PDA

View Full Version : குறும்பா (2) - (நிலா)



நிலா
02-05-2003, 09:42 PM
நாமென்ன இரவு பகலா?
நான் நெருங்க நீ மறைகின்றாய்!
------------------------------

துரும்பினும் கீழாய் நினைப்பினும்
உன்
நினைவில் நானிருந்தால் மகிழ்சியே!

----------------------------

ஊரெல்லாம் அமாவாசை
நீ விழித்திருக்க எனக்கென்ன அமாவாசை?

Narathar
03-05-2003, 04:19 AM
ஊரெல்லாம் அமாவாசை
நீ விழித்திருக்க எனக்கென்ன அமாவாசை?

ஆமாம்!!! நிலவு விழித்திருந்தால்
அமாவாசை என்று யார்சொன்னது?

rambal
03-05-2003, 03:43 PM
குறும்பாவைக் கொட்டிக்குவிக்கும் நிலா அவர்களுக்கு வந்தனங்கள்..
கடைசி குறும்பா காதலின் அழகான வெளிப்பாடு.. நான் ரசித்தது.. தொடருங்கள்..

குமரன்
04-05-2003, 01:41 AM
காதல் படுத்தும் பாடு....
அழகாய் இரண்டே வரிகளில்.

பாராட்டுக்கள்....நிலா
...மேலும் தொடருங்கள்.

நிலா
05-05-2003, 08:19 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி!

இளசு
09-05-2003, 04:29 PM
குறும்பா... அரும்பா!

வாழ்த்துகள் சகோதரி....

Nanban
29-05-2003, 06:47 AM
இரவும் பகலுமாய்
ஒன்றையொன்று துரத்தியே
காலம் கழியும் -
கதிரோன் கதிர் கொண்டு மிளிரும்
நிலாவால் இரவும் பகலும் இணையும்.........

அமரன்
30-05-2008, 05:17 PM
குறும்பா இனிக்கிறது கரும்பா.

சின்னதா ஒரு குறும்புப்பா

இரவும் பகலும்
ஹலோ சொல்லும் நேரங்கள்
அதி அழகான தருணங்கள்.

நிலாபற்றிய நிலாக்கவிதை பற்றி..

என(ம)க்கும் அமாவாசை
எங்கேயோ விழித்திருக்கிறாய்.