PDA

View Full Version : பிப்ரவரி 14-ல் ஒரு காதல் கடிதம்



ஷீ-நிசி
13-02-2007, 05:09 AM
முகவரி அறியாதவன் எழுதின
முத்தான வரிகளை ஏந்தின
வாழ்த்து அட்டையை
விலை கொடுத்து வாங்கினேன்,
என் முளை* விடுத்த காதலுக்காய்;

பட்டு பூச்சியின்
பரிணாம நிலையில்தான்
நானும் என் காதலும்;

வானவில்லாளே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறான்.

காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!
அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,
வலது கையில்
வாழ்த்து அட்டையை வழங்கிக்கொண்டு
என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,

நம் இமைகள்
கொண்ட உறவால்
உண்டான ஜீவன்
இந்த காதல்..

இதழ் பிரித்து
வார்த்தை சேர்த்து
சொல் பெண்ணே!

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...

----------------------------------------------------
(*விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்களே! அந்த முளை... என் காதலும் இன்று முளை விடுத்துள்ளது நாளை பயிராய் வளர்ந்திட அவளின் கவன மழை பொழிந்திட வேண்டும்)

மயூ
13-02-2007, 05:59 AM
ஐயா!
இதை நான் பாவிச்சுக்கலாமா என்னோட தேவைக்கு :)

ஷீ-நிசி
13-02-2007, 06:49 AM
ஐயா!
இதை நான் பாவிச்சுக்கலாமா என்னோட தேவைக்கு :)

ENJOY.... உங்கள் காதல் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

ஆதவா
13-02-2007, 03:02 PM
ஐயா!
இதை நான் பாவிச்சுக்கலாமா என்னோட தேவைக்கு :)

அதுமட்டும் எண்ட மரியாவுக்கா இருந்துச்சு,,,, ஈழம் வந்து கொண்டு போட்டுடுவன்....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :angry: :angry: :angry: :angry:

பென்ஸ்
13-02-2007, 03:17 PM
ஷீ,
மன்னிக்க நண்பா...
உங்க கவிதையை நான் திருடி விட்டேன்...

ஷீ-நிசி
13-02-2007, 03:18 PM
ஷீ,
மன்னிக்க நண்பா...
உங்க கவிதையை நான் திருடி விட்டேன்...

நாலுபேர் நல்லா இருக்கறாங்கனா தப்பே இல்ல....
வாழ்த்துக்கள் நண்பரே!

அறிஞர்
13-02-2007, 03:20 PM
என்னப்பா அவர் கவிதை தான் கொடுத்தார்.

அதை ஒவ்வொருத்தராக திருடுறீங்க....

நானும் திருடலாம்.. யாருக்கு கொடுக்கலாமென யோசிக்கனும். இல்லாவிட்டால் மனைவியிடம் கேட்கவேண்டும்.

ஷீ-நிசி
13-02-2007, 03:23 PM
என்னப்பா அவர் கவிதை தான் கொடுத்தார்.

அதை ஒவ்வொருத்தராக திருடுறீங்க....

நானும் திருடலாம்.. யாருக்கு கொடுக்கலாமென யோசிக்கனும். இல்லாவிட்டால் மனைவியிடம் கேட்கவேண்டும்.

காதலியே இல்லைன்னாலும் பரவாயில்லை அறிஞரே! யாருக்கு நினைக்கிறீங்களோ கொடுங்கள்! அவங்க காதலியாகிடுவாங்க.. (நம்பிக்கைதானே வாழ்க்கை)

அறிஞர்
13-02-2007, 03:24 PM
காதலியே இல்லைன்னாலும் பரவாயில்லை அறிஞரே! யாருக்கு நினைக்கிறீங்களோ கொடுங்கள்! அவங்க காதலியாகிடுவாங்க.. (நம்பிக்கைதானே வாழ்க்கை)
அப்படின்னா.. வீட்டுல இருக்குறவங்க :confused: :confused: :confused: :confused:

ஷீ-நிசி
13-02-2007, 03:29 PM
அப்படின்னா.. வீட்டுல இருக்குறவங்க :confused: :confused: :confused: :confused:

அறிஞரே என்னிடம் பதிலில்லை...

(அப்பாடா தப்பிச்சாச்சி):rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
14-02-2007, 03:28 AM
நண்பரே! காதலர் தினம் என்பது உலக காதல் செய்பவர்களுக்கும் காதல் அரும்புபவர்களுக்கும் உகந்த தினம்.. சிறப்புக்கள் பல உண்டு... வேலண்டைன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அவரைப் போல இன்று உருவமற்ற கவிதை மட்டுமே காதலைச் சேர்த்து வைக்கிறது.. மானிடர்கள் வெறும் அற்பம்தான். காதல் அதில் சொற்பம். உலகம் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது..

காதல். ஒரு உன்னதமான வார்த்தை.. பிறந்த குழந்தை மேல் பெற்ற தாயும் வளரும் குழந்தைமேல் தகப்பனும் காளைப் பருவத்தில் ஒரு பெண்ணும் அவனுக்கொரு மகவு பிறந்தால் அதுவும்....... காதல் ஒரு சுழற்சி. திரும்பி அடிக்க வந்து நம்மைத் தாக்கும் ஒரு பந்து போலத்தான் காதல். ஒவ்வொரு காதலுக்கும் பின் காமம் மறைந்து இருப்பது தவிர்க்க முடியாது. இவ்விரண்டும் உலக மாற்றங்கள் அனைத்திலும் மாறாதவை...

காதலின்றி யாருளர்?

முகவரி அறியாதவன் எழுதின
முத்தான வரிகளை ஏந்தின
வாழ்த்து அட்டையை
விலை கொடுத்து வாங்கினேன்,
என் முளை* விடுத்த காதலுக்காய்;

நான் உங்களிடம் எதிர் பார்த்ததுதான் இந்த காதலர்தினக் கவிதை.... சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள்.. யாரோ ஒருவன் எழுதின முத்தான வரிகள்தாம்... அவை சத்தான வரிகளும்தாம். முளை விடுத்த காதல் என்பது அருமை../.

பட்டு பூச்சியின்
பரிணாம நிலையில்தான்
நானும் என் காதலும்;

மூன்று வரிகள்தான்... யோசிக்கவேண்டிய வரிகள்.. பட்டுப்பூச்சியின் பரிணாமம் நான் கிட்ட இருந்து பார்த்து இருக்கிறேன்.. பட்டு நூல்கள் எப்படி அந்த புழுவிடமிருந்து உருவுகிறார்கள் என்பது கண்ணாரக் கண்ட விடயம்.. ஒரு புழுவானது பரிணாமத்தில் பட்டாம்பூச்சியாக மாறிவிடும்.. காதலுக்கு இது அதியற்புத பொருத்தம்.. காதல் உண்டான நிலையில் காதலன் ஒரு புழு. அது ஏற்பட்டபின் பட்டாம் பூச்சி./... நினைக்கவே ஆனந்தம்தான்.

வானவில்லாலே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறான்.

முன்னர் சொன்ன வரிகளே இங்கே அடக்கம். பிழையா அல்லது பொருள்தானா?

காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!
அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இந்த வரி ஒவ்வொருவருக்கும் ஒருமாதிரி தோன்றலாம். ராகத்தில் சந்திப்பிழை... ஒரு ராகத்தில் பிழை இருப்பின் அதுமட்டுமே விமர்சகர்கள் கையில் சிக்கி வட்டமடிக்கும்.. வெகுவாக கவனிக்கப்படும்.. அப்பேற்பட்ட காதலி நீ!! அந்தி மழையும் நீ!!! பொருத்தமான வரிகள். எதுகைகள்


இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,
வலது கையில்
வாழ்த்து அட்டையை வழங்கிக்கொண்டு
என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,

கண்முன்னே நிற்கிறது கவிதை வரிகளின் காட்சிகள்... வரிகளே எழுந்தாடுகிறது.

நம் இமைகள்
கொண்ட உறவால்
உண்டான ஜீவன்
இந்த காதல்..

ஆமாம்..... அதுதானே உண்மை........

இதழ் பிரித்து
வார்த்தை சேர்த்து
சொல் பெண்ணே!

இப்படியெல்லாம் எனக்கு அனுபவமில்லை.. இருந்தாலும் ஒருவேளை இப்படித்தான் இருந்திருக்குமோ? என்ற உணர்வு..சாதாரண வார்த்தைகள் அசாதாரண வேலையில்

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

அது காதலியின் பதிலில் உள்ளது. இருக்கு ஆனா இல்லை அப்படீன்னு சொல்லிட போறாங்க. :D

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...

என்னங்க ஷீ! வாழ்த்து அட்டை நீட்டியபின் காதல் சொன்னாங்களா? சொல்லலியா? காலமுடன் காத்திருந்தீங்கன்னா அடுத்த காதலர்தினத்திற்கு அடுத்தவன் அடுத்த அட்டையை அடுக்கிறமாட்டானா?

அருமையான கவிதை.. மன்றத்தில் காதல் சொல்லப்போகிறவர்கள் கவிதையை சுட்டுவிடலாம்.. (மயூரேசன் தவிர்த்து:D )

ஷீ-நிசி
14-02-2007, 03:38 AM
காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!
அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இந்த வரி ஒவ்வொருவருக்கும் ஒருமாதிரி தோன்றலாம். ராகத்தில் சந்திப்பிழை... ஒரு ராகத்தில் பிழை இருப்பின் அதுமட்டுமே விமர்சகர்கள் கையில் சிக்கி வட்டமடிக்கும்.. வெகுவாக கவனிக்கப்படும்.. அப்பேற்பட்ட காதலி நீ!! அந்தி மழையும் நீ!!! பொருத்தமான வரிகள். எதுகைகள்

அருமையான விமர்சனம் நண்பரே!

இக்கவிதைப்படி அவள் காதலர் தின கிரீட்டிங் கார்டை வாங்கிக்கொண்டாள்... அதோ வாங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறாள்

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...
விடை வேண்டி காத்திருக்கிறான் அக்காதலன்......

சே-தாசன்
14-02-2007, 03:45 AM
ஷீ,
மன்னிக்க நண்பா...
உங்க கவிதையை நான் திருடி விட்டேன்...

என்னப்பா இது ஒரே திருடர் கூட்டமா இருக்கு.:D :D :D :D

மயூ
14-02-2007, 03:46 AM
அதுமட்டும் எண்ட மரியாவுக்கா இருந்துச்சு,,,, ஈழம் வந்து கொண்டு போட்டுடுவன்....:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :angry: :angry: :angry: :angry:
http://smileys.smileycentral.com/cat/11/11_9_17.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZSxdm599)
நட்புக்குப் போயி களங்கம் செய்வேனா நண்பா!!!

sham
14-02-2007, 05:37 AM
இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,
வலது கையில்
வாழ்த்து அட்டையை வழங்கிக்கொண்டு
என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,

என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் காதலைச் சொல்லப்போகும் போது அந்த தைரியமெல்லாம் எங்கே தொலைந்து விடுகின்றனவோ தெரியவில்லை!!!!!!!!!!!!
கவிதை மெய்சிலிர்க்க வைக்கின்றது நண்பரே.

ஷீ-நிசி
14-02-2007, 05:46 AM
நன்றி ஷாம்....

pradeepkt
14-02-2007, 05:47 AM
http://smileys.smileycentral.com/cat/11/11_9_17.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZSxdm599)
நட்புக்குப் போயி களங்கம் செய்வேனா நண்பா!!!
வேற எதுக்கெல்லாம் களங்கம் செய்வாய்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லது... :rolleyes: :rolleyes:

ஆதவா
14-02-2007, 06:33 AM
அருமையான விமர்சனம் நண்பரே!

இக்கவிதைப்படி அவள் காதலர் தின கிரீட்டிங் கார்டை வாங்கிக்கொண்டாள்... அதோ வாங்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறாள்

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...
விடை வேண்டி காத்திருக்கிறான் அக்காதலன்......

உங்கள் பதிலுக்கு நன்றி ஷீ! உங்கள் கவிதைகளில் இன்னும் கொஞ்சம் நோண்டினால் பொருளும் புனையும் அருமையாகப் படுகிறது.. அந்த நிலாப் பெண் கவிதையும் அவ்வாறுதான்.. சில சமயங்களில் நாம் நோண்டாமல் போய்விடுகிறோமே என்ற வருத்தம் மேலிடுகிறது.

வானவில்லாலே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறேன்

இந்த வரிகளும் அப்படிப்பட்டவை.. வானவில்லாலே வளை என்பது அருமையான சந்தர்ப்பம். எப்படி? இது என்பார்வையில்...
வளையாதிருக்கும் வானவில்லை எடுத்து வளைந்து கொடு என்பதுபோல. வானவில்லினால் என்று போட்டிருக்கலாமோ?..

ஒன்று வளைந்து கொடு... பட்டாம் பூச்சியாகிறேன்... இல்லையா, எதுவும் செய்யாதே இறந்து போகிறேன்.........

கற்பனையை நிஜத்தில் கொண்டுவரும் பாங்கு உங்கள் கவிதைக்கு உண்டு....

ஷீ-நிசி
14-02-2007, 06:55 AM
ஆதவா.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள்படுகிறது.. உன் கற்பனையும் அழகு...

வளையாதிருக்கும் வானவில்லை எடுத்து வளைந்து கொடு என்பதுபோல. வானவில்லினால் என்று போட்டிருக்கலாமோ?..

அவன் காதலியை வானவில்லோடு ஒப்பிடுகிறேன்.. இது ஒரு எளிமையான ஒப்பீடுதான், நிலாவே, மலரே எனபது போல, வானவில்லாளே, என்று அழைக்கிறேன்.. வானவில்+இல்லாள்=வானவில்லாள்...

ஆதவா,
வானவில்லாளே என்பதே சரி. இது என் எழுத்துப்பிளை தான். நான் வானவில்லாலே என்று பதித்ததால் உங்கள் கூற்றுப்படி நீங்கள் சொன்னது சரி... (பிழையை சரிசெய்துவிட்டேன்)

வானவில்லாளே,
வளைந்து கொடு...

வானவில்லாளே என்று அவன் அவளை வானவில்லுடன் ஒப்பிடும்போதே அவள் வளைந்துகொடுத்தவளாய் இருந்திடல் வேண்டும்.. இருந்தும் அவளை அக்காதலன் தனக்காய் மேலும் வளைந்து கொடுத்திட சொல்கிறான். இதுதான் அப்பொருள்....

varathanbsc
14-02-2007, 11:52 AM
காதலர் தினத்தில்தான் உன்னை நினைப்பது என்ரால்
எனக்கு ஒவ்வொருனாலும் காதலர்தினம்தான்.

மயூ
14-02-2007, 11:56 AM
எங்கோ வாசித்த் ஞாபகம்...
காதலர் தினம் என்றால்
உனக்கு சாதாரணம்
ஆனால் எனக்கு சதா ரணம்....

ஆதவா
14-02-2007, 12:07 PM
எங்கோ வாசித்த் ஞாபகம்...
காதலர் தினம் என்றால்
உனக்கு சாதாரணம்
ஆனால் எனக்கு சதா ரணம்....

என்னய்யா! மயூரேசா! இந்த ஆட்டம் போடுறீர்.??

மயூ
14-02-2007, 12:11 PM
என்னய்யா! மயூரேசா! இந்த ஆட்டம் போடுறீர்.??
எல்லாம் காதலர் தினத்தின் விளைவுகள்தான்....:D :D

பென்ஸ்
14-02-2007, 12:49 PM
எல்லாம் காதலர் தினத்தின் விளைவுகள்தான்....:D :D
மருவாதியா மத்திடு... :rolleyes: :rolleyes:
இல்லை மரியாவுக்கு போட்டிக்கு ஆள் வரும்டியோ...:D :D :D

ஆதவா
14-02-2007, 01:08 PM
மருவாதியா மத்திடு... :rolleyes: :rolleyes:
இல்லை மரியாவுக்கு போட்டிக்கு ஆள் வரும்டியோ...:D :D :D

ஏதேது? எண்ட மரியாவுக்கு இன்னொரு போட்டியா?

மயூ
15-02-2007, 08:29 AM
ஏதேது? எண்ட மரியாவுக்கு இன்னொரு போட்டியா?
எல்லாரும் உங்களுக்குள் அடிபடவும் கப்பில நான் கடா வெட்ட அப்பத்தான் ஈஸியாக இருக்கும்..... http://smileys.smileycentral.com/cat/11/11_8_11.gif (http://www.smileycentral.com/?partner=ZSzeb001_ZSxdm599)

ஓவியா
17-02-2007, 09:21 PM
முகவரி அறியாதவன் எழுதின
முத்தான வரிகளை ஏந்தின
வாழ்த்து அட்டையை
விலை கொடுத்து வாங்கினேன்,
என் முளை* விடுத்த காதலுக்காய்;

பட்டு பூச்சியின்
பரிணாம நிலையில்தான்
நானும் என் காதலும்;

வானவில்லாளே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறான்.

காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!
அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,
வலது கையில்
வாழ்த்து அட்டையை வழங்கிக்கொண்டு
என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,

நம் இமைகள்
கொண்ட உறவால்
உண்டான ஜீவன்
இந்த காதல்..

இதழ் பிரித்து
வார்த்தை சேர்த்து
சொல் பெண்ணே!

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...

----------------------------------------------------
(*விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்களே! அந்த முளை... என் காதலும் இன்று முளை விடுத்துள்ளது நாளை பயிராய் வளர்ந்திட அவளின் கவன மழை பொழிந்திட வேண்டும்)


நண்பா ஷீ-நிசி,
கவிதை மிகவும் சிக்க்னமாக ரசனையாக இருகின்றது.

வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
19-02-2007, 02:45 AM
நன்றி ஓவியா..

மதுரகன்
19-02-2007, 04:34 PM
வானவில்லாளே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறான்.


அற்புதம் அற்புதம் ஷீ

இதை இத்தனை நாள் தவற விட்டதற்கு என்னை நொந்து கொள்கிறேன்..
என்ன செய்ய முன்புபோல் தற்போது தினமும் வர இயல்வதில்லை..

ஷீ-நிசி
24-02-2007, 02:02 PM
நன்றி மதுரகன்

இளசு
27-02-2007, 09:02 PM
பல முறை முகமறியாதவர் எழுதிய வரிகள் கொண்ட வாழ்த்து அட்டைகள்..
நாம் வழங்கப்போவோருக்காக நாமே எழுத எண்ணியதைப் போல...

காரணம் என்ன?

உணர்வுகள் மனித இனத்துக்கு ஆதாரமான பொதுவானவை..

அதனால்தான்..
ஷீ-நிசி எழுதிய இக்கவிதை
மயூரனுக்கும் பென்ஸுக்கும்
காதல் கோவில் படியில் நிற்கும் எவருக்கும்
களவு செய்து வழங்கத் தூண்டுகிறது...

வெற்றிக் கவிதை - காதல்
வெற்றி பெற்றுத் தர
வாழ்த்துகள் ஷீ-நிசி!

ஷீ-நிசி
28-02-2007, 02:30 AM
பல முறை முகமறியாதவர் எழுதிய வரிகள் கொண்ட வாழ்த்து அட்டைகள்..
நாம் வழங்கப்போவோருக்காக நாமே எழுத எண்ணியதைப் போல...

காரணம் என்ன?

உணர்வுகள் மனித இனத்துக்கு ஆதாரமான பொதுவானவை..

அதனால்தான்..
ஷீ-நிசி எழுதிய இக்கவிதை
மயூரனுக்கும் பென்ஸுக்கும்
காதல் கோவில் படியில் நிற்கும் எவருக்கும்
களவு செய்து வழங்கத் தூண்டுகிறது...

வெற்றிக் கவிதை - காதல்
வெற்றி பெற்றுத் தர
வாழ்த்துகள் ஷீ-நிசி!

மிக ஆழ்ந்து விமர்சித்திருக்கிறீர்கள்... மிக்க நன்றி இளசு அவர்களே! அனைவருடைய காதலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

poo
28-02-2007, 08:20 AM
இதழ் பிரித்து எனைச் சேர்த்து வார்த்தை சொல் பெண்ணே...

பட்டுப்பூச்சியின் பரிணாமம்.. நளினம்.. பின்னாளில் ஜொலிக்கப்போகும் காதலன்றோ..

பாராட்டுக்கள் நண்பரே..

ஷீ-நிசி
28-02-2007, 08:24 AM
மிக்க நன்றி பூ அவர்களே!