PDA

View Full Version : தினம் ஒரு தளம்ஷீ-நிசி
16-02-2007, 05:14 AM
நண்பர்களே!

நாம் தினம் ஒரு உபயோகமான தளத்தைப் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்...

(நன்றி: தினமலர்)


மூன்றாம் கண் என்ற பெயருடன் தான் பார்த்த காட்சிகளை படமாக்கி விருந்தளித்துள்ளார் நாராயணன் கண்ணன். தென் கொரியாவிலிருந்து இவர் தனது போட்டோக்களை தமிழ் விளக்கங்களுடன் இன்டர் நெட்டில் வெளியிட்டு வருகிறார். இந்தியாவிலேயே தமிழைக் காண்பது அரிதாக இருக்கும் நிலையில் ஹாங்காங் கடை வாசலில் நல்வரவு என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தை வெளியிட்டிருக்கிறார். தென் கொரியா, பிரிட்டன், சீனா என்று தான் சென்ற பகுதிகளில் உள்ள படங்களை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

நம்மூரில் வைக்கோல் போர் பார்த்திருப்போம். ஐரோப்பாவில் வைக்கோல் போர் எப்படியிருக்கும் என்பதற்கும் படம் வெளியிட்டுள்ளார். மேகத்தை துளைத்த சூரிய ஒளி, விண்ணில் மிதக்கும் வெண் பஞ்சு மேகப் பொதி என்று ஏராளமான படங்கள்.பார்க்க:

http://photo-view.blogspot.com/

ஷீ-நிசி
16-02-2007, 05:18 AM
ஹாலிவுட் நூலகர்களுக்கான தளம்

சினிமாவைப் பற்றி தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் அதிகமான விளம்பரங்களும், தகவல்களும் இதழ்களிலும் "டிவி'களிலும் வருவதைப் பார்த்திருக் கிறோம்.


ஆனால் இவற்றையெல்லாம் முறைப்படுத்தி ஆவணமாக தொகுத்து எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆக்கப்படும் முயற்சி பெரிய அளவில் தொடங்கப் படவில்லை.

சினிமாத் தகவல்களை நுலகமாக்க இன்டர்நெட் நல்ல வழி. ஹாலிவுட் சினிமா நூலகர்களுக்கான வெப்சைட் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு படங்களைப் பற்றிய தகவல்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், செய்தி, தயாரிப்பு தகவல்களும் பார்க்க கிடைக்கின்றன.

http://www.hollywoodlibrarian.com/

மயூ
16-02-2007, 10:22 AM
நன்றி ஷீ... தொடருங்கள்...

சுபன்
16-02-2007, 03:57 PM
தொடருங்கள் ஷீ-நிஷி!!

ஆதவா
16-02-2007, 07:46 PM
கொடுங்க ஷீ!!! பயனுள்ளதாக இருக்கும்...

அறிஞர்
16-02-2007, 07:54 PM
கண்ணன் என்பவர் பற்றி இணைய தளங்களில் பார்த்துள்ளேன்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரே பனித்தூளின் குவியல்தான்.. பக்கத்தில் உள்ள ஏரிகள் உறைந்துவிட்டன... ஆற்றின் 3/4 பாகம் ஐஸ்கட்டிகள் தான்.

நானும் கண்ட படங்களை சேர்த்துக்கொடுக்கலாம் என எண்ணுகிரேன்.

தைவானில் சீன.... கலாச்சார படங்கள் அருமையாக இருக்கும்.

அமரன்
17-02-2007, 08:53 AM
அருமை.அருமை. இரண்டு தகவல்கள் மட்டுமல்ல உமது முயற்சியும்தான் சகோதரியே.

ஆதவா
17-02-2007, 09:01 AM
அருமை.அருமை. இரண்டு தகவல்கள் மட்டுமல்ல உமது முயற்சியும்தான் சகோதரியே.

அவர் சகோதரி அல்ல நக்கீரரே! அவர் பெயர் அற்புதராஜ்.. புனைப் பெயர்தான் ஷீ-நிசி

அமரன்
17-02-2007, 09:05 AM
மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பனே. ஆதவா உமது தகவலுக்கு நன்றி. இனி அனைவரையும் நட்புடன் அழைப்பதே சிறந்தது என நினைக்கின்றேன்.

blogthirudan
18-02-2007, 08:37 AM
நக்கீரரே... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !

இது உங்களுக்கும் பொருந்தும். ஒத்துக்கொள்கிறீரா?

ஷீ-நிசி
19-02-2007, 03:54 AM
3. குழந்தைகளுக்கான படங்கள் புத்தகம்

குழந்தைகள் பொதுவாக படங்களைப் பார்த்து பாடங் களை கற்றுக் கொள்வது வழக்கம். எழுத்துக்களை படிப்பதற்கு முன்னரே அவர்கள் படங்களை புரிந்து கொள்கின்றனர். அதை ரசிக்கின்றனர். கற்பனைத் திறனை வளர்ப்பதோடு அவர்களுக்கு பிடித்தமான வகையில் விஷயங்களை புரியவைக்க எளிய வழி இது.

படங்களுடன் கூடிய குழந்தைகளுக்கான புத்தகங்கள் பற்றிய தகவல்களை இத்தளம் வழங்குகிறது: கணிதம், அறிவியல், சமூகம், இசை, கலை, விடுமுறை, கதைகள், "சிடி', படப்புத்தக பட்டியல் என்று ஏராளமான விஷயங்களை கொண்டிருக்கிறது இத்தளம்.

http://childrenspicturebooks.info/

leomohan
19-02-2007, 04:45 AM
கண்ணன் என்பவர் பற்றி இணைய தளங்களில் பார்த்துள்ளேன்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரே பனித்தூளின் குவியல்தான்.. பக்கத்தில் உள்ள ஏரிகள் உறைந்துவிட்டன... ஆற்றின் 3/4 பாகம் ஐஸ்கட்டிகள் தான்.

நானும் கண்ட படங்களை சேர்த்துக்கொடுக்கலாம் என எண்ணுகிரேன்.

தைவானில் சீன.... கலாச்சார படங்கள் அருமையாக இருக்கும்.

சீக்கிரம் கொடுங்க. குளிராம பாக்கறோம்.

:)

ஷீ-நிசி
19-02-2007, 04:36 PM
04. இந்த விலங்குகளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

விலங்குகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியும். ஆனால் இந்த வெப்சைட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகளை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது. ஏதாவது ஒன்றைப் பார்த்திருந்தால் கூட இன்னொன்றை எங்குமே பார்த்திருக்க முடியாது.

இரட்டைத் தலை ஆமை, இரட்டைத் தலை பாம்பு, மனிதன் போல் இரண்டு கால்களுடன் நடக்கும் நாய், ஓர் இறகு கூட இல்லாத கோழிகள், புலி உருவத்தில் சிங்கம் என்று ஏராளமான வித்தியாச விலங்குகள் இங்கு காணக்கிடைக்கின்றன.

விளையாட்டு விலங்குகள், வித்தியாசமான விலங்குகள், வீரிய ரக விலங்குகள், உருவ வேறுபாடு கொண்ட விலங்குகள் என்று பல்வேறு தலைப்புகளில் விலங்கு படங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விலங்குகள் பற்றி ஆர்வம் உடையவர்கள் மற்றும் மாணவர்கள் இத்தளத்தை பார்வையிடலாம்.

முகவரி: http://www.oddanimals.com/

அமரன்
19-02-2007, 04:54 PM
ஆகா காணற்கரிய படங்கள். நன்றி.

ஷீ-நிசி
20-02-2007, 03:07 PM
05 இப்படியும் படிக்க வைக்கலாமே!

பொதுமக்களிடம் படிக்கும் பழக்கம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறு என்று முன்னேறவில்லை. அதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் முழுமையான படிப்பறிவு இல்லாமை ஆகியன.

அமெரிக்காவில் ஒரு தன்னார்வ அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள மக்களை படிக்க வைக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இதனால் சினிமாவில் கூட, படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, சப்டைட்டில் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறது. தமிழ் படம் என்றால் தமிழிலேயே சப்டைட்டில், இந்தி படம் என்றால் இந்தியிலேயே சப்டைட்டில் என்பதுதான் இந்நிறுவனத்தின் கொள்கை. "சேம் லாங்குவேஜ் சப்டைட்டிலிங்' எனும் இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இப்போது இந்தியா போன்ற நாடுகளில் பலன் அளிக்கத் தொடங்கியிருக்கிறது என்று அந்நிறுவனம் கூறுகிறது:

http://www.planetread.com

அறிஞர்
20-02-2007, 03:12 PM
குழந்தைகள் புத்தகம் எல்லாம் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் போல..

அமரன்
20-02-2007, 04:28 PM
பொதுமக்களிடம் படிக்கும் பழக்கம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறு என்று முன்னேறவில்லை. அதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் முழுமையான படிப்பறிவு இல்லாமை ஆகியன
நம்மவர்கள் பலர் நீண்டதூரப் பயணங்களின் போது பாட்டுக்கேட்பதையும், தூரப்பேரூந்துகளில் திரைப்படம் பார்ப்பதிலுமே நாட்டம் கொள்கின்றனர். ஆனால் மேற்கத்தையர் அதிகம் பேர் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாசிப்பதையே விரும்பிச் செய்கின்றனர். நம்மவர்களுக்குப் பொருத்தமான தளம். பார்த்துப் பயனடைகின்றேன். தகவலுக்கு நன்றி.

ஷீ-நிசி
21-02-2007, 04:42 PM
06. தொலைதூரக் கல்விக்கு ஒரு வெப்சைட்

படித்தவுடன் வேலைக்கு சென்றுவிடும் இளைஞர் களின் மேற்படிப்புக்கு உதவியாக இருப்பது தொலை தூரக் கல்வித் திட்டம்தான். சிலர், சேர்ந்துள்ள வேலைக்கு ஏற்ப தங்கள் தகுதியையும், திறமையையும் உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதற்கும் தொலைதுரக்கல்வி உதவுகிறது.

சர்வதேச அளவில் தொலைதூரக்கல்வி பற்றிய அறிமுகத்துக்கு ஒரு வெப்சைட் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில், இந்தியா உட்பட வெளிநாடுகளில் இயங்கும் தொலைதுரக் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

http://www.distanceonline.com

leomohan
21-02-2007, 04:43 PM
கலக்கறீங்க அற்புதராஜ். நடக்கட்டும்.

ஷீ-நிசி
21-02-2007, 04:44 PM
நன்றி மோகன் சார்...

அறிஞர்
21-02-2007, 05:54 PM
சுவையான தளங்கள்.. இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை..

மனோஜ்
22-02-2007, 10:06 AM
ஷீ நிசி ஒவ்வெறு சுட்டியையும் பார்த்தேன் அருமையான தலங்கள் மிக்க நன்றி

ஷீ-நிசி
22-02-2007, 10:18 AM
நன்றி அறிஞர் மற்றும் மனோ

ஷீ-நிசி
22-02-2007, 05:12 PM
07 உயர்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஐ.நா.,

மாதிரி அகாடமி கூட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் நியூ ஜெர்சி நகரில் கூட விருக்கிறது. அங்கு செல்ல முடியாத மாணவர்கள் இந்த வெப்சைட்டில் அது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்

இந்த கூட்டத்தில் ஐ.நா.,வைப் போன்ற மாதிரி கூட்டம் நடத்தப்படும். மாணவர்களின் யோசனைகள் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு ஐ.நா., சபைக்கே அனுப்பி வைக்கப்படும். தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்படும்.

http://www.academymodelun.org

அறிஞர்
22-02-2007, 05:31 PM
உயர்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஐ.நா.,

மாதிரி அகாடமி கூட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் நியூ ஜெர்சி நகரில் கூட விருக்கிறது. அங்கு செல்ல முடியாத மாணவர்கள் இந்த வெப்சைட்டில் அது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்

இந்த கூட்டத்தில் ஐ.நா.,வைப் போன்ற மாதிரி கூட்டம் நடத்தப்படும். மாணவர்களின் யோசனைகள் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு ஐ.நா., சபைக்கே அனுப்பி வைக்கப்படும். தலைமைக் குழுவால் தேர்வு செய்யப்படும்.

http://www.academymodelun.org (http://www.academymodelun.org) இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே செல்ல முடியும் என எண்ணுகிறேன்.

ஷீ-நிசி
22-02-2007, 05:34 PM
08. இப்படி ஒரு நல்ல தளம்

குழந்தைகளுக்கு புரியும் படி விளக்குவதற்கு, வார்த்தைகளைக் காட்டிலும் படங்கள் நன்கு உதவும். துறைவாரியாக படங்களை சேகரித்து அவற்றின் பாகங்களை குறித்து, புரியும்படி விளக்குகிறது ஒரு வெப் சைட் முகவரி:

தாவரங்கள், விலங்குகள், மனித உடல், இசைக்கருவிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் என்று அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடியவற்றை இத்தளம் தொகுத்துள்ளது அருமை.

12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இத்தளம் மிகவும் உதவும். பயன்படுத்திக் கொள்ளலாமே!

http://www.infovisual.info

ஷீ-நிசி
23-02-2007, 04:25 PM
09. சர்வதேச அறிவியல் கவுன்சில்

உலக அளவில் அறிவியல் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் நிறுவனம் சர்வதேச அறிவியல் கவுன்சில். உதாரணமாக, அமெரிக்காவுக்கு வர விரும்பும் விஞ்ஞானிகளுக்கு உள்ள விசா கட்டுப்பாடு

உள்ளிட்ட சர்வதேச பொது விஷயங்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகளுக்கான வேலைவாய்ப்பு, எதிர்கால திட்டங்கள், தனி நபர் சாதனைகள், இயற்கை சீற்றங்கள் என்று ஏராளமான தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் உறுப்பினர் களுக்கு தனித் தகவல் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

http://www.icsu.org/

ஆதவா
23-02-2007, 04:28 PM
04. இந்த விலங்குகளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

விலங்குகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியும். ஆனால் இந்த வெப்சைட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகளை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது. ஏதாவது ஒன்றைப் பார்த்திருந்தால் கூட இன்னொன்றை எங்குமே பார்த்திருக்க முடியாது.

இரட்டைத் தலை ஆமை, இரட்டைத் தலை பாம்பு, மனிதன் போல் இரண்டு கால்களுடன் நடக்கும் நாய், ஓர் இறகு கூட இல்லாத கோழிகள், புலி உருவத்தில் சிங்கம் என்று ஏராளமான வித்தியாச விலங்குகள் இங்கு காணக்கிடைக்கின்றன.

விளையாட்டு விலங்குகள், வித்தியாசமான விலங்குகள், வீரிய ரக விலங்குகள், உருவ வேறுபாடு கொண்ட விலங்குகள் என்று பல்வேறு தலைப்புகளில் விலங்கு படங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விலங்குகள் பற்றி ஆர்வம் உடையவர்கள் மற்றும் மாணவர்கள் இத்தளத்தை பார்வையிடலாம்.

முகவரி: http://www.oddanimals.com/

இது உண்மைதானா? அல்லது போட்டாஷாப் வேலையா?

leomohan
23-02-2007, 04:32 PM
எல்லாம் டமாசு ஆதவா.

:)

ஷீ-நிசி
23-02-2007, 04:35 PM
இது உண்மைதானா? அல்லது போட்டாஷாப் வேலையா?


எனக்கே அந்த சந்தேகம் வந்தது.. ஆனால் அதில் போட்டோஷாப் வேலைகளும் உள்ளது... நிஜமான வித்தியாசமான படங்களும் உள்ளன..

மனோஜ்
24-02-2007, 09:58 AM
முகவரி: http://www.oddanimals.com/நிஜமான வித்தியாசமான போட்டோஷாப் வேலைகள்;) :rolleyes:

ஷீ-நிசி
24-02-2007, 03:47 PM
10. அமெரிக்காவில் இப்படி ஒரு வெப்சைட்

அமெரிக்காவில் பாலியல் வன்முறை அதிகரித்து வரு கிறது. இக்குற்றங்களுக்காக ஏராளமானோர் மீது புகார்கள் வருகின்றன. சிலர் அதில் தண்டிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு குடியேறுவோர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் யாராவது, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை வெப்சைட்டில் பார்த்துக் கொள்ள முடியும். இதனால் அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ள முடியும். மேலும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் இன்னொரு இடத்துக்கு சென்றால் கூட, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவர் செய்த குற்றத்தை இமெயில் மூலமும் இந்த வெப்சைட் அனுப்பி விடுகிறது. இதற்காக அமெரிக்க மக்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த தளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்வதுதான்.

http://www.familywatchdog.us

ஷீ-நிசி
25-02-2007, 01:30 PM
11. சட்டங்களை முழுமையாக படிக்க

வழக்கறிஞர்கள் ஆனா லும் சரி, குறிப்பிட்ட சட்டங்கள் நேரடியாக சம்பந்தம் உள்ள பொது மக்கள் ஆனாலும் சரி, புதிதாக கொண்டு வரப்பட்ட சட்ட வரைவை முழுமையாக படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் உடனுக்குடன் இத்தளத்தில் அப்டேட் செய்யப்படுகின்றன. இதனால் அச்சட்டத்தைப் பற்றிய முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆண்டு வாரியாக, தலைப்பு வாரியாக தேடிக் கொள்ள முடியும்.

http://india.gov.in/govt/acts.php (http://india.gov.in/govt/acts.php)

ஷீ-நிசி
26-02-2007, 03:08 PM
12 எதைப் படிக்கலாம்?

உலகம் முழுவதும் நல்ல விஷயங் களை வாசிக்கும் பழக்கம் அதிகமாக வளர்ந்து வருகிறது. புத்தகங்கள் துணையுடன் வாழ்கிறவர்கள் ஏராளம். பஸ் பயணத்தில் கூட நல்ல புத்தகங்களிலிருந்து விஷயத்தை கறந்து கொண்டிருப்பார்கள். அதற்காக கொஞ்சம் செலவழிப் பதிலும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.

தற்போது புதிய வெப்சைட் ஒன்று, நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை எத்தனை பேர் படித்து அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனால் அடுத்து, அந்த புத்தகத்தை படிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியும். உதாரணமாக, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய எ பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் படிக்கலாமா என்று பதிந்தால், உடனே அது தொடர்பான வாசகர்கள் கருத்துக்களுக்கு இணைப்பு தருகிறது இத்தளம்.

http://www.whatshouldireadnext.com (http://www.whatshouldireadnext.com)

ஷீ-நிசி
27-02-2007, 04:49 PM
13 பெரிய ஃபைல் அனுப்பலாம்

இப்போதுள்ள இமெயில்கள் 10 எம்.பி. பைல்களுக்கு மேல் அனுப்ப முடியாது. அதிலும் குறிப்பாக சரியாக 10 எம்.பி., பைல்களைக்கூட அனுப்புவது மிகவும் கடினம். அதற்கு மேற்பட்ட பைல்களை அனுப்ப ஒரு வெப்சைட் வசதி செய்து தருகிறது. இந்த வெப்சைட்டின் பீட்டா வெப்சைட்டில் இலவச அக்கவுண்ட் கிடைக்கிறது. வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும் தனிப் பகுதி உண்டு. நீங்கள் அனுப்பும் பைலை பெறுபவர் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால் கூட, அதை நீண்ட நேரம் பராமரிக்க இந்த வெப்சைட் உதவுகிறது. ஏழு நாட்கள் வரையில் அந்த பைலை திரும்பி அனுப்ப வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

http://www.yousendit.com/ (http://www.yousendit.com/)

அறிஞர்
27-02-2007, 05:57 PM
13 பெரிய ஃபைல் அனுப்பலாம்
http://www.yousendit.com/ (http://www.yousendit.com/)
முன்பு கேள்வி பட்டிருக்கிறேன்... ஆனால் முயற்சி செய்ததில்லை... யாராவது முயன்றிருக்கிறீர்களா..

ஷீ-நிசி
28-02-2007, 03:58 AM
முன்பு கேள்வி பட்டிருக்கிறேன்... ஆனால் முயற்சி செய்ததில்லை... யாராவது முயன்றிருக்கிறீர்களா..

நான் முயன்றிருக்கிறேன் அறிஞரே! மிக பயனுள்ள தளம் அது.. 50MB ஃபைல் எல்லாம் என் நண்பன் இதன் மூலம்தான் அனுப்புவார்.. எங்கள் அலுவலகத்தில் சில நேரங்களில் exe பதிவிறக்கம் செய்வது தடைசெய்யபட்டிருக்கும்.. அந்த நேரங்களில் என் நண்பர்களிடம் zip ஃபைலாக கன்வெர்ட் செய்து yousendit.com வழியாக அனுப்ப சொல்லி நான் பதிவிறக்கி கொள்வேன்.. மிக பயனுள்ள தளம் அறிஞரே!

ஷீ-நிசி
28-02-2007, 03:53 PM
14. நீங்கள் நடப்பது கூட இன்டர்நெட்டில் தெரியும்

இன்டர்நெட் யுகத்தில் நீங்கள் நடப்பதைக் கூட யாராலும் மறைக்க முடியாது. ஆம். அந்த அளவுக்கு வெளிப்படையான உலகமாகப் போகிறது. வெளிநாடுகளில் பல்வேறு தெருக்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை எடுக்கும் வீடியோ காட்சியை அப்படியே லைவ் ஆக இன்டர்நெட்டில் போட்டுவிட்டால், உங்களுக்கு தெரிந்தவர் அந்த பாதையில் போனால் கூட கண்டறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற வசதியை உள்ளூர் வரைபடங்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கிறது. தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த வெப்சைட்டை ஒரு முறை பாருங்களேன்.

வெப்சைட்டின் வடிவமைப்பு சர்வதேச தரத்தில் வீடியோ கேம்ஸ் பார்த்தது போல் உள்ளது.

http://preview.local.live.com/ (http://preview.local.live.com/)

மன்மதன்
28-02-2007, 04:44 PM
முன்பு கேள்வி பட்டிருக்கிறேன்... ஆனால் முயற்சி செய்ததில்லை... யாராவது முயன்றிருக்கிறீர்களா..

நல்ல தளம் அறிஞரே.. 80 MB கோப்புகளை நான் அனுப்பியிருக்கிறேன். ஒரே குறை : 7 நாட்கள் வரைதான் அந்த தளத்தில் நம் கோப்பு இருக்கும்.

அறிஞர்
28-02-2007, 04:45 PM
14. நீங்கள் நடப்பது கூட இன்டர்நெட்டில் தெரியும்http://preview.local.live.com/ (http://preview.local.live.com/)
நல்ல முயற்சி.. இன்னும் எல்லா ஊர்களுக்கு தேவை... சில படங்கள் போட்டோ மாதிரியே தெரிகிறது.. மாற்றங்கள் இல்லையே...

அறிஞர்
28-02-2007, 04:46 PM
நான் முயன்றிருக்கிறேன் அறிஞரே! மிக பயனுள்ள தளம் அது.. !


நல்ல தளம் அறிஞரே.. 80 MB கோப்புகளை நான் அனுப்பியிருக்கிறேன். ஒரே குறை : 7 நாட்கள் வரைதான் அந்த தளத்தில் நம் கோப்பு இருக்கும்.
நன்றி ஷீ-நிசி.. மன்மதன்..

மயூ
28-02-2007, 06:20 PM
12 எதைப் படிக்கலாம்?

உலகம் முழுவதும் நல்ல விஷயங் களை வாசிக்கும் பழக்கம் அதிகமாக வளர்ந்து வருகிறது. புத்தகங்கள் துணையுடன் வாழ்கிறவர்கள் ஏராளம். பஸ் பயணத்தில் கூட நல்ல புத்தகங்களிலிருந்து விஷயத்தை கறந்து கொண்டிருப்பார்கள். அதற்காக கொஞ்சம் செலவழிப் பதிலும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.

தற்போது புதிய வெப்சைட் ஒன்று, நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை எத்தனை பேர் படித்து அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதனால் அடுத்து, அந்த புத்தகத்தை படிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியும். உதாரணமாக, ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எழுதிய எ பிரிப் ஹிஸ்டரி ஆப் டைம் படிக்கலாமா என்று பதிந்தால், உடனே அது தொடர்பான வாசகர்கள் கருத்துக்களுக்கு இணைப்பு தருகிறது இத்தளம்.

http://www.whatshouldireadnext.com (http://www.whatshouldireadnext.com)
நல்ல தகவல் நன்றி ஷூ

ஷீ-நிசி
01-03-2007, 04:18 PM
15. சொகுசு வாழ்க்கைக்கான வெப்சைட்

எல்லோரும் விரும்புவது சொகுசு வாழ்க்கைதான். வசதி உள்ளவர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கைக்காக என்னென்ன பொருட்களை வாங்கலாம், என்பதற்கு ஒரு வெப்சைட் வழி காட்டுகிறது.

இந்த தளத்தின் பெயரே "பார்ன் ரிச்'. பிறப்பிலேயே பணக்காரர் என்பதுதான். ஆகவே இந்த வெப்சைட் யாருக்கானது என்று முகவரியிலேயே இடம்பெற்றுள்ளது. இதுவரை பொதுவாக வாழ்க்கையில் பார்த்திராத வகையில் விதவிதமான ரகங்கள் இத்தளத்தில் அடுக்கப்பட்டுள்ளன. தொங்கும் சர விளக்குகள் முதல் குட்டி விமானம் வரை அருமையான தொகுப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன. வாங்க முடியாதவர்கள் இந்த தளத்தையாவது ஒரு முறை பார்க்கலாம்.

http://www.bornrich.org/ (http://www.bornrich.org/)

ஆதவா
01-03-2007, 07:26 PM
நல்ல தகவல் நன்றி ஷூ

இதுக்குத்தான் சின்ன பசங்கள உள்ள வுடக்கூடாதுங்கறது.... :D

pradeepkt
02-03-2007, 04:18 AM
இதுக்குத்தான் சின்ன பசங்கள உள்ள வுடக்கூடாதுங்கறது.... :D
:D :D :D :D

ஷீ-நிசி
02-03-2007, 04:45 AM
இதுக்குத்தான் சின்ன பசங்கள உள்ள வுடக்கூடாதுங்கறது.... :D

இதெல்ல்லாம் மன்றத்தில சகஜமப்பா....

அறிஞர்
02-03-2007, 03:35 PM
http://www.bornrich.org/ தளம் அருமை.. நம்மூரு பெண்களை உள்ளே விட்டால்.. கணவர்கள் போண்டியாக வேண்டியதுதான்.

ஷீ-நிசி
02-03-2007, 04:14 PM
16. பிரித்துப் போட்டு பார்க்க...


எலக்ட்ரானிக் கருவிகளை பலர் பொழுது போக்காக பிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து அது தொடர்பாக அறிந்து அவர்களே பழுது நீக்கும் அளவுக்கு தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வார்கள். இவ்வாறு, பழைய ரேடியோக்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வகை எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படி கழற்றுவது மாட்டுவது என்பது தெரியாது. ஆகவே, எலக்ட்ரானிக் சாதனங்களுக்குள் உள்ள விஷயங்களை வெளிக்கொணர ஒரு வெப்சைட் உதவுகிறது. இந்த வெப்சைட்டுக்கு சென்று நீங்கள் பார்ப்பதால் உங்கள் கருவிக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் இந்த வெப்சைட் பொறுப்பு அல்ல என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

http://www.takeitapart.net/ (http://www.takeitapart.net/)

அறிஞர்
02-03-2007, 04:19 PM
16. பிரித்துப் போட்டு பார்க்க...
http://www.takeitapart.net/ (http://www.takeitapart.net/)
அப்ப இனி... மெக்கானிக் கடைக்கு போக வேண்டாம் போல....

மனோஜ்
03-03-2007, 03:48 PM
கம்யூட்டர் பொருள் இல்ல ஷீ நிசி இருந்த எனக்கு ரோம் பயன்பட்டிருக்கும்

ஷீ-நிசி
04-03-2007, 03:52 AM
17. முகமூடிகள் உலகம்

தலைவர்களுக்கும் புகழ்பெற்ற வர்களுக்கும் போஸ்டர் அடிப்பதையும் இறந்தவர்களுக்கு சிலை வைப்பதையும் நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். ஆனால் ஒரு தலைவர் அல்லது பிரபலத்தின் முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் முகமூடிகள் தயாரிக்கப்பட்டு இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தளத்தில் ஒருவரின் முகத்தைப் பார்த்தால் எப்படி உயிரோட்டமாக இருக்குமோ அதே போல் பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரித்துள்ளார்கள். ஆகவே, மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தை ஒரு முறை பாருங்களேன்.

http://libweb.princeton.edu/libraries/firestone/rbsc/aids/C0770/ (http://libweb.princeton.edu/libraries/firestone/rbsc/aids/C0770/)

மன்மதன்
04-03-2007, 08:04 AM
17. முகமூடிகள் உலகம்

ஆகவே, மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தை ஒரு முறை பாருங்களேன்.
பார்த்தேன் ஷீ. நன்றாக இருந்தது..

ஷீ-நிசி
06-03-2007, 03:57 PM
நன்றி மன்மதன்

18. பெண்கள் படிக்க வேண்டிய வெப்சைட்

இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு குறித்து தவறான கருத்துக்கள் கிராமப்புற படிக்காதவர்களிடம் மட்டுமின்றி, படித்தோரிடையும் நிலவுகின்றன. கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறாகும். கருத்தடை மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டால் அது நிரந்தரமாகவே கரு உருவாகாத நிலையை ஏற்படுத்தும் என்பது தவறான கருத்தாகும்.

இது போன்று சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு தவறான கருத்துக்களை அறிவியல் ரீதியாக பொய்யாக்குகின்றது. ஒரு டாக்டரிடம் தகவல் பெறுவதைப் போன்று பெண்கள் இந்த தளத்திற்குச் சென்று தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.


www.organon-india.com (www.organon-india.com)

ஆதவா
06-03-2007, 04:59 PM
16. பிரித்துப் போட்டு பார்க்க...


எலக்ட்ரானிக் கருவிகளை பலர் பொழுது போக்காக பிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து அது தொடர்பாக அறிந்து அவர்களே பழுது நீக்கும் அளவுக்கு தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்வார்கள். இவ்வாறு, பழைய ரேடியோக்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வகை எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படி கழற்றுவது மாட்டுவது என்பது தெரியாது. ஆகவே, எலக்ட்ரானிக் சாதனங்களுக்குள் உள்ள விஷயங்களை வெளிக்கொணர ஒரு வெப்சைட் உதவுகிறது. இந்த வெப்சைட்டுக்கு சென்று நீங்கள் பார்ப்பதால் உங்கள் கருவிக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் இந்த வெப்சைட் பொறுப்பு அல்ல என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

http://www.takeitapart.net/ (http://www.takeitapart.net/)


அருமை ஷீ!!! நல்ல பயனுள்ள பதிவு...........:)

அறிஞர்
06-03-2007, 11:05 PM
17. முகமூடிகள் உலகம்
http://libweb.princeton.edu/libraries/firestone/rbsc/aids/C0770/ (http://libweb.princeton.edu/libraries/firestone/rbsc/aids/C0770/)
அருமை.. நம்மவர்கள் யாரையும் காணோமே... :rolleyes: :rolleyes:

RRaja
07-03-2007, 07:30 AM
பயனுள்ள செய்திகள் பலரும் தந்திருக்கிறார்கள். நன்றி.. (என் பங்கிற்கு அப்புறம் வரேன்)

மனோஜ்
07-03-2007, 07:50 AM
17. முகமூடிகள் உலகம்
அனைத்து முகமும் கண்கள் மூடி உள்ளதே ஏனாயிருக்கும் ? ஷி

ஷீ-நிசி
09-03-2007, 02:07 PM
அனைத்து முகமும் கண்கள் மூடி உள்ளதே ஏனாயிருக்கும் ? ஷி

நம்மை எல்லாம் பார்த்து பயப்படுகின்றனவோ எல்லா முகமூடிகளும்....

ஷீ-நிசி
09-03-2007, 02:08 PM
19. சரியான புள்ளிவிபரங்கள் வேண்டுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவாக யுனெஸ்கோ செயல்படுவது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

யுனெஸ்கோவின் சார்பில், "யுனெஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ்' என்னும் மையம் உலகளாவிய வகையில் செயல்படுகின்றது. இந்த மையத்தின் சார்பில் தரப்படும் புள்ளி விபரங்கள் ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப் பாளர்களால் பயன்படுத்தப் படுகின்றன. நமக்கு பிடித்தமான துறை குறித்த புள்ளிவிவரங்களை இந்த வெப்சைட்டில் பெறலாம்.

www.uis.unesco.org (www.uis.unesco.org)

அறிஞர்
09-03-2007, 02:20 PM
18. சரியான புள்ளிவிபரங்கள் வேண்டுமா?

www.uis.unesco.org (http://www.uis.unesco.org)
எல்லா புள்ளிவிவரங்களும் பிடிஎப் வடிவத்தில் இருப்பதால்.. பலருக்கு உதவியாக இருக்கும்,.

மயூ
09-03-2007, 03:04 PM
தகவலுக்கு நன்றி ஷீ...
இத்தனை தகவல்கள் குவிந்து கிடக்கின்றன.

leomohan
09-03-2007, 03:17 PM
அருமையான தொகுப்பு. நன்றி ஷீ.

ஷீ-நிசி
10-03-2007, 01:53 PM
நன்றி நண்பர்களே!

19. ஆன்லைன் அகராதிகள்

அகராதிகள் எவ்வளவுக் கெவ்வளவு புதுமையான சொற்களோடு இருக்கின்றதோ அவ்வளவுக்கு நல்லது, என மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 சொற்கள் ஆங்கிலத்தில் சேர்வதாக கூறுகின்றனர்.

எனவே தான் புத்தக வடிவிலான அகராதிகளை விட தற்போது ஆன்லைன் அகராதிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வெப்சைட்டில் மருத்துவம், சட்டம், நிதி போன்ற துறைகளுக்கு ஆன்லைன் அகராதிகள் கிடைக்கின்றன.

http://encyclopediathetreedictionary.com (http://encyclopedia.thefreedictionary.com)

leomohan
10-03-2007, 01:57 PM
இந்த தளம் வேலை செய்யவில்லை ஷீ.

ஷீ-நிசி
11-03-2007, 10:58 AM
இந்த தளம் வேலை செய்யவில்லை ஷீ.

நன்றி மோகன்.... address தவறாக இருந்தது.. சரி செய்துவிட்டேன்..

ஷீ-நிசி
14-03-2007, 03:43 PM
20. உங்கள் மொழி வளம் பெற வேண்டுமா?

இந்த வெப்சைட் நம் ஆங்கில மொழி திறன் அதிகரிக்க உதவு கின்றது. தற்போது "American Accent English'' ன் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கால்சென்டர், மற்றும் பி.பி.ஓ., பயிற்சி எடுப்பவர்களுக்கும் பணிபுரிபவர்களுக்கும் இந்த வெப்சைட் சிறந்த முறையில் உதவும். பொதுவாக ஆங்கில மொழி பேச்சுத்திறனும், கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் தொடர்பு திறனுமே தற்போது வெற்றியை நிர்ணயிக்கின்றன. இந்த வெப்சைட்டின் ஹிட்ரேட் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

www.idiomsite.com (www.idiomsite.com)

மயூ
14-03-2007, 03:47 PM
நன்றி ஷீ...
தளம் நன்றாக உள்ளது!

அமரன்
14-03-2007, 04:56 PM
எல்லாமே புதுமை கலந்த அருமையான தளங்கள்.

அறிஞர்
14-03-2007, 08:05 PM
20. உங்கள் மொழி வளம் பெற வேண்டுமா?www.idiomsite.com (http://www.idiomsite.com)
கொடுத்திருக்கும் சில இடியம்கள் அருமை..

ஷீ-நிசி
15-03-2007, 04:39 PM
நன்றி மயூ, நக்கீரன் மற்றும் அறிஞரே!

21. அமெரிக்க இசைத் தொகுப்பு

அமெரிக்க இசை ஆவணத் தொகுப்பு அலுவலகத்தில் அந்நாட்டின் தற்கால இசை தொகுக்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய திட்டமான இதில் அமெரிக்க இசை தொகுப்புகள் அடங்கியுள்ளன.


இதுபோன்று ஒவ்வொரு நாடும் சேகரித்து பொதுமக்கள் தேவைக்கு அளிக்கும்பட்சத்தில் இன்றைய பாடல்கள் கூட காலம் கடந்து ஒலிக்கும். தேவையானவர்கள் பாடல்களை பெற்றுக்கொள்ள இந்தியாவிலும் இதுபோன்ற வசதிகளை உருவாக்கலாம்.

http://www.arcmusic.org/begin.html (http://www.arcmusic.org/begin.html)

இதே போன்று காமெடி தொகுப்பு:

http://www.emerson.edu/comedy/ (http://www.emerson.edu/comedy/)

மனோஜ்
17-03-2007, 09:54 AM
அமெரிக்க:smilie_flags_kl: நகைசுவை அருமை ஷீ நிசி:209:

அறிஞர்
19-03-2007, 03:44 PM
21. அமெரிக்க இசைத் தொகுப்பு
http://www.arcmusic.org/begin.html (http://www.arcmusic.org/begin.html)

இங்கு கேட்க முடியுமா என்ன... சென்று பார்த்தேன் பல விபரங்கள்... எழுத்தில் தான் உள்ளது.

ஷீ-நிசி
20-03-2007, 04:02 PM
22. அனிமேஷன் உலகம்

அனிமேஷன் இன்று சினிமாத் துறையிலும், "டிவி"களிலும் புகுந்துவிட்டது. இன்று உலகளாவிய அனிமேஷன் துறையினர் ஒன்று கூடம் இடமாக உள்ளது. இந்த தளத்தில் செய்திகள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள், வெளியீடுகள், நியூஸ்லெட்டர்கள், வேலைவாய்ப்பு, அனிமேஷன் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இங்கு படிக்க கிடைக்கின்றன. வளர்ந்து வரும் இத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய வெப்சைட் இது

http://www.awn.com/ (http://www.awn.com/)

மயூ
20-03-2007, 06:12 PM
22. அனிமேஷன் உலகம்

அனிமேஷன் இன்று சினிமாத் துறையிலும், "டிவி"களிலும் புகுந்துவிட்டது. இன்று உலகளாவிய அனிமேஷன் துறையினர் ஒன்று கூடம் இடமாக உள்ளது. இந்த தளத்தில் செய்திகள், நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள், வெளியீடுகள், நியூஸ்லெட்டர்கள், வேலைவாய்ப்பு, அனிமேஷன் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இங்கு படிக்க கிடைக்கின்றன. வளர்ந்து வரும் இத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய வெப்சைட் இது

http://www.awn.com/ (http://www.awn.com/)
ஆமாம் அருமையான தகவல் நன்றிகள் ஷீ.

march
21-03-2007, 08:13 PM
இத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய வெப்சைட் இது

மனோஜ்
21-03-2007, 08:18 PM
மார்ச் உங்களை முதலில் அறிமுகபடுத்துங்கள் நன்றி

ஷீ-நிசி
22-03-2007, 04:57 PM
நன்றி மயூ! மற்றும் புது நண்பர் மார்ச் (அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்)

23. இன்டர்நெட்டில் விளையாட்டுகள்

இந்த வெப் சைட்டில் நிறைய இன்டர்நெட் விளை யாட்டுகளை டவுன்லோட் செய்யும் வசதி உள்ளது.

இந்த வெப்சைட் கோடை கால விடுமுறையை மாணவர்கள் பயன் உள்ள வகையில் செலவழிக்கப் பயன்படுகின்றது. இந்த வெப்சைட்டில் கார்ரேஸ் முதல் கார்ட்ஸ் வரை அனைத்து விளையாட்டுகளும் உள்ளன. மூளை மற்றும் கைத்திறன்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வெப்சைட் உள்ளது.

http://www.minclip.com/ (http://www.miniclip.com/)

அமரன்
23-03-2007, 09:25 AM
இணைய விளையாட்டுக்கள் தரவிறக்கம் செய்வதற்கு முயன்று முடியாமல் போய்விட்டது. இப்போது நண்பர் உதவியுள்ளார். நன்றி ஷீ.நிஷி

ஷீ-நிசி
26-03-2007, 04:23 PM
நன்றி நக்கீரன்

24. மனித வளத்துறை வெப்சைட்

மனித வள மேம்பாட்டுத்துறையின் சிறப்பினை விளக்கும் வகையில் இந்த வெப்சைட் உள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை குறித்த கருத்துகள் இந்த வெப்சைட்டில் ஏராளமாக உள்ளன. மனிதவளத்தை சுமையாக கருதக்கூடாது என்பது இந்த வெப்சைட்டின் சாராம்சமாய் உள்ளது. இந்த வெப்சைட்டில் வேலை வாய்ப்பு தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.

http://www.hrmeet.com/ (http://www.hrmeet.com/)

அறிஞர்
26-03-2007, 07:42 PM
23. இன்டர்நெட்டில் விளையாட்டுகள்
/ (http://www.miniclip.com/)
www.pogo.com (http://www.pogo.com) என்ற தளமும் நல்ல விளையாட்டு தளம்.

ஷீ-நிசி
28-03-2007, 04:25 PM
25. சென்னை டூ புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தனது சுற்றுலாவினை வளர்க்க இந்த வெப் சைட்டை செயற்படுத்தி வருகின்றது. இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் மூலமே அனைத்து புக்கிங்களும் செய்ய முடியும். இந்த வெப்சைட்டில் புதுச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள், அவற்றின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், பேக்கேஜிங் டூர் விவரம், கட்டண விவரம் என அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன.

ஈமெயில் முகவரியிலும் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.
www.tourism.pon.nic.in (www.tourism.pon.nic.in)
tourismpondy@sify.com (tourismpondy@sify.com)

ஓவியா
28-03-2007, 04:29 PM
நன்றி நக்கீரன்

24. மனித வளத்துறை வெப்சைட்

மனித வள மேம்பாட்டுத்துறையின் சிறப்பினை விளக்கும் வகையில் இந்த வெப்சைட் உள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறை குறித்த கருத்துகள் இந்த வெப்சைட்டில் ஏராளமாக உள்ளன. மனிதவளத்தை சுமையாக கருதக்கூடாது என்பது இந்த வெப்சைட்டின் சாராம்சமாய் உள்ளது. இந்த வெப்சைட்டில் வேலை வாய்ப்பு தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.

http://www.hrmeet.com/ (http://www.hrmeet.com/)

மிக்க நன்றி ஷி-நீஷி

இந்த தளம் அருமை.

தொடருங்கள்.

sinnavan
28-03-2007, 04:32 PM
உபயோகமான தளங்கள்..

பாண்டிச்சேரி போல்... எல்லா மாநிலங்களும் சுற்றுலா செய்திகளை தளங்களில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஷீ-நிசி
31-03-2007, 07:13 AM
நன்றி ஓவியா மற்றும் சின்னவன்

26. இன்டர்நெட்டில் குத்துச்சண்டை

உலகெங்கும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வர்களாக இருந்து வருகின்றனர். பாக்ஸிங்வுடன் ஒப்பிடுகையில் ரெஸ்லிங்கில் விதிமுறைகள் அனைத்தும் மிகவும் தளர்வு செய்யப்பட்டவையாக உள்ளன.


இதனால் பாக்ஸிங்கை விட ரெஸ்லிங்கை பார்ப்பது மிகவும் திரில்லிங் ஆக உள்ளது, என ரசிகர்கள் கூறுகின்றனர். உலகெங்கும் நடைபெறும் ரெஸ்லிங் குறித்த தகவல்களைப் பெற இந்த வெப்சைட் உள்ளன. இந்த வெப்சைட்டில் உலகெங்கும் ரெஸ்லிங்கில் முன்னணியில் உள்ள வீரர்களைக் குறித்த தகவல்கள் உள்ளன. மேலும் புதிர் போட்டிகளும் உள்ளன.

www.wwe.com (www.wwe.com)

மனோஜ்
31-03-2007, 09:49 AM
25. சென்னை டூ புதுச்சேரி
புகைபடங்கள் மூலம் மருமுறை புதுச்சேரி பார்த்ததில் மகிழ்ச்சி

மயூ
31-03-2007, 01:01 PM
நன்றி ஓவியா மற்றும் சின்னவன்

26. இன்டர்நெட்டில் குத்துச்சண்டை

உலகெங்கும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வர்களாக இருந்து வருகின்றனர். பாக்ஸிங்வுடன் ஒப்பிடுகையில் ரெஸ்லிங்கில் விதிமுறைகள் அனைத்தும் மிகவும் தளர்வு செய்யப்பட்டவையாக உள்ளன.


இதனால் பாக்ஸிங்கை விட ரெஸ்லிங்கை பார்ப்பது மிகவும் திரில்லிங் ஆக உள்ளது, என ரசிகர்கள் கூறுகின்றனர். உலகெங்கும் நடைபெறும் ரெஸ்லிங் குறித்த தகவல்களைப் பெற இந்த வெப்சைட் உள்ளன. இந்த வெப்சைட்டில் உலகெங்கும் ரெஸ்லிங்கில் முன்னணியில் உள்ள வீரர்களைக் குறித்த தகவல்கள் உள்ளன. மேலும் புதிர் போட்டிகளும் உள்ளன.

www.wwe.com (http://www.wwe.com)
கடவுளே அதுவும் ஒரு விளையாட்டா!!!
எங்க அலுவலலகத்தில வேலை செய்யிற பொண்ணுங்க கூடப் பாக்கிறாளுக என்றா பார்த்துக்கொள்ளுங்களேன்;; :sprachlos020:

ஷீ-நிசி
03-04-2007, 05:08 PM
27. ஆன்லைனில் மருத்துவம்

இன்டர்நெட் வழியாக மருத்துவ சேவை ஆற்றி வருகின்றன. நோய்களைத் தீர்க்க சரியான மருத்துவரை, சரியான நேரத்தில் சென்ற டையவும் இவை வழிகாட்டுகின்றன.


இந்த வெப்சைட்டில் "ஹெல்த் கவுன்சிலிங்' என்னும் பகுதி நமது கேள்விகளுக்கு ஆன்லைனில் விடை தருகின்றது. "ஹெல்த் டைரக்டர்' என்னும் பகுதி மருத்துவர்கள் குறித்த தகவல்களைத் தருகின்றது. "ஹெல்த் லைப்ரரி' என்னும் பகுதி ஹெல்த் குறித்த அனைத்து தகவல்களையும் தருகின்றது. இந்த வெப்சைட்டில் தகவல்களைப் பெற உறுப்பினராக நம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

www.askyourdronline.com (www.askyourdronline.com)

ஆதவா
03-04-2007, 06:08 PM
நன்றி ஓவியா மற்றும் சின்னவன்

26. இன்டர்நெட்டில் குத்துச்சண்டை

உலகெங்கும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் குத்துச்சண்டையில் ஆர்வமுள்ள வர்களாக இருந்து வருகின்றனர். பாக்ஸிங்வுடன் ஒப்பிடுகையில் ரெஸ்லிங்கில் விதிமுறைகள் அனைத்தும் மிகவும் தளர்வு செய்யப்பட்டவையாக உள்ளன.


இதனால் பாக்ஸிங்கை விட ரெஸ்லிங்கை பார்ப்பது மிகவும் திரில்லிங் ஆக உள்ளது, என ரசிகர்கள் கூறுகின்றனர். உலகெங்கும் நடைபெறும் ரெஸ்லிங் குறித்த தகவல்களைப் பெற இந்த வெப்சைட் உள்ளன. இந்த வெப்சைட்டில் உலகெங்கும் ரெஸ்லிங்கில் முன்னணியில் உள்ள வீரர்களைக் குறித்த தகவல்கள் உள்ளன. மேலும் புதிர் போட்டிகளும் உள்ளன.

www.wwe.com (http://www.wwe.com)

சின்ன வயதிலிருந்தே பார்க்கும் விளையாட்டு.... ராக் ஆஸ்டின் இருக்கும் வரை நன்றாக இருந்தது.... இப்போதெல்லாம் டிவியையே பார்க்க முடிவதில்லை...

நன்றிங்க ஷீ!!

விகடன்
03-04-2007, 08:12 PM
சின்ன வயதிலிருந்தே பார்க்கும் விளையாட்டு.... ராக் ஆஸ்டின் இருக்கும் வரை நன்றாக இருந்தது.... இப்போதெல்லாம் டிவியையே பார்க்க முடிவதில்லை...

நன்றிங்க ஷீ!!

ஏங்க கோம்வேக்கை கூட்டீட்டாங்களா?

அறிஞர்
04-04-2007, 04:49 AM
27. ஆன்லைனில் மருத்துவம்
www.askyourdronline.com (http://www.askyourdronline.com)
இலவசமாய் செய்கிறார்கள் என்றால் மகிழ்ச்சியே..
இந்தியா முன்னேறுகிறது.

விகடன்
04-04-2007, 06:22 PM
ஆமாம் அறிஞரே.
இலவசமாக இருப்பின் இந்தியாவிற்கு மட்டுமில்லை, யார் யாருக்கு அந்ததளம் அறிமுகப்படுத்தப்பட்டதோ,, அவர்களுக்கெல்லாம் பயனுள்ளதாக அமையும்.

ஷீ-நிசி
08-04-2007, 04:55 PM
நன்றி நண்பர்களே!

28. இன்டர்நெட்டில் நளபாகம்

இந்தியாவின் உணவு பாரம்பரியம் நீண்ட நெடிய வரலாற்றினை உடையது. இந்தியாவைப் போன்றே அதன் உணவு வகைகளும் பிரபலமானது.

செட்டிநாடு சிக்கன் முதல் காஷ்மீரி புலாவ் வரை அனைத்து வகையான உணவு வகைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த வெப்சைட் உதவுகின்றது. கேட்டரிங் டெக்னாலஜி மாணவ மாணவியர்களுக்கு மட்டுமின்றி பாரம்பரிய உணவுக் கலைஞர்கள், உணவு ரசிகர்கள் என அனைவரும் இந்த வெப்சைட்டை கட்டாயம் சென்று பார்க்க வேண்டும்.

www.kitchensofindia.com (www.kitchensofindia.com)

ஷீ-நிசி
10-04-2007, 05:12 PM
29. பயோடீசல்

புதிதாக தொழில் தொடங்க விரும்பு பவர்கள் பயோடீசல் துறையில் நுழையலாம் என வர்த்தக ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்தியா போன்ற விவசாய நாட்டில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி அதிகமாக உள்ளது. காட்டாமணக்கு பயிரிட ஏற்ற சூழ்நிலை இந்தியாவில் உள்ளது.

பயோடீசல் குறித்த அனைத்தும் தகவல்களையும் இந்த வெப்சைட் நமக்கு தருகின்றது. பயோடீசல் குறித்த ஆராய்ச்சிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் போக்கினையும், முடிவுகளையும் இந்த வெப்சைட்டில் இருந்து பெறலாம். பயோடீசல் பெற பயன்படும் இயந்திரங்கள், அவற்றை உற்பத்தி செய்யும் கம்பெனிகள், விலை விவரம் போன்ற தகவல்களையும் இந்த வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://byodiesel.com (http://byodiesel.com)

மனோஜ்
11-04-2007, 03:50 PM
நல்ல தொழிலாயிருக்குமா எங்கு நடத்தபடுகிறது எப்படி இதை விற்பது எப்படி தயாரிப்பது என்பது இல்லையே ஒருவேலை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுமா? மற்ற விபரங்களுக்கு

ஷீ-நிசி
12-04-2007, 04:57 PM
இணையத்தில் தேடிப் பாருங்கள் மனோஜ்... மேலதிக விவரங்கள் கிடைக்கும்..

30. அமெரிக்க ஆங்கிலம்

ஆங்கிலம் அறிந்திருந்தால் மட்டும் போதாது நீங்கள் பேசும் ஆங்கிலம் அமெரிக்க பாணியிலான ஆங்கிலமாக இருக்க வேண்டும் என்ற நிலை உலகின் எல்லா நாடுகளிலும் தோன்றிவிட்டது. ஆன்லைனில் அமெரிக்க பாணியிலான ஆங்கிலத்தை இந்த வெப்சைட் கற்றுத் தருகின்றது. அமெரிக்க பாணியிலான ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதற்கான தரமுள்ள புத்தகங்கள், சி.டி.,க்கள் அவற்றை வாங்கும் விவரம், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும் வெப்சைட்டுகளுடனான தொடர்புகள், அமெரிக்க பாணியிலான ஆங்கிலத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்குரிய விளக்கங்கள் என அனைத்து விவரங்களும் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன. கால் சென்டரில் வேலைக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்த வெப்சைட் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

www.americanaccent.com (www.americanaccent.com)

ஷீ-நிசி
15-04-2007, 12:29 PM
31. டும்... டும்... டும்

""திருமணம் வித்தியாசமான கூண்டு. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர ஆசைப்படுவார்கள் வெளியே இருப் பவர்கள் உள்ளே போக அவசரப் படுவார்கள்'' என்பது நகைச்சுவைக்காக சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு வருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது உன்னதமான

நிகழ்வாக அமைகின்றது. திருமண தேவைகள் அனைத்தையும் ஆன்லைனில் நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

www.wedding-needs.com (www.wedding-needs.com)


இந்த வெப்சைட்
www.incitationconsultants.com (www.incitationconsultants.com)

திருமண அழைப்பிதழ்களுக்கென்றே செயல்படுகின்றது. "கிரெடிட்கார்டு' மாடலிலான கார்டுகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது, என்பது இந்த வெப்சைட் தரும் தகவல் ஆகும்.

ஷீ-நிசி
17-04-2007, 05:17 PM
32. லொள்... லொள்... லொள்...

நாய் வளர்ப்பது என்பது வெறும் பொழுது போக்கிற்கும் தனிமையைப் போக்குவதற்கும் மட்டுமல்ல. நாய் வளர்ப்பை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்பதை இந்த வெப்சைட் உணர்த்துகின்றது. உயர்ரக நாய்களை உருவாக்க சிறந்த வகை ரகங்களை வாடகைக்கு விடும் வழிமுறைகளை இந்த வெப்சைட் கற்றுத்தருகின்றது. மேலும் நாய்களுக்கு பயிற்சிகளைத் தருவதற்கான டிப்ஸ்களை இந்த வெப்சைட்டில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.மேலும் இந்த வெப்சைட்டில் நாய்களைக் குறித்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஆன வினாடிவினாவும் உள்ளது.

www.barkbusters.com (www.barkbusters.com)

மயூ
19-04-2007, 06:44 PM
நாய் பூனைகளில் அதிகம் விருப்புக்கொண்ட அன்பர்களில் நானும் ஒருவர்!!!
தகவலுக்கு நன்றி ஷீ

ஓவியா
19-04-2007, 06:47 PM
சகோ ஷி-நிஷி,
நல்ல-நல்ல தகவல்கள். அருமையான செலக்ஷன்ஸ்.

அக்காவின் ஊக்கங்கள் எப்பொழுதும் உண்டு. தொடருங்கள்.

mgandhi
22-04-2007, 07:05 PM
மூளைக்கு வேலை

கோடை விடுமுறைக்காலம் துவங்கி விட்டது. கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க நிறைய மூளைத்திறன் விளையாட்டு சார்ந்த வெப்சைட்டுகள் புதிதாகத் துவங்கப்படுகின்றன..www.brainbashers.com என்ற வெப்சைட்டில் நிறைய குறுக்கெழுத்துப்போட்டிகள், புதிர் போட்டிகள், கணக்குப் புதிர்கள் ஆகியவை உள்ளன. நம்மால் உருவாக்கப்பட்ட புதிய விளையாட்டுக்களையும் இந்த வெப்சைட்டில் உள்ள "செர்ச் எஞ்சினில்' நமக்குத் தேவையான விளையாட்டுக்களை கண்டுபிடிக்க முடியும்.

RRaja
23-04-2007, 05:50 AM
விரிவாக்கம் அறிய இந்தத்தளம் உபயோகப்படும் www.acronymfinder.com (http://www.acronymfinder.com)

அரசன்
23-04-2007, 05:53 AM
விரிவாக்கம் அறிய இந்தத்தளம் உபயோகப்படும் www.acronymfinder.com (http://www.acronymfinder.com)

தகவலுக்கு நன்றி

கலைநேசன்
23-04-2007, 01:02 PM
நன்றி நண்பர்களே

nicebee
24-04-2007, 02:35 PM
அற்புதமான தகவல்கள் நன்றி

pradeepkt
24-04-2007, 02:40 PM
வாங்க கலைநேசன், நல்ல தேனீ (நைஸ்பீ)..
நல்ல தமிழ் அடித்திருக்கிறீர்கள். உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுங்களேன்... ஏற்கனவே கொடுத்திருந்தால் மன்னியுங்கள்.

ஓவியா
24-04-2007, 06:17 PM
பிரதீப்,
நைஸ்ஃபீ அவர்களின் அறிமுகத்தினை இங்கு காண்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=187807#post187807

ஷீ-நிசி
25-04-2007, 05:11 PM
நன்றி நண்பர்களே!

33. பேஷன் உலகம்

இந்த வெப்சைட் தற்போது இந்தியாவின் இளைய தலை முறையினரின் உள்ளம் கவர்ந்த வெப்சைட் ஆக உள்ளது.

அறிவோடு அழகும் சேரும் போது தான் சாதனைகள் உருவாகும் என இளைய பாரதம் உறுதியாக நம்புகின்றது. இந்த வெப்சைட் உடல் தோற்றத்திலோ, நமது ஆளுமையிலோ நமக்கு உள்ள எதிர்மறையானவைகளை எவ்வாறு நேர்மறையாக மாற்றுவது என்பது குறித்து கற்றுத்தருகின்றது. உடைகள், நகைகள், வாட்ச்சுகள், ஹேர்ஸ்டைல், பேஷன் ஷோ என பல்வேறு தலைப்புகளில் அதிநவீன பேஷன் கருத்துகள் கொடுத்து வைக்கப் பட்டுள்ளன.

www.fashionshow.com (www.fashionshow.com)

ஷீ-நிசி
30-04-2007, 11:20 PM
34. கார்ட்டூன் வெப்சைட்

இந்தியாவில் முதன்முதலாக பத்திரிகைகளில் கார்ட்டூன் களைப் பயன்படுத்தியவர் பாரதியார். கார்ட்டூன்கள் பயன் படுத்திய போது மக்களுக்குப் புரிய வேண்டும், என்பதற்காக விளக்கங்களுடன் வெளியிடப்பட்டன. இன்டர்நெட்டில் இந்த வெப்சைட்டில் அரசியல், சட்டம், விளையாட்டு, அறிவியல், உலகம் என பல்வேறு தலைப்புகளில் கார்ட்டூன்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. கார்ட்டூனிஸ்ட் டுகளின்

வாழ்க்கை வரலாறும் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன. இமாலய பிரச்னைகளை கூட நகைச் சுவையோடு எதிர்கொள்ளும் உணர்வினை கார்ட்டூன்கள் நமக்கு தருகின்றன என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மனதை ரிலாக்ஸ் செய்யவும், கார்ட்டூன்கள் வரைய கற்றுக்கொள்ளவும் இந்த வெப்சைட் பயன்படுகின்றது.

www.cartoonindia.com (www.cartoonindia.com)

poo
02-05-2007, 05:59 AM
கோடைக்கேற்ற தளம்... சுட்டிகளை கட்டிப்போடலாம்..

தகவலுக்கு நன்றி ஷீ!

(சுட்டி டிவி வந்தபிறகு கிராமத்து குழந்தைகளுக்கும் இனி கார்ட்டூன் மோகம் தொற்றிக் கொள்ளுமென நம்பலாம்..)

மனோஜ்
02-05-2007, 10:51 AM
குட்டிசுகளுக்கும் சிறந்த தலம் அருமை ஷீ

ஓவியன்
02-05-2007, 10:56 AM
கார்ட்டூனா எனக்கு ரொம்பப் பிடிக்குமே!

நன்றி ஷீ-நிசி!

suraj
02-05-2007, 03:37 PM
வாண்டுகள் கோடையை அருமையாக களிக்க சிறந்த ஈ-தளம்.
நன்றி ஷீ-நிசி.

ஷீ-நிசி
08-05-2007, 05:14 PM
நன்றி நண்பர்களே!

35. வழிகாட்டும் வெப்சைட்கள்

மாணவ, மாணவியர்கள் கோடை விடுமுறையினை சிறந்த முறையில் கழிக்க பெற்றோர்கள்

அவர்களுக்கு வெப்சைட் குறித்தும் மெல்ல மெல்ல கற்றுத்தர வேண்டும். ஏனெனில் பள்ளி அளவில் தரப்படும் புராஜெக்ட்ஸ், அசென்மெண்ட்ஸ் என அனைத்துக்கும் நுலகங்கள் சென்று தகவல்கள் சேர்ப்பதை விட இன்டர்நெட்டில் "அப்டுடேட்' தகவல்களை ஆன்லைனில் பெற முடிகின்றது. மாணவ, மாணவியர்க்கு ஏற்ற வெப்சைட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த வெப்சைட் மாணவ, மாணவியர்க்கு ஏற்ற வெப்சைட் ஆக உள்ளது. மொழி அறிவை வளர்க்கும் நுட்பங்கள் இந்த வெப்சைட்டில் உள்ளன. அறிவியலின் அடிப்படைத் தகவல்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன.

www.ajkids.com (www.ajkids.com)

ஆதவா
08-05-2007, 08:23 PM
இந்த திரியை 132 பேர் பார்த்துள்ளார்கள்.... வாழ்த்துக்கள் ஷீ!! மிக அருமையான பணி இது..

அறிஞர்
08-05-2007, 08:32 PM
நன்றி நண்பர்களே!

35. வழிகாட்டும் வெப்சைட்கள்
www.ajkids.com (http://www.ajkids.com)
இன்னும் அதிகமான தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் எனத்தோன்றுகிறது.

poo
09-05-2007, 07:07 AM
சீசனுக்கேற்ற தளங்கள் குறித்த விவரங்களை அளித்து ஆச்சர்யப்படுத்துகிறீர்கள் நண்பரே... தொடரட்டும் உங்கள் பணி..

ஷீ-நிசி
14-05-2007, 04:14 PM
நன்றி ஆதவா, அறிஞர், பூ.....

36. தேன்... தேன்... தித்திக்கும் தேன்

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் தனித்தனியே வெப்சைட்டுகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அனைத்துப் பொருள் குறித்து தகவல்கள் அடங்கிய "டேட்டா பேஸ்' அப்டுடேட் ஆக தயாராக இருக்க வேண்டும் என்பது தகவல் தொழில் நுட்ப துறையின் ஒரு நோக்கமாக உள்ளது. அந்த வகையில் தேனுக்காக பிரத்யேகமாக இந்த வெப்சைட் உள்ளது. அமெரிக்காவில் உள்ள "நேஷனல் ஹனி போர்டு' இந்த வெப்சைட்டை நடத்துகின்றது. இந்த வெப்சைட்டில் தேனைப் பயன்படுத்தி செய்யும் உணவுப் பொருள்களின் செய்முறை விளக்கங்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன. கிடைக்கின்றன. தேனைக்குறித்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் புதிய முடிவுகளும், கிடைக்கின்றன. இந்த வெப்சைட்டின் தாக்கத்தினால் தான் இந்தியாவில் தற்போது "லெடன்ஹனி' "ஜிஞ்சர்ஹனி' போன்றவை கிடைக்கின்றன. தேனின் மருத்துவக்குணம், நமக்கு விருப்பமான பொருளின் சுவை அதோடு தேனின் சுவை யோடு கூடிய பொருட்களை இந்த வெப்சைட் உருவாக்க வழிமுறைகளை கூறுகின்றது.

www.honey.com (www.honey.com)

அறிஞர்
16-05-2007, 08:20 PM
வாவ்.. தேன் பற்றி இனிமையான தகவல்கள்....

தொடரட்டும்... உம் சேவை தினம்/....

அமரன்
18-05-2007, 07:58 AM
தளத்துக்குப் போனேன். தேனை வைத்து இவ்வளவா என்று தலையே சுற்றுகின்றது. நன்றி நிஷி. பாராட்டுகள்.

சூரியன்
18-05-2007, 08:28 AM
தொடரட்டும் உம் செம் பணி!

ஷீ-நிசி
10-06-2007, 02:21 PM
நன்றி நண்பர்களே!

37. திட்டமிடுவோம்...

நாட்டின் திட்டமிடலில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும். பங் கேற்பு மேலாண்மையே வெற்றிக்கான வழி என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டு தேசிய ஆலோசனைக் கவுன்சில் இந்த வெப்சைட்டை தொடங்கி உள்ளது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர்களின் விவரம், விவாதிக்கப்பட்ட விஷயங்கள், அரசுக்கு அனுப்பப்பட்ட தீர்மானங்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன.

பொதுமக்கள் கருத்து கூற, ஆலோசனை வழங்குவதற்கான தனிப்பகுதிகள் உள்ளன. அரசின் திட்டமிடலோடு தொடர்புடைய மற்ற வெப்சைட்டுகளுக்கும் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

http://nac.nic.in (http://nac.nic.in)

ஷீ-நிசி
23-06-2007, 05:15 PM
38. வெப்சைட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வசதி

இன்டர்நெட்டில் நீங்கள் பார்க்கும் வெப்சைட் எவ்வளவு பேரால் பார்க்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் அந்த வெப்சைட்டின் நம்பகத்தன்மையை அறியலாம்.

மேலும், உங்களுக்குப் பிடித்த வெப்சைட் பலரை சென்று அடைந்திருக்கிறதா என்பதையும் பார்க்கலாம்.

உங்களுக்கு தெரிந்த இரண்டு வெப்சைட் முகவரிகளைக் கொடுத்து எந்த வெப்சைட் அதிகப் பேரால் பார்க்கப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில், இரண்டு வெப் சைட்களை அதற்குரிய கட்டங்களில் பூர்த்தி செய்தால் கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு பேர் எப்போதெல்லாம் விசிட் செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும். நல்ல வசதி எட்டிவிடும் துரத்தில் கிடைத்திருக்கிறது.

http://www.alexa.com/

ஷீ-நிசி
26-06-2007, 04:12 PM
39. இளம் அதிபர்களுக்கு பயனுள்ள தகவல்

சுற்றுலா தலங்களை தன்ன கத்தே கொண்டுள்ள அரியானா மாநிலம் இந்த வெப்சைட் மூலமாக சுற்றுலாப் பயணி களுக்கு அழைப்பு விடுவிக்கின்றது. அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த வெப்சைட் சிறப்பாக வெளியிட்டுள்ளது. குருசேத்ராவில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு சிறப்பு இணைப்பு தரப்பட்டுள்ளது. "மாடர்ன் புட் பார்க்ஸ்' குறித்த தகவல்கள் தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளவையாகும். பானிபட் குறித்த தகவல்கள் வரலாற்று ஆர்வலர்களை கவர்ந்திழுக்கின்றன. தொழில் வளத்தில் முன்னணியில் உள்ள அரியானாவின் இந்த வெப்சைட் இளம் தொழில் அதிபர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றது.

www.haryanatourism.com (www.haryanatourism.com)

ஷீ-நிசி
28-06-2007, 03:45 PM
40. புவியியல் அறிவோம்

இந்த வெப்சைட் புவியியல் குறித்த அனைத்து தகவல்களையம் ஆன்லைனில் தருகின்றது. இந்த வெப்சைட் ஐ.ஏ.எஸ். பயிற்சி, மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்சைட்டில் கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், தட்ப வெப்பநிலை, பருவகாலங்கள், தாவரங்கள், விலங்குகள், காட்டு வளம் என அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. இந்த வெப்சைட்டில் புவியியலை அடிப்படையாகக் கொண்டு வினாடிவினாத் தொகுப்பும் இந்த வெப்சைட்டில் உள்ளது. பள்ளி கல்லூரி மாணவமாணவியர்க்கு இந்த வெப்சைட் மிகவும் பயனுள்ள வெப்சைட் ஆகும்.


www.geographyandyou.com (www.geographyandyou.com)

ஷீ-நிசி
08-07-2007, 11:00 AM
இந்த திரி இத்தனை தூரம் வளர உதவின அனைவருக்கும் என் நன்றிகள்...

இதுவரை இந்த திரியில் இந்த திரியில் கூறப்பட்ட பல்வேறு தளங்கள் பற்றின தகவல்கள் அனைவருக்கும், இனி வரப்போகின்ற புதியவர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை...


அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.......