PDA

View Full Version : அழகான இந்தியா -



மீனாகுமார்
15-02-2007, 10:13 AM
என் குறிப்பேட்டிலிருந்து....


அழகான இந்தியா

மதுரை சந்திப்பு.
பிரிக்கவும் சேர்க்கவும் எழுப்பிய மேடை.
போவோரும் வருவோரும் இடும் பரபரப்பு.
பிரிபவரின் கண்ணீர். சேர்பவரின் மகிழ்ச்சி.

எத்தனை விதமான கால்கள் இங்குமங்கும்.
அவர்களைத் தாங்கிடும் தேய்ந்தோடான மேடை.
மேடுபள்ளம் கீறல்கள் கற்கள் கறைகள்.
இறுதியாக என்று பராமரிக்கப்பட்டதோ தெரியவில்லை.

வெவ்வேறு உருவத்தில் எத்தனை சிகரட்துண்டுகள்.
பொட்டலம் மடித்து பயன்படுத்திய காகித குப்பைகள்.
சுகமாக குடித்து தூக்கியெறிந்த தம்ளர்கள்.
பொருட்கள் சுமந்து கைவிடப்பட்ட பாலிதீன்பைகள்.

கண்ணுக்குத் தெரியாமல் தொண்டைக் குள்ளமர்ந்து
இம்சித்து துப்பிய எச்சில் கற்றைகள்.
பீடாவை குழைத்து குதப்பி பின்னூற்றிய
சிவப்பான இரத்தச் சிதறல் கற்றைகள்.

கொஞ்சமிருந்த செடி கொடி புற்களையும்
அழித்து மண்ணே பூமியானதை காற்றும்
தன் கரத்தினால் அள்ளி எடுத்து
எங்கும் அப்பியிருக்கும் மணற் துகள்கள்.

உலகவெட்பம் என்றும் அதிகமாக சென்றிட
எல்லா தலைகளையும் எரித்து உருக்கிடும்
கதிரவனின் கதிர்கள் சொரிந்த வியற்வைத்துளிகள்.
சுவர்பக்கம் புறப்படும் மூத்திர நாற்றம்.

தண்டவாளத்திற்க் கிடையே இன்றும் மலத்தை
விட்டுச் சென்றிடும் இரயில் பெட்டிகள்.

அத்துர் நாற்றமும் பொருட்படுத்தாது பசியின்
பிணிக்காக அந்த சட்னிதோய்ந்த உளுந்தவடையை
விழுங்கும் உலகலாவிய சகிப்புத்தன்மை யுள்ள
இந்நாட்டு மகிழ்வான மன்னர்கள்.

தண்டவாள அசுத்தத்தை சுத்தம் செய்ய
இன்றும் எந்தவித உபகரணமோ ஆயுதமோ
இல்லாது பணியமர்த்தும் நமது நிர்வாகம்.

கோபம்.
மக்கள் மீதும். பழக்கங்கள் மீதும்.

அவர்கள் திருந்திவிட்டால் ?
சரி.

குப்பையை கொட்ட தொட்டி எங்கே இருக்கிறது ?
அதுவும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ?
தேடிச் சென்று போட முற்ப்பட்டாலும்
அங்கே நிறைந்து திரவம் ஓடுகிறது.

கடைசியாக என்று குப்பை எடுக்கப்பட்டதோ.
தொழிலாளியை பழிக்க மனம் எண்ணுகிறது.
அவர் ஏன் தம் கடமை செய்யவில்லை ?
அவர் அதற்க்கு சம்பளம் வாங்கவில்லையா?

இந்தியாவில் சம்பளம் இலவசம்!
தம்கடமை செய்ய வேண்டும் கிம்பளம்.
அவ்வேலை சேர அவர் கொடுத்த லட்சங்கள்.
அதைப்பெற்ற அதிகாரியும் தம்வேலை சேர
யாருக்கோ கொடுத்த சில கோடிகள்.

பணமே!
நீ எங்கிருந்து வருகிறாய் ?
எங்கு தான் செல்கிறாயோ !

ஆனால் போகும்வழியில் உன் தம் கடமை
மட்டும் செய்யத் தவறு கிறாயே?

தேவை.
சுத்தமான மதுரை சந்திப்பு.
புதிய தொழில்நுட்பங்களும் நாளைய உலகின்
முன்னோடித் தோற்றமும். இந்தியா எங்கும்.

சுத்தம் சுகம் தரும்.
பள்ளிக்கூடப் படிப்பு பள்ளிக்கூடத்திலேயே இருக்கிறது.
பணத்தை மறந்து தம்கடமை செய்வீர்.
சுத்தமே அழகின் முதற்படி.
சிந்தித்து சிந்தித்து உழைத்து உழைத்து
உருவாக்கிடுவீர் சுத்தமான இந்தியாவை.
நாளைய இந்தியாவை இன்றே.

-----

மயூ
15-02-2007, 10:15 AM
உறைக்க வைக்கும் கவிதை நன்றி மீனாக்குமார்....

அறிஞர்
15-02-2007, 02:18 PM
ஒரு சந்திப்பின் நிலையை இங்கு தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்...

நமது இந்தியா... கிம்பளங்களின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்....
உயரவேண்டும்.. என்ற ஆவல் என்றும் மனதில் இருக்கிறது.

நாட்டின் அவலங்கள்... இன்னும் கவிதைகளில் வெளிப்படட்டும்.