PDA

View Full Version : சேவை வரி



karikaalan
12-02-2007, 06:52 AM
சேவை வரி

சேவை வரி இந்தியாவில் முதன் முதலாக 1994-95-ல் விதிக்கப்பட்டது. மன்மோஹன் சிங் + நரசிம்ஹராவ் அரசால். மூன்று சேவைகளின் மீது -- தொலைபேசி, பங்குத் தரகர், பொது இன்ஸеரன்ஸ்.

ஒவ்வொரு வருடமும் மேன்மேலும் சேவைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 2006-ல் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் மேலும் 15 சேவைகள் சேர்க்கப்பட்டன. தற்போது சேவை வரி 99 சேவைகளின் மீது விதிக்கப்படுகிறது. விகிதம் 12.24%.

நமது நாட்டின் GDP-ல் 60%-க்கு மேல் சேவைகளே பங்கு பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் இவ்வளவு அதிகமாகப் பங்கேற்கும் சேவைப்பகுதி, வரியாக வழங்குவதென்னவோ நடப்பு நிதி ஆண்டில் வெறும் 7.8%.

தொழில்துறை நடப்பு நிதியாண்டில் செலுத்தப்போகும் தீர்வைவரி (Excise Duty) ரூ.1,19,000 கோடிகள். ஆனால் GDP-ல் தொழிலின் பங்கு 20% மட்டுமே.

2004-05-ல் ரூ.14,200 கோடிகள் ஈட்டித்தந்தது சேவை வரி. 2006-07-ல் எதிர்பார்க்கப்படுவது ரூ.34,500 கோடி.

வரும் ஆண்டுகளில் சேவை வரி தொடும் சேவைகள் அதிகரித்துக் கொண்டே போகும் என்பது மத்திய வர்க்க மக்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்திதான்.

சேவைவரி இந்தியாவில் மட்டும் தனிப்பட்டதாக விதிக்கப்படவில்லை. வளர்ந்த நாடுகளிலும் (US, UK), ASEAN நாடுகளிலும் வெகுகாலமாகவே நடைமுறையில் இருந்துவருகிறது.

சென்ற பட்ஜெட் சமர்ப்பித்துப் பேசும்போது, ப.சி. கூறினார் -- Uniform Goods & Services Tax (GST) -- சில வருடங்களில் நடைமுறையில் கொண்டுவரப்போவதாக.

GST கொண்டுவந்தால், வரிக்குமேல் வரி கணக்கிடுவது குறையும். பொருள் விலை சேவைவரி காரணமாக அதிகரிக்கும் நிலை குறையும். ஏனென்றால் VAT அமுலில் இருப்பதால், ஒவ்வொரு முறை வரி விதிக்கப்படும்போதும், அதற்கு முன் கொடுத்த வரியை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

இன்னும் எழுத நிறைய இருக்கிறது. 2007 பட்ஜெட்டுக்குப் பின் மீண்டும் ஆராய்வோம்.

===கரிகாலன்

pradeepkt
13-02-2007, 03:23 AM
மிக்க நன்றி அண்ணா,
இதைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். நிதிநிலை அறிக்கை பற்றியும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

родроЩрпНроХ роХроорпНрокро┐
02-03-2007, 04:25 PM
2007 பட்ஜெட்டில் சேவை வரியில் கை வைக்கவில்லை.

роЖродро╡ро╛
02-03-2007, 04:49 PM
2007 பட்ஜெட்டில் சேவை வரியில் கை வைக்கவில்லை.

பனியன் உற்பத்தி முதலாளிகள் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனரே!! உங்கள் கருத்து என்னங்க தங்கக் கம்பி?

роЗро│роЪрпБ
02-03-2007, 07:35 PM
அண்ணலின் முன்னுரை கொஞ்சம் புரிகிறது..
பட்ஜெட் வந்தாச்சு.. மேல் தகவல்கள், உள் அலசல்கள் தந்து
தொடருங்கள் அண்ணலே.. நன்றி..