PDA

View Full Version : நடந்தது என்ன??????.....



தமிழ்பித்தன்
13-02-2007, 03:54 AM
ஆமையும் முயலும் பாருங்கொ ஒருக்கா ஓட்டப் போட்டியெல்லொ வைத்தவை அதிலை பாருங்கோ முயலெல்லோ தோத்துப்போச்சு முயலுக்கு அதன் பிறகு தூக்கம் போச்சுபாருங்கே அதன் பிறகு நீண்ட காலமாக ஆமையை தேடித் திரிந்தது ஒருநாள் முல்லைத் தீவுக் காட்டுக் கண்டுத்து பாருங்கோ முயல் ஆமையைப் பார்த்து நீ மீண்டும் என்னோடே ஓட்டப் பொட்டிக்கு வரவேண்டும் என வற்புறுத்தியது ஆமை எவ்வளவோ மறுத்தும் முயல் விடுவதாக இல்லை பின் ஒருவாறு ஒப்புக் கொண்டது நடுவராக எரிக் சொல்ஹைம் நியமிக்கப்பட்டார் ஓமந்தையிலிந்து போட்டி ஆரம்பமானது முகமாலை வரை ஓடவேண்டும் முயல் சென்றமுறை தோற்றுப்பொன அவமானத்தால் இம்முறை எப்படியும் வெல்ல வேண்டும் என்ற அவாவுடன் ஓடுகிறது ஆனால் ஆமையே தன்னால் இயன்றளவு ஓடுகிறது எல்லோரும் முகமாலையில் காத்திருக்கிறார்கள் எப்படியும் முயல்தான் வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரிலும் முயலை எதிர்பார்க்கிறார் முயலை இன்னமும் காணவில்லை நீண்ட நேரத்தின் பின் ஆமையார் வருகிறார் எல்லோருக்கும் திகைப்பு இம்முறையும் ஆமையா போன முறை பட்டும் முயல் திருந்தவில்லை இம்முறையும் எங்கோ படுத்து விட்டது என நினைக்கும் போழுது முயல் வேகமாக வருகிறது முயல்தான் தோற்றதை தெரிந்து கண்ணீர் விடுகிறது எல்லோரும் ஏன் பிந்தியது என வினாவ முயல் நடந்ததை சொல்கிறது இம்முறை முயல் தோற்றதற்கு காரணம் என்ன?? கூறுங்கள் பார்க்கலாம் நான் 24 மணிநேரத்தின் பின் இதற்கு விடை கூறுவேன்

மன்மதன்
13-02-2007, 12:04 PM
ஞாபக மறதில் மறுபடியும் அதே தவறை செய்திருக்குமோ ??

maganesh
13-02-2007, 12:05 PM
இது கதை வடிவில் ஒரு கருத்து.
முயல் கூடக் கூடாதவர்களுடன் சேர்ந்திருக்கலாம்.
நம்பக் கூடாதவர்களை நம்பி இருக்கலாம்.
கூட இருந்தவர்கள் குழி பறித்திருப்பார்கள்.
ஆமை ஜெயிக்கும்வெறியோடு ஓடி இருக்கும் முயல் உதவிப் பணத்துக்காக ஓடி இருக்கும்.

அறிஞர்
13-02-2007, 12:46 PM
வெற்றி பெறுவோம் என்ற மமதையில்.. மீண்டும் உறங்கியிருக்கலாம்.
------
அன்பரே.. எழுத்துப்பிழைகளை குறைத்தால், படிக்க சுவையாக இருக்கும்.

தமிழ்பித்தன்
13-02-2007, 08:28 PM
அனேகர்கள் இந்த கதையை சீரியஸ் ஆக எடுத்து பதில் வழங்கியிருந்தார்கள் உண்மையில் நான் அதை நகைச்சுவையாகவே எழுதியிருந்தேன் (நான் பதிந்த இடம் சரிதானே)
உண்மையில் அதற்க்குப் பதில்:- முயலே இம்முறையாவது தோற்று விடக்கூடாதே என நினைந்து மிக வேகமாக ஓடியது கிளிநொச்சியை அடைந்தபோது தமிழீழ காவல்த்துறையினர் அவரை மிக வேகம்(over speed) எனக்கூறி மறித்து வீசாரித்து தண்டப்பணம் அறவிட்ட பின்னரே விடுதலை செய்தனர் இதனால்தான் பிந்தியது

அறிஞர்
13-02-2007, 08:49 PM
ஆஹா... இப்படி கதை போகுதா..

இது கொஞ்சம் ஓவரு.....

இன்னும் இது மாதிரி கொடுங்க... நம்மாட்கள் தெளிவா பதில் சொல்லுவாங்க..

ஓவியா
17-02-2007, 06:32 PM
அனேகர்கள் இந்த கதையை சீரியஸ் ஆக எடுத்து பதில் வழங்கியிருந்தார்கள் உண்மையில் நான் அதை நகைச்சுவையாகவே எழுதியிருந்தேன் (நான் பதிந்த இடம் சரிதானே)
உண்மையில் அதற்க்குப் பதில்:- முயலே இம்முறையாவது தோற்று விடக்கூடாதே என நினைந்து மிக வேகமாக ஓடியது கிளிநொச்சியை அடைந்தபோது தமிழீழ காவல்த்துறையினர் அவரை மிக வேகம்(over speed) எனக்கூறி மறித்து வீசாரித்து தண்டப்பணம் அறவிட்ட பின்னரே விடுதலை செய்தனர் இதனால்தான் பிந்தியது

:D :D
நீங்க எங்கயோ போய்டீங்க

பாராட்டுறேன் நண்பா

praveen
25-02-2007, 01:20 PM
நல்ல வித்தியாசமான கற்பனை.

இம்மாதிரி இன்னும் புதிருடன் கூடிய ஜோக் தாருங்கள் நண்பரே.

மனோஜ்
25-02-2007, 01:43 PM
அந்த முயல்பாவம் எப்பவுமே வெற்றிபெறமாட்டேங்குது:rolleyes: :rolleyes:
அருமையான யோசனை நண்பரே நன்றி தொடருங்கள் இப்படியாக