PDA

View Full Version : உலகக் கோப்பையை வெல்லும் அணி எது?

ஆதவா
14-02-2007, 03:35 PM
எந்த அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும்? உங்கள் கருத்துக்களும் வாக்கெடுப்பும் அவசியம்..... யார் வெல்லுகிறார்கள் என்று பார்ப்போமே!!

சூப்பர் 8 க்கு கண்டிப்பாக போகக்கூடிய அனைத்து அணிகளையும் இங்கே இணைக்கிறேன்... வாக்களியுங்கள்

ஷீ-நிசி
14-02-2007, 03:48 PM
Group A - Australia, South Africa, Scotland, The Netherlands
Group B - Sri Lanka, India, Bangladesh, Bermuda
Group C - New Zealand, England, Kenya, Canada
Group D - Pakistan, West Indies, Zimbabwe, Ireland

SUPER 8-க்கு தகுதி பெறும் அணிகளாக கருதுவது
A - Australia, South Africa
B - Sri Lanka, India
C - New Zealand, England
D - Pakistan, West Indies

அரை இறுதிக்கான அணிகளாக கருதுவது
South Africa
New Zealand
India
Pakistan

இராசகுமாரன்
14-02-2007, 04:00 PM
South Africa
New Zealand
India
Pakistan

அரையிறுதியில் இங்கிலாந்து அணியில்லையா?

சிலர் கணிப்பு படி இந்த முறை உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

என்னுடைய சாய்ஸ், ம்ம்ம்..., நமக்கு எப்போதுமே தேசப் பற்று அதிகம்.. அதனால் நம் நாட்டை தவிர எந்த நாட்டையும் தேர்வு செய்ய மாட்டேன். அதில் தான் கடைசி வரை நிற்பேன், பார்ப்போமே... திராவிதின் திறமையை..

ஆதவா
14-02-2007, 04:02 PM
Group A - Australia, South Africa, Scotland, The Netherlands
Group B - Sri Lanka, India, Bangladesh, Bermuda
Group C - New Zealand, England, Kenya, Canada
Group D - Pakistan, West Indies, Zimbabwe, Ireland

SUPER 8-க்கு தகுதி பெறும் அணிகளாக கருதுவது
A - Australia, South Africa
B - Sri Lanka, India
C - New Zealand, England
D - Pakistan, West Indies

அரை இறுதிக்கான அணிகளாக கருதுவது
South Africa
New Zealand
India
Pakistan

என்னங்க ஷீ!! ஆஸ்திரேலியாவை விட்டுட்டீங்களே?

என்னைப் பொருத்தவரை.........அரை இறுதி அணிகள்....

Australia
South Africa
England
India or West Indies...... இந்தியாவின் போக்குக்கு வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்..

rajeshkrv
14-02-2007, 04:55 PM
ஆஸ்திரேலியா தான்

மயூ
15-02-2007, 09:49 AM
அசைக்க முடியாத ஆஸ்திரேலியாவிற்கு அல்வா கொடுக்கக் கூடியது நம்ம தென் ஆபிரிக்கா மட்டும்தான்....

அறிஞர்
15-02-2007, 01:25 PM
சொந்த ஊர் காரர்களுக்கு வாய்ப்பு இருக்கலாம்..

ராஜா
15-02-2007, 01:37 PM
இம்முறை தென் ஆப்பிரிக்கா வெல்லும்..
இந்தியா அரை இறுதி வரை செல்லும்..! [திறமை இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவாலும், டி.வி. விளம்பர வருவாய்க்காகவும் அரை இறுதி வரை கொண்டு போவார்கள்..!]

அறிஞர்
15-02-2007, 01:40 PM
இம்முறை தென் ஆப்பிரிக்கா வெல்லும்..
இந்தியா அரை இறுதி வரை செல்லும்..! [திறமை இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவாலும், டி.வி. விளம்பர வருவாய்க்காகவும் அரை இறுதி வரை கொண்டு போவார்கள்..!]
விளம்பர வருவாய் அதிகமுள்ள நாடு.. என்ன பண்ணுவது..

ஆதவா
15-02-2007, 01:46 PM
இம்முறை தென் ஆப்பிரிக்கா வெல்லும்..
இந்தியா அரை இறுதி வரை செல்லும்..! [திறமை இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவாலும், டி.வி. விளம்பர வருவாய்க்காகவும் அரை இறுதி வரை கொண்டு போவார்கள்..!]

எனக்கும் அதே நம்பிக்கை தான்.....

மயூ
15-02-2007, 02:25 PM
எனக்கும் அதே நம்பிக்கை தான்.....
ஏதொ... ம்.... பார்ப்பம்.... :confused:

அறிஞர்
15-02-2007, 02:26 PM
என்னப்பா எல்லாரும் ஒரேடியா தென்னாப்பிரிக்காவை தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்...

பார்க்கலாம்.. என்ன நடக்குது என..

மயூ
15-02-2007, 02:30 PM
என்னப்பா எல்லாரும் ஒரேடியா தென்னாப்பிரிக்காவை தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்...

பார்க்கலாம்.. என்ன நடக்குது என..
இந்தியாவில் நம்பிக்கை இல்லை...
ஆஸ்திரேலியாவில் விருப்பம் இல்லை அதனால் வந்த விளைவாாக இருக்கலாம்??? :confused:

அமரன்
16-02-2007, 06:18 PM
தெனாபிரிக்காதான் எனது சொய்ஸ். அவர்களது நேத்தியான ஆட்டம் இப்போது மிளிர்கின்றது. ஆனால் அவர்களுக்கு உலகக்கிண்ணத்தை பொறுத்தவரை அதிஷ்டம் கைகொடுப்பதில்லை. இம்முறை பார்ப்போம்.

அறிஞர்
16-02-2007, 06:26 PM
தெனாபிரிக்காதான் எனது சொய்ஸ். அவர்களது நேத்தியான ஆட்டம் இப்போது மிளிர்கின்றது. ஆனால் அவர்களுக்கு உலகக்கிண்ணத்தை பொறுத்தவரை அதிஷ்டம் கைகொடுப்பதில்லை. இம்முறை பார்ப்போம்.
உங்கள் எண்ணமாவது... தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ஷடத்தை கொண்டு வருகிறதா எனப்பார்ப்போம்.

ஆதவா
16-02-2007, 06:59 PM
இலங்கைவாழ் தமிழர்களே!!! என்னப்பா ஒரு ஓட்டு கூடவா இல்லை...??

அறிஞர்
16-02-2007, 06:59 PM
இலங்கைவாழ் தமிழர்களே!!! என்னப்பா ஒரு ஓட்டு கூடவா இல்லை...??
நாட்டின் மீது உள்ள நம்பிக்கையோ.. என்னவோ... :eek: :eek:

மனோஜ்
16-02-2007, 07:23 PM
நம் நாடு வெற்றி பெற்றால் நம் இந்தியருக்கு பொருமை
இருந்தாலும் வெற்றியை ஆஸ்திரேலியா தான் பெறும் என்று நினைக்கிறொன்

சுபன்
16-02-2007, 07:50 PM
இலங்கைவாழ் தமிழர்களே!!! என்னப்பா ஒரு ஓட்டு கூடவா இல்லை...??

ஏன் இல்லை இதோ நான் இருக்கிறேன்!!! இலங்கை தோற்றாலும் வென்றாலும் நான் இலங்கைக்குதான் ஆதரவு!! இலங்கையை அடுத்து இந்தியா தான் எனது ஆதரவு வென்றாலும் தோற்றாலும்!!

அறிஞர்
16-02-2007, 07:52 PM
ஏன் இல்லை இதோ நான் இருக்கிறேன்!!! இலங்கை தோற்றாலும் வென்றாலும் நான் இலங்கைக்குதான் ஆதரவு!! இலங்கையை அடுத்து இந்தியா தான் எனது ஆதரவு வென்றாலும் தோற்றாலும்!!
சுபனின் தேசப்பற்று சிறந்தது...

இப்பொழுது தாங்கள் இருக்கும் கனடா எந்த நிலையில் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்.

அமரன்
17-02-2007, 07:38 AM
இலங்கைவாழ் தமிழர்களே!!! என்னப்பா ஒரு ஓட்டு கூடவா இல்லை...??
உமது கேள்வியிலேயே பதில் இருக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்கள்தாம் நாம். ஆனால் இலங்கையர் அல்ல. அதனால்தான் ஓட்டு இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

ஆதவா
17-02-2007, 08:08 AM
உமது கேள்வியிலேயே பதில் இருக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்கள்தாம் நாம். ஆனால் இலங்கையர் அல்ல. அதனால்தான் ஓட்டு இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

நண்பரே!!! நான் முதலில் இலங்கைக் காரர்களே என்றுதான் போட்டிருந்தேன்.. அது சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் மாற்றிவிட்டேன்... அது இருக்கட்டும்..........

நீங்கள் இலங்கையர் அல்ல சரி..... தமிழ்ஈழத்தவர் இல்லையா? உங்களை வாழ வைக்கும் பூமி அதுதானே? அரசியல் பிரச்சனையினால் பூமித்தாயை நிந்திப்பது எங்ஙனம் ஞாயம்?

அமரன்
17-02-2007, 08:15 AM
நீங்கள் இலங்கையர் அல்ல சரி..... தமிழ்ஈழத்தவர் இல்லையா? உங்களை வாழ வைக்கும் பூமி அதுதானே? அரசியல் பிரச்சனையினால் பூமித்தாயை நிந்திப்பது எங்ஙனம் ஞாயம்?
பூமித்தாயை நிந்திப்பது தப்புதான் ஆதவா. இலங்கையின் வடபுலத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களது திறமையை தமிழனின் திறமையை மதிக்காதவர்களுக்கு இலங்கையின் அணிக்கு எனது ஆதரவு இல்லை. இலங்கையின் முக்கிய சாதனை வீரர் முரளீதரன் இங்கிலாந்தில் ஆடவந்தசமயம் இலங்கைத்தமிழர்களின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் சொன்னது "நான் நன்றாக ஆடினாலும் தமிழன் என்ற காரணத்தினால் ஓரங்கட்டப்படுவேன் என நினைக்கின்றேன்" ஆனால் அன்று இருந்த பயிற்சியாளர் வட்மோரினால் பட்டைதீட்டப்பட்டு ஜொலிக்கும் இந்த வைரத்துக்கு ஈடாக பலர் வடபுலத்தில் இருக்கின்றார்கள்.

ஓவியா
17-02-2007, 06:12 PM
தோற்றாலும் பரவாயில்லை, நான் எங்க நாட்டுக்குதான் ஓட்டு போட்டிருகிறேன்.

இங்கிலாந்து :)

ஆதவா
17-02-2007, 06:31 PM
தோற்றாலும் பரவாயில்லை, நான் எங்க நாட்டுக்குதான் ஓட்டு போட்டிருகிறேன்.

இங்கிலாந்து :)

ஒரு வாய்ப்பு இருக்குங்க....இன்னிக்கி தேதிக்கு உலக சாம்பியனை சொந்த மண்ணில் முழுபலத்தோட வீழ்த்திய ஒரே அணியாக இங்கிலாந்து இருக்கு........

வாழ்த்துக்கள்.. உங்கள் நாடு வெல்ல.............

சுபன்
17-02-2007, 09:25 PM
சுபனின் தேசப்பற்று சிறந்தது...

இப்பொழுது தாங்கள் இருக்கும் கனடா எந்த நிலையில் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்.

மற்ற விளையாட்டுக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கிரிக்கெட்டிற்கு இங்கில்லை!! அதனால் சொல்லி கொள்ளும் படி இருக்காது என நம்புகிறேன்!!

அறிஞர்
19-02-2007, 04:04 PM
சர்வதேச அணிகளின் புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா - 128
ஆஸ்திரேலியா - 126
பாகிஸ்தான் - 111
நியூசிலாந்து - 111
இந்தியா - 109
இலங்கை - 108
இங்கிலாந்து - 106
மேற்கு இந்தியா - 101
வங்க தேசம் - 42
ஜிம்பாவே - 22
கென்யா - 0

ஆதவா
19-02-2007, 04:39 PM
சர்வதேச அணிகளின் புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா - 128
ஆஸ்திரேலியா - 126
பாகிஸ்தான் - 111
நியூசிலாந்து - 111
இந்தியா - 109
இலங்கை - 108
இங்கிலாந்து - 106
மேற்கு இந்தியா - 101
வங்க தேசம் - 42
ஜிம்பாவே - 22
கென்யா - 0

ஆஸ்திரேலியாவுக்கு இது போதாத காலம்....... நன்றி அறிஞரே

மதுரகன்
19-02-2007, 04:42 PM
நீங்கள் இலங்கையர் அல்ல சரி..... தமிழ்ஈழத்தவர் இல்லையா? உங்களை வாழ வைக்கும் பூமி அதுதானே? அரசியல் பிரச்சனையினால் பூமித்தாயை நிந்திப்பது எங்ஙனம் ஞாயம்?

என் கருத்தை கூறிவிடுகிறேன் ஆதவா..
ரசிகன் என்ற வகையில் என் ஆதரவு இந்தியாவிற்கே
அதற்காக இலங்கையை ஓரம் கட்டுவதாக அர்த்தமில்லை..

உங்களது நண்பனின் அன்னையின் சிறந்த குணவியல்புகளை மதிக்கிறீர்கள் என்றால் உங்கள் அன்னையை புறக்கணிப்பதாக ஆகுமா ..
அத்துடன் இது ஒரு விளையாட்டுத்தான்
நாங்கள் விளையாட்டை மதமாக பார்ப்பதில்லை...

மேலும்..

உமது கேள்வியிலேயே பதில் இருக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்கள்தாம் நாம். ஆனால் இலங்கையர் அல்ல. அதனால்தான் ஓட்டு இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.

நண்பரே உங்கள் சகோதரன் தவறு செய்தால் உங்கள் தாயை தாயில்லை என பேசுவீர்களா அது போல எமது இலங்கை அனன்னையின் மற்றொரு இனமக்களின் தவறுக்கு எங்கள் அன்னையை கடிதல் தவறே..

அமரன்
19-02-2007, 04:45 PM
நண்பரே உங்கள் சகோதரன் தவறு செய்தால் உங்கள் தாயை தாயில்லை என பேசுவீர்களா அது போல எமது இலங்கை அனன்னையின் மற்றொரு இனமக்களின் தவறுக்கு எங்கள் அன்னையை கடிதல் தவறே..
ஆம். நீங்கள் சொல்வது சரியானவிடயம். ஆனால் எம்முன்னோர் நமது சகோதரர்களாக இந்திய உறவுக்களைத்தானே சுட்டிக்காட்டி எம்மை வளர்த்தனர். அதனால்தான் இப்படி சொல்ல நேர்ந்தது.

மதுரகன்
19-02-2007, 04:51 PM
அதுவும் சரிதான் ஆனால் அது ஒன்று விட்ட உறவு
அது கருப்பை உறவு..

அமரன்
19-02-2007, 04:56 PM
அதுவும் சரிதான் ஆனால் அது ஒன்று விட்ட உறவு
அது கருப்பை உறவு..
ஏற்றுக்கொள்கிறேன் நண்பனே. ஆனாலும் தாய் மாற்றான் தாய்போலல்லவா எம்மை பார்க்கின்றாள்.

மதுரகன்
19-02-2007, 05:11 PM
ஏற்றுக்கொள்கிறேன் நண்பனே. ஆனாலும் தாய் மாற்றான் தாய்போலல்லவா எம்மை பார்க்கின்றாள்.

மீண்டும் மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறீரே
மீண்டும் மீண்டும் நான் கூறுவதும்
சகோதரன் ஒருவனின் தவறுக்கு தாயை ஏன் குற்றவாளியாக்குகிறீர்கள்..
அவள் தவறு இருவரையும் ஒரு கருவறையில் சுமந்ததா அல்லது ஒரே மடியில் பாலூட்டியதா..?

அமரன்
19-02-2007, 05:15 PM
சகோதரன் ஒருவனின் தவறுக்கு தாயை ஏன் குற்றவாளியாக்குகிறீர்கள்..
அவள் தவறு இருவரையும் ஒரு கருவறையில் சுமந்ததா அல்லது ஒரே மடியில் பாலூட்டியதா..?
புரிந்துகொண்டேன் சகோதரா? புரிந்துகொண்டேன்.

மதுரகன்
19-02-2007, 05:21 PM
புரிந்துகொண்டேன் சகோதரா? புரிந்துகொண்டேன்.

கடவுளை வேண்டிக்கொள்கிறேன் தமிழர் சிங்களவர் பேதமின்றி அனைவரும் இதைபுரிந்து கொள்ள...

அமரன்
19-02-2007, 05:23 PM
கடவுளை வேண்டிக்கொள்கிறேன் தமிழர் சிங்களவர் பேதமின்றி அனைவரும் இதைபுரிந்து கொள்ள...
முடிந்த வரை இதற்காக உழைப்போம்.

மதுரகன்
19-02-2007, 05:23 PM
இந்த முறை அரையிறுதிக்கு வரப்போவது...

எனது கருத்து

1.அவுஸ்திரேலியா
2.மேற்கிந்தியதீவுகள்
3.தென்னாபிரிக்கா
4.இந்தியா அல்லது இலங்கை அல்லது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா பெரும்பாலும் மேற்கிந்தியா அல்லது தென்னாபிரிக்காவால் வெளியேற்றப்படும்...

aren
20-02-2007, 01:40 AM
இருக்கும் குழுக்களிலேயே இங்கிலாந்துதான் கொஞ்சம் திறமை குறைவாக இருக்கும் குழுவாக எனக்குத் தெரிகிறது. ஆகையால் நான் நினைக்கிறேன் இந்த முறை இங்கிலாந்து உலகக்கோப்பையை கைப்பற்றும்.

எனக்கு இதுவரை ஜெயிக்காத ஒரு குழுதான் ஜெயிக்கவேண்டும். நியூஜிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து இதுவரை ஜெயிக்கவில்லை. அதில் என்னுடைய ஓட்டு இங்கிலாந்திற்கே.

ஷீ-நிசி
20-02-2007, 02:57 AM
இந்த முறை அரையிறுதிக்கு வரப்போவது...

எனது கருத்து

1.அவுஸ்திரேலியா
2.மேற்கிந்தியதீவுகள்
3.தென்னாபிரிக்கா
4.இந்தியா அல்லது இலங்கை அல்லது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா பெரும்பாலும் மேற்கிந்தியா அல்லது தென்னாபிரிக்காவால் வெளியேற்றப்படும்...

மது நீங்க நியூஸிலாந்து மட்டும் விட்டுடீங்க...

அமரன்
20-02-2007, 10:50 AM
மது நீங்க நியூஸிலாந்து மட்டும் விட்டுடீங்க...
அதையும் சேர்த்தால் திறமையான அனைத்து அணிகளும் வந்து விடுமே.

ஷீ-நிசி
20-02-2007, 11:01 AM
அதையும் சேர்த்தால் திறமையான அனைத்து அணிகளும் வந்து விடுமே.

அதத்தான் நானும் சொன்னேன்

மதுரகன்
20-02-2007, 03:47 PM
மது நீங்க நியூஸிலாந்து மட்டும் விட்டுடீங்க...

இங்கிலாந்தும் இல்லை கவனிக்கவில்லையா அவை இரண்டும் உறுதியற்றவை பொறுத்த இடத்தில் கவிழும் பாருங்கள்...
அவற்றில் ஒன்று உள்ளே வருமானால் மேற்கிந்தியா வெளியேற வேண்டியதுதான்...
ஆசிய அணிகளில் ஒன்று உறுதி...

அறிஞர்
20-02-2007, 03:49 PM
இன்று பிளெமிங்க்.. தங்கள் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கு என சொல்லியுள்ளார்.

என்ன பண்ணுவது.. உலக ஜாம்பவனை (2ம் தர அணியை) வீழ்த்தியுள்ளார்களே...

ஷீ-நிசி
20-02-2007, 03:51 PM
இன்று பிளெமிங்க்.. தங்கள் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கு என சொல்லியுள்ளார்.

என்ன பண்ணுவது.. உலக ஜாம்பவனை (2ம் தர அணியை) வீழ்த்தியுள்ளார்களே...

இரண்டுமுறை தொடர்ந்து கடின இலக்கை சேஸ் செய்தவர்கள் சொல்லக்கூடிய தகுதியான வார்த்தைகள் தானே அறிஞரே!

அமரன்
20-02-2007, 03:58 PM
இரண்டுமுறை தொடர்ந்து கடின இலக்கை சேஸ் செய்தவர்கள் சொல்லக்கூடிய தகுதியான வார்த்தைகள் தானே அறிஞரே
ஆமாம். இப்போது தகுதியானவர்கள். வெற்றியின் மீது நிற்பவன் சொல்லுக்கு மரியாதையே தனி அல்லவா?

virumaandi
20-02-2007, 04:07 PM
1. நியுசிலாந்து
2. தென் ஆப்பிரிக்கா
3. மேற்கு இந்திய தீவுகள்
4. இந்தியா

மதுரகன்
20-02-2007, 05:02 PM
1. நியுசிலாந்து
2. தென் ஆப்பிரிக்கா
3. மேற்கு இந்திய தீவுகள்
4. இந்தியா

என்னங்க அவுஸ்திரேலியாவை குறைத்து மதித்துவிட்டீர்களா..

நியூசிலாந்து உள்ளே வந்தால் வெளியேறுவது மேற்கிந்தியாதான்...

மன்மதன்
20-02-2007, 07:52 PM
தென்னாப்ரிக்காவிற்கு வாய்ப்புள்ளது.. இந்தியா ஃபைனல் போனாலும் போகலாம்.

சேரன்கயல்
02-03-2007, 11:35 AM
இறுதி வரைக்கும் இந்தியா வரும்னு நினைக்கிறேன்...

மயூ
02-03-2007, 02:03 PM
இந்தியா சுப்பர் சிக்ஸ் தேறும் அப்புறம்...
அரையிறுதிக்கும் முன்னேறும்.. அதுக்கப்புறம் போகாதுன்னதுதான் என்னோட கணிப்பு

அறிஞர்
02-03-2007, 02:07 PM
இறுதி வரைக்கும் இந்தியா வரும்னு நினைக்கிறேன்...
உங்கள் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது..

மயூ
02-03-2007, 02:10 PM
உங்கள் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது..
தேசப்பற்று... :)

அமரன்
02-03-2007, 06:26 PM
உங்கள் தேசப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது

வாக்கெடுப்பில் இந்தியா தென்னாபிரிக்காவை நெருங்குகின்றதே. தேசப்பற்றுத்தான் காரணமா?

மன்மதன்
02-03-2007, 06:41 PM
நம்பிக்கைதான் காரணம். சான்ஸ் கூட இருக்கு..

அறிஞர்
02-03-2007, 06:47 PM
வாக்கெடுப்பில் இந்தியா தென்னாபிரிக்காவை நெருங்குகின்றதே. தேசப்பற்றுத்தான் காரணமா?

நம்பிக்கைதான் காரணம். சான்ஸ் கூட இருக்கு..

நம்பிக்கையில்லா வாழ்க்கை என்ன வாழ்க்கை..
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...

சான்ஸ்/அதிர்ஷ்டம்.. யார் பக்கம் அடிக்குதோ...

virumaandi
03-03-2007, 08:33 AM
உலக கோப்பை அட்ட வனையை யாராவது வெளியிடுங்களேன்..

அமரன்
05-03-2007, 04:01 PM
ஐ. யுரேக்கா. நாம இந்தியா முன்னணிக்கி வருகின்றோம்.