PDA

View Full Version : காதலர்தினத்தில் ஒரு போன்ஆதவா
14-02-2007, 02:55 AM
நம்மாளுங்களப் பாருங்க.. என்னிக்கிமே போன்ல பேலன்ஸ் வெச்சிருக்கவே மாட்டாய்ங்க. இன்னிக்கீன்னு பாத்து (FEB 14) முழுசா 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுவானுங்க.. கேட்ட
இலவர்ஸ் டேவாம்....

இப்படித்தான் போன வருசம் நமக்கேதுடா லவ்வர்; நமக்கேதுடா லவ்வர்ஸ்டேன்னு ரீசார்ஜ் பண்ணாம ரெம்ப லோ பேலன்ஸ்ல போனை வெச்சுருந்தேன்.. திடீர்னு ஒரு போன். கரெக்டா 10.00 மணி இருக்கும்.. அநேகமா ராவு காலம் எமகண்டம் எல்லாம் தாண்டி இருக்கும்னு நெனைக்கிறேன். எடுத்து பேசினா,

" ஹலோ, ஈஸ் திஸ் சூர்யா?"

அப்படீன்னு ஒரு பொம்பளக் குரல்வேற... குரல் கூட ரொம்ப ஸ்வீட் :D. நான்கூட ஏதோ நம்ம பார்ட்டியாட்டம் தெரியுதுன்னு கொஞ்சம் பவ்வியமாவே,

" ஏஸ், ஐயாம் சூர்யா. மே ஐ நோ ஹூஸ் திஸ்? " அப்படீன்னு நமக்கு தெரிஞ்ச இங்கிலீசெ போட்டுத்தாக்கினேன். அப்பவே உள்மனசு ஏதோ சொல்லிச்சு. 'டேய்! வேணாண்டா! இது வெவகாரமே சரியில்லன்னு' இந்த உள்மனசு எப்பவுமே இப்படித்தானுங்க,., நல்லதா நாலுவிசயம் நடந்துட்டு இருக்கும்போது எச்சரிச்சுகிட்டே இருக்கும். அத்த விடுங்க...

அவளும் கம்முனு இருக்காம இங்கிலீசுல, " ஐயாம் ஜென்னி ஃப்ரம் கோவை. ரிமெம்பர் மீ? வீ ஹாவ் மெட் இன்.........." அடுக்கீட்டே போனா.... அய்யோ சாமி.. நான் ஏதோ ரெண்டு வார்த்த இங்கிலீசு பேசுவேன். அதுக்காக ஏதோ வெள்ளக்கார நாட்டுல பொறந்தாப்படி நெனச்சுக்கிட்டா என்னாவறது?

" மேடம் தமிழ்லயே பேசுங்க." அப்படீனேன்..

" என்னோட பேரு ஜென்னி. நாம கோயம்புத்தூர்ல மீட் பண்ணினோம்ல. என்ன மறந்துட்டீங்களா? " அப்படீன்னா..

கோயம்புத்தூர்லயா... உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். இதுல கோயம்புத்தூர்னா??? எப்போ ? எப்படி? தெரியலையே!!! சரி அதுக்காக தெரியலைன்னு சொன்னா நல்லா இருக்காதே! அவ வாய்ல இருந்தே உண்மைய வரவெச்சுப்புடுவோம்..

" ஆமாமாம் கொஞ்ச ஞாபகம் இருக்கு... நீங்க கிரிஸ்டீயன் தானே!? ஆனா பிஸினஸ் விசயமா நிறைய பேரை மீட் பண்றதால கொஞ்சம் மறந்துட்டேன்,,, உங்களுக்கு என்ன வேணும்?" கொஞ்சம் பவ்யத்தை கட்டுப்படுத்தியேதான் கேட்டேன்.

" இல்லை.. இல்லை..... ம்ம்ம்ம்.... நீங்க எப்படி இருக்கீங்க,,,"

" இதுக்குத்தான் போன் பண்ணீங்களா? சரியா போச்சு. நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க,.? அட அன்னிக்கி மீட் பண்றப்போ நீங்க கூட எங்கயோ வொர்க் பண்றதா சொன்னீங்கல்ல? மறந்தேபோச்சு பாருங்க..."

இப்படி ஒரு பீலா உட்டாத்தான் கொஞ்சம் கரக்கமுடியும்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.

" நான் ஒர்க் பண்றேனா? யார் சொன்னது?"

அய்யய்யோ! மாட்டிக்கிட்டேனே!!... சூர்யா தப்பிச்சுக்கோடா..

" இல்லீங்க. உங்ககூட வந்தவரு சொன்னார்னு நினைக்கிறேன். (மறுபடியும் ஒரு பொய்) அத விடுங்க.. எதுக்காக போன் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

" ம்ம்ம்ம்... இன்னிக்கி கோயம்புத்தூருக்கு வரமுடியுமா? ப்ளீஸ்...

அய்யோ ரெம்ப கெஞ்சறாளே!! ஒரு வேளை லவ்வா இருக்குமோ... கடவுளே! மாட்டி வுட்றாதேப்பா! அய்யோ இன்னிக்கி வேலண்டைன் டே ல்ல.... முருகா காப்பாத்துப்பா!!! அடச்சே முருகண்ட வேண்டிக்கறேன்பாரு.. விநாயகா காப்பாத்து சாரே!! இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கே! சரி கொஞ்சம் தைரியமா கேட்ருவோம்..

" நீங்க எதுக்குங்க என்னை வரச் சொல்றீங்க?"

அய்யோ ஒருவேளை HDFC Bank ல இருந்து பேசறாங்களோ என்னவோ? சேசே இருக்காது.. நீங்க நல்லா இருக்கீங்கலான்னு பேங்கில இருந்து யாராவது கேப்பாங்களா?

" வந்து... இன்னிக்கி முக்கியமான நாளு ப்ளீஸ்.. எங்கிட்ட பேலன்ஸ் இல்ல.. நீங்க எனக்கு கூப்பிடமுடியுமா? ப்ளீஸ்.."

நெனச்சேண்டா!! முக்கியமான நாளுன்னாலே வேறென்ன... இன்னிக்கி லவ்வர்ஸ்டேதான்... மொதல்ல ஒரு ஃபோன போட்டு எனக்கும் உனக்கும் காதல்கீதல்லாம் ஒத்துவராதுன்னு சொல்லிப்புடனும்... அதுலயும் பாருங்க.. கரெக்டா ஒரு நிமிசத்துக்கு மேல பொண்ணுங்க கூப்புடுவாங்கங்கீறிங்க?? அதுக்கப்பறம் நாம தானே கூப்பிட்டு காச போனுக்கே கொட்டனும்,,,?

அடச்சே! பேலன்ஸ் வேற இல்லையே! இதென்னடா அக்கப்போரா இருக்கு./. அவனவன் லவ்வர் வெச்சுகிட்டு பேலன்ஸ் ஏத்தறான். நமக்கும் இதெல்லாம் தேவைதானா? ஒருவேளை ஆணா பொறந்ததுக்கு இதெல்லாம் அனுபவிக்கனுமோ? என்ன கண்றாவி இது.. சரி ஒரு ரீசார்ஜ் பண்ணீட்டு அப்பறமா பேசுவோம். இப்ப என்ன அவசரம்..
இருந்தாலும் மனசு மட்டும் பாருங்க. எப்பவுமே லொள்ளு பண்ணும்/ 'டேய் உடனே போன் பண்ணுடா'னு சொல்லுது.
சரி ஓகேன்னுட்டு ரீசார்ஜ் பண்றதுக்கு ஒரு கடைக்கு போனேன். அங்க என்னடான்னா, கூப்பன் இல்லியாம்.. ஈஸி ரீசார்ஜ் பண்றதுக்கும் பேலன்ஸ் இல்லையாம்... இது அவுங்க என்ன சொல்றாங்க தெரியுங்களா?
"உங்க ஆள கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்க.. கொஞ்ச நேரத்தில பண்ணிடறேன்."

அடப்பாவிகளா முடிவே பண்ணீட்டீங்களா? சரிசரி எனக்கும் பெருமதான்..

அதுக்குள்ள எனக்கு அஞ்சாறு மிஸ்டு கால் வேற.. நம்மள தொந்தரவு பண்றா.. என்ன பண்ணலாம். ஆங்,.. எதுக்கு தண்டத்துக்கு ஆபீஸ் போன் இருக்கு? அதுல இருந்து பண்ணுவோம். பில்லு நாமளா கட்டப் போறோம்?
உடனே ஆபீஸுக்கு போனேன். அங்க இருந்து அவளுக்கு பண்ணினேன்.. அவ பேரு என்ன சொன்னேன்... ஆங் ஜென்னி... என்ன பேருயா இது? ஜெனிபர் னு வச்சுருந்தா கூட ஏதோ பாடகியாச்சே அதுலயும் நமக்குப் புடிச்ச பாடகியாச்சேன்னு நெனைக்கலாம்... சரி அத்த விடுங்க.. ரிங் போவுது.. என்ன சொல்றாள்னு பாக்கலாம்.

" இவ்ளோ நேரமா? எத்தனை ரிங் வுட்டேன் தெரியுங்களா? நீ ரொம்ப மோசம் டா"

என்னது? எங்கிட்ட ரெண்டு வார்த்தைதான் பேசினா, அதுக்குள்ள வாடா போடான்னு பேசறாளே!! இதுதான் பொம்பளீங்க தந்திரங்கறதா? நான் மட்டும் விட்ருவேனா? தோ பாரு அடிக்கிறேன்..

" இல்ல,, அதுக்குள்ள சின்ன வேலை வந்துட்டுது. சரி நீங்க ஏதோ முக்கியமான நாளு அப்படி இப்படீன்னு சொன்னீங்க.. என்னது?"

பாத்திங்களா? நானே நெனச்சாலும் அந்த மரியாதை மட்டும் நம்மள விட்டு போய்டாது.. :D.

" என்ன நீ நீங்க வாங்க அப்படீன்னு பேசுற?"

' இல்லமா! அவ்வளவா பேசினது இல்லீல்ல.."

" சரி இன்னிக்கு கோயம்புத்தூர் வரமுடியுமா ? முடியாதா? "

" உன்னை ஒருதடவைதான் பாத்திருப்பேன். அதுக்குள்ளே வரச்சொல்றியே! எங்க வரது? எப்படி.? எதுக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்லுடா "

" காந்திபுரம் வந்துட்டு ஒரு மிஸ்டு கால் கொடு நான் வந்துற்றேன்.. மறந்துடாதே! என் செல்லம் நீ! வந்துடுவேன்ன்னு நினைக்கிறேன். இப்ப எனக்கு டைம் ஆச்சு.. வீட்டுக்கு போகனும் உனக்காக நான் மேக்கப் பண்ணீட்டு வரணும்.. கண்டிப்பா வந்துடுட்டா செல்லம். பாய்/ "

" ஹலோ? ஹலோ!!" சே! கட் பண்ணீட்டா! செல்லம்னு வேற சொல்றா.. கண்டிப்பா என்ன பாத்துருப்பா! இல்லாட்டி இப்படியெல்லாம் பேச முடியாது.. காந்திபுரத்துக்கு போகலாமா? இல்லை...

வேண்டவே வேண்டாம்.... அவகிட்ட ஏதாவது சொல்றதுக்காகவாவது போய்த்தான் தீரணும்.வீட்டுக்குப் போய் நல்ல புது ட்ரெஸ் போட்டுக்கிட்டேன்.. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னொருதடவ பல்லு தேச்சு, வாய் கொப்பளிச்சு, மேக்கப் போட்டுகிட்டு. நேரா வண்டியெ எடுத்து ஸ்டேண்ட்ல போட்டுட்டு பஸ் ஏறினேன்.

பஸ்ல போகப் போக என்னென்னவோ நெனைப்பு.. அவ எப்படி இருப்பா? அழகா இருப்பாளா? என்னோட நம்பர் எப்படித் தெரியும்? ஒரே கொழப்பமா இருக்கே! இது காதலா இருக்குமோ? அப்படி இருக்கும் போது நான் என்னன்னு சொல்றது? சே மனசு இருக்கே! இது பெரிய வம்பு புடிச்சது.. ஏதாவது நோண்டிக்கிட்டேதான் இருக்கும்.. தோ அப்படியே காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு வந்துட்டேன்... என்ன ஒரு மணிநேரம்தான்... மனசு அங்க இங்க நெனச்சுக்கிட்டே வந்தாலும் அவினாசி ரோட்ல வர்ற காத்துல தூங்கற சொகம் இருக்கே!! அடா அடா!!
இறங்கின உடனே மிஸ்டு கால் கொடுத்தேன்,. அட!! மிஸ்டு கால் கொடுக்கறதுக்கு நாம என்ன பொண்ணா? காலே பண்ணிடலாம்... (இடையில் ரீசார்ஜும் பண்ணிட்டேன்.. பின்ன? அந்த பொண்ணு போன பாக்கறப்போ பேலன்ஸ் லோ அப்படீன்ன நம்மள தப்பா நெனச்சுறாது? ) போன் ரிங் போவுது போவுது.. போய்கிட்டே இருக்கு.. யார்மே எடுக்கல,.. ஆஹா! வந்தது வேஸ்டு தானா? திரும்பவும் ரிங்க் வுடுவோம்... ஆங் இந்த தடவ எடுத்துட்டா!!

" என்னடா! இவ்ளோ லேட்டா!? நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?"

" சாரிடா செல்லம்.. கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கு டைம் ஆச்சு... நான் நேரா ப்ளூமிங் பட்ஸ் போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வந்துடறேன்... நீ அங்கயே வெய்ட் பண்ணுடா!! "

டொக்.

இவளுக கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கே இவ்ளோ டைமா? அதுசரி! எதுக்கு பொக்கே வாங்கிட்டு வரணும்? இது ஏதோ வெவகாரம்தானாட்டம் தெரியுது... இது வேலைக்காகாது... திரும்பவும் ஒரு ரிங் வுடுவோம்.

" என்னடா! நான் வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுடா செல்லம்..

" இல்ல, அதுக்கில்ல. என்ன கலர் ட்ரெஸ் பண்ணீட்டு வரேன்னு கேக்கலாமேன்னுதான் ஃபோன் பண்ணீனேன்.

" சிவப்பு... அதுதானே சரியான பொருத்தமான கலர்"

பொருத்தமான கலரா? அய்யய்யோ! மனசு பக் பக் னு அடிக்குதே!

" அதுசரி யாருக்கு பொக்கே?"

" டேய்! ஒன்னும் தெரியாதவனாட்டம் நடிக்காதேடா! ஒன்னை வந்து வெச்சுக்கறேன்"

கன்ஃபார்ம்தான்... இவ லவ்வர்ஸ்டே பொக்கே தான் வாங்கப் போறா! நாம மாட்டிக்கிட்டோம்.... திரும்பவும் ரிங்..???? நோ! அவ வரட்டும்.

கொஞ்ச நேரம் அப்படியே திங் பண்ணீட்டு இருக்கச்சே, திடீர்னு முதுகுல ஒரு அடி!
திரும்பிப் பார்த்தா, அட நம்ம மயூரேசன். அற்புதராஜ், மதி!!

" என்னடா இங்க என்ன பண்ணீட்டு இருக்கே! ஊருக்கு வந்தா சொல்ல மாட்டியா?

" இல்லடா ஒனக்குத்தான் போன் பண்ணலாம்னு நெனச்சேன்.. இப்பத்தாண்டா வந்தேன்.. எப்படி இருக்கே!?"

" அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன்.. யாருக்கோ வெய்ட் பண்றாப்ல தெரியுதே?"

" ஒரு பிஸினஸ் விசயமா ஒரு பொண்ண பாக்க வந்தேண்டா. வேற ஒன்னுமில்ல :D /"

" ஓ!! ஒன்னோட பிஸினஸ்ஸ மாத்தீட்டியா? பொக்கேயெல்லாம் விக்க ஆரம்பிச்சிட்டியா?"

ஆகா இவனுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை பக்கத்துல நின்னு ஒட்டுக் கேட்ருப்பானோ?

" உனக்கு எப்படிடா தெரியும்?"

" சும்மா கேட்டேண்டா... நீ எதோ சிவப்புக் கலர் ட்ரெஸ் பண்ண ஒருத்திய பாக்க வந்துருக்கேன்னு எனக்கு எப்படி தெரியும்?

" டேய் உண்மையச் சொல்லு.. எப்படிடா உனக்குத் தெரியும்? ஒட்டு கேட்டியா?"

உடனே ரொம்ப சிரிச்சானுங்க மூனு பேரும்..

" ஏண்டா! எதோ ஒரு பொண்ணு கூப்புட்டு வாங்க அப்படீன்னா வந்துருவியாடா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டே" ன்னு அற்புதராஜ் சிரிச்சுகிட்டே சொன்னான்.

அடப்பாவிகளா இவனுகளோட வேலையா? மயூரேசன் பொம்பள குரல்ல பேசுவானே!! நான் மறந்தே போய்ட்டேனே! அடச்சே! என் வாழ்க்கையில இப்படி ஒரு ஒன்னாம் நம்பர் கேவலத்தை பார்த்ததே இல்லை.. இப்படி ஏமாத்திட்டானுங்களே!

" அண்ணன் நாக்கத் தொங்கப் போட்டு திருப்பூர்ல இருந்து வந்துருக்காரு.. பாவம்டா.. ஏதோ ஒரு ஃபிகர் மாட்டும்னு நெனச்சுருப்பான்.. அத்தயும் கெடுத்து குட்டிச்சொவரு ஆக்கீட்டீங்களேடா" மதி ரெம்ப எளக்காரமா சிரிச்சான்...

எனக்கு ரெம்ப அவமானமா போச்சு... நம்ம புத்தி எங்க போச்சு? ஏதோ ஒரு பொண்ணு பேசினா இப்படித்தான் வந்துடறதா? சே!!

" டேய் பாவம்டா அவன்.. அண்ணனுக்கு ஒரு ட்ரீட் வெச்ச எல்லாம் சரியா போய்டும்//// பாருங்கடா அவன் மொகத்த.. பயங்கரமான ஆசையோட வந்துருப்பான்னு நெனைக்கிறேன். எல்லாம் போச்சு.."" சிரிச்சுகிட்டே இருக்கானுங்க...

இவனுகளுக்கு எங்க தெரியப் போவுது? நாம் லவ் சொல்றதுக்காக வரலேன்னு? சொன்னாலும் நம்ப மாட்டானுங்க.. சரி என்ன பண்ண... தோ பசங்க ஏதோ ட்ரீட்னு சொன்னானுங்க... கொண்டாடிட்டு போக வேண்டியதுதான்... வேற வழி.. மூக்க அறுத்துப்புட்டானுங்க. ரெம்ப வருத்தமா இருந்தா பசங்க கம்முனு இருக்க மாட்டானுங்க... ம்ம்ம்ம்ம் இருந்தாலும் அது ஒரு பொண்ணா இருந்து அதை பாத்து லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்னு சொல்லியிருந்தா கொஞ்சம் திருப்திதான்..... நமக்கு வாழ்க்கையில எல்லாமே ஏமாற்றம் தானே!!!!

(பிகு: காதலர் தினம் என்பதால் இன்று என் மொபைல் அணைத்தே வைத்திருப்பேன்... அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி,...:D )

மதி
14-02-2007, 03:45 AM
ஆதவா..
பின்னிட்டீங்க... ஆனாலும் காதலர் தினதன்னிக்கு ஏமாத்தற கதை தானா எழுத தோணுச்சு...

ஆதவா
14-02-2007, 04:02 AM
ஆதவா..
பின்னிட்டீங்க... ஆனாலும் காதலர் தினதன்னிக்கு ஏமாத்தற கதை தானா எழுத தோணுச்சு...

நன்றிங்க சாரே! நான் எழுத தோணியதே வேற... கடைசியில மறந்துபோய் கதை வேற ரூட்டுக்கு போச்சு.... ஏதோ நம்ம மொத படைப்பு. கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கட்டுமேன்னுதான்....

(உங்க பேர வேற உபயோகம் செஞ்சுட்டேன். மன்னிக்கவும் வேற பெயர் எனக்கு டக் னு வரல..)

மதி
14-02-2007, 04:13 AM
தன்யனானேன்..

mukilan
14-02-2007, 04:18 AM
அத்தனையும் கற்பனையா. நான் கூட உண்மையென்று நினைத்தேன். நல்லா இருக்கு. அடுத்த காதலர் தினத்தில் உண்மையாகவே ஒரு அம்மணி சிவப்பி சுடிதார் போட்டு வரட்டும்.

மதி
14-02-2007, 04:20 AM
நல்லா வாழ்த்தறீங்க முகிலன்..
நீங்க எப்படி..
இந்த வருஷமே சிவப்பு சுடிதார பாக்க போறீயளா..?

mukilan
14-02-2007, 04:24 AM
நான் சிவப்பு சுடிதார் பார்க்கும் படலம் எல்லாம் முடிஞ்சது மதி. அது ஒரு கனாக் காலம். இன்னைக்கு என்னவோ கருப்பு சட்டைதான் போட்டு இருக்கேன். காதலுக்கு எதிர்ப்பு இல்லை. சும்மாதான்.

மதி
14-02-2007, 04:27 AM
ஏங்க அதுக்குள்ள சாமியார் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க....

ஷீ-நிசி
14-02-2007, 04:29 AM
அடப்பாவி,, எங்கேயோ கதைய எடுத்துட்டுப்போய் டப்புனு 'U' டர்ன் அடிச்சிட்டியே!, அந்தப் பொன்னு உங்கிட்ட வந்து பொக்கே கொடுக்கறப்ப சுத்தி நாலு தடியனுங்க உன்ன குமுறப் போறாங்கனு ஆசையா படிச்சிட்டிருந்தேன். ம்ம்ம்ம்...

என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம்...

ஒரு பெண் எனக்கு வீட்டிறகு போன் செய்தாள்.. வேறு யாராகிலும் போன் எடுத்தால், கட் பன்னிடுவாள், நான் எடுத்தால் என் குரலை அடையாளம் கண்டு பேசுவாள், என் அலுவலக எண்ணை கேட்டாள் (அப்போ கைப்பேசி இல்லைங்கோ) நீ யாரென்று சொன்னால்தான் நான் தருவேன் என்றேன். அவள் எனக்கு யாரென்று கடைசி வரை சொல்லவில்லை. அவள் குரல் பரிச்சயமானது போல் இருந்தது. ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் அண்ணன், தம்பி பெயரை கூட சரியாக சொல்லி எல்லாம் நன்றாக இருக்கிறார்களா என்று விசாரிப்பாள். சரி இவள் நம் தெருவில் இருக்கும் பெண்ணாக இருப்பாள் என்று நினைத்தேன். திடீரென்று உங்களை பீச் ஸ்டேஷ்னில் பார்த்தேன் என்றாள்.. அவள் சொன்ன நேரத்தில் நான் அங்கே இருந்திருந்தேன். தொடர்ந்து இப்படியான போன் எங்கள் வீட்டிற்கு வரவும் என்னை பெற்றோர் ஒருமாதிரி பார்த்தார்கள், ஏன் அவள் தைரியமாக அவள் பெயரை சொல்லி போன் செய்யாமல் நாங்கள் போனை எடுத்தால் கட் பன்னுகிறாள் என்று பெற்றோருக்கு கோபம்.. நீ கொடுக்காமல் எப்படி அவள் போன் பன்ன முடியும் என்று? கேட்டார்கள்..

உடனே நான் கோபமாக சொன்னேன்.. நான் இனிமேல் போன் எடுக்கமாட்டேன், நீங்களே எடுங்கள் என்று.. அடுத்த தினத்தில் போன் வந்தது, என் பெற்றோர் அவளை நன்றாக திட்டிவிட்டார்கள் என்று எண்ணுகிறேன்.. நான் அன்றைக்கு வீட்டில் இல்லை. வீட்டிற்கு வந்தபிறகு சொன்னார்கள். அதன்பின் அவள் போன் பன்னுவதில்லை. எனக்கும் என்னை இவ்வளவு விரும்பியவள் யாரென்று இதுவரை விடை கிடைக்கவில்லை.

ஆதவா
14-02-2007, 04:30 AM
அத்தனையும் கற்பனையா. நான் கூட உண்மையென்று நினைத்தேன். நல்லா இருக்கு. அடுத்த காதலர் தினத்தில் உண்மையாகவே ஒரு அம்மணி சிவப்பி சுடிதார் போட்டு வரட்டும்.
நன்றிங்க
பின்குறிப்பு பாருங்க சாரே!... அசின் வெயிட்டிங்காமாம்.... நாந்தான் போன ஆஃப் பண்ணி வெச்சுடுவேன்ல...:D

சே-தாசன்
14-02-2007, 04:36 AM
அடச்சே எல்லாமே கற்பனையா?

மயூ
14-02-2007, 04:54 AM
அடச்சே எல்லாமே கற்பனையா?
பின்ன எப்படி மயூரேசன் இந்தியா போவார்....
என்னப்பா மூளைய பாவிக்கிறேலயா??? :D :D :D

ஆதவா நல்ல கதை... கடைசியில் இடக்குவாக்காக மாறும் கதைகளையே நான் இரசிப்பேன்... அப்படியான கதையே இது!!!:)

இரசித்தேன்... அப்புறம் ஒன்று
இருக்கிறதவிட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படாதீங்க (அதான்.. அசீன் மட்டரு.. அசின் மயூரேசனுக்கு என்று ஆகிட்டது உங்களுக்குத் தெரியாதா?:mad: ) :D :D

sham
14-02-2007, 05:31 AM
கவனம் மயூ அண்ணே! அசின் அசின் என்று கடைசியில் எல்லாம் பிசினாய்ப்போகப்போகுது .
மிகப்பிரமாதம் ஆதவா! கதை கற்பனையாகிலும் வாசிக்கும் போது சம்பவத்தை நேரில் பார்த்தது போன்ற உண்ர்ச்சி ஏற்பட்டது. உண்மையிலேயே கற்பனைதானா? அல்லது உண்மை கற்பனை ஆக்கப்பட்டதா?

மயூ
14-02-2007, 05:34 AM

கதையில் மயூரேசன் எல்லாம் வருவதில் இருந்து தெரிவதில்லையா உண்மையா பொய்யா என்று

பி.கு : மயூரேசன் பொய் சொல்வதில்லை.

ஷீ-நிசி
14-02-2007, 05:41 AM
இருக்கிறதவிட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படாதீங்க (அதான்.. அசீன் மட்டரு.. அசின் மயூரேசனுக்கு என்று ஆகிட்டது உங்களுக்குத் தெரியாதா?:mad: ) :D :D

மயூ.. அசினும், ஸ்ரேயாவும் ஒரே சண்டை, ரெண்டுப்பேரும் என்னை பிரபோஸ் பன்னி.. நான் தான் ஸ்ரேயாவா choose பன்னிட்டு அசினுக்கு உன் நம்பரை கொடுத்தேன்.. நாலு பேர் நல்லாருந்தா சந்தோஷம் தானே

மயூ
14-02-2007, 05:45 AM
மயூ.. அசினும், ஸ்ரேயாவும் ஒரே சண்டை, ரெண்டுப்பேரும் என்னை பிரபோஸ் பன்னி.. நான் தான் ஸ்ரேயாவா choose பன்னிட்டு அசினுக்கு உன் நம்பரை கொடுத்தேன்.. நாலு பேர் நல்லாருந்தா சந்தோஷம் தானே
பேசாம கொழும்பிலேயே நல்ல சுவராக் கட்டி அப்பப்ப தலைய அந்த சுவரில மோதிக்கணும் போல இருக்குது

கற்பனையில் கூட சந்தோஷமாக இருக்க விடமாட்டீங்க போல இருக்குது!!!!

ஆதவா
14-02-2007, 07:02 AM
பின்ன எப்படி மயூரேசன் இந்தியா போவார்....
என்னப்பா மூளைய பாவிக்கிறேலயா??? :D :D :D

ஆதவா நல்ல கதை... கடைசியில் இடக்குவாக்காக மாறும் கதைகளையே நான் இரசிப்பேன்... அப்படியான கதையே இது!!!:)

இரசித்தேன்... அப்புறம் ஒன்று
இருக்கிறதவிட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படாதீங்க (அதான்.. அசீன் மட்டரு.. அசின் மயூரேசனுக்கு என்று ஆகிட்டது உங்களுக்குத் தெரியாதா?:mad: ) :D :D

நன்றி மயூரேசன்.. நான் எப்பவுமே இருக்கறதுக்குத்தான் ஆசைப்படுவேன்... அசின் கூடவே இருக்கும்போது வேறெதுக்கு நான் ஆசைப்படணும்?:D

ஆதவா
14-02-2007, 07:03 AM
கவனம் மயூ அண்ணே! அசின் அசின் என்று கடைசியில் எல்லாம் பிசினாய்ப்போகப்போகுது .
மிகப்பிரமாதம் ஆதவா! கதை கற்பனையாகிலும் வாசிக்கும் போது சம்பவத்தை நேரில் பார்த்தது போன்ற உண்ர்ச்சி ஏற்பட்டது. உண்மையிலேயே கற்பனைதானா? அல்லது உண்மை கற்பனை ஆக்கப்பட்டதா?

ரொம்ப நன்றி ஷாம்... கற்பனைதான்.. உண்மையல்ல

ஆதவா
14-02-2007, 07:05 AM
மயூ.. அசினும், ஸ்ரேயாவும் ஒரே சண்டை, ரெண்டுப்பேரும் என்னை பிரபோஸ் பன்னி.. நான் தான் ஸ்ரேயாவா choose பன்னிட்டு அசினுக்கு உன் நம்பரை கொடுத்தேன்.. நாலு பேர் நல்லாருந்தா சந்தோஷம் தானே

நீங்க சொல்றது நம்ம பூக்கடை அசின் தானே??:D

ஷீ-நிசி
14-02-2007, 08:13 AM
நீங்க சொல்றது நம்ம பூக்கடை அசின் தானே??:D

பூக்கடை அசினா.? அடப்பாவிகளா அந்த ஏரியாக்கூட விடுறதில்லையா?

மயூ
14-02-2007, 09:20 AM
மயூரேசனை அழைக்கும் அசின்
http://photos.hi5.com/0001/455/876/1BL81S455876-02.jpg

மயூ
14-02-2007, 09:24 AM
மயூரேசனுக்கு காதலர் தினத்தில் பூ கொடுக்கும் அசின்!!!!!
மக்களே பொறாமை வேண்டாம்
உங்களுக்கு கஷ்டமாக இருப்பது எனக்குப் புரிகின்றது..
என்ன செய்வது... அதுதான் கலிகாலம்...http://photos.hi5.com/0000/196/014/PER20Z196014-02.jpg

ஷீ-நிசி
14-02-2007, 09:26 AM
மயூ நீங்கள் கொடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது, அசின் என்னை அழைப்பது போல் உள்ளது... அசின் எனக்கு பூ கொடுப்பது போல் உள்ளதேப்பா....

Mathu
14-02-2007, 09:27 AM
மயூரேசனை அழைக்கும் அசின்
http://photos.hi5.com/0001/455/876/1BL81S455876-02.jpg

அழைப்பது அசினா அசினுள் ஒளிந்திருக்கும் கல்பனாவா மயூர்...!

ஆதவ கற்பனையான நியம் அசத்திடீங்க..... பலபேர் இப்படி தான்
மாட்டிட்டு முளிக்கிறாங்க..... ;)

ஆதவா
14-02-2007, 11:07 AM
ஹி ஹிஹி.... காலங்கார்த்தால் நான் மயூரேசனுக்கு அனுப்பிய அசின் புகைப்படங்கள்..... எனக்கு போட நேரமில்லாததால மயுரே போட்டுட்டாப்புல.....:D

கொசுறூ தகவல்: என்னோட ஃபோன் ஆஃப் ஆகினது தெரிஞ்சு அசின் கொஞ்சம் கலக்கம் ஆகிட்டாங்களாம்... தெரிஞ்சம்வங்க மூலமா வந்த தகவல் இது.:D

மயூ
14-02-2007, 12:43 PM
அழைப்பது அசினா அசினுள் ஒளிந்திருக்கும் கல்பனாவா மயூர்...!

ஆதவ கற்பனையான நியம் அசத்திடீங்க..... பலபேர் இப்படி தான்
மாட்டிட்டு முளிக்கிறாங்க..... ;)
அதாவது கஜனி படத்தில் வந்த கல்பனா வேடம் பிடிச்சுப் போச்சா அதுக்குப் பிறகு நான் அவவ அப்பிடித்தான் கூப்பிடுவேன்.!!!!
:D

ஆதவா
14-02-2007, 01:06 PM
அடப்பாவி,, எங்கேயோ கதைய எடுத்துட்டுப்போய் டப்புனு 'U' டர்ன் அடிச்சிட்டியே!, அந்தப் பொன்னு உங்கிட்ட வந்து பொக்கே கொடுக்கறப்ப சுத்தி நாலு தடியனுங்க உன்ன குமுறப் போறாங்கனு ஆசையா படிச்சிட்டிருந்தேன். ம்ம்ம்ம்...

என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம்...

உடனே நான் கோபமாக சொன்னேன்.. நான் இனிமேல் போன் எடுக்கமாட்டேன், நீங்களே எடுங்கள் என்று.. அடுத்த தினத்தில் போன் வந்தது, என் பெற்றோர் அவளை நன்றாக திட்டிவிட்டார்கள் என்று எண்ணுகிறேன்.. நான் அன்றைக்கு வீட்டில் இல்லை. வீட்டிற்கு வந்தபிறகு சொன்னார்கள். அதன்பின் அவள் போன் பன்னுவதில்லை. எனக்கும் என்னை இவ்வளவு விரும்பியவள் யாரென்று இதுவரை விடை கிடைக்கவில்லை.

:mad: :mad: வருத்தம்தான்........

அறிஞர்
14-02-2007, 04:11 PM
உண்மை கதை போல் எடுத்து சென்று கவுத்த விதம் அருமை...

காதலர் உள்ளவருக்கு காதலர் தினம்.
காதலர் இல்லாதவருக்கு ஏமாற்ற தினம்...
--
இது போல் ஈமெயிலில் நண்பர்கள் விளையாடுவார்கள்.. 1998ஆம் ஆண்டு.. பல நாட்டு தோழிகளுடன் சாட், ஈமெயிலில் கதைப்பது உண்டு....

நண்பர்கள் இணைந்து ஒரு கற்பனை பெண்ணை உருவாக்கி விளையாண்டனர்.. சிறிது நாட்கள்... என்ன பண்ணுவது.. அது ஒரு வகை இன்பம்....
---
ஷீ-நிசியின் காதலியை கண்டி பிடிக்கமுடியாமல் போனது வருத்தம் தருகிறது.

ஷீ-நிசி
14-02-2007, 04:13 PM

காதலி என்று சொல்ல முடியாது அறிஞரே!...

அறிஞர்
14-02-2007, 04:16 PM
காதலி என்று சொல்ல முடியாது அறிஞரே!...
தங்களை காதலித்ததால் சொல்லலாம்.... ஆர்வமாக இருந்ததால்.. தானே கதைத்துள்ளார்.. கண்காணித்துள்ளார்.

ஆதவா
14-02-2007, 04:16 PM
உண்மை கதை போல் எடுத்து சென்று கவுத்த விதம் அருமை...

காதலர் உள்ளவருக்கு காதலர் தினம்.
காதலர் இல்லாதவருக்கு ஏமாற்ற தினம்...
--
இது போல் ஈமெயிலில் நண்பர்கள் விளையாடுவார்கள்.. 1998ஆம் ஆண்டு.. பல நாட்டு தோழிகளுடன் சாட், ஈமெயிலில் கதைப்பது உண்டு....

நண்பர்கள் இணைந்து ஒரு கற்பனை பெண்ணை உருவாக்கி விளையாண்டனர்.. சிறிது நாட்கள்... என்ன பண்ணுவது.. அது ஒரு வகை இன்பம்....
---
ஷீ-நிசியின் காதலியை கண்டி பிடிக்கமுடியாமல் போனது வருத்தம் தருகிறது.

நன்றிங்க... இப்படியே கதை எழுதினா பல உண்மைகள் வெளிவரும் போல...:D :D

ஆதவா
14-02-2007, 04:17 PM
தங்களை காதலித்ததால் சொல்லலாம்.... ஆர்வமாக இருந்ததால்.. தானே கதைத்துள்ளார்.. கண்காணித்துள்ளார்.

இல்லையெனில் இப்படி வைத்துக்கொள்ளலாம்...

ஷீயைக் காதலித்தவர்...

ஷீ-நிசி
14-02-2007, 04:18 PM
தங்களை காதலித்ததால் சொல்லலாம்.... ஆர்வமாக இருந்ததால்.. தானே கதைத்துள்ளார்.. கண்காணித்துள்ளார்.

என்னவோ எனக்கு யாரென்றே தெரியவில்லை. அதன்பின் நிறைய வந்தது போனது.. இன்று குடும்பஸ்தன்:confused:

அறிஞர்
14-02-2007, 04:18 PM
நன்றிங்க... இப்படியே கதை எழுதினா பல உண்மைகள் வெளிவரும் போல...:D :D
என்ன பண்ணுறது.. அனுபவம் அதிகம். உங்க கதை.. ஒவ்வொன்றாக யோசிக்க வைக்குது

ஆதவா
14-02-2007, 04:21 PM
என்ன பண்ணுறது.. அனுபவம் அதிகம். உங்க கதை.. ஒவ்வொன்றாக யோசிக்க வைக்குது

ஆமாமாம்..... முதல்ல ரஷயாகாரி காதல்... இப்போ காதலர்தினப் போன்.... இன்னும் என்ன இருக்கோ??

ஏ மனமே!! அறிஞர் மனசுல இருக்கிறத அவருக்கே தெரியாம திருடு.... அதை கதையா சொல்லலாம்....

ஓவியா
17-02-2007, 10:02 PM
ஆதவா கலக்கலான பதிவு.

நல்ல கற்ப்பனை திரண்

அடுத்த வருடம் சிகப்பு சுடிதாரை காண வாழ்த்துக்கள்,
அட்வான்ஸா 1000 ரூபா போட்டு வச்சுக்கோபா.
திடீர்னு பச்சை சேலை பொண்னு கூப்பிட்டாலும் கூப்பிடலாம். :Dகாதலர் தினம் கொண்டாடயெல்லாம் மச்சம் வேண்டுமப்பா :cool:

ஆதவா
18-02-2007, 02:24 AM

ரொம்ப நன்றிங்க....... சேலையாவது சுரிதாராவது.... எதுவுன் வாணாம்.... ஏற்கனவே மூக்கறுந்து போய் இருக்கேன்......

மனோஜ்
18-02-2007, 03:28 PM
ஆதவா நானும் உன்மை என்று நினைத்து விட்டேன்
நடப்பது போன்று எழுதியது அருமை அடுத்த காதலர் தினத்தில் உன்மையை எழத வாழ்த்துக்கள்

ஆதவா
22-02-2007, 03:17 PM
ஆதவா நானும் உன்மை என்று நினைத்து விட்டேன்
நடப்பது போன்று எழுதியது அருமை அடுத்த காதலர் தினத்தில் உன்மையை எழத வாழ்த்துக்கள்

உண்மையா? வேண்டாம் சாமி....

அறிஞர்
22-02-2007, 03:20 PM
ரொம்ப நன்றிங்க....... சேலையாவது சுரிதாராவது.... எதுவுன் வாணாம்.... ஏற்கனவே மூக்கறுந்து போய் இருக்கேன்......
ஊருக்கு ஊரு ஒன்னு.. நாட்டுக்கு நாடு ஒன்னு... இருப்பதால் சலித்து போய் சொல்லுறீங்களா நண்பா..

மனோஜ்
22-02-2007, 03:22 PM
உண்மையா? வேண்டாம் சாமி....

ஏன் ஆதவா காதல் வேன்டாமா கவிதைகளை அனுபவித்து எழத வாய்ப்பு கிடைக்கும் எங்களுக்கும் நல்ல கவிதைகள் கிடைக்கும் :D :D

ஆதவா
22-02-2007, 03:30 PM
ஏன் ஆதவா காதல் வேன்டாமா கவிதைகளை அனுபவித்து எழத வாய்ப்பு கிடைக்கும் எங்களுக்கும் நல்ல கவிதைகள் கிடைக்கும் :D :D

நண்பா! காதலில்லாமல் கவிதையும் இல்லை... ஆனாளப்பட்ட திருவள்ளுவ கிழவரே காதலைப் பற்றி பாடவில்லையா? இருந்தாலும் காதல் மிகவும் வலிமையானது.. அதேசமயம் நம் பெற்றவர்களுக்கும் நாம் மதிப்பு கொடுக்கவேண்டும்; அவர்களின் விருப்பமில்லாமல் காதல் செய்து கல்யாணம் செய்து வீண்தான்.... கல்யாணத்திற்கு பின்னோ அல்லது நிச்சயக்கப்பட்ட பெண்ணை காதலிப்பதுவோ தான் மிக மிக மிக சிறந்தது..

நான் அந்த நிலையில்தான் இருக்கிறேன்..

போதும்டா சாமி.. இப்ப எழுதறதுக்கே என்னால முடியல. இதில அனுபவிச்சு எழுதிட்டா அவ்வளவுதான்... மன்றத்தில ஒரு சம்பளம் போட்டுக் கொடுத்து கவிதை எழுதற வேலை கொடுத்தாங்கன்னா பரவாயில்லை....:D

ஆதவா
22-02-2007, 03:31 PM
ஊருக்கு ஊரு ஒன்னு.. நாட்டுக்கு நாடு ஒன்னு... இருப்பதால் சலித்து போய் சொல்லுறீங்களா நண்பா..

ஆஹா!!!! அறிஞர் எங்க சுத்தி எங்க வர்றார்னு தெரியுதுப்பா!!!!
:eek:
எஸ்கேப்;;;;;;;;;;;:D

மயூ
24-02-2007, 01:26 PM
மன்றத்தில ஒரு சம்பளம் போட்டுக் கொடுத்து கவிதை எழுதற வேலை கொடுத்தாங்கன்னா பரவாயில்லை....:D
விட்டா இதுவும் கேப்பீங்க இதுக்கு மேலயும் கேப்பீங்க!!! ;)

ஆதவா
24-02-2007, 04:04 PM
விட்டா இதுவும் கேப்பீங்க இதுக்கு மேலயும் கேப்பீங்க!!! ;)

ஹி ஹி ஹி.... அறிஞர் இருக்க பயமேன்? எல்லாம் செய்து தருவார்....:D :D :D

மன்மதன்
04-03-2007, 03:44 PM
ஏதோ நம்ம மொத படைப்பு. கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கட்டுமேன்னுதான்....

(உங்க பேர வேற உபயோகம் செஞ்சுட்டேன். மன்னிக்கவும் வேற பெயர் எனக்கு டக் னு வரல..)

மொத படைப்பே இதமா இருக்கே.... பாராட்டுகள் சாரே..
(இப்பதான் படிக்க நேரம் கிடைத்தது.. மன்னிக்க)

மன்மதன்
04-03-2007, 03:46 PM
ஷீ , அந்த டெலிபோன் காதலி இன்னும் யாரென்று தெரியவில்லையா?? ஒருவேளை அசினாவே இருக்கக்கூடும்!!

ஆதவா
04-03-2007, 04:23 PM
நன்றிங்க மன்மதன்.... ஷீக்கு வந்த போன் அதிகாரபூர்வ தகவலின்படி பரவை முனிம்மா வாம்....

மன்மதன்
05-03-2007, 06:57 AM
ராசா.. ஷீ ராசா..ன்னு சொல்லியிருப்பாரே. அதை வைத்தே கண்டுபிடித்திருக்கலாமே ஷீ ?? :D

சூரியன்
26-08-2010, 05:32 PM
நான் கதையின் முடிவை வேற மாதிரி எதிர் பார்த்தேன்,இருந்தாலும் கதை நன்றாக இருந்தது.