PDA

View Full Version : அகர முதலி, காதலி, பேதலி..ஆதவா
14-02-2007, 01:31 PM
அறிந்திருக்கிறேன்
அழகு வாய்ந்தது காதலென
அறியாமற் போனேனே
அதன் மற்றுமொரு
அகத்தினை!

ஆதிமுதல் அந்தம்வரை
ஆவரும் செய்வதுவும் காதல்
ஆயின்
ஆவருக்கும் வெற்றியுண்டோ?
ஆதலினாற் காதல் செய்வீர் என்று
ஆற்றலுற்றவர் சொன்னதும் ஏனோ?
ஆண்மையும் பெண்மையும்
ஆளும் காதலில் சில
ஆழத் தோல்விகள் தவிர்க்கமுடியாதே!

இயல்பாய் பாடுவோம் நாம்
இன்பமாய் உருகுவோம்
இனியவை யாவும்
இவ்வுலகில்
இல்லாதவாறு அனுபவித்து மகிழ்வோம்
இல்லையடா நீ எனக்கு என்றவுடன்
இருதயம்
இனியும் துடிக்குமா?
இல்லை வெடிக்குமா?

ஈயாகப் பறந்து அமர்ந்து
ஈசலின் பெருக்காய் ஊற்றெடுத்து
ஈரம் மிகுந்த உன் இதயத்தில்
ஈடுபாடாய் வளர்த்தினோம் காதல்.
ஈரல்குலை ஏதுமின்றி சொல்லுகிறாய்
ஈரிதயம் பிரிந்து போனதென!
ஈரம் மிகுமே என் கண்களில்.

உடைந்து போன இதயத்தை
உளமாறு ஒட்ட நினைக்கிறேன்
உற்றவள் வார்த்தை ஒவ்வொன்றும்
உன்னதமில்லாதவைகள்
உலகக் காதலில் பல
உயிர் போகக் காரணமும்
உப்பில்லாத இவ்வார்த்தைகளோ?

ஊரறிய உள்ளம் தொட நினைத்து
ஊடகங்கள் வழி சொல்ல நினைத்து
ஊதிய காதல் வெடித்துப் போனதே!
ஊமைக் குரலொன்று அறிந்திலேன்
ஊடலின் போது தெரியாதிலேன்.
ஊற்றெடுத்த காதல் இன்றெனக்கு
ஊறு விளைவித்துவிட்டதே!

எம்மீது ஆட்கொண்ட இவைகள்
எப்படித்தான் நீங்கும்?
எப்பிழையும் பொறுத்தலுண்டு, ஆயின்
எங்கனந்தான் பொறுப்பது நீ செய்தவை?
எளிமையாக்கிவிட்டது
என் முகத்தை இக்காதல்
எருமையாக்கிவிட்டதே!!!
எலும்புகளில் இன்றேனோ
எரிச்சலாகி விட்டதே!

ஏழ்கடலும் ஒப்பாகாது எம் காதல் என
ஏலம் விட்டுச் சொன்னவைகள்
ஏறத்தாழ கேவலந்தான் ஆகிப்போனது
ஏவிய எம் காதற்கவிகள்
ஏழ்புறமும் விசிறியடிக்கப்பட்டது..

ஐக்கியம் நிச்சயமில்லையெனினும்
ஐந்திணைகள் சுற்றினோம்
ஐம்புலன்களில் ஓர் புலனான வாயாலே
ஐயகோ எனும்படி செய்துவிட்டாய்...

ஒடுங்கிய எம் மனது
ஒருக்காலும் இறந்தே போகாது
ஒருவேளையும் என்னை நானே
ஒழித்துக்கொள்ளும் நிலையும் வாராது
ஒரு சேர என்னை நினைப்பவளாய்
ஒருத்தி எனக்கமைவாள்.. என் வாழ்வும்
ஒளிரும் பார்!

ஓலை ஒன்று அனுப்புவேன்
ஓட்டை மிகுந்த மனம் கொண்ட உனக்கு
ஓடோடி வந்துவிடு -அன்று நான்
ஓலமிட்ட கண்களைப் பார்ப்பதற்கு
ஓர்புறம் நீ அழுவாய் என்னை விட்டதற்கு
ஓர்நாளும் உன்னை நினையமாட்டேன்
ஓரவிழியால் நீ என்னை சுட்டதற்கு....

ஔ அவ்வளவாக அமையவில்லை.... அதனால் மன்னிக்க...

ஷீ-நிசி
14-02-2007, 02:37 PM
மிக அருமையான கவிதை நண்பா இது.... அ,ஆ,இ என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் 5,6 வரிகளில் அழகாகவே உள்ளது ஒவ்வொரு வரியும்...

ஆதவா
14-02-2007, 02:45 PM
மிக அருமையான கவிதை நண்பா இது.... அ,ஆ,இ என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் 5,6 வரிகளில் அழகாகவே உள்ளது ஒவ்வொரு வரியும்...

நன்றி நண்பரே!! ஒள எழுதமுடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே
மிஞ்சி இருக்கிறது...

ஷீ-நிசி
14-02-2007, 02:48 PM
நன்றி நண்பரே!! ஒள எழுதமுடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே
மிஞ்சி இருக்கிறது...

ஒளவையானாலும் நீ
ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடு!

ஏதோ எனக்கு தோன்றியது...

அறிஞர்
15-02-2007, 02:22 PM
அருமையாக உள்ளது ஆதவா...

ஆத்திச்சூடியில் உம் வரிகள் தனித்தனியே மின்னுகிறது....

ஷீ-நிசி சொல்வது போல் ஔ என்ற வார்த்தையில் தொடங்குங்கள்...

பத்திரிக்கை உலகிற்கு கவிதைகளை அனுப்புங்கள்..... போட்டிகளில் வென்றால் நாடு தங்களை அறியுமே..

மயூ
15-02-2007, 02:29 PM
ஆ முதல் ஓ வரை காதலுக்கு அர்த்தம் கற்பித்த ஆதவா வாழ்க!!!!!!

ஆதவா
15-02-2007, 03:57 PM
ஒளவையானாலும் நீ
ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடு!

ஏதோ எனக்கு தோன்றியது...

நன்றி நண்பரே.... முயல்கிறேன்... ஔக்கு வேறேதாவது வார்த்தைகளுண்டா எனத் தேடவேண்டும்....


அருமையாக உள்ளது ஆதவா...

ஆத்திச்சூடியில் உம் வரிகள் தனித்தனியே மின்னுகிறது....

ஷீ-நிசி சொல்வது போல் ஔ என்ற வார்த்தையில் தொடங்குங்கள்...

பத்திரிக்கை உலகிற்கு கவிதைகளை அனுப்புங்கள்..... போட்டிகளில் வென்றால் நாடு தங்களை அறியுமே..

மிக்க நன்றி அறிஞரே! உங்கள் ஊக்கத்திலேயே வளர்ந்தவன் நான்.... பத்திரிக்கை உலகிற்கு அனுப்ப எனக்கு ஏனோ ஆசை வருவதே இல்லை. ஒரே ஒருமுறை ஆனந்த விகடனுக்கு எழுத்தாளர் சுஜாதா கேட்டுக்கொண்டதன் பெயரில் நால்வரிக் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்.... பிரசுரமாகியிருந்தது... கிட்டத்தட்ட இரண்டுவருடங்களுக்கு மேலிருக்கும்.... பின் ஒருமுறை எங்கள் ஊர் லயன்ஸ் கிளப் பிற்க்கு அனுப்பி முதல் பரிசைத் தட்டினேன்.....இருமுறையும் வெற்றிதான்... ஆனால் வேலைப் பளு இருந்ததாலும் என்னால் முன்னைப் போல சிந்திக்க இயலாததாலும் கவிதைகள் எழுதுவதையும் குறைத்து அனுப்பும் ஆர்வத்தை கைவிட்டேன்......


ஆ முதல் ஓ வரை காதலுக்கு அர்த்தம் கற்பித்த ஆதவா வாழ்க!!!!!!

பாருங்க.... எதிர்கட்சி தலைவரே நம்மள வாழ்க வாழ்க னு வாழ்த்தும்போது நமக்கென்ன கவலை....:D

ஓவியா
17-02-2007, 07:44 PM
ஆதவா, (விந்தையான வேந்தனே :D )
போட்டி முடிந்த பின் இதற்க்கு ஒரு விமர்சனம் எழுதவும்.

அப்பதான் என்க்கு இந்த கவிதை முழுமையாய் விளங்கும்

அன்பு வேண்டுகோள்

நன்றி தலிவா

ஆதவா
18-02-2007, 01:27 AM
ஆதவா, (விந்தையான வேந்தனே :D )
போட்டி முடிந்த பின் இதற்க்கு ஒரு விமர்சனம் எழுதவும்.

அப்பதான் என்க்கு இந்த கவிதை முழுமையாய் விளங்கும்

அன்பு வேண்டுகோள்

நன்றி தலிவா


ரொம்ப நன்றிங்க தொண்டரக்கா!!
இங்கே போட்டி ஏதும் இல்லையே!!>.... பதிவு இடம் மாறி இருக்கும் போலத் தெரிகிறது. போட்டி கவிதையைப் பற்றீ போட்டீ முடிந்ததும் கண்டிப்பா எழுதறேன்..............

மனோஜ்
18-02-2007, 02:37 PM
அருமையான ஆத்திச்சூடி கவிதை
பலே பலே
க ங ச என்று அடுத்து முயற்சி செய்யுங்கள் ஆதவா

க.கமலக்கண்ணன்
27-02-2007, 05:43 AM
அகரத்தில் புதிய கவிதை
சரித்திரத்தை பதித்திட்ட
ஆதவனே
வாழ்க
நின்னுடைய
தமிழ் புலமை.

இளசு
27-02-2007, 08:50 PM
அகர வரிசையிலும்
அர்த்தத்தை தவறவிடவில்லை

ஆதவாவின் மொழி
ஆளுமை சிலிர்க்க வைக்கிறது..
ஆனந்த விகடன் கவிதையும் தாருங்கள்..


இனிய வாழ்த்துகள்..
இன்னும் புதுமைக் கவிதைகள்
இதுபோல் தொடரட்டும்..

ஆதவா
28-02-2007, 03:11 AM
அனைவருக்கும் நன்றி...... ஆவி யில் பிரசுரமான கவிதையை தேடி பிடித்துத் தருகிறேன்.

poo
28-02-2007, 07:49 AM
ஒரு கட்டுக்குள் எழுத நினைக்கும்போது பல தடைகள் வரும்.. ஆனால்.. நேர்த்தியாக முடித்திருப்பதைக் காணும்போது உங்கள் உழைப்பும்.. உள் ஊற்றும் தெள்ளத் தெளிவாகிறது..

வாழ்த்துக்களும்-பாராட்டுக்களும்!!

ஆதவா
28-02-2007, 11:35 AM
மிக்க நன்றிங்க பூ