PDA

View Full Version : ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியா

maganesh
12-02-2007, 10:19 AM
எல்லோராலும் ஜெயிக்கும் என எதிர்பார்க்கபட்ட முத்தரப்பு இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது ஆஸ்திரேலியா. மூன்று இறுதிப்போட்டிகொண்ட தொடரில் முதல் இரண்டிலுமே வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது இங்கிலாந்து. இரண்டு ஆட்டத்திலும் வெற்றிக்கு வழிவகுத்த வீரர் காலிங்வூட்தான். இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பைக்கான வீழ்ச்சியாக இருக்குமா நண்பர்களே.

ஆதவா
12-02-2007, 03:48 PM
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஆட்டமே வேறுவிதமாக இருக்கும் நண்பரே

பென்ஸ்
12-02-2007, 03:55 PM
விளையாட்டோ... அரசியலோ... எவரும் தொடர்ந்து சாம்பியங்களாக இருந்த்து இல்லை...

வளர்ச்சி பெறும் வரை போராடுபவர்கள் அதை நிலை நிறுத்து கொள்ள போராடுவது போல் தெரியலையே....

மேற்க்கிந்திய தீவுகள்... (ரொம்ப நாள்)
இந்தியா... (கொஞ்சம்)
பாக்கிஸ்தான்... (கொஞ்சம்)
இலங்கை (நிறைய நாள்)
ஆஸ்திரேலியா (ரொம்ம்ப நாள்)

இந்த பட்டியல் இன்னும் தொடரும்....

மயூ
13-02-2007, 03:48 AM
எல்லோராலும் ஜெயிக்கும் என எதிர்பார்க்கபட்ட முத்தரப்பு இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது ஆஸ்திரேலியா. மூன்று இறுதிப்போட்டிகொண்ட தொடரில் முதல் இரண்டிலுமே வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது இங்கிலாந்து. இரண்டு ஆட்டத்திலும் வெற்றிக்கு வழிவகுத்த வீரர் காலிங்வூட்தான். இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பைக்கான வீழ்ச்சியாக இருக்குமா நண்பர்களே.
ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட கொலிங்வூடின் எழுச்சி என்று சொல்லலாமா? :rolleyes:

Mathu
13-02-2007, 09:37 AM
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் துல்லியம் சில காலமாகவே குறைந்துவிட்டது,
அதை மறைக்க அதிகம் அடித்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
அடிப்பவர்கள் கை கொடுக்காத போது இப்போ அடிக்கடி தோல்வி,
ஆனாலும் இவர்களை நம்ப முடியாது உலக கோப்பை ஆட்டங்களில்
தனி ஒருவராக நின்று ஆட்டத்தை மாற்ற கூடியவர்கள் பலர் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்

அறிஞர்
15-02-2007, 02:15 PM
வயதானவர்கள் அதிகம் இருக்கும் அணி...... இந்த அதிர்ச்சி... தோல்வி.. இதிலிருந்து விடுபட்டால்.... உலக கோப்பை போட்டியில் ஜொலிப்பார்கள்.

மதுரகன்
19-02-2007, 04:19 PM
எனது கணிப்பு அவுஸ்திரேலியா உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறிவிடும் வெளியேற்றப்போவது தென்னாபிரிக்கா அல்லது மேற்கிந்தியதீவுகள்...

அறிஞர்
19-02-2007, 04:23 PM
எனது கணிப்பு அவுஸ்திரேலியா உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறிவிடும் வெளியேற்றப்போவது தென்னாபிரிக்கா அல்லது மேற்கிந்தியதீவுகள்...
உம் வாய்க்கு சர்க்கரை கொடுக்கலாம்.. இது நடந்தால் ஆஸ்திரேலியாவை தவிர மற்ற நாட்டினர்... சந்தோசப்படுவார்கள்.

ஆதவா
20-02-2007, 11:04 AM
ஆஸ்திரேலியா மூன்றிலும் தோல்வி..... என்னாச்சு அவங்களுக்கு? அதிலும் கடைசி இரு போட்டியில் வெளுத்து வாங்கியும் தோல்வி....

ஷீ-நிசி
20-02-2007, 11:08 AM
ஆமாம், நண்பரே! பவுலிங் சுத்தமா சரியில்லை போல்... அந்த அணியில் ஹைடன், ஹூசே, மெக்கராத் தவிர தெரிந்தவர்கள் யாருமில்லை.. ஏதோ மூன்றாம் கட்ட அணி போல் உள்ளது. உடனே சுதாரிப்பவர்கள் தான் ஆஸ்திரேலியர்கள்... எப்படி இருந்தாலும் மற்ற அணியினருக்கு ஆஸ்திரேலியாவின் தோல்வி என்பது மகிழ்ச்சியான செய்திதான்..

அமரன்
20-02-2007, 11:20 AM
கவனித்தீர்களா இறுதி ஆட்டத்தை. கெய்டன் 181 ஓட்டங்கள் விளாசியும் பயனில்லாது போய்விட்டது.

அறிஞர்
20-02-2007, 01:36 PM
இன்னும் மரண அடி கிடைத்தால் சந்தோசமே/.....

கொஞ்ச ஆட்டமா ஆடினார்கள்.....

ஷீ-நிசி
20-02-2007, 02:15 PM
இன்னும் மரண அடி கிடைத்தால் சந்தோசமே/.....

கொஞ்ச ஆட்டமா ஆடினார்கள்.....

அறிஞரே, உலக கோப்பையில் எல்லா அணிகளும் இவர்களை சொல்லி சொல்லி அடிக்கும் என்று எண்ணுகிறேன்.. (கென்யா, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற கத்துக்குட்டி அணிகள் நீங்க)

அறிஞர்
20-02-2007, 02:59 PM
அறிஞரே, உலக கோப்பையில் எல்லா அணிகளும் இவர்களை சொல்லி சொல்லி அடிக்கும் என்று எண்ணுகிறேன்.. (கென்யா, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற கத்துக்குட்டி அணிகள் நீங்க)
ஆஸ்திரேலியா என்ற பெயரை கேட்டாலே நடுங்கும் சில அணிகள் உள்ளதே.. இன்னும் மூன்று வாரத்தில் எல்லாம் தெரியும்.

அமரன்
20-02-2007, 03:18 PM
மூன்று வாரத்தில் எதுவும் நடக்கலாம். அவர்கள் மீண்டும் வீறுகொண்டு எழலாம். புச்சானனின் பயிற்றுவிப்பில் இறுதித் தொடர் இதுவாகத்தான் இருக்கும். சாதிக்கப்போராடுவார்கள். சாதிக்க சாத்தியங்களும் இல்லாமலில்லை.