PDA

View Full Version : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)மயூ
12-02-2007, 04:54 AM
பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குக (http://thamizhblog.blogspot.com/2007/02/61.html)
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் �என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??� என்று அக்கறையாக விசாரித்தாள்.

�என்ன செய்வது பையை பிளேடால அறுக்க வேண்டியதுதான்� என்று வியர்வை முகம் எங்கும் வழிய வழியச் சொன்னேன்.

பையைவெட்டுவதற்காக பிளேடை எடுக்கப் போன போதுதான் ஞாபகம் வந்தது பிளேடும் பையினுள்தான் உள்ளதென்பது. சத்தியமாக வாழ்க்கையே வெறுத்து விட்டது.

அதே வேளையில் மற்றய கதிரையில் இருந்த நண்பர்களுக்கு விசயம் கொஞ்சம் மோசமாகப் போய்விட்டது என்பது புரிந்து விட்டது. அவர்களும் பையில் தம்பாட்டுக்கு ஏதேதோ முயன்று பார்த்து சலித்துப் போய் அமர்ந்து விட்டனர். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். அப்போது மீண்டும் அந்த சிங்களப் பெட்டை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டாள்.

இதைத் திறக்க நான் ஜேம்ஸ் பாண்டாகத்தான் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது 07 ஐ ஒருக்கா முயற்சித்துப் பார்ப்போம் என்று. இறைவனைவேண்டியவாறே திறந்த போது என்னே அதிசம் பை திறந்து கொண்டது. எல்லாம் கந்தன் கருணை!!!

வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு எல்லா நண்பர்களையும் பார்த்து, திறந்த விடையத்தை சைகையால் காட்டிச் சிரித்துக்கொண்டு இருந்தேன்.

நான் திறந்து முடித்தபோது சரியாக 1 மணி ஆகிவிட்டிருந்தது. யாரே மூவர் திடீர் என்று ஒரு அறைக்குள் இருந்து வந்து முதலில் முன்னுக்கு இருந்த பொடியனை வரச்சொல்லி கூப்பிட்டார்கள்.

அந்தப் பொடியனின் பட்டப் பெயர் யு.ஜி (UG). அதாவது அளவுக்கதிகமான நேரம் Undergraduate Lab ல் இருந்து இணையத்தைத் துளாவுவான் என்பதால் அந்தச் செல்லப்பெயர். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரனே!

அவன் உள்ளே சென்று அரைமணி நேரம் ஆனது என்ன செய்கின்றார்கள் என்பதே புரியவில்லை. நாங்கள் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தோம். சுமார் 35 நிமிடங்களின் பின்னர் யு.ஜி வெளியே வந்தான். வெளியே வந்தவனை எங்களிடம் வரவிடாமல் வேறேங்கோ அழைத்துச் சென்றார்கள்.

�டேய்...!!!! என்னடா நடக்குது இங்க? இன்டஸ்ரியல் ரெயினிங்குக்கு இது அதிகம்டா� நண்பன் ஒருவன் சலித்துக்கொண்டான்.

சற்று நேரத்தில் ஒரு தலை வெளியே எட்டிப்பார்த்து மஞ்சுளா பிரேமரத்ன... என்று சொல்லியது. அவ்வளவுதான் எனக்குப் பக்கதில் இருந்த சிங்களப் பெட்டை பாய்ந்தடித்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடந்த அறையை நோக்கி ஓடினாள்.

அடுத்தது யாரோ என நினைக்கயிலேயே நெஞ்சு படபடத்துக்கொண்டது. அடுத்த அரை மணி நேரத்தின் பின்பு மஞ்சுளாவும் வெளியே வந்தாள். மீண்டும் அதே தலை எட்டிப் பார்த்து டினூஷ டீ சில்வா என்று சொல்லியது. என் நண்பன் டினூஷ அறையை நோக்கி நடந்தான்.

மீதம் இருந்த மூவரும் மஞ்சுளாவை சுற்றி நின்று கேள்விகளால் ஒரு வேள்வி வைக்கத் தொடங்கினோம்.

�என்ன கேட்டாங்கள்? படிப்பு சம்பந்தமாக் கேட்டாங்களா? பொது அறிவு பார்த்தாங்கள்?� தெரிந்த கேள்வி எல்லாம் கேட்டாங்கள்.

அவளும் கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், VB .net மற்றும் SQL ல் அதிகம் கேள்விகள் கேட்பதாகவும் கூறினாள். அதைவிட யு.ஜி யை ஒரு செய்முறைப் பரீட்சைக்கு அனுப்பிவிட்டதாகவும் தனக்கு அடுத்து நடக்கவுள்ளதாகவும் கூறினாள். எனக்கோ தலை சுற்றத் தொடங்கியது. இப்போ எதுவும் ஞாபகம் இல்லையே!! ???

கடைசியாக என் சந்தர்ப்பமும் வந்தது. நான் பயத்துடன் நேர்முகத் தேர்வு நடந்த அறையை அடைந்தேன். அங்கே மூவர் இருந்தனர். எல்லாரும் நடுத்தர வயது மதிக்கத் தக்கவர்கள்.

நான் உள்ளே போனதும்...
�Hello Sir! I�m Mayooresan� என்று சொல்லி நடுவில் இருந்தவருடன் கையைக் குலுக்கினேன் அவரும் மற்றயவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு என்னை இருக்கச் சொல்லி விட்டு என்னைப் பற்றி அறிமுகம் ஒன்று வழங்குமாறு கேட்னர். நானும் ஒரு அறிமுகத்தை வழங்கினேன். அடுத்து கேள்விக் கணைகள் தொடங்கியது.

1.ரிக்கர்சிவ் பங்சன் ஒன்று எழுதுங்க!!! எனக்கு தலைகால் புரியவில்லை... தந்த காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டுக் கூறினேன். Sorry sir I can�t remember this..!!!

அப்போதும் அவர்கள் விடுவதாக இல்லை அப்படியானால் ஒரு பங்கசன் அதுக்கு எழுதுங்க பார்ப்பம். சரி என்று எழுதி முடித்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு அதில் ஒரு நொட்டை சொன்னான் அந்த நெட்டைப் பயல்.

பின்பு VB .net ல் சில கேள்விகள் கேட்டான். Inheritance பொன்ற OOP சம்பந்தமான கேள்விகள் கேட்டான் சில கவிண்டது சில சரியாகச் சொன்னேன். கடைசியாகக் கேட்டார்கள் எனக்கு ஒரு செய்முறை வைக்க வேண்டும் என்று!!!

உடனே நான் தயங்காமல் சொன்னேன் �ஆ... இண்டைக்கு நான் தயார் இல்லை, இன்னுமொரு நாளைக்கு செய்யலாமா?�

�ஓம் கட்டயாமா!� என்று சொன்னார்கள். அத்துடன் இரண்டு நாட்களின் பின் செய்முறைப் பரீட்சைக்கு வருமாறும் கூறினார்கள்.

இரண்டு நாட்கள் கழிந்து எக்சாம் செய்தேன் லைப்ரரி இன்ஃபோமேசன் சிஸ்டம் ஒன்றை முழுதாக 2 மணி நேரத்தில் செய்ய்ச் சொல்லி இருந்தார்கள். அதற்கு UML படங்களும் வேற கீற வேண்டுமாம். நான் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வந்தேன்.

சரி எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் இன்னுமொரு கம்பனி பார்க்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நாள் மாலை பல்கலைக்கழக வாசலினூடு நுழைந்து கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் வந்து தட்டினார்கள்.

�மயூரேசன் உங்களுக்குத் தெரியுமா நீங்க நாளைக்கு கைட்ராமணிக்குப் போகோனும் என்றது� முன்பு கவிட்ட அதே மிஸ் கேட்டா....

�இல்லை மிஸ்.. எனக்குத் தெரியாது?� பரபரக்கக் கூறினேன்.

�எனக்குத் தெரியும் நீர் தொயாது என்று சொல்லுவீர் எண்டு. அதாலதான் கண்டிட்டு ஓடி வந்தனான்� மிஸ் சிரித்தவாறே கூறினார்.

�நீரும் மிஹிசரவும் செலக்ட் ஆகி இருக்கீங்க நாளைக்கு இருவரும் அங்க போகோணும் உங்களோட அவங்க சில விசயங்கள் கதைக்கோணும் என்று விரும்பிறாங்க� என்று முடித்தார்.

எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதொ கடவுள் புண்ணியத்தில் நல்லதாக நடந்து முடிந்துவிட்டது. உலகவர்த்தக மையத்தில் 3 மாதத்திற்கு சுற்றும் வாய்ப்பும் கிடைத்தது....

நன்றி முருகா!!!! எல்லாம் உன் செயல் :)

ஆதவா
12-02-2007, 05:15 AM
அட்டகாசம்.... மஞ்சுளா போட்டா போடலயே?

ஷீ-நிசி
12-02-2007, 06:24 AM
ஏதோ அதிர்ஷ்டம் உங்களிடம் இருந்திருக்கிறது நண்பரே. கிரே கலர் டீ-சர்ட் தான் மயூவா?

kavitha
12-02-2007, 07:25 AM
கட்டுரை நடை அழகாக இருக்கிறது. தேர்வில் வென்ற மயூரேசனுக்கு வாழ்த்துகள்.கைட்ராமணிக்குப் போகோனும் என்றது
என்றால் என்ன அர்த்தம்?

தற்போது தாங்கள் கொழும்பில் தான் இருக்கிறீர்களா? காலை செய்தியில் பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்றும், அங்கே நிலைமை இயல்பாக இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.. இப்போது எப்படி உள்ளது?

maganesh
12-02-2007, 08:12 AM
ஆகா. எதோ யார் செய்த புண்ணியமோ. முருகேசன் அருளால் மயூரேசனுக்கு வேலைஉ கிடைச்சுட்டுது. வாழ்த்துக்கள்.

ஆதவா
12-02-2007, 08:15 AM
அறிஞர் பாதி தூக்கத்தில் எழுந்து எனக்கு போன் செய்து, மயூரேசன் படங்களை எடுத்துவிடுமாறு சொல்லி இருக்கிறார்.... நிறைய பேர் மயூரேசன் படத்தைப் பார்த்து மயக்கம் போட்டு இருப்பதாக தகவல்....:D :D :D

(சும்மா லுலுவாயிக்கு...)

maganesh
12-02-2007, 08:35 AM
ஆமா உலக வர்த்தக பையக் கட்டடத் தொகுதியினுள் எப்படி புகைப்படம் எடுக்க விட்டனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் குறைவா?

மயூ
12-02-2007, 08:43 AM
அட்டகாசம்.... மஞ்சுளா போட்டா போடலயே?
பொண்ணுங்க விசயத்தில அவங்க பிரைவசிய கெடுக்க விருப்பமில்லை அவ்வளவுதான்.... அவளைத் தவிர மற்ற பொடியனுகள் எல்லாம் நிக்கிறாங்கள் பாருங்க..

மயூ
12-02-2007, 08:44 AM
ஏதோ அதிர்ஷ்டம் உங்களிடம் இருந்திருக்கிறது நண்பரே. கிரே கலர் டீ-சர்ட் தான் மயூவா?
அது நண்பன் யுஜி...
நான் நீலக் நிற சேர்ட் போட்டு உள்ளேன். :)

மயூ
12-02-2007, 08:46 AM
கட்டுரை நடை அழகாக இருக்கிறது. தேர்வில் வென்ற மயூரேசனுக்கு வாழ்த்துகள்.

என்றால் என்ன அர்த்தம்?

தற்போது தாங்கள் கொழும்பில் தான் இருக்கிறீர்களா? காலை செய்தியில் பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்றும், அங்கே நிலைமை இயல்பாக இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.. இப்போது எப்படி உள்ளது?

நன்றி கவிதா அக்கா!!!
Hydramani என்பது ஒரு இந்திய பல்தேசிய கம்பனி... ஆடைக்கைத் தொழிலை மையமாகக் கொண்ட கம்பனி.. நான் அவர்களின் IT Department ல் 3 மாதம் பணி புரியப்போகின்றேன்.

ஆம் கொழும்பில் உள்ளேன்...
எங்கட பல்கலைக்கழகத்தில் பிரைச்சனை இல்லை.. இப்போது பல்கலைக்கழகத்தில் இருந்துதான் தட்டச்சுகின்றேன்..

மயூ
12-02-2007, 08:47 AM
அறிஞர் பாதி தூக்கத்தில் எழுந்து எனக்கு போன் செய்து, மயூரேசன் படங்களை எடுத்துவிடுமாறு சொல்லி இருக்கிறார்.... நிறைய பேர் மயூரேசன் படத்தைப் பார்த்து மயக்கம் போட்டு இருப்பதாக தகவல்....:D :D :D

(சும்மா லுலுவாயிக்கு...)
ஏன் அவளவு அழகாக இருக்கின்றதா???? :eek: :eek: :D :D

மயூ
12-02-2007, 08:48 AM
ஆகா. எதோ யார் செய்த புண்ணியமோ. முருகேசன் அருளால் மயூரேசனுக்கு வேலைஉ கிடைச்சுட்டுது. வாழ்த்துக்கள்.
மன்னிக்கோணும் அது முருகேசன் இல்லை.. கதிரேசன் அதான் எங்க முருகன்...

சே-தாசன்
12-02-2007, 08:51 AM
அண்ணா மஞ்சுளாவைப் பற்றி சொல்லவேயில்லையே. நடக்கட்டும் நடக்கட்டும்.

மயூ
12-02-2007, 08:53 AM
அண்ணா மஞ்சுளாவைப் பற்றி சொல்லவேயில்லையே. நடக்கட்டும் நடக்கட்டும்.
டேய் அவளுக்கு கலியானம் வீட்ட பேசிட்டாங்கடா சும்மா அலுப்படிக்காதீங்கடா!!!!! :)

maganesh
12-02-2007, 08:54 AM
அண்ணா மஞ்சுளாவைப் பற்றி சொல்லவேயில்லையே. நடக்கட்டும் நடக்கட்டும்.

அண்ணா? யாருங்கண்ண அது. புதுசு புதுசாக் கதையில நாயகிகளை அள்ளிவிடுறது.

maganesh
12-02-2007, 08:55 AM
டேய் அவளுக்கு கலியானம் வீட்ட பேசிட்டாங்கடா சும்மா அலுப்படிக்காதீங்கடா!!!!!
ரொம்பப் நல்லவருங்க நீங்க. கல்யாணமான பொண்ணுக்கு தனியான மரியாதை கொடுக்கிறீங்க.

மயூ
12-02-2007, 08:58 AM
ரொம்பப் நல்லவருங்க நீங்க. கல்யாணமான பொண்ணுக்கு தனியான மரியாதை கொடுக்கிறீங்க.
புரிஞ்சா சரி.... :rolleyes:

maganesh
12-02-2007, 09:00 AM
புரிஞ்சா சரி....

புதுசா ஒருத்தர் உங்க பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கிறாரே.

sham
12-02-2007, 09:00 AM
கிருஷாந்! யாரது மஞ்சுளா? எப்பபாத்தாலும் மயூரேசன் அண்ணாவோடயே குலாவிக்கொண்டிருப்பாவே அந்த அக்காவா?

maganesh
12-02-2007, 09:01 AM
கிருஷாந்! யாரது மஞ்சுளா? எப்பபாத்தாலும் மயூரேசன் அண்ணாவோடயே குலாவிக்கொண்டிருப்பாவே அந்த அக்காவா

ம்.ம். நடக்கட்டும். நடக்கட்டும். நல்ல வேட்டைதான் நமக்கு.

சே-தாசன்
12-02-2007, 09:09 AM
கிருஷாந்! யாரது மஞ்சுளா? எப்பபாத்தாலும் மயூரேசன் அண்ணாவோடயே குலாவிக்கொண்டிருப்பாவே அந்த அக்காவா?

மக்களே நான் நித்திரையாக்கும்.

மயூ
12-02-2007, 09:14 AM
கிருஷாந்! யாரது மஞ்சுளா? எப்பபாத்தாலும் மயூரேசன் அண்ணாவோடயே குலாவிக்கொண்டிருப்பாவே அந்த அக்காவா?
சரி!
கடிக்கிறதுண்டு முடிவு பண்ணிட்டீங்க... கடியுங்க....... கடியுங்க... :mad:
நான் தனிமரமாய் நிக்கிறன் ஒன்றை உங்கட பச்சில பார்த்துத் தருவம் எண்டில்ல வதந்தி பரப்புறியளேடா!!!! :rolleyes: :rolleyes: B)

மயூ
12-02-2007, 09:16 AM
மக்களே நான் நித்திரையாக்கும்.
அதுசரி....
வகுப்புக்கு வந்தாலே உனக்கு நித்திரைதானேப்பா!!!
வெள்ளவத்தையில ஸ்டேசன் ரோட்டிலதான் துடிப்பாய் நிப்பியாக்கும்... :D

sham
12-02-2007, 09:19 AM
ஆகா. எங்கட பச்சில இருந்துதான் ஆள் கேட்குதோ? இருக்கிறதையும் தந்திட்டு நாம எங்க போறது? உங்கட பச்சுக்கு வந்தா பாக்கமுடியும்?

சே-தாசன்
12-02-2007, 09:21 AM
அதுசரி....
வகுப்புக்கு வந்தாலே உனக்கு நித்திரைதானேப்பா!!!
வெள்ளவத்தையில ஸ்டேசன் ரோட்டிலதான் துடிப்பாய் நிப்பியாக்கும்... :D

விடுங்க விடுங்க இதெல்லாம் நமக்குள் இருக்குமெண்டு நினைச்சன் உலகுக்கு அறிமுகப்படுத்திட்டீங்களே:confused: :confused:

maganesh
12-02-2007, 09:22 AM
[QUOTE]பச்சில[/QUOTE
உங்க கலக்கலைப் பார்த்துட்டு இருப்போம் என்றால் இந்த வார்த்தை புரியலைப்பா.

சே-தாசன்
12-02-2007, 09:24 AM
ஆகா. எங்கட பச்சில இருந்துதான் ஆள் கேட்குதோ? இருக்கிறதையும் தந்திட்டு நாம எங்க போறது? உங்கட பச்சுக்கு வந்தா பாக்கமுடியும்?

இதப் பார்றா:D :D :D

sham
12-02-2007, 09:31 AM
"BATCH"என்பதைத்தான் அவ்வாறு எழுதியுள்ளோம்

maganesh
12-02-2007, 09:33 AM
"BATCH"என்பதைத்தான் அவ்வாறு எழுதியுள்ளோம்
புரிந்து கொண்டேன். நன்றி நண்பா

ஓவியா
12-02-2007, 08:13 PM
தேர்வில் வென்ற மயூரேசன் 007 க்கு வாழ்த்துக்கள்.

போட்டோவில் ரொம்ப அம்சமா இருகே தம்பி, :D

நல்ல பிள்ளையா வெற்றியோட திரும்பி வாங்க சார்

புது பெயர் மயூரேசன் 007 :eek: :D

அறிஞர்
12-02-2007, 08:46 PM
வாழ்த்துக்கள் நண்பா.... பக் பக்கென.. அடிக்க வைத்த நேர்முகத்தேர்வு வெற்றி.... இன்னும் பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்...

தேர்வுக்கு சென்றவர்கள் போட்டோவில் இலங்கை தோழியை காணவில்லை..

மயூ
13-02-2007, 02:37 AM
ஆகா. எங்கட பச்சில இருந்துதான் ஆள் கேட்குதோ? இருக்கிறதையும் தந்திட்டு நாம எங்க போறது? உங்கட பச்சுக்கு வந்தா பாக்கமுடியும்?
எங்கட டிப்பார்ட்மென்ட் வரலாற்றிலேயே உங்கட பச்சில தானேடா அதிகமான பெட்டையள்.... ஒன்றைப் பார்த்து தரமாட்டியளா?? :confused:

மயூ
13-02-2007, 02:38 AM
விடுங்க விடுங்க இதெல்லாம் நமக்குள் இருக்குமெண்டு நினைச்சன் உலகுக்கு அறிமுகப்படுத்திட்டீங்களே:confused: :confused:
அரசியலில இதெல்லாம் சகஜமப்பா!!!! ஹி... ஹி... :D

மயூ
13-02-2007, 02:39 AM
தேர்வில் வென்ற மயூரேசன் 007 க்கு வாழ்த்துக்கள்.

போட்டோவில் ரொம்ப அம்சமா இருகே தம்பி, :D

நல்ல பிள்ளையா வெற்றியோட திரும்பி வாங்க சார்

புது பெயர் மயூரேசன் 007 :eek: :D
நன்றி அக்கா
அது என்ன 007 நீங்களாத் தந்த பட்டம்..... நானா கேட்டு வாங்கினது இல்லை... :D

மயூ
13-02-2007, 02:41 AM
வாழ்த்துக்கள் நண்பா.... பக் பக்கென.. அடிக்க வைத்த நேர்முகத்தேர்வு வெற்றி.... இன்னும் பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்...

தேர்வுக்கு சென்றவர்கள் போட்டோவில் இலங்கை தோழியை காணவில்லை..
நன்றி அறிஞரே!! :)
நண்பர்கள் எடுத்த புகைப்படம் எடுத்தது வொஷ் ரூமில அங்க அவள் வர முடியாது தானே!!! மற்றது பெண்களின் படத்தை அவர்களுக்கே தெரியாமால் இணையத்தில் பகிர்வதில் இஷ்டமில்லை.. அதுதான்!

pradeepkt
13-02-2007, 04:14 AM
ஆகா ஆகா... ஹிப் ஹிப் ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
மயூரேசா, வாழ்த்துகள். உன் திறமைக்கும் படிப்புக்கும் நீ சீமையில பெரிய வேலையில இருப்பேன்னு நான் ரொம்ப நாளைக்கு முன்னாலயே சொன்னேன்ல ... ஹி ஹி... நீ மறந்துருப்ப! :D :D

ஏற்கனவே உன் மோகனச் சிரிப்பை ஆர்க்கூட்டில் கண்டதினால் எனக்கு அப்படி ஒரு ஆச்சரியமில்லை. மன்றத்தில் யாராவது புது பெண் உறுப்பினர்கள் கண்டு நேரடியாக களனிப் பல்கலைக்கு மாற்றல் கேட்டால் என்ன செய்வதென்பதுதான் கவலை!

pradeepkt
13-02-2007, 04:15 AM
நன்றி அறிஞரே!! :)
நண்பர்கள் எடுத்த புகைப்படம் எடுத்தது வொஷ் ரூமில அங்க அவள் வர முடியாது தானே!!! மற்றது பெண்களின் படத்தை அவர்களுக்கே தெரியாமால் இணையத்தில் பகிர்வதில் இஷ்டமில்லை.. அதுதான்!
அங்கே நிக்கிறான் மயூரேசன்!
சரி அவகிட்ட கேட்டுட்டு தெரிஞ்சே பகிர்வதில் தவறில்லைதானே...

மயூ
13-02-2007, 05:37 AM
ஆகா ஆகா... ஹிப் ஹிப் ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
மயூரேசா, வாழ்த்துகள். உன் திறமைக்கும் படிப்புக்கும் நீ சீமையில பெரிய வேலையில இருப்பேன்னு நான் ரொம்ப நாளைக்கு முன்னாலயே சொன்னேன்ல ... ஹி ஹி... நீ மறந்துருப்ப! :D :D

ஏற்கனவே உன் மோகனச் சிரிப்பை ஆர்க்கூட்டில் கண்டதினால் எனக்கு அப்படி ஒரு ஆச்சரியமில்லை. மன்றத்தில் யாராவது புது பெண் உறுப்பினர்கள் கண்டு நேரடியாக களனிப் பல்கலைக்கு மாற்றல் கேட்டால் என்ன செய்வதென்பதுதான் கவலை!
ஹி.... ரொம்பத்தான் புகழாதீங்க போங்க... நன்றிகள் அண்ணா.. ;) ;)

அங்கே நிக்கிறான் மயூரேசன்!
சரி அவகிட்ட கேட்டுட்டு தெரிஞ்சே பகிர்வதில் தவறில்லைதானே...
கையில கிடைக்கிறதால அவகிட்ட அடிவேண்ட வரும்.... :eek: :D :D

மதி
13-02-2007, 07:28 AM
எப்படியோ..கடும் முயற்சிக்கு பின் வெற்றி கண்டுவிட்டாயல்லவா..?
போட்டோ சூப்பர். நிறைய விண்ணப்பங்கள் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.. இனி அடுத்த பேட்ச் பயலுகளோடு மல்லுக்கு நிற்க வேண்டாம்.

மயூ
14-02-2007, 02:11 AM
எப்படியோ..கடும் முயற்சிக்கு பின் வெற்றி கண்டுவிட்டாயல்லவா..?
போட்டோ சூப்பர். நிறைய விண்ணப்பங்கள் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.. இனி அடுத்த பேட்ச் பயலுகளோடு மல்லுக்கு நிற்க வேண்டாம்.
நன்றி மதி அண்ணா!
ஆமா ஆமா... சின்னப் பசங்க மன்னிச்சு விட வேண்டியதுதான்!!! :D

ஓவியா
17-02-2007, 06:37 PM
ஆகா ஆகா... ஹிப் ஹிப் ஹூர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
மயூரேசா, வாழ்த்துகள். உன் திறமைக்கும் படிப்புக்கும் நீ சீமையில பெரிய வேலையில இருப்பேன்னு நான் ரொம்ப நாளைக்கு முன்னாலயே சொன்னேன்ல ... ஹி ஹி... நீ மறந்துருப்ப! :D :D

ஏற்கனவே உன் மோகனச் சிரிப்பை ஆர்க்கூட்டில் கண்டதினால் எனக்கு அப்படி ஒரு ஆச்சரியமில்லை. மன்றத்தில் யாராவது புது பெண் உறுப்பினர்கள் கண்டு நேரடியாக களனிப் பல்கலைக்கு மாற்றல் கேட்டால் என்ன செய்வதென்பதுதான் கவலை!

:D :D :D
மயூரா ஒறேடியா ஃபேமஸ் ஆயிட்டப்புலே இருக்கு.

வாழ்வுதான்

ஓவியன்
15-07-2008, 02:25 PM
என்ன உலகமடா இது, தப்புத் தப்பாக பதில் சொன்னாத்தான் நேர் முகத் தேர்விலே தெரிவு பண்ணுறாங்க...!! :D:D:D

மயூ
15-07-2008, 02:36 PM
ஹி.. ஹி... அவனுகள் ஏன்தான் அப்படி செய்தானுகளோ தெரியாது....

ஓவியன்
15-07-2008, 02:52 PM
ஹி.. ஹி... அவனுகள் ஏன்தான் அப்படி செய்தானுகளோ தெரியாது....

நீங்க கடைசியில் 07 என்ற எண்ணை எழுந்தமானமாக முயற்சி செய்த மாதிரி அவங்களும் உங்க பெயரை எழுந்தமானமாக தெரிவு செய்திருப்பாங்க போல...!! :lachen001:

மயூ
15-07-2008, 03:42 PM
ஹி..ஹி... அவனுகளுக்குத்தான் தெரியும்.. ஆனா அங்க ரெயினிங் முடிஞ்ச உடனேயே முடிவெடுத்தன் இந்த கம்பனிக்கு மட்டும் நான் வேலைக்கு வரவே மாட்டன். அப்பிடி ஒரு அறுவை கம்பனி

ஓவியன்
15-07-2008, 03:52 PM
அப்பிடி ஒரு அறுவை கம்பனி

நான் அது ஒரு மென்பொருள் கம்பனி எண்டு நினைச்சன், ஆனா அது ஒரு பிளேட் கம்பனியே...?? :D

விகடன்
15-07-2008, 09:40 PM
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்துவிட்டீர்கள். கிடைத்திருக்கும் வேலையில் முன்னிற்கு வர வாழ்த்துக்கள்.
இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். வைத்த அந்த பரீட்சைக்கும் தெரிவிற்கும் சம்பந்தம் உண்டா? இல்லையா?