அவர்கள் திறமை குறைந்து காணப்படுகிறது.. இதற்கு அவர்களின் தந்திரம், சித்து விளையாட்டு என்றெல்லாம் மறுபெயரிடாதீர்கள்.....

அமரன்
22-02-2007, 11:43 AM
முதலில் ஆஸ்திரேலியாவின் ஆட்சி விழவேண்டும் என்பதுதான் எனது அவா. ஒருவரே ஆதிக்கம் செலுத்தினால் சுவாரசியம் குறைந்துவிடும் அல்லவா? நியூசிலாந்தின் திறமையைக் குறைத்து மதிப்பிடவில்லை.

அமரன்
02-03-2007, 06:33 PM
அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பொண்டிங், `ஏன் முடியாது.அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களும் சிறப்பானவர்கள். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று பதிலளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலிய அணி மீது தவறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன. முழுப் பலத்துடன் அணி ஆடாவிட்டால் இதுபோன்ற விமர்சனங்கள் எழத்தான் செய்யும். ஆனால், அந்தப் போட்டிகளில் அணியில் 6,7 முன்னணி வீரர்கள் இல்லாதது பற்றி யாரும் பெரிதாக குறிப்பிடவில்லை.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மிகப் பெரிய போட்டியாகும்.இந்தப் போட்டியில் திறமையை காட்டவில்லை என்றால், மற்ற போட்டிகளில் சிறப்பாக ஆடி பிரயோஜனம் கிடையாது. அவுஸ்திரேலிய அணிக்கு என்று எப்போதுமே தனித்துவம் உண்டு.ஆனால், இப்போது அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற கணிப்பில் இருந்து விலகியிருப்பது போல் தெரியும். ஆனால், மேற்கிந்தியாவில் நாங்கள் ஆடத் தொடங்கியதும் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று நீங்களே சொல்வீர்கள். கிண்ணத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அறிஞரே கவனித்தீர்களா பொண்டிங்கின் பேட்டியை. இப்போ என்ன சொல்றீங்க.

மன்மதன்
02-03-2007, 06:40 PM
வெறும் பேட்டியை வைத்து எதுவும் கூறமுடியாது. அனைத்து கேப்டன்களும் சொல்றதுதானே.. ஆட்டம் ஆரம்பித்தால்தான் தெரியும் நண்பா..

அறிஞர்
02-03-2007, 06:43 PM
ஆனால், மேற்கிந்தியாவில் நாங்கள் ஆடத் தொடங்கியதும் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று நீங்களே சொல்வீர்கள். கிண்ணத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அறிஞரே கவனித்தீர்களா பொண்டிங்கின் பேட்டியை. இப்போ என்ன சொல்றீங்க.
ஆடுவோர் ஆடட்டும்... பார்க்கத்தானே போகிறோம்.. அரையிறுதி வரை ஆஸ்திரேலியா வர வாய்ப்புண்டு.....

அரையிறுதியில் மோதும் அணி பொறுத்துதான்...... சொல்ல முடியும்.

அமரன்
02-03-2007, 06:44 PM
வெறும் பேட்டியை வைத்து எதுவும் கூறமுடியாது. அனைத்து கேப்டன்களும் சொல்றதுதானே.. ஆட்டம் ஆரம்பித்தால்தான் தெரியும் நண்பா

உண்மைதான் ஆனால் ஆஸ்திரேலியர்கள் சொல்வீரர்கள் இல்லை. அவர்கள் செயல் வீரர்களாச்சே.

அறிஞர்
02-03-2007, 06:44 PM
வெறும் பேட்டியை வைத்து எதுவும் கூறமுடியாது. அனைத்து கேப்டன்களும் சொல்றதுதானே.. ஆட்டம் ஆரம்பித்தால்தான் தெரியும் நண்பா..
ரொம்ப சரி..
பிட்ச்...
அன்றைக்கு வீரர்களின் நிலை...
ஒரு அணியை ஆதரிக்கும் அம்பையர்கள்.....
எதிர்பாராத.. எல்பிடபிள்யூ...
என பல....
ஆட்டத்தை மாற்றும்