PDA

View Full Version : யாருடன் அவளை ஒப்பிடுவேன்?!



ஷீ-நிசி
15-02-2007, 04:47 PM
நிலவே,
அவளின் அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
என்னிடம் கறை உள்ளதே!

மலரே!
அவளின் வாசத்தினை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
நான் மாலையில் வாடிடுவேனே!

தென்றலே,
அவளின் வருகையை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
நீ சொல்லும் நேரத்திற்கு
நான் வருவதில்லையே!

தொலைபேசியே!
அவளின் சிரிப்பினை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
என் சினுங்கலை பிடிக்காதவர்களும்
இருக்கிறார்களே!

தேனே!
அவளின் இதழ் சுவையினை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
அளவுக்கு மிஞ்சினால் நான்
திகட்டிடுவேனே!

வளைந்துபோகும் பாதையே!
அவளின் வளைவுகளை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
எங்கள் வளைவுகளில் தவறியவர்கள்
காயமடைகிறார்களே!

குயிலே!
அவளின் குரல் இனிமையை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்,
அவள் வீட்டு தோட்டத்திற்கு
நான் தினமும் செல்கிறேனே
எதற்காக?!

அன்னமே!
அவளின் நடை அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!

வேண்டாம்!
ஹைஹீல்ஸ் அணிந்து நடந்தால்
நான் தோற்றுவிடுவேனே!

யாருடன்தான் அவளை ஒப்பிடுவேன்?

எல்லா
இயற்கையும், செயற்கையும்
என் காதருகில் வந்து
மெல்லமாய் கூறின!!

எதற்கும் வின்னுலகம்
சென்று தேவதையையும்
கேட்டுவிடு!

மேலே சென்றேன்!
சுற்றிலும் கூட்டம்

தேவதைகளின்
தலைவியைச் சுற்றி
தேவதைகளின் தலைகள்!

மெல்ல விளக்கினேன்!
ஒவ்வொரு தலையையும்!

கறுப்பு நிறத்தில்,
விழுந்துக்கொண்டிருந்தது
அருவியொன்று;

தலைவியின் கூந்தல்...

வலிந்து விழுந்த கூந்தலில்
விழுந்து சிக்கியது என் மனமது.

தேவதையே என்றேன்.

'களுக்'கென்று ஒரு சிரிப்பு சத்தம்....
என்ன வேண்டும்?

திரும்பாமலே கேட்டது தேவதை!

தேவதையே!
அவளின்... இல்லை, இல்லை
அவளையே உன்னுடன்
ஒப்பிடவா?

மின்னலாய் வந்தது கேள்வி!
என்னை விடவா அழகு?!

வினாடியில் திரும்பி நின்றது
தேவதையின் உருவம்!

வியப்பில் மேலே சென்றது
என் விழியின் புருவம்..

தேவதையாய்
நின்று கொண்டிருந்தது!

என் அவள் என்னவள்!

ஓவியன்
15-02-2007, 07:45 PM
வாழ்த்துக்கள் நண்பரே!
அனுபவித்து எழுதி இருக்கின்றீர்கள்
அதிலும் இந்த வரிகள் அருமையிலும் அருமை!



வலிந்து விழுந்த கூந்தலில்
விழுந்து சிக்கியது என் மனமது.

lenram80
16-02-2007, 12:11 AM
நம்மவளைப் பற்றி வர்ணிப்பதில் சுகம் அலாதி. வர்ணனை அருமை ஷீ-நிசி.

ஷீ-நிசி
16-02-2007, 02:40 AM
நன்றி ஓவியன் மற்றும் லெனின்

அறிஞர்
16-02-2007, 01:46 PM
கேள்வி பதில் பாணியில்.. அருமையான கவிதை...

இயற்கை, செயற்கை அழகுகள்... கண்டு பயப்படும்.. அவள் பேரழகிதான்.

தேவதைகளின் தலைவியாய் இருக்க பொருத்தமானவள்...

தொடரட்டும் உங்கள் கவிதைகள்..

மனோஜ்
16-02-2007, 03:01 PM
ஷீ நிசி உங்கள் கவிதை என்னை தேவதையிடம் அழைத்து சென்றது நன்றி

ஆதவா
19-02-2007, 06:23 PM
உண்மையில் ஒப்புமைக் கவிதை அருமையாக இருக்கிறது... ஒவ்வொரு வரியும் புரிந்து நிதானமாக எழுதப்பட்டிருக்கவேண்டும்... கவிதை ஒரு லோகத்துக்கே பயணிப்பதாக எழுதப்பட்டிருப்பதும் புதுமைதான். மிக நீண்டும் இருக்கிறது..

வரிகள் யாவும் ஒட்டி வைத்தமாதிரி அழகாய் நேர்த்தியாக ஷீநிசி ஸ்டைலில் இருப்பது ஆச்சரியமல்ல...
ஒரு சின்ன கதையைப் படித்த உணர்வு... காதலன் காதலியைத் தேடும் கதை... அற்புதம் ஷீ!!

வாழ்த்துக்கள். (விமர்சனம் எழுதி வைத்திருந்தேன்... கணிணியின் ஒழுங்கற்ற செயல்பாட்டில் அழிந்து போய்விட்டது. மீண்டும் எழுதவும் முடியவில்லை.. வெறுமே விட்டு விடவும் முடியவில்லை.... மன்னிக்க. )

leomohan
19-02-2007, 06:33 PM
நிலவே,
அவளின் அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!


என் அவள் என்னவள்!

ஒப்பற்றவளா உங்கள் ஆள். எங்கே புதன் கிரகத்திலிருந்து வந்தவளா?
:D

ஓவியா
19-02-2007, 07:06 PM
வர்ணனை கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் வார்த்தைக்கு அடங்காத அற்புதமான சிந்தனை.

நன்றி ஷீ-நிசி

ஓவியா
19-02-2007, 07:14 PM
ஒப்பற்றவளா உங்கள் ஆள். எங்கே புதன் கிரகத்திலிருந்து வந்தவளா?
:D

மோகன்,
உங்கள் கேள்வியில் ஒரு விசயம் இருக்கு, புதன் கிழமை பிறந்த பெண்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கலாம்.

அதான் பொன் கிடைத்தாலும் புதன் பெண் கிடைப்பது கடினம் என்று முன்னோர்கள் சொல்ல கேட்டுல்லென். வெனெஸ்டேய் பேபினா ஒரு சுகந்தான் :)

ஒருவேலை புதன் கிரக பெண்தானோ அவள் :D

leomohan
19-02-2007, 07:17 PM
மோகன்,
உங்கள் கேள்வியில் ஒரு விசயம் இருக்கு, புதன் கிழமை பிறந்த பெண்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கலாம்.

அதான் பொன் கிடைத்தாலும் புதன் பெண் கிடைப்பது கடினம் என்று முன்னோர்கள் சொல்ல கேட்டுல்லென். வெனெஸ்டேய் பேபினா ஒரு சுகந்தான் :)

ஒருவேலை புதன் கிரக பெண்தானோ அவள் :D

ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கா. நான் என்னமோ புதன் கிழமையோன்னு நினைச்சேன் :D

ஓவியா
19-02-2007, 07:53 PM
ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கா. நான் என்னமோ புதன் கிழமையோன்னு நினைச்சேன் :D

:D :D :D


நீங்கதானே குசும்பு என்ன மொழினு கேட்டீர்கள்?? :eek:

:D :D

ஷீ-நிசி
20-02-2007, 02:38 AM
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் நன்றி..

கவஞர்கள் எப்பொழுதும் தன் காதலியை நிலவோடும், மலரோடும், இன்னபிற இயற்கை அழகுகளோடும் ஒப்பிடுவார்கள், அப்படி அவர்கள் ஒப்பிடும்போது அந்த இயற்கைகளெல்லாம் மறுத்தால் எப்படி இடுந்திடும் என்பதின் கற்பனையே இந்தக் கவிதை. கடைசியில் தேவதைகளுடன் ஒப்பிடலாம் என்று கருதி வின்னுலகம் சென்று ஒப்பிட்டதாய் முடித்தேன்....

இயற்கைகளின் மறுப்பு இந்த கவிதையில் உள்ளது. இந்த கவிதையின் உட்கருத்து உங்களை அடைந்திருந்தால் அதுவே இக்கவிதையின் வெற்றி.

இளசு
14-03-2007, 06:42 PM
என்னென்ன சொன்னால் அவள் இதயம் வசமாகும் என
அன்னம் உள்பட அத்தனை அழகுகளையும் ஒரு மாற்று குறைத்து
பின்னர் ஒப்பீடு கேட்கப்போன தேவதையே அவளென முடித்து
பின்னிப் பூமுடித்த ஷீ-நிசி கவிதைக்குப் பாராட்டுகள்..

ஷீ-நிசி
15-03-2007, 03:56 AM
மிக்க நன்றி இளசு அவர்களே!

Mathu
15-03-2007, 11:05 AM
4 வரிக்குமேல் எதுவானாலும் அதிகம் படிப்பதில்லை அது தான் என் பலவீனம்.
இவர் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார் பார்க்கலாம என்று போனால் இப்படி கவுத்திடாரே...!
:food-smiley-002:
காதலிக்கும்போது எல்லாமே அழகு தான் :icon_b:

poo
15-03-2007, 11:10 AM
காதலியை ஒப்பீடு செய்ய நினைத்தால் முடிவிலிதான் மிஞ்சும்.. இல்லை கிட்டும்!!

பாராட்டுக்கள் கவிதைக்கு.. முன்வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதுவதற்கு!

ஷீ-நிசி
15-03-2007, 11:22 AM
நன்றி மது, நன்றி பூ....

gragavan
15-03-2007, 11:43 AM
நமக்கென ஒன்று இருக்குமானால் அது நன்று என்று மட்டுமே எண்ணும் எண்ணம். பிறகு எப்படி மற்றவை அழகாகும்! நல்ல கவிதை.

ஷீ-நிசி
15-03-2007, 03:11 PM
நன்றி ராகவன்.... நீங்கள் கவிதைப் பக்கம் எட்டிப்பார்த்து பின்னூட்டமிடுவது ஆச்சரியமாய் உள்ளது....